Search
  • Follow NativePlanet
Share
» »ஹம்பியைச் சுற்றியுள்ளத் தளங்கள் பற்றி அறிவோம் வாருங்கள்

ஹம்பியைச் சுற்றியுள்ளத் தளங்கள் பற்றி அறிவோம் வாருங்கள்

ஹம்பி என்றாலே அதன் பிரசித்தி பெற்ற விஜய நகரின் சிதிலமடைந்த வரலாற்று சின்னங்களும், அதை சுற்றிலும் விரிந்து கிடக்கும் நகரின் கட்டிடக்கலை அம்சங்களும் தான் நினைவுக்கு வரும். விஜயநகர சாம்ராஜயத்தின் தலைநகராக விளங்கி, ஹொய்சள கட்டிடக்கலை பாணியின் அழகை பறைசாற்றிக் கொண்டிருக்கும் இந்த ஹம்பி அல்லது விஜயநகர் என்று அழைக்கப்படும் சுற்றுலா ஸ்தலத்தை பொன்கற்களில் எழுதிய கவிதை என்றாலும் மிகையாகாது.

இதனைக் குறித்து அறிய பல கட்டுரைகள் தரவேண்டியிருக்கும். அந்த அளவுக்கு கொட்டிக் கிடக்கும் வரலாற்று அற்புதங்கள் ஹம்பியை உலகப் புகழ் பெறச்செய்துள்ளது. எனினும் முடிந்த அளவுக்கு ரத்தினச் சுருக்கமாக ஹம்பியை சுற்றியிருக்கும் சுற்றுலாபிரதேசங்களை குறித்து இங்கு வழங்கியிருக்கிறோம்.

யானைக் கூடங்கள்

யானைக் கூடங்கள்

நேரம் இருப்பின் ஹம்பிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள யானைக் கூடத்தை பார்க்கலாம். அக்காலத்து மன்னர்கள் தங்கள் படை மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்திய யானைகளை இந்த மண்டபங்களில் வைத்து பராமரித்தனர். ஹம்பியிலுள்ள பொதுக் கட்டிடங்களிலேயே மிக சிறப்பானது என்று சொல்லும்படியாக இந்தோ-இஸ்லாமிக் கட்டிடக்கலை மரபுப்படி இந்த மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த அமைப்பானது 11 பிரம்மாண்டமான உயரமான அறைகளை கொண்டுள்ளது. இந்த அறைகளின் மேற்பகுதி குமிழ் வடிவ விதான வடிவமைப்பை கொண்டுள்ளது. இங்கு உள்ளே இருக்கும் கூரைப்பகுதியில் யானைகளை கட்டுவதற்கு பயன்படுத்திய இரும்பு வளையம் உள்ளதை காணலாம். ஒவ்வொரு அறையின் பின்புற மூலையிலும் யானைப் பாகன்கள் பாதுகாப்பாக நுழைவதற்கு சிறியதான தரைவழித் துவார கதவுகள் இருக்கின்றன. இது போன்ற பல நுணுக்கமான விஷயங்கள் சுற்றுலா பயணிகளை பிரமிக்க வைக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

 ஹஸர ராமர் கோயில்

ஹஸர ராமர் கோயில்

ஹம்பி அரண்மனைப்பகுதியின் மையத்தில் உள்ள இந்த ஹஸர ராமர் கோயில் ஹம்பியில் உள்ள முக்கியமான கலை அம்சங்களில் ஒன்றாகும். முக்கியமான சடங்குகள் மற்றும் ஊர்வலங்களுக்கு இந்த கோயில் பயன்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ராமாயண இதிகாச நிகழ்ச்சிகள் இந்த கோயிலில் புடைப்பு சிற்பங்களாக படைக்கப் பட்டிருப்பது இதன் முக்கிய சிறப்புகளில் ஒன்றாகும். ஹம்பி பிரதேசத்திலேயே விஷ்ணுக்கடவுளுக்கான மிகப் பெரிய கோயில் இது என்பது குறிப்பிடத் தக்கது. இந்த கோயிலின் சுவர்களில் 15ம் நூற்றாண்டை சேர்ந்த கலைச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. யானைகள், குதிரைகள், போர்வீரர்கள், நடனமாடும் மங்கையர் போன்றவற்றின் சிற்பங்கள் அவற்றில் அதிகம் காணப்படுகின்றன.

Manoj M Shenoy

தாமரை மஹால் அல்லது கமலா மஹால்:

தாமரை மஹால் அல்லது கமலா மஹால்:

ஜெனனா என்று அழைக்கப்படும் அரண்மனை அந்தப்புர வளாகத்தின் உள்ளே அதன் ஒரு அங்கமாக இந்த தாமரை மாளிகை அமைந்துள்ளது. இது இந்தோ இஸ்லாமிய பாணியில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் வெளிப்புற கூரைஅமைப்பும் இதன் ஒட்டு மொத்த வடிவமும் சேர்ந்து ஒரு தாமரை மலர் இதழ் விரித்திருப்பதை போன்று காணப்படுவதால் இதனை கமலா மாளிகை அல்லது தாமரை மாளிகை என்று அழைக்கின்றனர்.

Pavanaja

 மஹாநவமி திப்பா:

மஹாநவமி திப்பா:


ஒரு பிரம்மாண்ட சதுர பீடமாக உயர்ந்து காணப்படும் இந்த அமைப்பு ஹம்பியில் பிரசித்தி பெற்ற அம்சங்களில் ஒன்றாகும். இந்த நினைவுச்சின்னம் கிருஷ்ணதேவராய மன்னரால் தேவகிரியை(இப்போதைய ஒரிஸ்ஸா) வென்ற வெற்றியின் ஞாபகார்த்தமாக எழுப்பப் பட்டதாக சொல்லப்படுகிறது. ஹம்பி அரண்மனை வளாகத்துக்குள்ளேயே அமைந்துள்ள இந்த நினைவுச்சின்னம் எந்த பக்கமிருந்து பார்த்தாலும் தெரியும்படி இதன் உயரம் அமைந்துள்ளது. நாலாபுறங்களிலும் வெளிச்சுவற்றில் பல்வகையான அலங்கார சிற்ப வேலைப்பாடுகள் செதுக்கப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட பீடம் ஒரு அற்புதமான புராதன நினைவுச் சின்னமாகும். ஆகவே ஹம்பியில் கண்டிப்பாக சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய ஒரு இடம் இந்த மஹாநவமி திப்பா.

Dr Murali Mohan Gurram

 சசிவேகலு கணேசா

சசிவேகலு கணேசா


சுற்றுலாப்பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய மற்றொரு அம்சம் ஹேமகுடா மலையடிவாரத்தில் அமைந்துள்ள சசிவேகலு கணேசா கோயிலாகும். இக்கோயிலில் 8 அடி உயரமுள்ள கணேசக்கடவுளின் சிலை உள்ளது. இந்த வினாயகர் சிலை கடுகுகளினால் பூசப்பட்டது போல் தோன்றுவதால கடுகு கணேசா (சசிவேகலு கணேசா) என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்த விநாயகர் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. வலது கைகளில் ஒன்றில் உடைந்த தந்தத்தையும் மற்றொன்றில் அங்குசமும் ஏந்தியுள்ளது. இடது கைகளில் ஒன்றில் பாசக்கயிறு ஏந்தியும் மற்றொன்று சிதைந்தும் காணப்படுகிறது. இந்த சிலையை சுற்றி மிகப்பெரிய பீடம் ஒன்றும் அமைந்துள்ளது.

Jean-Pierre Dalbéra

 ஷீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம்

ஷீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம்

இந்த கோயிலில் விஷ்ணு பஹவானின் அவதாரமான நரசிம்ம கடவுளின் 6.7 மீட்டர் உயரமுள்ள ஒற்றைக்கல் சிலை ஆதிசேஷ (ஏழு தலை பாம்பு) பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலிலுள்ள கல் வெட்டுகள் மூலம் இந்த கோயில் கிருஷ்ண தேவராய ஆட்சியின்போது 1528 ம் ஆண்டு கட்டப்பட்டதாக தெரிகிறது.

தென்னிந்திய சிற்பிகளின் பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு சங்கம வம்ச சிற்பிகள் இந்த கோயிலை பளிங்கு கல்லால் கட்டியுள்ளனர்.

Hawinprinto

 ராஜ தராசு

ராஜ தராசு

துலா பாரம் என்று அழைக்கப்படும் ராஜ தராசு விஜய விட்டல சுவாமி கோயிலுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ளது. விஜயநகர அரசர்கள் இந்த இடத்தில் இருக்கும் தராசின் மூலம் தங்கள் எடைக்கு சமமான தானியங்கள், தங்கம், வெள்ளி, வைடூர்யங்கள் மற்றும் இன்ன பிற விலை மதிப்பற்ற பொருட்களை அந்தணர்களுக்கு தானமாக வழங்கினர். ஐதீக முக்கியத்துவம் வாய்ந்த சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் போன்றவை நிகழும்போது அவர்கள் இந்த எடைக்கு எடை தானத்தை வழங்கும் சம்பிரதாயத்தை கடைபிடித்தனர் என்று தெரிகிறது.

 பாதாளக் கோயில்

பாதாளக் கோயில்

சிவபெருமானுக்காக உருவாக்கப்பட்ட இந்த கோயில் நில மட்டத்துக்கு கீழே அமைக்கப்பட்டுள்ளது. உட்பிரகாரமும் கருவறையும் எப்போதும் நீரினுள் அமிழ்ந்திருக்கும்படி இது கட்டப்பட்டுள்ளது. ஆகவே கருவறையை பார்க்க அனுமதியில்லை என்றாலும் நீர் வற்றியுள்ள சமயங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதி வரை பிரகாரத்தில் சென்று பார்க்கலாம்.

G41rn8

 துங்கபத்திரா ஆறு:

துங்கபத்திரா ஆறு:

கர்நாடக மாநிலத்திலிருந்து ஆந்திர மாநிலம் வரை பாயும் துங்கபத்திரா ஆறு இந்திய தீபகற்பத்தின் வரலாற்றுப் பின்னணியில் முக்கியமான புனித ஆறாக கருதப்படுகிறது. ஹம்பி நகரம் இந்த ஆற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ளது. துங்கா மற்றும் பத்திரா என்ற இரண்டு ஆறுகள் சேர்ந்து இது உருவானதால் துங்கபத்திரா என்று அழைக்கப்படுகிறது. ஹம்பியிலிருந்து தென்மேற்கு திசையில் 20 கி.மீ தூரத்தில் இந்த ஆற்றின் மீது பெரிய அணை ஒன்றும் நீர் மின் உற்பத்திக்காக கட்டப்பட்டுள்ளது.

Dey.sandip

 உத்தன வீரபத்ரர் ஆலயம்:

உத்தன வீரபத்ரர் ஆலயம்:

இந்த உத்தன வீரபத்ரர் ஆலயத்தில் 3.6 மீட்டர் உயரமுள்ள சிவனின் அவதாரமான உத்தன வீரபத்ரர் கடவுள் சிலை காணப்படுகிறது. இந்த கோயிலில் உள்ள சிவபெருமானின் சிலையானது நான்கு கைகளுடன் வாள், அம்பு, வில், கேடயம் ஆகிய ஆயுதங்களை ஏந்தியபடி காட்சியளிக்கிறது. பக்தர்கள் இங்கு தக்‌ஷனின் சிறிய சிலையையும் சர்வாங்க லிங்கம் என்று அழைக்கபடும் சிவ லிங்கத்தையும் காணலாம். இந்த கோயிலில் புகைப்படம் எடுப்பதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

Dr Murali Mohan Gurram

 விருபாக்‌ஷா கோயில்:

விருபாக்‌ஷா கோயில்:

விருபாக்‌ஷா கோயில் 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்தாலும் இங்கு 9 மற்றும் 11ம் நூற்றாண்டினை சேர்ந்த சிற்பங்கள் காணப்படுகின்றன. ஆதியில் ஒரு சில சிலைகளை மட்டுமே கொண்டிருந்த இந்த கோயில் பின்னாளில் விரிவுபடுத்த பட்ட தாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.

ரங்க மண்டபம் எனப்படும் கருவறையானது கிருஷ்ணராய தேவராயரால் 1510ம் ஆண்டு கட்டப்பட்டது என்பதற்கு சான்றாக இது விஜயநகர கட்டிடக்கலை அம்சங்களை கொண்டு அமைந்துள்ளது. தூண்கள், கோயில் மடைப்பள்ளி, விளக்கு தூண்கள், கோபுரங்கள் போன்ற எல்லா அம்சங்களும் பின்னாளில் சேர்க்கப்பட்டுள்ளன. ஹிந்து புராணங்களில் வரும் விலங்குகளின் உருவங்கள் இந்த கோயிலில் சிற்பங்களாக வடிக்கப் பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

Apadegal

 விருபாபூர்:

விருபாபூர்:

விருபாக்‌ஷா கோயிலுக்கு அருகே ஆற்றின் மறுபுறம் அமைந்துள்ள பகுதி இந்த விருபாபூர் ஹட்டே எனும் கிராமம் ஆகும். பலவிதமான சுற்றுலா குடில்களும், விடுதிகளும் நிறைந்து காணப்படும் இந்த பகுதி உல்லாசம் விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு உகந்த இடமாகும். இது ‘ஹிப்பி கிராமம்' என்றே அழைக்கப்படுகிறது. ஆற்றை கடந்து இந்த இடத்துக்கு செல்வதற்கு பால வசதி இல்லாததால் பரிசல் மூலமாக மட்டுமே செல்ல முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.

 விட்டலா கோயில்:

விட்டலா கோயில்:

விஷ்ணு பஹவானுக்கான விட்டலா கோயில் 16 ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான ஆலயமாகும். ஹம்பிக்கு வரும் பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இந்த கோயிலில் வேறு எங்குமே பார்க்க முடியாத அளவுக்கு அற்புதமான, வெகு நுட்பமாக சிற்ப வேலைப்பாடுகள் நிரம்பி காணப்படுகின்றன.

துங்கபத்திரை ஆற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ள இந்த கோயில் தென்னிந்திய திராவிட கட்டிடக்கலை பாணியில் வேறெந்த கட்டிடக்கலை அம்சமும் கலந்திடாமல் கட்டப்பட்டுள்ளது. விஜயநகர அரசரான இரண்டாம் தேவராயரின் காலத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் விஜயநகர வம்சத்தின் முக்கிய கலைச்சின்னமாக கருதப்படுகிறது.

Surajkumar12111

 யந்த்ரோதாரகா ஆஞ்சநேயர் கோயில்:

யந்த்ரோதாரகா ஆஞ்சநேயர் கோயில்:

ஹம்பியிலுள்ள மற்றுமொரு புனித ஸ்தலங்களில் ஒன்று இந்த யந்த்ரோதாரகா ஆஞ்சநேயர் கோயில் ஆகும். ஹனுமான் என்றும் ஆஞ்சநேயர் என்றும் அழைக்கப்படும் கடவுளுக்காக இந்த கோயில் எழுப்பப் பட்டுள்ளது. இந்த கோயில் கோதண்ட ராமர் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது. ஹனுமானின் விக்கிரகமானது இங்கு ஒரு யந்திரத்தில் பொதிக்கப்பட்டிருப்பது இந்த கோயிலின் பிரதான விசேஷமாகும். நெருங்கி உற்று பார்த்தால் இந்த யந்திரத்தின் மைய விக்கிரகத்தைச் சுற்றிலும் எண்ணற்ற வானரங்களின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

 யெதுரு பசவண்ணா

யெதுரு பசவண்ணா


ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட இந்த யெதுரு பசவண்ணா எனும் நந்தி சிலை ஹம்பி பஜாரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. புராண ஐதீகங்களின்படி சிவ பெருமானின் வாகனமான நந்திக்கு எழுப்பப் பட்ட சிலை என்பதால் உள்ளூர் மொழியில் யெதுரு பசவண்ணா என்று அழைக்கப்படுகிறது.

Ashwin Kumar

 அரண்மனை அந்தப்புர வளாகம்

அரண்மனை அந்தப்புர வளாகம்

ஹம்பியின் மிக முக்கியமான வரலாற்று சின்னமாக இந்த அரண்மனை அந்தப்புர வளாக ஸ்தலம் விளங்குகிறது. அழகாக வெட்டப்பட்ட கருங்கற்களை கொண்டு எழுப்பப்பட்ட உயரமான பாதுகாப்பு சுவரை கொண்டுள்ளது இந்த அரண்மனை அந்தப்புர வளாகம். தற்சமயம் இந்த அந்தப்புர வளாகத்தில் நான்கு முக்கிய கட்டிடங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி அக்காலத்தில் பெண்கள் மட்டுமே இந்த அரண்மனை அந்தப்புர வளாகத்தில் நுழைவதற்கு அனுமதி இருந்தது. இதற்கு பிரதான காரணம் பாதுகாப்பை விடவும் அரண்மனை அந்தப்புரத்தில் இருந்த ராணிகளுக்கும் மற்ற பெண்களுக்கும் அவர்களின் கௌரவத்திற்கேற்ற தனிமை கிடைக்க வேண்டும் என்பதாகும்.

BJRLinde

 பருவநிலை:

பருவநிலை:

புகழ் பெற்ற ஹம்பி சுற்றுலா ஸ்தலம் அடிப்படையாக வறண்ட மற்றும் வெப்பமான சீதோஷ்ண நிலையை கொண்டிருக்கிறது. அக்டோபரில் நடைபெறும் தீபாவளி திருவிழா மற்றும் நவம்பரில் நடைபெறும் ஹம்பி திருவிழா போன்ற காலங்களில் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் இங்கு ஆர்வத்துடனும் குதூகலத்துடனும் வருகை தருகின்றனர்.

 கோடைக்காலம்(மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை):

கோடைக்காலம்(மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை):

கோடைக்காலத்தில் ஹம்பி பிரதேசம் முழுவதும் அதிக வெப்பத்துடனும் வறட்சியாகவும் காணப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலையாக 40° C காணப்படுகிறது. அதிக வெப்பமும் வறட்சியும் வாட்டி எடுக்கும் என்பதால் இந்த காலத்தில் ஹம்பிக்கு பயணம் செல்வது அவ்வளவு உகந்ததல்ல.

மழைக்காலம் (ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை):

மழைக்காலத்தில் ஹம்பி பிரதேசம் கணிசமான மழைப்பொழிவினை பெறுகிறது. பல சுற்றுலாப்பயணிகள் இக்காலத்தில் ஹம்பிக்கு வருகை தருகின்றனர்.

குளிர்காலம் (செப்டம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை):

குளிர்காலத்தின் போது ஹம்பி சுற்றுலா ஸ்தலம் மிக இனிமையான சீதோஷ்ண நிலையுடன் விரும்பத் தக்க சூழலுடன் காணப்படுகிறது. பகலில் 30° C வெப்பநிலையும் இரவில் மிகக் குறைவான 12° C வெப்பநிலையும் இக்காலத்தில் நிலவுகின்றது.

 பயணம் செய்ய ஏற்ற காலம்:

பயணம் செய்ய ஏற்ற காலம்:

யுனெஸ்கோ அமைப்பின் மூலம் சர்வதேச பண்பாட்டு மையமாக அறிவிக்கப்பட்டுள்ள ஹம்பி சுற்றுலா தலத்துக்கு செப்டம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர் காலத்தில் செல்வதே சிறந்தது. இச்சமயம் பல திருவிழாக் கொண்டாட்டங்களும் ஹம்பியில் நடத்தப்படுகின்றன.

 எப்படி செல்வது:

எப்படி செல்வது:

சுற்றுலாப்பயணிகள் சுற்றுலாத் தலமான ஹம்பிக்கு விமான மார்க்கமாகவோ அல்லது ரயில் மூலமாக அல்லது சாலைப்போக்குவரத்து மூலமாக செல்லலாம்.

விமானம் மூலமாக:

ஹம்பிக்கு அருகிலுள்ள விமான நிலையமாக பெல்லாரி விமான நிலையம் அமைந்துள்ளது. ஹம்பியிலிருந்து 60 கி.மீ தொலைவிலுள்ள இது ஒரு உள் நாட்டு விமான நிலையமாகும். இது தவிர 350 கி.மீ தொலைவில் உள்ள பெங்களூர் விமான நிலையம் சர்வதேச விமான சேவைகளை கொண்டுள்ளது. பெங்களூர் விமான நிலையத்திலிருந்து பல வெளி நாட்டு நகரங்களுக்கும் இந்திய பெருநகரங்களுக்கும் அதிக அளவில் விமான சேவைகள் உள்ளன.

ரயில் மூலமாக:

ஹம்பியிலிருந்து 13 கி.மீ தொலைவில் ஹோஸ்பேட் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் பெங்களூர், ஹைதராபாத் போன்ற முக்கியமான நகரஙகளுடன் ரயில் சேவைகளால் இணைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் வாடகைக் கார் அல்லது வேன்கள் மூலம் ஹம்பியை அடையலாம்.

சாலை மார்க்கமாக:

கர்நாடக அரசு பேருந்து போக்குவரத்து கழகம் கர்நாடக மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் ஹம்பிக்கு பேருந்துகளை இயக்குகின்றது. இந்த பேருந்துகள் குறைவான கட்டணத்துடன் அதே சமயம் சௌகரியமான பிரயாணத்தை அளிக்கின்றன.

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X