» »இந்த சக்தி வாய்ந்த கோவில்களுக்கு நீங்க போயிருக்கீங்களா?

இந்த சக்தி வாய்ந்த கோவில்களுக்கு நீங்க போயிருக்கீங்களா?

Written By: Udhaya

தமிழகத்தில் சுற்றுலா என்றாலே அங்கு நிச்சயமாக ஒரு கோவில் இருக்கும். வெறும் பொழுது போக்குக்கு மட்டும் அல்லாமல் பக்தியுடன் கூடிய ஆன்மீக சுற்றுலாவை பெரும்பாலானோர் விரும்புகின்றனர். தமிழகத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவற்றில் நமக்கு பிரபலமான கோவில்கள் உட்பட மற்றவற்றையும் இங்கு காண்போம் வாருங்கள்.

பொழிச்சலூர் சனீஸ்வரர் கோவில்

பொழிச்சலூர் சனீஸ்வரர் கோவில்

பொழிச்சலூர் ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் சனீஸ்வரர் பகவானுக்கு பரிகாரம் செய்வதற்கான சிறப்பு ஸ்தலமாக
விளங்குகிறது. நவக்கிரக பரிகாரத் தலங்களில் வட தமிழ்நாட்டில் இருப்பது இந்த ஓரே ஸ்தலம் மட்டும் தான் என்கின்றனர் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள்.

சனியை போக்க திருநள்ளாறு போகமுடியாதவர்கள் இக்கோவில் வந்து தரிசனம் செய்யலாம் என்கிறார்கள் அவர்கள்.

PC:pozhichalursaneeswarartemple.org

அண்ணாநகர் ஸ்ரீ ஐயப்பன் சன்னிதி

அண்ணாநகர் ஸ்ரீ ஐயப்பன் சன்னிதி

சென்னையில் இருக்கும் ஐயப்பன் தலங்களுள் மிக சக்தி வாய்ந்த தலமாக நம்பப்படுகிறது இக்கோவில். அண்ணாநகர் விஸ்வேஸ்வரய்யா டவர் அருகில் 40சென்ட் நிலப்பரப்பில் இந்த கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் டிரெஸ்ட் மூலம் ஏழை, எளிய பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

photo courtesy: annanagarayyappatemple.org

மாங்காடு காமாட்சி அம்மன்

மாங்காடு காமாட்சி அம்மன்

சென்னையிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் பூந்தமல்லி அருகே அமைந்துள்ளது மாங்காடு காமாட்சி அம்மன் கோவில். தேவி விளையாட்டாக சிவனின் கண்களை மூட உலகமே இருளாகிப்போனதால், கோபமுற்ற சிவன் தேவியை பூமிக்கு அனுப்பி வைத்தாராம். இதனால் தேவி மாங்காடு வந்து காமாட்சியாக வடிவெடுத்ததாக தல புராணம் கூறுகிறது.

ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி திருக்கோயில்

ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி திருக்கோயில்

சென்னை , அடையாற்றில் அமைந்துள்ளது பத்மநாபசுவாமி திருக்கோயில்.
திருவிதாங்கூர் மன்னரின் அனுமதியுடன் அடையாற்றில் பத்மநாபசுவாமிக்கு கட்டப்பட்ட திருத்தலம் இதுவாகும். இங்குள்ள விக்ரகம்
திருவனந்தபுரத்திலுள்ள அனந்த பத்மநாபசுவாமி யை போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு சித்திரை திருவிழா பெரும் விசேசமாக இருக்கும்.

photo courtesy: ananthapadmanabhaswamytemple

அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில்

அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில்

சென்னையின் தென் பகுதியில் திருவான்மியூரில் அமைந்துள்ள இத்தலம் சிவபெருமானின் பிரசித்திப் பெற்ற திருத்தலங்களில்
ஒன்றாகும்.திருவான்மியூரிலிருந்து ஏறக்குறைய 1.5கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த தலம்.

திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து இந்த கோவிலுக்குச் செல்ல பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன. அகத்திய
முனிக்கு மருந்துகளைப் பற்றி பாடம் நடத்தியதால் சிவனுக்கு இந்த பெயர் வந்ததாகச் சொல்கிறது தல புராணம். மேலும் இக்கோவிலுக்கு வந்து இறைவனை பிரார்த்தித்தால் நோய்நொடியின்றி நீண்டகாலம் வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்.

photo courtesy: marundeeswarartemple.tnhrce.in

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில்

அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவில்

சென்னையை அடுத்த திருவேற்காட்டில் அமைந்துள்ளது கருமாரியம்மன் கோவில். சுயம்பாக தோன்றியுள்ள அம்மன் என்பது இக்கோவிலின் சிறப்பாகும். மேலும் இங்கு பெரிய நாகப் புற்று ஒன்றும் அமைந்துள்ளது. ரூபாய் நோட்டு மாலை அணிவித்தல், பூட்டு வழங்கி வழிபடுதல் போன்றவை இங்கு சிறப்பாக கருதப்படுகிறது.

கடன் மற்றும் நோயினால் அவதிப்படுபவர்கள் இக்கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டுச் செல்கிறார்கள். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவேற்காட்டிற்கு நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் திருமழிசை, அம்பத்தூர், ஆவடி போன்ற பகுதிகளிலிருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மயிலாப்பூர் முண்டக கன்னியம்மன் கோவில்

மயிலாப்பூர் முண்டக கன்னியம்மன் கோவில்

முண்டக கன்னியம்மன் கோவில் மயிலாப்பூரில் அமைந்துள்ளது. முண்டகம் என்றால் தாமரை என்று பொருள். அம்மன் சுயம்பாகத் தோன்றி எழுந்தருளியுள்ளது இக்கோவிலின் சிறப்பாகும். பசுஞ்சாணத்தில் செய்த வறட்டியை வைத்து தயாரித்த பிரசாதத்தையே அம்மனுக்கு படைக்கிறார்கள். அதன் சாம்பலை பிரசாதமாக பக்தர்களுக்குத் தருகிறார்கள்.

திருமயிலை ரயில் நிலையத்திலிருந்து சற்றுத் தொலைவிலும்,அதற்கு அடுத்த ரயில் நிலையமான முண்டகக்கன்னியம்மன் ரயில் நிலையத்திலிருந்து அருகிலும் அமைந்துள்ள இக்கோவிலுக்கு ஆட்டோ,பேருந்து போன்ற வசதிகளும் உள்ளன.

சுசீந்திரம் தாணுமாலையன் கோவில்

சுசீந்திரம் தாணுமாலையன் கோவில்

கன்னியாகுமரியிலிருந்து 13 கிமீ தொலைவிலும், நாகர்கோவிலிருந்து 8 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது சுசீந்திரம். இந்த தலத்தில் சிவபெருமாள், விஷ்ணு, அயன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றாக அமைந்திருப்பதால், இது தாணுமாலையன் கோவில் என்று அழைக்கப்படுகிறது.

நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு ரயில் நிலையத்திலிருந்து வர ஆட்டோ, பேருந்து வசதிகள் உள்ளன.

photo courtesy: Karthikeyan.pandian

சிதறால் மலைக்கோவில்

சிதறால் மலைக்கோவில்

சிதறால் கன்னியாகுமரியிலிருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சிதறால் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே அமைந்துள்ள மலைப்பிரதேசம் ஆகும். இந்த மலை மீது கோவில் அமைந்துள்ளது. இது சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு அரிய வகை சமணச்சிற்பங்கள் காணப்படுகின்றன.

photo courtesy: Sidharthrajan

ஷீரடி சாய்பாபா கோவில்

ஷீரடி சாய்பாபா கோவில்

கன்னியாகுமரி மாவட்டம் பொத்தையடி அருகே அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோவில்
மிகவும் பிரசித்தி பெற்றத் திருத்தலமாகும்.

கன்னியாகுமரி பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கோவில். நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவின் அமைந்துள்ள சாய்பாபா கோவிலுக்கு அங்கிருந்து நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.

திற்பரப்பு சிவ ஆலயம்

திற்பரப்பு சிவ ஆலயம்

கன்னியாகுமரி மாவட்ட தலைநகரிலிருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ளது திற்பரப்பு அருவி. இது குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு சிவ ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சிவாலயங்கள் 12 களில் ஒன்றாக இது சிறப்பிக்கப்படுகிறது. வருடத்திற்கு ஒருமுறை சிவ பக்தர்களால் சிவாலய ஓட்டம் நடைபெறுகிறது.

photo courtesy: Infocaster

மண்டைக்காடு பகவதியம்மன் கோவில்

மண்டைக்காடு பகவதியம்மன் கோவில்

அரபிக்கடலின் ஓரத்தில் ஒய்யாரமாய் வீற்றிருக்கும் மண்டைக்காடு பகவதியம்மன் தென்னகக் கோவில்களில் மிக சக்தி வாய்ந்ததாக கருதப்படும் கோவிலாகும். நாகர்கோவிலிருந்து 20 கிமீ தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து ஏறக்குறைய 40 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது இந்த திருத்தலம்.

photo courtesy: mandaikadu.in

சிக்கல் சிங்காரவேலர் ஆலயம்

சிக்கல் சிங்காரவேலர் ஆலயம்

இது நாகப்பட்டினத்திற்கு மேற்கே 5 கி.மீ தொலைவில் உள்ள சிக்கல் எனும் ஊரில் அமைந்துள்ள முருகன் திருத்தலமாகும். அம்பிகையிடம் வேல் வாங்கிய புராணம் கொண்ட இத்திருத்தலம் நாகப்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து 15 நிமிட பயணதூரத்தில் அமைந்துள்ளது.

photo courtesy: Srinivasa247

திருவழுந்தூர் வேதபுரீசுவரர் கோயில்

திருவழுந்தூர் வேதபுரீசுவரர் கோயில்

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகே அமைந்துள்ளது திருவழுந்தூர் அல்லது தேரழுந்தூர். இங்கு வேதபுரீசுவரர் மூலவராக காட்சிதருகிறார். இத்தலம் தேவாரம் பாடிய தலங்களுள் ஒன்றாக புகழ்பெற்று விளங்குகிறது. மேலும் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த இடம் இதுவாகும்.

photo courtesy: Ssriram mt

திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில்

திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில்

திருப்பிறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அமைந்துள்ள திருப்புறம்பியத்தில் உள்ளது. தஞ்சாவூரிலிருந்து 45 கிமீ தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 12 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.


photo courtesy: பா.ஜம்புலிங்கம்

அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்

அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்

ஐயர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அகத்தியர் இறைவனை நண்பகலில் தரிசித்த தலமென்பதால் இவ்விறைவன் மத்தியான சுந்தரர் என்றும் வழங்குகிறார்

photo courtesy: பா.ஜம்புலிங்கம்

குமரகோட்டம் கோவில்

குமரகோட்டம் கோவில்

காஞ்சிபுரம் (குமரகோட்டம் சுப்பிரமணியர் கோயில், காஞ்சியிலுள்ள முருகன் கோயில்களில் ஒன்றாகும். கந்தபுராணம் தோன்றிய தலமும், கந்தபுராணம் அரங்கேறிய தலமும் இதுதான். இது காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகில் கைலாசநாதர் ஆலயம் அமைந்துள்ளது.

photo courtesy: Rajendran Ganesan

பச்சமலை முருகன் கோவில்

பச்சமலை முருகன் கோவில்

பச்சைமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முருகன்
கோவில்களில் ஒன்றாகும். இத்திருத்தலத்தில் முருகன், குழந்தை வடிவாக ஞான தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார்.

photo courtesy:Magentic Manifestations

வேதாரண்யேஸ்வரர் ஆலயம்

வேதாரண்யேஸ்வரர் ஆலயம்

இத்தலம் தமிழ்நாடு நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலம் பழங்காலத்தில் திருமறைக்காடு என்று அழைக்கப்பட்டுள்ளது.


photo courtesy: பா.ஜம்புலிங்கம்

அருள்மிகு வீரட்டான்டேஸ்வரர் திருக்கோவில்

அருள்மிகு வீரட்டான்டேஸ்வரர் திருக்கோவில்

திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோவில் ஆகும். இது பண்ருட்டியில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

photo courtesy: Logic riches

https://www.youtube.com/watch?v=bug9oBBLVhg

இடியும் மதுரை மீனாட்சி கோயில்

இடியும் மதுரை மீனாட்சி கோயில் - யுனெஸ்கோ அதிர்ச்சி

Read more about: temples, tamilnadu