Search
  • Follow NativePlanet
Share
» »அம்பேத்கருடன் ஆயிரக்கணக்கானோர் இந்து மதத்திலிருந்து புத்த மதத்துக்கு மாறிய இடம் இது!

அம்பேத்கருடன் ஆயிரக்கணக்கானோர் இந்து மதத்திலிருந்து புத்த மதத்துக்கு மாறிய இடம் இது!

அம்பேத்கருடன் ஆயிரக்கணக்கானோர் இந்து மதத்திலிருந்து புத்த மதத்துக்கு மாறிய இடம் இது!

By Udhay

நாக்பூர் பகுதியில் உள்ள புத்த மத்த்தை சேர்ந்தவர்களுக்கு தீக்‌ஷா பூமி ஒரு புனித ஸ்தலமாகும். ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் இங்கு வருகை தருகின்றனர். இங்கு 120 அடி நீளமுள்ள புத்த ஸ்தூபி ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களுடன் பல நூற்றுக்கணக்கான தலித் மக்கள் புத்த மதத்திற்கு மாறிய சம்பவத்தின் நினைவுச்சின்ன இடமாக கருதப்படுகிறது. அந்த நாள் அஷோக் விஜய தசமி என்ற நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த புண்ணிய ஸ்தலத்தில் ஒரே சமயம் 5000 பேர் கூடும் அளவுக்கு இடவசதி உள்ளது. கம்பீரமான இந்த நினைவுச்சின்னம் வரலாற்றின் குறிப்பிடத்தக்க அம்சமாகவும் தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளமாகவும் பெயர் பெற்று விளங்குகிறது.

அம்பேத்கருடன் ஆயிரக்கணக்கானோர் இந்து மதத்திலிருந்து புத்த மதத்துக்கு மாறிய இடம் இது!

Koshy Kosh

நாக்பூர் அருகில் விதர்பா பிரதேசத்தில் காணப்படும் இந்த அணைக்கட்டு அருகில் உள்ள கானகப்பகுதி எல்லோராலும் விரும்பப்படும் கானகப்பகுதியாகும். இங்குள்ள அணை கட்டப்படுவதற்கு கொலு படேல் கோஹ்லி என்பவர் மூல காரணமாக இருந்தார் என்று கூறப்படுகிறது. ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த அணைக்கட்டு அருகில் டாக்டர் சலீம் அலி பெயரில் பிரசித்தி பெற்ற பறவைகள் சரணாலயமும் வனவிலங்குப் பூங்காவும் உள்ளது. இங்கு கரடி மற்றும் புள்ளி மான்கள் போன்றவற்றை காணலாம். இந்த அணைக்கட்டு அருகில் ரிசார்ட் ஒன்றும் உள்ளது. பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் ஒரு குழந்தைகள் பூங்கா ஆகியவற்றை கொண்ட இந்த ரிசார்ட் அனைத்து வயதினருக்கும் ஏற்றதாக உள்ளது.

அம்பேத்கருடன் ஆயிரக்கணக்கானோர் இந்து மதத்திலிருந்து புத்த மதத்துக்கு மாறிய இடம் இது!

संदेश हिवाळे

டிராகன் பேலஸ் கோயில் நாக்பூரில் உள்ள மற்றொரு பிரம்மாண்டமான கீர்த்தி பெற்ற கோயிலாகும். 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த கோயில் நாக்பூருக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள காம்ப்டீ புறநகர் பகுதியில் உள்ளது. இந்த கோயில் அங்குள்ள அமைதியான புத்த தியான மண்டபத்திற்கு மிகவும் பெயர் பெற்றது. தியான மண்டபத்தின் முதல் தளத்தில் புத்த பஹவானின் ஒரு பெரிய உருவச்சிலையும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பசுமையான புல்தரையின் நடுவே அமைந்திருக்கும் இந்தக் கோயில் தாமரைக் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் அற்புதமான கட்டிடக்கலை வடிவமைப்புக்காக இது சிறந்த கான்கிரீட் கட்டிட கட்டமைப்புக்கான சர்வதேச விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X