» »நூறு வருட ஆயுள்தரும் அற்புத குளங்கள் எங்கிருக்கு தெரியுமா?

நூறு வருட ஆயுள்தரும் அற்புத குளங்கள் எங்கிருக்கு தெரியுமா?

Written By: Staff

இந்தியக் கோயில்களில் புஷ்கரணி அல்லது தெப்பக்குளம் அல்லது தீர்த்தக்குளங்கள் அமைக்கும் வழக்கம் பழங்காலம் தொட்டே வழக்கில் இருந்து வருகிறது. இந்தக் குளங்கள் பெரும்பாலும் சதுர வடிவில்தான் அமைக்கப்படுகின்றன.

எனினும் சில கோயில்களில் அறுகோண அமைப்பிலும், ஸ்வஸ்திகா அமைப்பிலும் கூட குளங்கள் காணப்படுகின்றன.

அதேபோல கோயில் மட்டுமின்றி இதர சில இடங்களிலும் புஷ்கரணி, தீர்த்தக்குளம் எனப்படும் புனித குளங்களை பார்க்க முடிகிறது.

கிருஷ்ணகுண்ட்

கிருஷ்ணகுண்ட்

உத்தரபிரதேசத்தின் மதுரா நகரில் உள்ள கிருஷ்ணகுண்ட் என்ற இந்த குளத்தில்தான் மகாபாரத காலத்தில் பகவன் ஸ்ரீ கிருஷ்ணரின் உடைகள் துவைக்கப்பட்டதாக புராணம் கூறுகிறது.

படம் : Rao'djunior

சப்ததீர்த்த புஷ்கர்ணி

சப்ததீர்த்த புஷ்கர்ணி

மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை ஸ்தலத்தில் இந்த புனித குளம் அமைந்துள்ளது. சப்ததீர்த்த புஷ்கர்ணி என்பது அற்புதமாக வெட்டப்பட்டு உருவாகப்பட்டுள்ள குளத்தை குறிக்கிறது. இந்தக் குளத்தின் நீர் 7 ஆண்டுகளுக்கு முன்னால் பருகத்தக்க வகையில் இருந்தது. அனால் தற்போது இது பிளாஸ்டிக் கழிவுகளாலும், மற்ற குப்பைகளாலும் மாசடைந்து போய்விட்டதால் குளிப்பதற்கு கூட ஏற்றதாக இல்லை. எனினும் கோடை காலத்திலும் குளிர்ச்சியாக காணப்படும் இதன் நீரின் காரணமாக குளத்துக்கு அருகில் நிற்கும்போது குளிர் சாதன இருப்பதை போன்ற உணர்வை தரும். மேலும் இந்தக் குளக்கரையில் காணப்படும் கோயில் போன்ற அமைப்பில் முன்பு விஷ்ணு சிலைகள் சில இருந்தன. அவை சமீபமாக ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயிலுக்கு அருகேயுள்ள குகைகளில் மாற்றப்பட்டுள்ளன.

படம் : Bajirao

பொற்றாமரைக்குளம்

பொற்றாமரைக்குளம்

மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்திலுள்ள பொற்றாமரைக்குளம் செவ்வக வடிவில்,165 x 120 அடி (37 மீட்டர்) பரப்பளவில் அமைந்துள்ளது. பொன் + தாமரை + குளம் என பொருள்படும் வகையில் பொற்றாமரைக்குளம் என்று இது அழைக்கப்படுகிறது. இந்தக் குளத்திற்கு ஞான தீர்த்தம், முக்தி தீர்த்தம், உத்தம தீர்த்தம், ஆதி தீர்த்தம் போன்ற பெயர்களும் வழங்குகின்றன. இதன் வடக்கு கரையில் உள்ள தூண்களில் சங்கப் புலவர்களின் உருவங்கள் காணப்படுகின்றன. அதோடு தென்கரை மண்டபச் சுவர்களில் திருக்குறள் பாக்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், சுற்றுச் சுவர்களில் திருவிளையாடல் புராணக் கதைகள் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன. பல நூறு வருடங்களுக்கு முன் இந்த பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது.

படம் : Mohan Krishnan

மணிகர்ணிகா குளம்

மணிகர்ணிகா குளம்

ஒடிஸா தலைநகர் புபனேஸ்வர் பகுதியில் உள்ள கபிலேஸ்வர் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் மணிகர்ணிகா என்ற தொன்மையான குளம்.

படம் : Bijoymishra

தியாகராஜ சுவாமி கோயில் குளம்

தியாகராஜ சுவாமி கோயில் குளம்

திருவாரூரில் உள்ள ஆயிரமாண்டு பழமையான தியாகராஜ சுவாமி கோயிலின் குளம்.

படம் : Kasiarunachalam

கபாலீசுவரர் கோயில் குளம்

கபாலீசுவரர் கோயில் குளம்

சென்னையின் பழமையான மைலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள கபாலீசுவரர் கோயிலின் குளம்.

படம் : Mohan Krishnan

சிவகங்கை தீர்த்தம்

சிவகங்கை தீர்த்தம்

சிதம்பரம் நடராஜர் கோயிலின் முக்கிய அங்கமாக விளங்கும் தீர்த்தக்குளம், சிவகங்கை தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த குளத்தில் நீர் என்றுமே வற்றுவதில்லை. குளத்தை சுற்றிலும் கற்தூண்களால் தாங்கப்பட்டு அமைக்கப்பட்டிருக்கும் சுற்றுமண்டபப்பாதை கலைநுணுக்கத்துடன் காட்சியளிக்கிறது. மேலிருந்து ஒரே சீராக படிகள் குளத்தின் அடிப்பகுதியை நோக்கி இறங்குவதைக்காணலாம். குளத்தின் அடிப்பகுதி ஒன்பது கிணறுகளுடன் முடிவடைதாக சொல்லப்படுகிறது.

காணிப்பாக்கம் விநாயகர் கோயில் குளம்

காணிப்பாக்கம் விநாயகர் கோயில் குளம்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காணிப்பாக்கம் எனும் கிராமத்தில் காணிப்பாக்கம் விநாயகர் கோயில் அமைத்துள்ளது. இந்தக் கோயில் 11-அம நூற்றாண்டின் முற்பகுதியில் சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டது.

படம் : Surendarj

சந்தனா புஷ்கரணி

சந்தனா புஷ்கரணி

ஒடிஸாவில் உள்ள புகழ்பெற்ற பூரி ஜகன்னாத் கோயிலிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள சந்தனா புஷ்கரணி, மாநிலத்தின் மிகப்பெரிய கோயில் குளங்களில் ஒன்று.

படம் : Aditya Mahar

திருவொற்றியூர் தியாகராஜர் கோயில் குளம்

திருவொற்றியூர் தியாகராஜர் கோயில் குளம்

சென்னையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலில் அமைந்துள்ள குளம் வற்றிய நிலையில் காணப்படுகிறது.

படம் : Mohan Krishnan

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்