Search
  • Follow NativePlanet
Share
» »கடவுள்கள் பேசுமா? ஆம்! இந்தியாவில் உள்ள இந்த கோவிலில் கடவுள்கள் பேசுகின்றனவாம்! ஆச்சரியமாக இருக்கிறதா?

கடவுள்கள் பேசுமா? ஆம்! இந்தியாவில் உள்ள இந்த கோவிலில் கடவுள்கள் பேசுகின்றனவாம்! ஆச்சரியமாக இருக்கிறதா?

கடவுள்கள் பேசும் என்று சொன்னால் இந்த நவீன காலத்தில் யார் நம்மை நம்புவார்கள். எல்லோரும் நிச்சயம் நம்மை நகைப்பார்கள்! ஆனால் பீகார் மாநிலத்தின் பக்சரில் உள்ள ராஜராஜேஸ்வரி திரிபுர சுந்தரி கோயில் "பேசும் தெய்வங்களின் கோயில்" என்றழைக்கப்படுகிறது. இரவு நேரத்தில் கோயில் நடை சாற்றப்பட்டு இருக்கும் போது கோயிலில் இருந்து பலவிதமான ஒலிகள் எழுகின்றன. கோயிலில் உள்ள தெய்வங்கள் இரவில் ஒருவருக்கொருவர் பேசுவதாக பக்தர்களும் உள்ளூர் மக்களும் நம்புகிறார்கள். அதோடு இரவில் எழும் இந்த சத்தம் எதனால் என்பதை இன்றளவும் விஞ்ஞானிகளால் கூட நிரூபிக்க முடியவில்லையாம். அப்படியென்றால் என்ன அர்த்தம் மக்களே!

பேசும் தெய்வங்களின் கோயில்

பேசும் தெய்வங்களின் கோயில்

இந்தியா முழுவதும் அமைந்துள்ள மற்ற புராதன மற்றும் மர்மமான கோவில்களில் இருந்து இந்த கோயிலை வேறுபடுத்துவது எது? ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கோவில்கள் இல்லையா? பீகாரில் உள்ள ராஜராஜேஸ்வரி திரிபுர சுந்தரி கோயிலை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்துவது எது? கோவிலுக்குள் இருக்கும் தெய்வங்கள் மனிதர்களைப் போல பேசுகின்றன! அதற்கு என்ன காரணம் என்று யாராலும் இன்றளவும் நிரூபிக்க முடியவில்லை.

தாந்த்ரீக வழிபாட்டிற்க்காக கட்டப்பட்ட கோயில்

தாந்த்ரீக வழிபாட்டிற்க்காக கட்டப்பட்ட கோயில்

பீகாரின் பக்சர் மாவட்டத்தில் உள்ள ராஜ ராஜேஸ்வரி திரிபுர சுந்தரி கோயில் ஒரு பழமையான மற்றும் மர்மமான கோவிலாக உள்ளது. புராணங்களின்படி, சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு, பவானி மிஸ்ரா என்ற தந்திரி ஒருவர், திரிபுர சுந்தரி தேவியின் சன்னதி மற்றும் பிற தேவதைகளின் சன்னதியைக் கட்டுவதற்கு இந்த இடத்தை தேர்ந்தெடுத்து இக்கோவிலை எழுப்பியுள்ளார். தாந்த்ரீக வழிபாடு செய்து தாந்த்ரீக சக்திகளை அடைய வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆலயம் தச மகாவித்யாக்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

கோயிலின் முக்கிய தெய்வங்கள்

கோயிலின் முக்கிய தெய்வங்கள்

இக்கோயிலில் வழிபடப்படும் முக்கிய தெய்வம் ராஜ் ராஜேஸ்வரி திரிபுர சுந்தரி ஆவார். முக்கிய தெய்வம் மட்டுமின்றி திரிபுரா தேவி, தூமாவதி, பகலாமுகி, தாரா, காளி, சின்னமஸ்தா, ஷோடஷி, மாதங்கி, கமலா, உக்ர தாரா மற்றும் புவனேஸ்வரி உள்ளிட்ட தேவி சக்தியின் பல்வேறு வடிவங்கள் இங்கு வழிபடப்படுகின்றன. பெண் தெய்வங்கள் மட்டுமின்றி பைரவர் தத்தாத்ரேய பைரவர், படுக் பைரவர், அன்னபூர்ண பைரவர், கால பைரவர் மற்றும் மாதங்கி பைரவர் ஆகிய தெய்வங்களும் இங்கு வழிபடப்படுகின்றன.

இரவினில் பேசும் தெய்வங்கள்

இரவினில் பேசும் தெய்வங்கள்

பகலில் மிக அழகாக காட்சி தரும் இந்த கோயிலின் பிம்பம் இரவில் வேறு விதமாக மாறுகிறது. கோயிலில் இருந்து இரவில் பலவிதமான ஒலிகள் கேட்கின்றன. கோயிலில் உள்ள தெய்வங்கள் இரவில் ஒருவருக்கொருவர் பேசுவதாக பக்தர்களும் உள்ளூர் மக்களும் நம்புகிறார்கள். விஞ்ஞானிகள், மதச்சார்பின்மைவாதிகள், சந்தேகவாதிகள், நாத்திகர்கள் மற்றும் பக்தர்கள் இப்படி அனைவராலும் பீகாரின் பக்சரில் உள்ள ராஜ ராஜேஸ்வரி திரிபுர சுந்தரியில் இரவு நேரங்களில் இயற்கைக்கு மாறான கடவுள்கள் பேசுவதைப் பற்றி விளக்க முடியவில்லை.

விஞ்ஞானிகளாலும் விளக்க முடியாத விஷயம்

விஞ்ஞானிகளாலும் விளக்க முடியாத விஷயம்

இன்னும் திகைப்பூட்டும் விஷயம் என்னவென்றால், கோயிலின் சுற்றுப்புறத்தில் எந்த உயிரினமும் இல்லாதபோதுதான் சத்தம் கேட்கிறது. அதனால் இரவில்தான் சத்தம் கேட்கிறது. ஒலிகள் மிகவும் தெளிவாக உள்ளன, ஆனால் அவற்றை யாரும் புரிந்து கொள்ள முடியாது. மக்களால் ஒலிகளின் மூலத்தைக் கண்டறியவும் முடியவில்லை.

அந்த இடத்தை பார்வையிட்ட விஞ்ஞானிகள் குழு, ஆட்கள் இல்லாத நேரத்தில் கூட கோவிலில் இருந்து குரல்கள் வருவதை உறுதி செய்தனர். இரவில் ஒலித்ததற்கான சரியான காரணத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

விருப்பங்களை நிறைவேற்றும் தேவி

விருப்பங்களை நிறைவேற்றும் தேவி

இக்கோயிலில் வேத மற்றும் தாந்திரீக முறைகளைப் பயன்படுத்தி தெய்வங்களை வழிபடும் பாரம்பரியம் உள்ளது. இக்கோயில் இப்பகுதி இந்துக்களிடையே மிகவும் பிரபலமானது. கோயிலில் உள்ள சக்தி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட மந்திரங்களை உச்சரித்து மனமுருகி வேண்டினால் விருப்பங்கள் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. இந்த கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து தந்திரிகள் வருகை தருகின்றனர். இந்த ஆலயம் ஆன்மீக ஆர்வலர்களுக்கு ஒரு காந்தமாக செயல்படுகிறது. தந்திர பயிற்சியாளர்கள் இந்த சன்னதியின் சக்தியின் மீது உடையாத மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த பேசும் தெய்வங்களின் கோயிலுக்கு நீங்கள் எப்போது செல்ல போகிறீர்கள்?

Read more about: buxar bihar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X