» »சுரங்கம் எண் 33 - அந்த கதை என்ன தெரியுமா?

சுரங்கம் எண் 33 - அந்த கதை என்ன தெரியுமா?

Written By: Udhaya

பார்க்கும்போது அமைதியாகத்தான் இருக்கும். சில இடங்கள் அசையாமல் அப்படியே இருப்பதுபோல தோன்றும். நாம் இப்போது சிம்லாவின் சுரங்கம் எண் 33ஐப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்.

அப்படி என்ன சிறப்பு அந்த சுங்கத்தில் என்கிறீர்களா வாருங்கள் பார்க்கலாம்

 இமாச்சல பிரதேசம்

இமாச்சல பிரதேசம்

அது ஒரு இரண்டு மணி நேர பயணம். இமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்திலுள்ள பரோக் நிலையத்துக்கு 40கிமீ பயணம்.

 கல்கா சிம்லா

கல்கா சிம்லா

இது கல்கா சிம்லா ரயில்வே வழித்தடமாகும்.

இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றாகும்

ரயில்

ரயில்


இந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் 880 பாலங்களையும், 919 வளைவுகளையும், 102 சுரங்கங்களையும் கொண்டது.

 பரோக்

பரோக்

32 சுரங்கங்களைத் தாண்டி பரோக் நகரத்தை வந்தடைகிறோம். அதைத்தொடர்ந்து 33 வது சுரங்கத்தை அடைகிறோம்.

நீளம்

நீளம்

ரயில்வே தடங்களிலேயே மிக நீளமானது கிட்டத்தட்ட 1.15கிமீ நீளமுடையது.

சுத்தமான ரயில் நிலையம்

சுத்தமான ரயில் நிலையம்

நீங்கள் நினைக்கும் மற்ற வடநாட்டு ரயில் நிலையங்களைப் போலில்லை இந்த பரோக் நிலையம் மிகவும் சுத்தமானதாக காணப்படுகிறது.

பரோக் மலைப்பிரதேசம்

பரோக் மலைப்பிரதேசம்

இது ஒரு சிறிய கிராமம் ஆகும். 4500 அடிகள் உயரத்துக்கு காணப்படுகிறது.

 33வது சுரங்கம்

33வது சுரங்கம்

இந்த சுரங்கம் 1143மீட்டர் நீளமுடையது. இதனாலேயே இது சுற்றுலாத் தளமாக பார்க்கப்படுகிறது.

 பேய் பயம்

பேய் பயம்


சிம்லா சுரங்கத்திலும் பேய் இருக்கும் என்பதை பல படங்களில் நாம் பார்த்திருப்போம். அது உண்மைதான் என நிரூபிக்கும் வகையில் சிம்லாவில் ஒரு அமானுஷ்யம் நடக்கிறது.

கவனமாக இருங்கள்

கவனமாக இருங்கள்

சிம்லா பேய் சிம்லாவிற்கு விடுமுறைக்கு செல்ல நீங்கள் விரும்பினால் , இந்த சுரங்கப்பாதையில் கொஞ்சம் கவனமாக இருங்கள் . இந்த சுரங்கப்பாதை சிம்லா-கால்கா ரயில் தடத்தில் வருகிறது . ஒன்றல்ல இரண்டல்ல பல நூறு ஆவிகள் அங்கு சுற்றிவருவதாக மக்கள் நம்புகிறார்கள். அதன் உள்ளே ஈரப்பதத்துடனும் இருண்டும் இருக்கும். சிலர் ஒரு பிரிட்டிஷ் ஆவி அவர்களுடன் பேசுவதாக கூறுகின்றனர். இன்னும் சிலர் அந்த சுரங்கப்பாதையின் சுவர்களில் ஒரு பெண்ணின் ஆவி நகருவதை பார்த்திருக்கிறார்களாம். நீங்கள் சென்றுகொண்டிருக்கும்போது உங்கள் கண்முன் வந்து மறையுமாம் இந்த ஆவிகள்.

மற்றபடி இந்த சுற்றுலாத் தளம் மிகச்சிறப்பானதுதானுங்க!!