Search
  • Follow NativePlanet
Share
» »யூ லூம் சுனாராஜா - அப்படின்னா என்ன தெரியுமா?

யூ லூம் சுனாராஜா - அப்படின்னா என்ன தெரியுமா?

ஜெயின்டியா மலைகள் மாவட்டத்தின் ஊம்கியாங் கிராமததிற்கு அருகில் உள்ள ஒரு ஊருக்கு பேருதான். யூ லூம் சுனாராஜா-என்ற கிராமத்தை ஷில்லாங் நெடுஞ்சாலையில் இருந்து 3 மணி நேரம் மற்றும் 12 நிமிட பயணத்தில் அடைய மு

By Udhaya

ஜெயின்டியா மலைகள் மாவட்டத்தின் ஊம்கியாங் கிராமததிற்கு அருகில் உள்ள ஒரு ஊருக்கு பேருதான். யூ லூம் சுனாராஜா-என்ற கிராமத்தை ஷில்லாங் நெடுஞ்சாலையில் இருந்து 3 மணி நேரம் மற்றும் 12 நிமிட பயணத்தில் அடைய முடியும். இந்த இடத்துக்குதான் இப்ப நாம போகபோறோம்.

பசும்புல்வெளி

பசும்புல்வெளி

அபரிமிதமான பசுமைப் போர்வையால் மூடப்பட்டிருக்கும் இந்த யூ லூம் சுனாராஜா குன்றுகளுக்கு செல்லும் வழியில், பசும்புல்வெளிகளுக்கிடையே குறுக்கும் நெடுக்குமாக பரந்து விரிந்திருக்கும் மலைகளைக் காண முடியும்.

AditiVerma2193

 சக்தி வாய்ந்த

சக்தி வாய்ந்த

இந்த ஏரி இருக்கும் பகுதியை வயதான யானைகள் தங்களின் இறுதி ஓய்விடமாக தேர்ந்தெடுத்து, அவற்றின் மரணத்தை அரவணைக்கும் இடமாக கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. அதே போல, சக்தி வாய்ந்த நாகராஜா இந்த இடத்தில் தன்னுடைய நாக மாணிக்கத்தைக் காத்து வருவதாகவும் உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.

wiki

வாடகை காரில்

வாடகை காரில்

அமைதியான தண்ணீர், சுத்தமான காற்று மற்றும் நகரத்தின் ஆரவாரங்களிலிருந்து விலகியிருக்கும் தொலைவு ஆகியவற்றின் காரணமாக யூ லூம் சுனாராஜா சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய வாழ்வின் ஓரிரு நாட்களை அமைதியாக கழிக்க தேர்ந்தெடுக்கும் இடமாக உள்ளது. ஷில்லாங்கில் இருந்து வாடகை காரில் இங்கு வருவது மிகவும் எளிமையான வழிமுறையாகும்

Arindam Das

க்ராங் சூரி நீர்வீழ்ச்சி

க்ராங் சூரி நீர்வீழ்ச்சி


ஜோவாய் நகரத்தின் அம்ராலெம் துணைப் பிரிவில் க்ராங் சூரி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் காணப்படும் பல்வேறு பறவையினங்களில், மிகவும் அழகானதாகவும் மற்றும் தெய்வீக தன்மை உடையதாகவும் க்ராங் சூரி என்ற பறவை கருதப்படுகிறது. பசுமையான சுற்றுச்சூழல் மற்றும் பெரிய பாறைகளை கொண்டிருக்கும் இடம் உங்களை கவிதை எழுதத் தூண்டும்! இங்கிருந்து கீழாக இறங்கிவரும் பள்ளமான இடத்தில் குளுகுளுவென்று இருக்கும் தண்ணீரில் குளித்து வருவது சிறந்த அனுபவமாக இருக்கும். மழை பெய்யும் நாட்களில், தண்ணீர் துளிகள் அடர்த்தியாக விழுந்து கொண்டிருப்பதால், அது மூடுபனி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். இந்த இடத்திற்கு எளிதில் வந்து செல்லும் பொருட்டாக மாவட்ட நிர்வாகம் சரளை கற்களால் பாதைகளை அமைத்துள்ளது. மேலும், இயற்கையான தோற்றத்தை உருவாக்கும் பொருட்டாக, சிமெண்ட் பயன்படுத்தாமல், இயற்கையாக கிடைத்த பல்வேறு வண்ணங்களாலான கற்களை பயன்படுத்தி பாதைகளை அவர்கள் அமைத்திருக்கிறார்கள். தண்ணீர் அபரிமிதமாக இருக்கக்கூடிய மழைக்காலங்களில் இந்த இடத்திற்கு வருவது சிறந்த அனுபவமாக இருக்கும்.

wiki

 லூக்ஸி பூங்கா

லூக்ஸி பூங்கா

மேகாலயாவின் ஜெயின்டியா மலைகள் மாவட்டத்தில் உள்ள லாஸ்கீய்ன் ஒன்றியத்தில் உள்ள லூக்ஸி என்ற கிராமத்தில் லூக்ஸி பூங்கா உள்ளது. இது மாவட்டத் தலைநரில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ளது. இந்த பூங்காவை வளர்க்கும் பொருட்டாக, மாவட்ட நிர்வாகம், வனத்துறையினர் உதவியுடன் சாலைகளை அமைத்துள்ளது. இங்கிருக்கும் வியூ பாயிண்ட் பகுதிகளில் அவர்கள் நிழற்குடைகள், வேலிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அமர்வதற்கான இடங்கள் ஆகியவற்றை அமைத்துள்ளனர். குழந்தைகள் தங்களுடைய நேரத்தை விளையாடி கழிக்கும் பொருட்டாக இங்கே உருவாக்கப்பட்டுள்ள சறுக்கு மற்றும் சுற்று விளையாட்டு அமைப்புகள் அவர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாகவே, நகர வாழ்க்கையின் நரக இன்னல்களிலிருந்து சற்றே விலிகி, நம்முடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ந்திருக்க மிகவும் ஏற்ற இடமாக இந்த பூங்கா உள்ளது. மேலும், குப்லி ஆற்றங்கரையில் ஒரு பொழுதுபோக்கு மையமும் உள்ளது. உள்ளூர் சேவை நிறுவனமான லூக்ஸி சென்டர் ஸ்கூல் என்ற நிறுவனம் இங்கே படகு போட்டிகள் மற்றும் நீச்சல் போட்டிகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. ஷில்லாங்கில் இருந்து வாடகை காரில் இங்கு வருவது மிகவும் எளிமையான வழிமுறையாகும்.

wiki

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X