» » எதிர்காலத்தில் நடப்பவற்றை முன்கூட்டியே குறி சொல்லும் அந்த கோவில் எங்குள்ளது தெரியுமா?

எதிர்காலத்தில் நடப்பவற்றை முன்கூட்டியே குறி சொல்லும் அந்த கோவில் எங்குள்ளது தெரியுமா?

Written By: Udhaya

சசிகலா உள்ளிட்ட மூவர் சொத்துகுவிப்பு வழக்கில் சிறை சென்றுள்ளனர். தமிழகத்தின் முக்கிய புள்ளிகள் சிலர் சிறை தண்டனைப் பெறுவர் என சிவன்மலை கடவுள் அன்றே எச்சரித்தார். இதுபோன்று பல அற்புதங்கள் சிவன்மலையில் நடந்து வருகின்றன. அந்த  சிவன்மலை எங்க இருக்கு தெரியுமா?

காங்கயம்-திருப்பூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த சிவன்மலை. இந்த மலை மீது சுப்ரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள இறைவன் பக்தரின் கனவில் வந்து ஒரு பொருளைக் கூறி, அதை தனது சன்னிதியில் வைத்து பூசை செய்ய சொல்வாராம்.

இறைவன் உத்தரவிடும் பொருளை வைத்து தொடர்ந்து பூசை செய்வது இந்த கோவிலின் நீண்ட நாள் பழக்கமாக உள்ளது. அதாவது கோவிலின் மூலவரான சுப்பிரமணியர், அவரது பக்தரின் கனவில் வந்து, தான் விரும்பும் ஒரு பொருளை சொல்வார். அந்த பொருளை, கோயிலில் இருக்கும் பெட்டியில் வைத்து பூஜை செய்வார்கள். அந்த பெட்டியில் ஆண்டவன் உத்தரவு என்று எழுதப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பொருளால் மிகப்பெரிய நன்மையோ, தீமையோ ஏற்படும்.

 சிவன் மலை

சிவன் மலை

படத்தில் இருப்பது சிவன் மலை. இந்த மலையின் மீதுதான் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் இறைவன் நன்மையை செய்வதோடு நில்லாது, வரப்போகும்

தீமைகளை முன்கூட்டியே அறிவித்து மக்களை காத்தருள்கிறார் என்கின்றனர் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள்.

செவ்வாய்கிழமை செல்லவேண்டிய கோவில்கள் பற்றி அறிய கிளிக்குங்கள்

சிவன் மலை சுப்பிரமணியர்

சிவன் மலை சுப்பிரமணியர்

கடந்த சில ஆண்டுகளாகவே சிவன் மலை கோவிலில் உத்தரவு பெட்டியில் வைத்து சர்க்கரை, அரிசி, தண்ணீர், பென்சில், கோனார் தமிழ் உரை நோட்ஸ், வேட்டி, துண்டு, பால், மோர், உப்பு,

அச்சுவெல்லம், துளசி இலைகளும் கூட வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையாரின் அதிசயங்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக்குங்கள்

ஆண்டவனின் உத்தரவுப் பெட்டி

ஆண்டவனின் உத்தரவுப் பெட்டி

இந்த கோவிலில் ஆண்டவன் உத்தரவு என்று எழுதப்பட்ட ஒரு பெட்டி உள்ளது. ஆண்டவன் உத்தரவு பெட்டியில் சிவன்மலை கோயிலில் இரும்புச்சங்கிலி கடந்த 10ஆம் தேதி முதல் வைத்து

பூஜை செய்யப்படுகிறது. இந்த பெட்டியில் இரும்பு சங்கிலியை வைத்து எந்த பக்தரின் கனவில் வந்து கடவுள் உத்தரவிட்டார் என்றும் எழுதப்பட்டுள்ளது. இரும்பு சங்கிலியை வைக்கச்

சொல்லி உத்தரவு வந்துள்ளதால், பெரும்புள்ளிகள் கைதாக வாய்ப்பிருப்பதாகவும், திருட்டு முதலான அசம்பாவிதங்கள் நிகழவுள்ளதாகவும் உள்ளூர் மக்கள் பேசி வருகின்றனர்.

இறைவனின் அற்புதங்களுக்கு இங்கே கிளிக்குங்கள்

சுப்பிரமணியர் கோவில் நுழைவு வாயில்

சுப்பிரமணியர் கோவில் நுழைவு வாயில்

மலையின் மீது அமைந்துள்ள கோவிலுக்கு செல்ல, பாறைகளில் செதுக்கியும், வடிவமைக்கப்பட்டும் இருக்கும் படிகள் அழகாக வண்ணமூட்டப்பட்டு இருக்கின்றன. வழக்கமான

மலைக்கோவில்களைப் போலவே, பக்தர்கள் வழியில் அமர திண்ணைகள் முதலியன கட்டப்பட்டுள்ளன.

மண் வைத்து பூசை

மண் வைத்து பூசை

முன்பு ஒரு பக்தரின் கனவில் வந்து மண் வைத்து பூசை செய்ய உத்தரவு வந்தது. அப்போதிலிருந்து இந்த பகுதியைச் சுற்றி நிலத்தின் மதிப்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டது என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.

வைகுண்ட ஏகாதசிக்கு என்ன சிறப்பு

சுப்பிரமணியர் தரிசனம்

சுப்பிரமணியர் தரிசனம்

தனது மனைவிகளுடன் இருக்கும் சுப்பிரமணியரை தரிசனம் செய்வது புண்ணியம் என்கின்றனர் கோவிலுக்கு வரும் பக்தர்கள்.

தமிழகத்தின் சக்திவாய்ந்த கோவிலுக்கு செல்ல இங்கே கிளிக்குங்கள்

சுனாமி

சுனாமி

கடவுள் உத்தரவு தண்ணீரை வைக்கச் சொல்லி உத்தரவு வந்தால், அந்த காலகட்டத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். அல்லது பஞ்சம் தீர்ந்து பெருவெள்ளம் ஏற்படும். 2004ஆம் ஆண்டு

தண்ணீரை வைக்கச்சொல்லி உத்தரவு வந்தபோதுதான் சுனாமி ஏற்பட்டதாம்.

மஞ்சள் விலையுயர்வை வெளிக்காட்டிய சுப்பிரமணியர்

மஞ்சள் விலையுயர்வை வெளிக்காட்டிய சுப்பிரமணியர்

மஞ்சள் வைக்கச்சொல்லி உத்தரவு வந்தது. அந்த நேரத்தில்தான் மஞ்சள் தங்கத்தின் விலையை விட அதிக அளவுக்கு மார்க்கெட்டில் விற்பனையானது. அதன்படி இப்போது இரும்புச்

சங்கிலியை வைத்து வழிபடச் சொல்லி உத்தரவு வந்திருக்கிறதாம்.

PC: Rajkumar6182

எப்படி செல்வது

எப்படி செல்வது


திருப்பூரிலிருந்து காங்கேயம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது இந்த சிவன் மலை. கோயம்புத்தூர், பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் முதலிய இடங்களிலிருந்தும் எளிதில் அடையும்

வகையில் அமைந்துள்ளது இந்த சிவன்மலை சுப்பிரமணியர் கோவில்.

சிவன் மலைக்கு வர காங்கேயம், சிவகிரி, காசிபாளையம், செட்டிப்பாளையம்,கொளத்துப்பாளையம் முதலிய நகரங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. இவையனைத்தும் சிவன்

மலையிலிருந்து 15 கிமீ தொலைவிலேயே அமைந்துள்ளன.

PC: sivanmalaimurugan

ரயில் நிலையங்கள்

ரயில் நிலையங்கள்


சிவன்மலைக்கு வரும் பக்தர்களுக்கு எளிதாக செல்லும் வகையில் ஏறக்குறைய 20 கிமீ தூரத்திற்குள்ளாகவே இந்த ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.

ஊத்துக்குளி 18 கிமீ

விஜயமங்கலம் 19.5கிமீ

திருப்பூர் குளிப்பாளையம் 21.4 கிமீ

PC: Superfast1111

விமான நிலையம்

விமான நிலையம்

கோயம்பத்தூர் விமான நிலையம் 55 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

PC: Julian Herzog

Read more about: travel, பயணம்