» »வாரணாசி தெரியும் ஈஸ்ட் காசி பத்தி கேள்வி பட்டிருக்கீங்களா?

வாரணாசி தெரியும் ஈஸ்ட் காசி பத்தி கேள்வி பட்டிருக்கீங்களா?

Written By: Udhaya

ஈஸ்ட் காசி ஹில்ஸ் மேகாலயா மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் ஒன்றாகும். மாநிலத்தலைநகரான ஷில்லாங் நகரமே இந்த மாவட்டத்தின் தலைநகரமாகவும் உள்ளது. பல சுவராசியமான சுற்றுலா ஸ்தலங்களும் விசேஷ அம்சங்களும் இந்த மாவட்டத்தில் நிரம்பியுள்ளதால் இது மேகாலயா மாநிலத்தில் அதிகம் பேர் வரும் சுற்றுலாப்பிரதேசமாக விளங்குகிறது.

சரி அப்படி என்னதான் இருக்கிறது என்கிறீர்களா கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்

 இயற்கை காட்சிகள்

இயற்கை காட்சிகள்

ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டம் எல்லாவிதமான சுற்றுலா பொழுதுபோக்குகளையும் சுற்றுலாபயணிகளுக்கு வழங்குகிறது. அற்புதமான இயற்கைக்காட்சிகளை கொண்டிருக்கும் ஷில்லாங் நகரம் மட்டுமல்லாமல் இம்மாவட்டத்தின் இதர தாலுக்கா பகுதிகளும் தம்முள் வித்தியாசமான இயற்கை எழில் அம்சங்கள் வாய்க்கப் பெற்றிருக்கின்றன.

Subhadeep Bhattacharjee

 பாரம்பரிய நடனத்திருவிழா

பாரம்பரிய நடனத்திருவிழா

இவற்றில் ஒன்றான ஸ்மிட் எனும் கிராமம் ஹிமா கைரம் எனும் மலையடிவாரத்தில் வீற்றிருக்கிறது. இக்கிராமத்தில் வருடா வருடம் நடத்தப்படும் பாரம்பரிய நடனத்திருவிழா ஒரு முக்கியமான சுற்றுலா நிகழ்ச்சியாகும்.

 மாவ்லின்னாங்

மாவ்லின்னாங்


மாவ்லின்னாங் எனும் மற்றொரு கிராமம் ஸ்மிட் கிராமத்திலிருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. இந்த கிராமம் பற்றி சொல்வதற்கு நிறையவே இருக்கிறது.

Arshiya Urveeja Bose

 தூய்மையான கிராமம்

தூய்மையான கிராமம்

இந்த மாவ்லின்னாங் கிராமம் ஆசியாவிலேயே மிக தூய்மையான கிராமமாக கருதப்படுகிறது. இந்த தூய்மையின் இயல்பை விருந்தினர்கள் நேரில் பார்த்து அனுபவித்து புரிந்து ரசிக்க முடியும்.

Subhadeep Bhattacharjee

 வேர் பாலம்

வேர் பாலம்

இது தவிர ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள லெயிட்கின்சியூ எனும் இடத்தில் 100 வருடங்களாக இருந்து வரும் ஒரு வேர் பாலத்தை பார்க்கலாம். உயிருள்ள மரங்களின் வேர்களை பின்னி உருவாக்கப்பட்டிருக்கும் இந்த தொங்கு பாலம் இப்பகுதி மக்களின் அறிவு நுட்பத்துக்கு ஒரு சான்றாக வீற்றிருக்கிறது.

Subhadeep Bhattacharjee

 மாவ்ப்ளாங்

மாவ்ப்ளாங்


இது இன்றும் மக்கள் ஆற்றை கடந்து செல்ல பயன்படுகிறது. புனிதமான காட்டுத்தோப்புகள் நிறைந்திருக்கும் மாவ்ப்ளாங் எனும் இடமும் ஈஸ்ட் காசி ஹில்ஸ் சுற்றுலாவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பிரசித்தி பெற்றுள்ளது.

 கவர்ச்சி அம்சங்கள்

கவர்ச்சி அம்சங்கள்

ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தில் இயற்கை ரசிகர்கள் பார்க்க வேண்டிய எண்ணற்ற அம்சங்கள் நிரம்பியிருக்கின்றன. இவற்றில் மாவ்ப்ளாங், ஸ்மிட், லெயிட்கின்சியூ, மாவ்சின்ராம், மாவ்லின்னாங் கிராமம் போன்றவை வெகு பிரசித்தமான சுற்றுலா கவர்ச்சி அம்சங்களாக அறியப்படுகின்றன.


Subhadeep Bhattacharjee

 எப்படி செல்வது?

எப்படி செல்வது?

ஷில்லாங் நகரத்தில் தங்கிக்கொண்டு பயணிகள் இந்த ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தின் சுற்றுலாத்தலங்களுக்கு இஷ்டம் போல் விஜயம் செய்து ரசிக்கலாம். கவுஹாட்டி நகரத்துடன் ஷில்லாங்க் நல்ல முறையில் போக்குவரத்து வசதிகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே எல்லா காலங்களிலும் வாகன வசதிகளுக்கு குறைவேயில்லை.

Arshiya Urveeja Bose

https://commons.wikimedia.org/wiki/File:Mawphlang_village.jpg

 பருவநிலை

பருவநிலை

இம்மாவட்டத்தின் எல்லா பகுதிகளுமே மிதமான பருவநிலை இயல்பை கொண்டிருக்கின்றன. தென்மேற்கு மழைப்பருவம் இம்மாவட்டத்துக்கு அதிக மழைப்பொழிவை அளிப்பதால் பல மாதங்களுக்கு மழை நீடிக்கிறது. இருப்பினும் குளிர்காலத்தில் ஈரமற்ற சூரிய வெளிச்சம் நிறைந்த சூழல் வாய்க்கிறது.

Jay.233

Read more about: travel, trek
Please Wait while comments are loading...