» »தமிழ்நாடு அரசு சின்னத்தில் இருக்கும் கோபுரத்தின் அட்டகாசமான வரலாறு தெரியுமா?

தமிழ்நாடு அரசு சின்னத்தில் இருக்கும் கோபுரத்தின் அட்டகாசமான வரலாறு தெரியுமா?

Posted By: Udhaya

தமிழக அரசு சின்னத்தில் இருக்கும் கோபுரத்தின் வரலாறு பற்றியும், அது எந்த கோபுரம் எந்த கோயில் என்பன பற்றியும் இந்த பதிவில் காண்போம்.

தமிழ்நாடு அரசின் சின்னமாக கோயில் ஒன்றின் கோபுரமும், அதன் முன்னர் இந்திய சின்னமும் வாய்மையே வெல்லும் வாசகமும் இடம்பெற்றிருப்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அந்த கோபுரம் எந்த கோயிலுடையது, எந்த ஊரைச் சார்ந்தது அதன் வரலாறு என்ன என்பது பற்றி இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

தமிழக அரசு சின்னம்

தமிழக அரசு சின்னம்

தமிழக அரசின் சின்னத்தில் இருப்பது திருவில்லிப்புதூர் எனப்படும் ஸ்ரீவில்லிப்புதூர் நகரத்தில் அமைந்துள்ள ஆண்டாள் கோயிலின் கோபுரம் ஆகும்.

Prinzy555

எங்குள்ளது

எங்குள்ளது


திருவில்லிப்புதூர் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகராட்சிப்பகுதியாகும். இங்கு வடபத்ரசாயி என்ற ஸ்ரீவில்லிப்புதூர் ஆண்டவருக்கு எழுப்பப்பட்டிருக்கும் கோயில் உலகப் புகழ் பெற்றதாகும்.

Prinzy555

மீனாட்சியம்மன் கோயில்

மீனாட்சியம்மன் கோயில்


இந்த கோயிலின் கோபுரம் மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கோபுரத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

unknown

எப்போது வடிவமைக்கப்பட்டது

எப்போது வடிவமைக்கப்பட்டது

சென்னை மாகாண முதல்வராக ஓமந்தூரார் ராமசாமி 1949ம் ஆண்டு இந்த சின்னத்தை தமிழக சின்னமாக கொண்டு வந்தார். இது ஓவியரான ஆர். கிருஷ்ணராவ் என்பவரால் வரையப்பட்டது. சரி திருவில்லிப்புதூர் சுற்றுலா பற்றி காண்போம்.

Gauthaman

ஸ்ரீவில்லிப்புத்தூர்

ஸ்ரீவில்லிப்புத்தூர்

பால்கோவா என்று கூறியதுமே நம் நினைவுக்கு வருவது ஸ்ரீவில்லிப்புத்தூர் தான். இது பால்கோவாவிற்கு மாத்திரம் அல்ல கோவிலுக்கும் பெயர்பெற்ற நகரமாக திகழ்கின்றது. தனக்கென ஒரு தனித்துவமான பண்டைகால வரலாற்றை உடைய புனிதமான கோவில் நகரமான ஸ்ரீவில்லிபுத்தூர், தமிழ் நாட்டில் உள்ள விருதுநகரில் இருக்கின்றது.

இந்தியா முழுவதிலும் இக்கோவில்கள் புகழ்பெற்றனவாக இருக்கின்றன, தமிழக மக்கள் இவற்றை புனிதமானதாக மதிக்கின்றார்கள். வடபத்ரசாயி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட பதினோரு கலசங்கள் கொண்ட கோபுரமே இவ்விடத்தின் அடையாள சின்னம். ஆண்டு தோறும் நிகழும் சில மகாதிருவிழாக்களுக்கு இவ்விடம் புகழ்பெற்றது. இவ்விடத்தின் தெய்வம் சக்திவாய்ந்தது என்றும் மக்கள் கருதுகின்றனர்.

Srithern

 வரலாறு

வரலாறு


வில்லியும் கண்டனும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டணத்தை ஆட்சிசெய்த மகாராணி மல்லியின் இரு புதல்வர்கள். காட்டிற்கு வேட்டையாட சென்ற போது கண்டன் ஒரு புலியினால் கொல்லப்பட்டார். தனது சகோதரனுக்கு நிகழ்ந்த துன்பத்தை கடவுள் காட்டிலே உறங்கிக்கொண்டு இருந்த வில்லிக்கு தெரியப்படுத்தினார். தெய்வீக ஆணையின்படி காட்டின் நடுவே வில்லி ஒரு அழகான இடத்தை உருவாக்கினார். அதனால் ஆரம்பத்தில் இது வில்லிப்புத்தூர் என்று அழைக்கப்பட்டது, பின்னர் ஸ்ரீ ஆண்டாள் தேவி இவ்வூரில் பிறந்ததால் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்று பெயர்மாற்றம் பெற்றது. தமிழில் இதை திருவில்லிப்புத்தூர் என்று அழைப்பர்.

Balu

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

பல தமிழ் சமய நூல்களை எழுதிய மகான்கள் இந்த பட்டணத்தின் பெயரை தங்கள் இலக்கிய படைப்புகளில் பயன்படுத்தி இருக்கின்றனர். இந்த கோவில் நகரத்தில் பல்வேறு அற்புதமான இடங்கள் இருக்கின்றன. 108 திவ்யதரிசனங்களில் ஒன்றான ஸ்ரீ ஆண்டாள் கோவில் மகா விஷ்ணுவின் வீடுகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.

Balu

பெரியாள்வாரும், ஆண்டாளும்

பெரியாள்வாரும், ஆண்டாளும்

இவ்விடத்தில் பிறந்த ஆள்வார்களில் பெரியாள்வாரும், ஆண்டாளும் தமிழ் வரலாற்றில் மிகவும் முக்கியமானவர்கள். ரங்கமன்னார் என்றும் அழைக்கப்படும் வடபத்ரசாயி கோவிலும் இங்கு உள்ளது. பெருவெள்ளத்தின் போது இந்த தெய்வம் குழந்தை வடிவத்தில், வடபத்ரம் என்று அழைக்கப்படும் ஆலைமர இலையில் ஓய்ந்திருக்கிறார். சித்தார் ஆண்டவரின் வீடு அமைந்துள்ள சதுரகிரி மலையும் இவ்விடத்தில் இருக்கின்றது. மடவார் வளாகம் வைத்தியநாதர் கோவிலில் ஆறு அடி நீல நடராஜர் திருவுருவமும் இருக்கின்றது.

Prinzy555

 பழங்கால வரலாறு

பழங்கால வரலாறு

இவ்விடத்திற்கென்று ஒரு பழங்கால வரலாறும் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் கட்டழகர் கோவிலில் கள்ளழகர் கட்டழகர் வடிவத்தில் இருக்கிறார். இக்கோவில் மண்டுகா கோவிலில் இருக்கின்றது. ஆண்டு முழுவதும் தீர்த்த தொட்டி நீர் இவ்விடத்தில் பாய்ந்து ஓடுகின்றது. இவ்விடத்தின் தேர் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இத்திருவிழாவின் போது தமிழ் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் அறிந்துகொள்ள திரளான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.

Balasubramanian M

காண்பதற்குரிய இடங்கள்

காண்பதற்குரிய இடங்கள்

மடவார் வளாகம் வைத்தியநாதர் கோவில், ஆண்டாள் கோவில்,கட்டழகர் கோயில், பென்னிங்க்டன் பொது நூலகம், பிளவக்கல், செண்பகத்தோப்பு அணில் சரணாலயம், சதுரகிரிமலை, சங்கரன்கோயில், வலையாபதி, வடபத்ரசாயி கோயில் ஆகிய இடங்கள் மிகவும் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்களாக உள்ளன.

Balu

எப்படி செல்வது?

எப்படி செல்வது?

சாலை மார்கக்மாக பல வழிகளில் புனித பட்டணமாகிய ஸ்ரீவில்லிப்புத்தூரை அடையலாம். தனியார் சொகுசு வாகனங்களும், பேருந்து சேவைகளும் கிடைக்கப்பெறுகின்றன. மாவட்டத்தில் இருக்கும் மற்ற பேருந்து நிறுத்தங்கள் தவிற ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஒரு மத்திய பேருந்து நிறுத்தமும் இருக்கின்றது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரிலேயே ரயில் நிலையம் இருப்பதால் மாநிலத்தின் எந்த பகுதியில் இருந்தும் எளிதாக இவ்விடத்தை அணுகலாம். மாநிலம் முழுவதும் பல்வேறு ரயில் பாதைகள் இருப்பதால், அவரவர் தங்களுடைய பயணத்திற்கு ஏற்றவாறு பாதையை தெரிந்துகொள்ளலாம். ஸ்ரீவில்லிப்புத்தூர் ரயில் நிலையம், விருதுநகர்-தென்காசி வழித்தடத்தில் இருக்கின்றது.

ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு நெருக்கமான விமானநிலையம் மதுரையில் இருப்பதால் முதலில் மதுரைக்கு வந்து, அங்கிருந்து தனியார் சொகுசு வாகனங்கள் மூலமாக ஸ்ரீவில்லிப்புத்தூரை அடையலாம். சென்னையில் இருந்தும் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு வரலாம்.

எப்போது செல்லலாம்?

எப்போது செல்லலாம்?


நிச்சயமாக இளவேனிர்காலமே ஸ்ரீவில்லிப்புத்தூரின் சிறந்த காலம் ஆகும். அக்காலகட்டத்தில் பட்டணமே புதுப்பொழிவுடன் காணப்படுகின்றது. குளிர்க்காலத்திற்கு பிறகு, கோடக்காலத்திற்கு முன்பு இருப்பதால், இக்காலத்தை மகிழ்ந்து அனுபவிக்கலாம். இக்காலத்தில் சராசரி தட்பவெப்பம் 25 முதல் 28 டிகிரி செல்சியசாக இருக்கின்றது.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்