» »டைட்டானிக் கப்பல் விபத்தில் இறந்த ஆனி ஃபங்க் ஊர் எது தெரியுமா?

டைட்டானிக் கப்பல் விபத்தில் இறந்த ஆனி ஃபங்க் ஊர் எது தெரியுமா?

Written By: Udhaya

டைட்டானிக் கப்பல் விபத்தில் இறந்துபோனவர்களில் ஒருவரான 'ஆனி ஃபங்க்' எனும் கிறித்துவ பிரச்சாரகர் சத்திஸ்ஹர் மாநிலத்தின் 'ஜாஞ்ச்கிர்-சம்பா' மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் அமெரிக்கராக இருந்தாலும், தன் வாழ்நாளின் இறுதிகளில் இந்த பகுதியில்தான் பிரச்சாரகராக இருந்து பணியாற்றினார்.

'ஜாஞ்ச்கிர்-சம்பா' மாவட்டம் சத்திஸ்ஹர் மாநிலத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது. எனவே இதற்கு 'சத்திஸ்ஹரின் ஹிருதயம்' எனும் சிறப்புப்பெயரும் உண்டு. தற்போது சத்திஸ்ஹர் மாநிலத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக ஜாஞ்ச்கிர் விளங்குகிறது. குறிப்பாக தானிய உற்பத்தியில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. ஆதி காலத்தில் குல்சுரி வம்சத்தை சேர்ந்த மஹாராஜா ஜாஜ்வல்யா என்பவரின் ராஜ்யத்தில் இந்த ஜாஞ்ச்கிர்-சம்பா இடம் பெற்றிருந்ததாக வரலாறு தெரிவிக்கிறது. இந்த மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் அருகிலுள்ள உட்புற கிராமங்களிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களாக உள்ளனர்.

காய்கறிக்கும் சுண்ணாம்புக்கும் பிரபலமானது

காய்கறிக்கும் சுண்ணாம்புக்கும் பிரபலமானது

ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஹஸ்தேவ்-பாங்கோ அணைத்திட்டம் இங்குள்ள கிராமங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தின் நான்கில் மூன்று பங்கு நிலப்பரப்பு இந்த திட்டத்தின் மூலம் பாசன வசதியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு முக்கியமான விவாசய விளைச்சல் கேந்திரமாக விளங்கும் இம்மாவட்டம் புதிதான காய்கறிகள் மற்றும் சுண்ணாம்புக்கற்கள் போன்றவற்றுக்கு பிரசித்தி பெற்றிருக்கிறது.

சுற்றுலாத் தளங்கள்

சுற்றுலாத் தளங்கள்


புராதன வரலாற்று பின்னணியை கொண்டிருக்கும் இம்மாவட்டம் பழமையான பாரம்பரிய அம்சங்களை தனது நாகரிக அடையாளங்களாக கொண்டுள்ளது. ஜாஞ்ச்கிர்-சம்பா மற்றும் அருகிலுள்ள சுற்றுலா அம்சங்கள் ஒரு நினைவகமாகவே மாற்றப்பட்டிருக்கும் ‘ஆனி ஃபங்க்' எனும் கிறித்துவ பிரச்சாரகர் வசித்த வீடு இப்பகுதியில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக உள்ளது.

Ashwini Kesharwani

கோயில்கள்

கோயில்கள்

பல முக்கியமான ஆன்மீக தலங்களும் இந்நகரம் மற்றும் மாவட்டத்தில் நிரம்பியிருக்கின்றன. விஷ்ணு மந்திர், லக்ஷ்மணேஷரர் கோயில், ஆத்பர், நஹாரியா பாபா கோயில், துர்க்கா தேவி கோயில், ஷிவ்நாராயண் கோயில், சந்திரஹாசினி கோயில் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. இவை தவிர மதன்பூர்கர், கன்ஹரா, பிதாம்பூர், தேவார் கட்டா, தமுதாரா, கட்டாடய் போன்ற இடங்களும் பார்க்க வேண்டிய அம்சங்களாக அமைந்திருக்கின்றன.

விஷ்ணு கோயில்

விஷ்ணு கோயில்

ஹய்ஹய்வன்ஷ் வம்ச மன்னர்களால் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த கோயில் ஜாஞ்ச்கிர் நகரத்தில் பூரணி பஸ்தி எனும் இடத்திலுள்ள பீமா தலாப் எனும் ஏரிக்கருகில் அமைந்திருக்கிறது. இரண்டு பிரிவுகளாக கட்டத்துவங்கப்பட்ட இந்த கோயில் வளாகத்தின் கட்டுமான பணிகள் பாதியில் நின்று போனதால் அந்த இரண்டு பிரிவுகளுமே இரண்டு தனித்தனி கோயில்களாக நிலை பெற்றுவிட்டன. இன்றும் இந்த இரண்டு கட்டமைப்புகளின் நிறைவடையாத தோற்றத்தை பார்க்க முடிகிறது.

இந்த கோயிலில் அற்புதமான ஆண், பெண் தெய்வச்சிற்பங்களை பார்த்து ரசிக்கலாம். கந்தர்வர்கள் எனப்படும் மனிதக்கடவுள் ரூபங்கள் மற்றும் கின்னரர்கள் எனப்படும் பிரிவினர் ஆகியோரின் சிற்பவடிவங்களும் இங்கு மிக அற்புதமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த விஷ்ணு கோயிலை உள்ளூர் மக்கள் ‘நகடா மந்திர்' என்றும் அழைக்கின்றனர்.

Ashwini Kesharwani

எப்போது எப்படி செல்லலாம்?

எப்போது எப்படி செல்லலாம்?

ஏப்ரல் முதல் ஜூன் வரை இங்கு கோடைக்காலம் நிலவுகிறது. அதிக உஷ்ணம் மற்றும் ஈரப்பதத்தோடு காணப்படும் கோடைக்கு மாற்றாக குளிர்காலத்தில் இங்கு இனிமையான சூழல் நிலவுகிறது. விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக சுற்றுலாப்பயணம் மேற்கொள்வதற்கான போக்குவரத்து வசதிகளை இந்த மாவட்டம் வாய்க்கப்பெற்றுள்ளது. எனவே பயணிகளுக்கு சிரமம் ஏதும் இருக்கப்போவதில்லை.

ஆத்பர்

ஆத்பர்

சத்திஸ்ஹர் மாநிலத்தில் உள்ள முக்கியமான ஆன்மீக யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாக இந்த ஆத்பர் அஷ்டபுஜி எனும் இடம் பிரசித்தமாக விளங்குகிறது. எட்டு கரங்களை கொண்ட தேவியின் அவதாரம் இங்கு கோயில் கொண்டிருக்கிறது. நவராத்திரி திருநாளின்போது இங்கு ‘ஜோதி கலாஷ்' எனப்படும் தீபவிளக்குகள் ஏற்றப்படுகின்றன. இந்த வண்ணமயமான காட்சியை காண்பதற்காகவே ஏராளமான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்.

தொன்மையான கட்டிடக்கலை அம்சங்களோடு காட்சியளிக்கும் ஆத்பர் கோயிலில் பாரம்பரிய சடங்கு முறைகள் மற்றும் விதிகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. சத்திஸ்ஹர் மாநிலத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் இந்த ஆத்பர் அஷ்டபுஜி கோயிலுக்கு வருவதற்கான போக்குவரத்து வசதிகள் கிடைக்கின்றன.
Pankaj Oudhia

 தமுதாரா

தமுதாரா

ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இந்த தமுதாரா எனும் இடம் புகழ் பெற்றுள்ளது. இது ஒரு அழகிய பிக்னிக் ஸ்தலமாகும். நீர்வீழ்ச்சிகள், குகைகள் மற்றும் கோயில்கள் போன்ற பலவிதமான சுற்றுலா அம்சங்களையும் கொண்டிருப்பது இதன் மற்றொரு விசேஷமாகும். இந்த ஸ்தலத்தில் அமைந்திருக்கும் ராம்-ஜானகி கோயில், ராதா-கிருஷ்ணா கோயில், ரிஷப்தேவ் கோயில் போன்றவை ஆன்மீக ஆர்வலர்களை ஈர்க்கின்றன.

Rajbhatt

தேவார் கட்டா

தேவார் கட்டா


இந்த தேவார் கட்டா எனாப்படும் ஆற்று சங்கம ஸ்தலம் ஜாஞ்ச்கிர் நகர்ப்பகுதியில் உள்ள ஒரு முக்கியமான பிக்னிக் ஸ்தலமாக அமைந்திருக்கிறது. ரம்மியமான இயற்கைக்காட்சிகள் சூழ்ந்துள்ள இந்த இடம் மஹாநதி, லீலாகர் மற்றும் ஷிவ்நாத் ஆகிய மூன்று ஆறுகள் கூடும் இடத்தில் அமைந்துள்ளது. சுற்றுலாப்பயணிகள் மட்டுமல்லாது உள்ளூர் மக்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இந்த இடத்திற்கு விஜயம் செய்து பொழுதுபோக்கி மகிழ்கின்றனர். புகைப்பட ரசிகர்கள் ஒரு முறை இந்த எழிற்ஸ்தலத்துக்கு விஜயம் செய்தபின் திரும்பவும் வருகை தராமல் இருக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Theasg sap

பிதாம்பூர் கோயில்

பிதாம்பூர் கோயில்

காளேஷ்வர்நாத் மந்திர் அல்லது பிதாம்பூர் கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயில் ஹஸ்தேவ் ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. இது சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. வருடாவருடம் இந்த கோயிலில் சிவபெருமானின் திருமணச்சடங்கு நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த சடங்குதிருவிழாவில் நாக சாதுக்கள் அதிக எண்ணிக்கை கலந்துகொள்கின்றனர். இது தவிர மஹா சிவராத்திரி மற்றும் ரங்பஞ்சமி போன்ற திருநாட்களில் இங்கு பத்து நாட்கள் நீடிக்கும் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

Theasg sap

ஷிவ்நாராயண் கோயில்

ஷிவ்நாராயண் கோயில்


ஜாஞ்ச்கிர் நகரத்திற்கு அருகில் உள்ள ஷிவ்நாராயண் ஸ்தலம் இங்குள்ள லஷ்மிநாராயண் கோயிலுக்கு பிரசித்தி பெற்றுள்ளது. மஹாநதியின் ஒட்டியாவாற்று வீற்றிருக்கும் இந்த கோயில் ஹய்ஹய்வன்ஷ் வம்ச மன்னர்களால் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.

மெலும், ராமரின் தீவிர பக்தையாக ராமாயண காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘சபரி'யின் ஆசிரமம் இந்த இடத்தில் அமைந்திருந்ததாகவும் புராணக்கதைகள் தெரிவிக்கின்றன. வைஷ்ணவ ஷாய்லி மரபுப்படி அமைக்கப்பட்டிருக்கும் இந்த லஷ்மிநாராயண் கோயில் இதன் நுணுக்கமான கட்டிடக்கலை அம்சங்களுக்காக புகழ் பெற்றுள்ளது. மஹா பூர்ணிமா திருநாளில் இங்கு ஒரு திருவிழாக்கொண்டாட்டமும் விமரிசையாக நிகழ்த்தப்படுகிறது.

Harminder singh saini

Read more about: travel forest

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்