» »வட சென்னையில் பாக்குறதுக்கு இவ்ளோ இருக்கா?

வட சென்னையில் பாக்குறதுக்கு இவ்ளோ இருக்கா?

Posted By: Udhaya

என்னதான் தமிழ்நாட்டின் தலைநகரம், இந்தியாவின் நான்காவது பெரிய நகரம்னாலும் சென்னைக்கு பெருமை சேர்ப்பது மெரினா கடற்கரைதான்.

வந்தாரை வாழவைக்கும் சென்னை, அடுத்தவேளை சாப்பாட்டுக்கு காசு இல்லாதவனை கூட தொழிலதிபரா மாத்திருக்குனு பேச்சு மொழி இருக்கு. சென்னையில பளபளக்குற கலர் கலரான மால்களும், கட்டிடங்களும், வரலாற்று நினைவிடங்களும் இருக்குன்னு எல்லாருக்கும் தெரியும். ஆமா.. இந்த வட சென்னை பத்தி.....

வாங்க வடசென்னையில் ஒரு ரவுண்ட் வரலாம்.

 சென்னை

சென்னை

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை எல்லையாகக் கொண்டு, வங்கக்கடலை அரவணைத்து நிற்கிறது சென்னை மாநகரம்.

நாளுக்கு நாள் விரிவடைந்துக்கிட்டே இருக்குற சென்னையில், கண்ணுக்கு எதிரே நடக்கும் செயல்களைக் கூட கண்டுக்காம போறது நிறைய பேரு. நம்ம ஊட்டு புள்ளைங்களா நெனச்சி நம்மள அரவணச்சி நிக்குற ஜனங்களும் இருக்காங்க..

வடசென்னை

வடசென்னை


சட்டமன்ற தொகுதிகளின்படி, திருவொற்றியூர்,மணலி,மாதவரம்,தண்டையார்பேட்டை,ராயபுரம் ஆகிய பெரிய பகுதிகளை உள்ளடக்கியது சென்னை.

Prateek Karandikar

கூவம் ஆறு

கூவம் ஆறு

பொதுவாக வட சென்னை கூவம் ஆற்றின் வடப்பகுதி என்று வரையறைக்கப்படுகிறது. அதாவது, எண்ணூர்ல தொடங்கி தண்டையார்பேட்டை, புதிய வண்ணாரப்பேட்டை வரைக்கும் இருக்குது.

Peter Fristedt

கூவம் ஆற்றின் வழித்தடம்

கூவம் ஆற்றின் வழித்தடம்

இந்த கூவம் ஆறு திருவள்ளூர் மாவட்டத்தில் உருவாகி, பூந்தமல்லி, அரும்பாக்கம் வழியாக சூளைமேடு, சேத்துப்பட்டு, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, நேப்பியர் பாலம் வழியாக வங்கக்கடலில் கலக்கிறது.

vishwaant

வடசென்னையின் அடையாளங்கள்

வடசென்னையின் அடையாளங்கள்

பொதுவாகவே திரைப்படங்களிலும் சரி, எழுத்துக்களிலும் சரி வட சென்னையை, கூட்டம்கூட்டமாக மக்கள் வாழும் பகுதியாகவும், குறுகிய சாலைகள், வசதி குறைவான இடங்கள், குற்றங்கள் அதிகம் நிகழும் இடங்களாகவே சித்தரிக்கிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லாமலும் இல்லை.

Ravichandar84 -

சுற்றுலாத் தளங்கள்

சுற்றுலாத் தளங்கள்


புனித ஜார்ஜ் கோட்டை, பூங்கா நகர், ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கம், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், கொதஸ்ததலை ஆறு, எண்ணூர் துறைமுகம், காசிமேடு பீச், மீன்பிடி துறைமுகம், காசிமேடு மீன் சந்தை,எக்ஸ்பிரஸ் அவென்யூ,எஸ்கேப் சினிமாஸ், சத்யம் சினிமாஸ் என பல சுற்றுலா தளங்கள் வட சென்னைக்கு மிக அருகிலேயே உள்ளன.

Karthik.Karlwin

தீவுத்திடல்

தீவுத்திடல்

தீவு அல்லது தீவுத்திடல் சென்னையின் எழும்பூர் பகுதியில் கூவம் ஆறு இரண்டாகப் பிரிந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கூவம் ஆறு இரண்டாக பிரியும் மேட்டுப் பகுதியை தீவுத் திடல் என்பர். இது ஒர் "ஆற்றுத் தீவு" ஆகும். இத்தீவுத்திடல் 19ஆம் நூற்றாண்டில் செயற்கையாக உருவாக்கப்பட்டது. இத்தீவில் குதிரையேற்றக்காரர் தோமஸ் முன்ரோயின் சிலை ஒன்று உள்ளது

சென்னை ஜிம்கானா கழகம், பல்லவன் இல்லம் மற்றும் பெருநகரப் போக்குவரத்து நிறுவனத்தின் தலைமையகம் ஆகியன இங்கு உள்ளன. தீவுத் திடல் பரந்த வெற்றிடத்தை இத்தீவில் கொண்டுள்ளது. இங்கு சந்தையும் கண்காட்சிகளும், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களும் இடம்பெறுகின்றன

Ravichandar84

பக்கிங்காம் கால்வாய்

பக்கிங்காம் கால்வாய்

சோழமண்டலக் கடற்கரைக்கு இணையாக ஓடும் கால்வாய். இக்கால்வாய் ஆந்திரப்பிரதேசத்தின் விசயவாடாவில் இருந்து தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் வரை செல்கிறது. உப்பு நீர் ஓடும் இக்கால்வாயின் நீளம் 420 கிலோமீட்டர்கள். இக்கால்வாய் ஆங்கில ஆட்சியின் போது அமைக்கப்பட்டது. 19, 20 -ஆம் நூற்றாண்டுகளில் ஒரு முதன்மையான நீர்வழியாக இது விளங்கியது.
Srikar Kashyap

 பெரம்பூர் பேரங்காடி

பெரம்பூர் பேரங்காடி


திரு. வி. க. நகரில் பல திரையரங்குகள் மற்றும் பூங்காக்கள் உள்ளன. இப்பகுதியைச் சார்ந்த பெரம்பூரில் உள்ள பேரங்காடியே வடக்கு சென்னையின் முதல் பேரங்காடி ஆகும். இவ்வூரே சென்னையின் முதல் டிஸ்கோ தண்ணீர் பூங்காவை கொண்டுள்ளது. இதன் பெயர் முரசொலி மாறன் மேம்பாலப் பூங்கா என்பதாகும்.

திருவல்லிக்கேணி

திருவல்லிக்கேணி

இது சென்னை மாநகராட்சியின் முக்கிய பகுதியாகும். மெரீனா கடற்கரையிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு உள்ள பார்த்தசாரதி கோயில் மிகவும் புகழ் பெற்றதாகும்.

Nsmohan

https://en.wikipedia.org/wiki/Parthasarathy_Temple,_Triplicane#/media/File:Tiruvallikeni1.jpg

பட்டினத்தார் கோயில்

பட்டினத்தார் கோயில்


பட்டினத்தார் கோயில் திருவொற்றியூரில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவரான பட்டினத்தார் லிங்க வடிவில் உள்ளார். சித்தரான பட்டினத்தார் முக்தி பெற்ற இத்தலத்தில் சிவனாகவே வணங்கப்பெறுகிறார்.

தொல்காப்பியப் பூங்கா

தொல்காப்பியப் பூங்கா

தொல்காப்பியப் பூங்கா அல்லது அடையார் பூங்கா தமிழக அரசால் அடையாரில் திறக்கப்பட்டுள்ள பூங்காவாகும். இப்பூங்காவில் பல வகையான தாவர வகைகள் உள்ளன. இப்பூங்காவிற்கு பழந்தமிழ் நூல் இயற்றிய தமிழ்ப் புலவர் தொல்காப்பியரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. வெளினாட்டுப் பறவைகளையும் இங்கு காணலாம். பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் நீர்நிலைகளாக உள்ளன

Aravind Sivaraj

பசுமைவழிச் சாலை

பசுமைவழிச் சாலை


சென்னையில் உள்ள ஓர் சாலையும் நகரப்பகுதியும் ஆகும். அடையார் ஆற்றினை ஒட்டியமைந்துள்ள இச்சாலையில் தமிழக அரசு அமைச்சர்கள் மற்றும் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் போன்ற உயரதிகாரிகளுக்கு மாளிகைகள் அமைந்துள்ளன.

மேலும் இங்கு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் நினைவுப் பூங்கா, தமிழ்நாடு இயல் இசை நாடக கல்லூரி, குச்சிப்புடி ஆர்ட் அகாதெமி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மனித உரிமை ஆணையம், அண்ணா மேலாண்மைக் கழகம். இங்கு யேசு அழைக்கிறார் பிரார்த்தனைக் கூடமும் சபரிமலைக் கோவிலை யொட்டி வடிவமைக்கப்பட்ட அய்யப்பன் கோவிலும் அமைந்துள்ளன. இவற்றையொட்டியப் பகுதி டாக்டர் டி. ஜி. எஸ். தினகரன் சாலை என மறுபெயரிடப்பட்டுள்ளது.

பர்மா பசார்

பர்மா பசார்

பர்மா பசார் எனப்படுவது மியன்மாரில் இருந்து நாடு திரும்பிய மியன்மார் தமிழர்களுக்காக தமிழக அரசு சென்னை நகரத்தில், மெரினா கடற்கரை ஒட்டிய, பாரிமுனை பகுதியில் அமைத்துக் கொடுத்த ஒரு சந்தைத் தொகுதி ஆகும். இது பாரிமுனை எனும் பகுதியில் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். 1969ம் ஆண்டு தமிழக அரசினால் இந்த கடைத்தொகுதி அமைக்கப்பட்டது. சுமார் 200 கடைகளை ஒரு வரிசையில் கொண்டமைந்துள்ள இந்த கடைத்தொகுதி ஒரு கிலோ மீட்டர் நீளமாக பகுதியில் அமைந்துள்ளது. வடசென்னையில் இன்னும் நிறைய இடங்கள் இருக்கிறது. நாங்கள் தவறவிட்ட இடங்களை உரிய புகைப்படத்துடன் நினைவூட்டினால் அவை இந்த கட்டுரையில் இணைக்கப்படும்.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்