» »ஸ்பிதியின் சுற்றுலாத் தளங்கள் பற்றி தெரியுமா ?

ஸ்பிதியின் சுற்றுலாத் தளங்கள் பற்றி தெரியுமா ?

Posted By: Udhaya

ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தின் வடகிழக்குப்பகுதியில் உள்ள இந்த ஸ்பிதி எனும் சுற்றுலாத்தலம் நிலப்பகுதியிலிருந்து வெகுதொலைவில் வீற்றிருக்கும் மலைப்பள்ளத்தாக்குப் பகுதியாகும்.

ஸ்பிதி பிரதேசம் இங்கு நிலவும் திபெத்திய கலாச்சாரம் மற்றும் பௌத்த மடாலயங்களுக்காக புகழ் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே மக்கள் தொகை குறைவான பிரதேசமாக இந்த ஸ்பிதி மற்றும் அதை சூழந்துள்ள பிரதேசம் அறியப்படுகிறது. போட்டி எனும் உள்ளூர் மொழி இப்பகுதியில் பேசப்படுகிறது.

ஸ்பிதியின் சுற்றுலாத் தளங்கள் பற்றி தெரியுமா ?

4ocima

உயர்ந்தோங்கி நிற்கும் மலைகளுக்கு மத்தியின் புராதனத்தின் எழில் வடிவமாக காட்சியளிக்கும் இந்த மடாலய ஸ்தலத்தில் கால் பதிக்கும் நாம் மீண்டும் பிறந்தவர்களாவோம்.

ஸ்பிதி பகுதியில் காசா மற்றும் கீலாங் என்ற முக்கியமான நகரங்கள் உள்ளன. அது மட்டுமன்றி சில அரிய வகை தாவரங்கள் மற்றும் உயிரினங்களும் இப்பிரதேசத்தில் காணப்படுகின்றன. கோதுமை, பார்லி, பட்டாணி போன்ற தானியங்கள் இங்கு விளைவிக்கப்படுகின்றன.

ஸ்பிதியின் சுற்றுலாத் தளங்கள் பற்றி தெரியுமா ?

John Hill

ஜோகீந்தர்நகர் ரயில் நிலையம் ஸ்பிதிக்கு அருகில் உள்ள ரயில் நிலையமாகும். இது மீட்டர் கேஜ் ரயில் பாதையில் உள்ளது. இருப்பினும் சண்டிகர் மற்றும் சிம்லா ரயில் நிலையங்களின் மூலமாகவும் ஸ்பிதியை அடையலாம்.

ரோஹ்தங் பாஸ் மற்றும் குன்சம் பாஸ் ஆகிய இரண்டு மலைப்பாதைகளும் ஸ்பிதிக்கான போக்குவரத்துப் பாதையாக அமைந்துள்ளன. இருப்பினும் இந்த இரண்டு மலைப்பாதைகளுமே நவம்பர் முதல் ஜூன் வரை மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பிதியின் சுற்றுலாத் தளங்கள் பற்றி தெரியுமா ?

John Hill

புவியியல் ரீதியாக மழைநிழல் பகுதியில் அமைந்துள்ளதால் ஸ்பிட்டி பிரதேசத்தில் அதிக மழைப்பொழிவு காணப்படுவதில்லை. குளிர்காலத்தில் இப்பகுதியில் கடும்பனிப்பொழிவு நிலவுவதோடு வெப்பநிலையும் 0°C க்கு கீழே சென்றுவிடுகிறது.

Read more about: travel hills

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்