Search
  • Follow NativePlanet
Share

ஸ்பிதி – மலைப்பிரதேச மடாலயங்களின் மஹோன்னதம்!

18

ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தின் வடகிழக்குப்பகுதியில் உள்ள இந்த ஸ்பிதி எனும் சுற்றுலாத்தலம் நிலப்பகுதியிலிருந்து வெகுதொலைவில் வீற்றிருக்கும் மலைப்பள்ளத்தாக்குப் பகுதியாகும். ஸ்பிதி எனும் பெயருக்கு ‘இடைப்பட்ட நிலப்பகுதி’ என்பது பொருளாகும். திபெத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே அமைந்துள்ளதால் இதற்கு இந்த பெயர் வந்துள்ளது.

ஸ்பிதி பிரதேசம் இங்கு நிலவும் திபெத்திய கலாச்சாரம் மற்றும் பௌத்த மடாலயங்களுக்காக புகழ் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே மக்கள் தொகை குறைவான பிரதேசமாக இந்த ஸ்பிதி மற்றும் அதை சூழந்துள்ள பிரதேசம் அறியப்படுகிறது. போட்டி எனும் உள்ளூர் மொழி இப்பகுதியில் பேசப்படுகிறது.

ஸ்பிதியில் கீ கொம்பா எனும் மடாலயம் முக்கியமான சுற்றுலா அம்சமாக கம்பீரமாக வீற்றிருக்கிறது. இந்தியாவிலேயே மிகப்பழமையான மடாலயமாக இது கீர்த்தி பெற்றுள்ளது.

உயர்ந்தோங்கி நிற்கும் மலைகளுக்கு மத்தியின் புராதனத்தின் எழில் வடிவமாக காட்சியளிக்கும் இந்த மடாலய ஸ்தலத்தில் கால் பதிக்கும் நாம் மீண்டும் பிறந்தவர்களாவோம்.

அப்படி ஒரு தூய்மையான கன்னிமை கெடாத இயற்கைச்சூழலின் மத்தியில் மஹோன்னத கலைச்சின்னமாக இந்த மடாலயம் வளாகம் வீற்றிருக்கிறது. இப்பகுதியின் இயற்கை எழிலில் கவரப்பட்டு பல திரைப்பட இயக்குனர்கள் இங்கு படப்பிடிப்பு செய்துள்ளனர்.

பாப் மற்றும் மிலாரேபா போன்ற பாலிவுட் படங்கள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. ஸ்பிதி பகுதியில் காசா மற்றும் கீலாங் என்ற முக்கியமான நகரங்கள் உள்ளன. அது மட்டுமன்றி சில அரிய வகை தாவரங்கள் மற்றும் உயிரினங்களும் இப்பிரதேசத்தில் காணப்படுகின்றன. கோதுமை, பார்லி, பட்டாணி போன்ற தானியங்கள் இங்கு விளைவிக்கப்படுகின்றன.

புந்தர் விமான நிலையம் ஸ்பிதி சுற்றுலாத்தலத்திற்கு அருகில் உள்ளது. இங்கிருந்து டெல்லி மற்றும் சிம்லா நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன. வெளிநாட்டு பயணிகள் டெல்லிக்கு வருகை தந்து அங்கிருந்து புந்தர் வழியாக ஸ்பிதிக்கு வரலாம்.

ஜோகீந்தர்நகர் ரயில் நிலையம் ஸ்பிதிக்கு அருகில் உள்ள ரயில் நிலையமாகும். இது மீட்டர் கேஜ் ரயில் பாதையில் உள்ளது. இருப்பினும் சண்டிகர் மற்றும் சிம்லா ரயில் நிலையங்களின் மூலமாகவும் ஸ்பிதியை அடையலாம்.

இந்த ரயில் நிலையங்களிலிருந்து டாக்சிகள் மற்றும் கேப் வாகனங்கள் மூலமாக பயணிகள் ஸ்பிதி சுற்றுலாத்தலத்தை அடையலாம். சாலை மார்க்கமாக தேசிய நெடுஞ்சாலை 21 வழியாக ஸ்பிட்டியை அடையலாம்.

ரோஹ்தங் பாஸ் மற்றும் குன்சம் பாஸ் ஆகிய இரண்டு மலைப்பாதைகளும் ஸ்பிதிக்கான போக்குவரத்துப் பாதையாக அமைந்துள்ளன. இருப்பினும் இந்த இரண்டு மலைப்பாதைகளுமே நவம்பர் முதல் ஜூன் வரை மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்காலத்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்படும் என்பதே இதற்கான காரணம். தவிர, கின்னௌர் வழியாக ஸ்பிட்டிக்கு செல்லும் பாதை பயணத்துக்கு மிகவும் ஏற்றதாக அறியப்படுகிறது. இந்த பாதை சிம்லாவிலிருந்து 412 கி.மீ  தூரத்தை கொண்டதாகும்.

ஸ்பிதி பிரதேசத்தின் பருவநிலை வருடமுழுதுமே இனிமையான சூழலுடன் காட்சியளிக்கிறது. இங்கு கோடைக்காலம் மே மாதம் முதல் அக்டோபர் வரை நிலவுகிறது. கோடைக்காலத்தில் அதிகபட்சமாக 15°C-க்கு மேல் உயர்வதில்லை என்பதால் இது சுற்றுலாவுக்கு உகந்த பருவமாகும்.

புவியியல் ரீதியாக மழைநிழல் பகுதியில் அமைந்துள்ளதால் ஸ்பிட்டி பிரதேசத்தில் அதிக மழைப்பொழிவு காணப்படுவதில்லை. குளிர்காலத்தில் இப்பகுதியில் கடும்பனிப்பொழிவு நிலவுவதோடு வெப்பநிலையும் 0°C க்கு கீழே சென்றுவிடுகிறது.

ஸ்பிதி சிறப்பு

ஸ்பிதி வானிலை

சிறந்த காலநிலை ஸ்பிதி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஸ்பிதி

  • சாலை வழியாக
    சாலை மார்க்கமாக சுற்றுலாப்பயணிகள் தேசிய நெடுஞ்சாலை 21ன் வழியாக ஸ்பிதியை அடையலாம். மணாலியிலிருந்து காஸா செல்லும் ரோதங் பாஸ் வழியாக ஸ்பிதிக்கு வந்து சேரலாம். சிம்லாவிலிருந்து கின்னௌர் வழியாக செல்லும் 412 கி.மீ நீளமுடைய பாதை ஸ்பிதி பயணத்துக்கு மிகவும் ஏற்றதாக அறியப்படுகிறது. இது எல்லாப்பருவத்திலும் போக்குவரத்துக்கு திறந்துள்ளது. கின்னௌர் நகரிலிருந்து ஸ்பிட்டிக்கு செல்வதற்கான பஸ்கள் மற்றும் டாக்சிகள் பயணிகளுக்கு கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ஜோகீந்தர்நகர் ரயில் நிலையம் ஸ்பிதிக்கு அருகில் உள்ள மீட்டர் கேஜ் ரயில் ரயில் நிலையமாகும். சண்டிகர் மற்றும் சிம்லா ரயில் நிலையங்களின் மூலமாகவும் ஸ்பிதியை அடையலாம். இந்த ரயில் நிலையங்கள் இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் ரயில் இணைப்புகளை கொண்டுள்ளன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ஸ்பிதி சுற்றுலாத்தலத்திற்கு அருகில் புந்தர் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து டெல்லி மற்றும் சிம்லா நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன. வெளிநாட்டு பயணிகள் டெல்லிக்கு வருகை தந்து அங்கிருந்து இணைப்புச்சேவைகள் மூலம் புந்தர் வரலாம். இந்த விமான நிலையத்திலிருந்து டாக்சிகள் மற்றும் கேப் வாகனங்கள் மூலம் பயணிகள் ஸ்பிதி சுற்றுலாத்தலத்திற்கு வரலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue