» »இந்தியா என்று அழைக்கப்படும் இந்த 56 தேசங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்தியா என்று அழைக்கப்படும் இந்த 56 தேசங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Posted By: Udhaya

இந்தியா எனது தாய்நாடு இந்தியர் அனைவரும் என் உடன்பிறந்தவர்கள் என்று நாம் அனைவரும் சின்ன வயசுல பள்ளியில உறுதிமொழி எடுத்துருப்போம். நம்மளோட தாய்நாடான இந்தியா சுதந்திரத்துக்கு முன்னாடி எப்படி இருந்துது தெரியுமா?

டச்சு, ஆங்கிலேய, போர்ச்சிகீசியர்கள் சில நூறு ஆண்டுகள் இந்தியாவை அடிமைப்படுத்தியிருந்தனர். அவர்கள் வாணிகம் செய்வதற்காகவே இந்தியா என்னும் தேசத்துக்கு வந்தனர் என நாம் பாடப்புத்தகத்தில் படித்திருப்போம். அவர்கள் வரும்போது இந்தியா என்றொரு நாடு இருந்ததா?

இல்லை.. சுதந்திரத்திற்கு பிறகுதான் அதிகாரப்பூர்வமாக இந்தியாவே உதயமானது. நேரு, வல்லபாய்படேல் உள்ளிட்ட தலைவர்களின் விடாமுயற்சியால் தான் நம் இந்தியா இப்போது ஒருங்கிணைந்து காணப்படுகிறது.

புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - பகுதி 1

ஆம். முற்கால இந்தியா என்று சொல்லப்படும் பகுதிகள் மகாராட்டிரதேசம், திராவிடதேசம், சோழதேசம், சிம்மளதேசம், பாண்டியதேசம்,
கேரளதேசம், கர்னாடகதேசம் உள்ளிட்ட 56 தேசங்களாக இருந்தது.

குருதேசம்

குரு தேசம் என்பது தற்போதுள்ள இந்திய வரைபடத்தின் உதவியுடன் பார்க்கும்போது, இமயமலையிலிருந்து தொடங்கி தெற்கு நோக்கி ஓடும் யமுனை நதியை அடுத்து சூரசேன தேசத்திற்கு வடக்கிலும், பாஹ்லிக தேசத்திற்கு தெற்கிலும், பாஞ்சலத்திற்கு மேற்கிலும் பரவி இருந்த தேசம் ஆகும்

தலைநகரம்

குருதேசத்தின் தலைநகரம் அஸ்தினாபுரம் ஆகும். குருச்சேத்திரப் போரின் முடிவில் பாண்டவர்கள், கௌரவர்களை வென்று குரு நாட்டை ஆண்டனர் என்பது நம்பிக்கை.

அங்குத்தர நிக்காய எனும் பௌத்த நூல் குறிப்பிடும் பதினாறு மகா ஜனபதங்களில் குரு நாடும் ஒன்றாகும்.

அஸ்தினாபுரம் எங்குள்ளது?

தற்போதைய காலத்தில் அஸ்தினாபுரம் எங்கே இருக்கிறது என்ற ஆவல் உங்களுக்கு இருக்கும் என்பது தெரிகிறது.

முற்கால இந்தியாவின் குருதேசத்தில் தலைநகராக இருந்த அஸ்தினாபுரத்தையும், அதன் அருகிலுள்ள சுற்றுலாத் தளங்களையும் இந்த பதிவில் தொடர்ந்து காண்போம்.

தற்கால இந்தியாவில் அத்தினாபுரம்

தற்கால இந்தியாவில் அத்தினாபுரம்

தற்போது அத்தினாபுரம் உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் மீரட் மாவட்டத்தில் ஒரு நகர் பஞ்சாயத்தாக உள்ளது.

PC: Sanjeev Kohli

தியாகிகள் நினைவுச் சின்னம்

தியாகிகள் நினைவுச் சின்னம்


PC: wiki

பழங்கால மசூதி

பழங்கால மசூதி

வட இந்தியாவிலேயே மிகவும் பழமையான மசூதியாக மீரட்டில் உள்ள ஜாமா மசூதி உள்ளது. முகம்மது கஸ்னவி சுல்தானின் வாஸீர் ஆக இருந்தவரால், 1019-ம் ஆண்டில் இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது.

PC: Robert Christopher Tytler

மங்கள் பாண்டே நினைவுச் சின்னம்

மங்கள் பாண்டே நினைவுச் சின்னம்

மங்கள் பாண்டே அவர்களின் தியாகத்தின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுச்சின்னம் இதுவாகும்.

PC: Siddhartha Ghai

சுராஜ்குந்த், மீரட்

சுராஜ்குந்த், மீரட்


714-ம் ஆண்டு உள்ளூர் தொழிலதிபரால் கட்டப்பட்ட சுராஜ்குந்த் இந்துக்களுக்கான புகழ் பெற்ற இடமாகும். இந்த இடத்தின் மையத்தில் உள்ள குளம் துவக்கத்தில் அபு நளாவைக் கொண்டு நிரப்பப்பட்டு வந்தது, பின்னர் கங்கை நதியின் கால்வாய் வழியாக வரும் நீரால் தற்பொழுது நிரப்பப் பட்டு வருகிறது.

PC: Nktyogi

காந்தி பூங்கா

காந்தி பூங்கா


இந்த பூங்கா மகாத்மா காந்தியின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த பரந்த நிலப்பகுதியுடைய பூங்கா உள்ளூர்வாசிகள் மற்றும் பயணிகள் சுற்றிப் பார்க்கவும் மற்றும் நடந்து செல்லவும் எப்பொழுதும் திறந்து விடப்பட்டிருக்கும்.
இது பெரும்பாலும் பொதுக்கூட்டங்கள், சந்திப்புகள் நடத்தப்படும் இடமாகவும், நகரத்தின் பரபரப்பான வாழ்க்கையிலிருந்து விலகி அமைதி மற்றும் நிம்மதியுடன் இருக்க ஏற்ற இடமாகவும் உள்ளது.

PC: Siddhartha Ghai

நொய்டா

நொய்டா

நொய்டா என்பது நீயூ ஓக்லா தொழில் வளர்ச்சி கழகம் (New Okhla Industrial Development Authority) என்ற பெயரில் அந்த பகுதியை மேலாண்மை செய்து வரும் அமைப்பின் சுருக்கமே ஆகும். 17 ஏப்ரல் 1976-ம் நாள் இந்த பகுதி தொடங்கப்பட்டதால் ஒவ்வொரு ஆண்டும் அந்த நாள் 'நொய்டா தினமாக' கொண்டாடப்பட்டு வருகிறது.

PC: CaptainRon

நொய்டாவைச் சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள்

நொய்டாவைச் சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள்

சாய் பாபா கோவில், தாமரை (லோட்டஸ்) கோவில் மற்றும் ISKCON கோவில் ஆகியவையும் உள்ளன.
இந்த நகரத்திற்கு மிகவும் தேவையான அமைதியை தரும் இடமாக ஓக்லா பறவைகள் சரணாலயம் விளங்குகிறது. நோய்டாவில் உள்ள செக்டார் 18 மார்க்கெட் முக்கியமான ஷாப்பிங் மையமாக விளங்குகிறது.

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

நொய்டாவை விமானம், இரயில் மற்றும் சாலை போக்குவரத்துகளின் மூலம் எளிதில் அடைய முடியும், நொய்டாவிற்கு மிகவும் அருகிலிருக்கும் இரயில் நிலையம் மற்றும் விமான நிலையமாக டெல்லி உள்ளது.

அயோத்யா

அயோத்யா

சர்யு நதிக்கரையில் அமைந்துள்ள அயோத்யா,ஹிந்துக்களின் புகழ் பெற்ற புனித ஸ்தலமாகும். விஷ்ணு பெருமானின் ஏழாவது அவதாரமாக கருதப்படும் ஸ்ரீ ராமருக்கும் இந்த இடத்திற்கும் நெருங்கிய பந்தம் இருப்பதாக நம்பப்படுகிறது.

PC:आशीष भटनागर

அயோத்யாவைச் சுற்றியுள்ள பகுதிகள்

அயோத்யாவைச் சுற்றியுள்ள பகுதிகள்

சக்ர ஹர்ஜி விஷ்ணு கோவில், துளசி ஸ்மாரக் பவன், ஹனுமான் கர்ஹி, தசரத் பவன் , ட்ரேடா-கே-தகூர், ராம் ஜன்ம பூமி முதலிய இடங்கள் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுப் பகுதிகள் ஆகும்.

அயோத்யாவைச் சுற்றியுள்ள பகுதிகள்

Read more about: travel, places