» »வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது காந்தி சிறைவைக்கப்பட்ட இடம் எப்படி இருக்கு தெரியுமா?

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது காந்தி சிறைவைக்கப்பட்ட இடம் எப்படி இருக்கு தெரியுமா?

Written By: Udhaya

வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942 ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் ஆகும். இவ்வியக்கம் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் இந்திய விடுதலைக்கான அழைப்பினைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டது. இது ஆகஸ்ட் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது.

ஆங்கிலேயே அரசை அடிபணிய வைத்து பேச்சுவார்த்தை மேசைக்கு அழைப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் ஆகஸ்ட் 8, 1942 இல் கூட்டிய மாநாட்டில் இந்த இயக்கத்தை துரிதமாக கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து காந்தி கைது செய்யப்பட்டார். அவர் புனேயில் சிறைவைக்கப்பட்டார். அந்த இடம் இப்போ எப்படி இருக்கு தெரியுமா?

தெரிஞ்சா வாயை பிளப்பீங்க...

ஆகா கான் அரண்மனை

ஆகா கான் அரண்மனை

மராட்டிய மாநிலத்தின் புனே நகரத்தில் கட்டப்பட்டுள்ளது இந்த கோட்டை. இது சுல்தான் முகமது ஷா ஆகா கான் என்பவரால் கட்டப்பட்டது. கட்டப்பட்ட ஆண்டு 1892.

Khushroo Cooper

 நேரில் காணுங்கள்

நேரில் காணுங்கள்

இத்தாலிய முறைப்படி கட்டப்பட்ட இந்த கோட்டை மிகவும் அழகானதாக இருக்கும். நேரில் காண்பவரை வியக்கச்செய்யும்.

Ramnath Bhat

 ஐந்து அறைகள்

ஐந்து அறைகள்

இந்த கோட்டை ஐந்து பிரம்மாண்ட அறைகளைக் கொண்டது.

Gauravyawalkar.2012

 பரப்பளவு

பரப்பளவு


மொத்த அரண்மனையும் 19 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனை மட்டும் 7 ஏக்கர் ஆகும்.

Barkha dhamechai

 மொத்த செலவு

மொத்த செலவு


ரூ 1.2 மில்லியன் இந்திய பணம் இந்த கோட்டையை கட்டிமுடிக்க செலவாகியுள்ளது.

Preity.133

 தளங்கள்

தளங்கள்


இந்த கோட்டையின் தரைத்தளம் 1756 சதுரமீ அளவில் உள்ளது. முதல் தளம் 1080 சதுரமீட்டர் அளவிலும், இரண்டாம் தளம் 445 சமீ அளவிலும் அமைக்கப்பட்டுள்ளது.

Akshat.saxena21

Read more about: travel, palace