» »மத்தியபிரதேசத்தின் ஒரே மலைபிரதேசத்துக்கு ஒரு பயணம் சென்று வருவோமா?

மத்தியபிரதேசத்தின் ஒரே மலைபிரதேசத்துக்கு ஒரு பயணம் சென்று வருவோமா?

Posted By: Udhaya

பச்மாரி, சத்புராவின் ராணி என்ற அர்த்தத்தில் சத்புரா கி ராணி என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. சத்புரா மலைத்தொடரில் காணப்படும் இது சுமார் 1110 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

பச்மாரி, பழங்குடி ராஜ்யமான கோண்ட் பழங்குடியின் தலைநகரமாக இருந்துள்ளது. கோண்ட் பழங்குடியின் மன்னராக பவூத் சிங் என்பவர் இருந்துள்ளார்.

மத்தியபிரதேசத்தின் ஒரே மலைபிரதேசத்துக்கு ஒரு பயணம் சென்று வருவோமா?

Abhayashok

பச்மாரி மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

பச்மாரி சுற்றுலாத்துறை இங்கு வருவோர் கண்டு களிக்கக்கூடிய பல்வேறு இடங்களைக் கொண்டுள்ளது. மத்திய இந்தியாவில் அமைந்துள்ள துப்கார், விந்திய-சத்புரா மலைத்தொடரில் உள்ள உயரமான ஒரு இடமாகும்.

இது சாஸர் வடிவில் அமைந்த சுவாரஸ்யமானதொரு மலை வாசஸ்தலமாகும். இங்கு உள்ள இராணுவ முகாமிற்காகவும் மிகவும் பிரபலமாக உள்ள பச்மாரி, பழங்காலக் குகைகள், புராதனக் கட்டிடங்கள், நீர்வீழ்ச்சிகள், இயற்கை அழகு, வனப்பகுதி, செடியினங்கள் மற்றும் விலங்கினங்கள் நிறைந்து காணப்படுகின்றது.

மத்தியபிரதேசத்தின் ஒரே மலைபிரதேசத்துக்கு ஒரு பயணம் சென்று வருவோமா?

LRBurdak

சூரிய அஸ்தமனத்தை கண்டு களிப்பதற்கு பச்மாரி மிக உகந்த ஒரு ஸ்தலமாகும். ஹண்டி கோ, ஜடா ஷங்கர் குகை, பாண்டவா குகைகள், அப்ஸரா விஹார், தேனீ நீர்வீழ்ச்சி, டட்சஸ் நீர்வீழ்ச்சி ஆகியவை பச்மாரியின் சில பிரதான ஈர்ப்புகளாகும்..

இந்த மலை ஸ்தலத்துக்குச் செல்ல விரும்புவோர், போபால் வரை இரயில் அல்லது விமானம் மூலம் சென்று, பின் எஞ்சியிருக்கும் தொலைவை சாலை வழியாகக் கடக்கலாம்.

பாண்டவா குகைகள்

மத்தியபிரதேசத்தின் ஒரே மலைபிரதேசத்துக்கு ஒரு பயணம் சென்று வருவோமா?

LRBurdak

பச்மாரியிலுள்ள சிறு குன்றின் மேல் ஒரு குழுவாக அமைந்துள்ள ஐந்து குகைகளும் பாண்டவா குகைகள் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன. பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின் போது இக்குகைகளில் வந்து தஞ்சமடைந்ததாகக் கூறப்படுகிறது.

அப்ஸரா விஹார்

மத்தியபிரதேசத்தின் ஒரே மலைபிரதேசத்துக்கு ஒரு பயணம் சென்று வருவோமா?

சிறிய நீர்வீழ்ச்சியான அப்ஸரா விஹார், தான் விழும் இடத்தில் ஒரு ஆழமில்லாத குட்டையை உருவாக்குகிறது. இது தேவதைக் குளம் என்ற பெயரிலும் அறியப்படுகிறது. இது நீச்சல், முக்குளித்தல், இயற்கையான திறந்தவெளி குளியல் போன்றவற்றில் பாதுகாப்பான முறையில் ஈடுபட்டுத் திளைக்க மிக அருமையான ஒரு இடமாகும்.

தேனீ நீர்வீழ்ச்சி

மத்தியபிரதேசத்தின் ஒரே மலைபிரதேசத்துக்கு ஒரு பயணம் சென்று வருவோமா?

பச்மாரியில் உள்ள அழகிய அருவியான தேனீ நீர்வீழ்ச்சி ஜமுனா பிரபாத் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இது பச்மாரி பள்ளத்தாக்கின் முக்கிய குடிநீர் ஆதாரமாகத் திகழ்கிறது. தேனீ நீர்வீழ்ச்சி அழகிய ஓங்காரத்தோடு பாயும் ஒரு வசீகரமான நீர்வீழ்ச்சியாகும்

Read more about: travel, hills