» »நடிகை டாப்ஸி விரும்பும் இடம் தெரியுமா?

நடிகை டாப்ஸி விரும்பும் இடம் தெரியுமா?

Posted By: Udhaya

பாதாமி குடைவரைக் கோவில்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கொட் மாவட்டத்தின் பாதாமி என்னும் நகரில் உள்ளன.

கி.பி. 6 ஆம் நூற்றாண்டு தொடங்கி 8 ஆம் நூற்றாண்டு வரை கர்நாடகத்தின் பெரும்பகுதியை ஆட்சிபுரிந்த சாளுக்கியர்களின் தலைநகரமாக பாதாமி, விளங்கியது. இந்த நகரம் இங்கு காணப்படும் மணற்கல் குன்றுகளில் குடையப்பட்டுள்ள பண்டைக்காலக் குடைவரைகளினாற் பெயர் பெற்றது.

பாதாமி குடைவரைக் கோயில்கள் நான்கு குகைகளை உள்ளடக்கியுள்ளன. 6 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இவை மென்மையான தக்காணத்து மணற்கல் பாறைச் சரிவுகளில் குடையப்பட்டுள்ளன.

காஞ்சனா மாலா பாடலில் பாதாமி

காஞ்சனா மாலா பாடலில் பாதாமி

ஜீவா டாப்ஸி நடிப்பில் வெளியான வந்தான் வென்றான் படத்தில் இடம்பெறும் காஞ்சனமாலா எனும் பாடலில் முழுக்க முழுக்க காட்டப்படும் பாதாமி குகைகள்

காஞ்சனா மாலா பாடலில் பாதாமி

காஞ்சனா மாலா பாடலில் பாதாமி

சுற்றிலும் நீர் சூழ்ந்து நடுவில் அமைந்துள்ள கோயில் மண்டபத்தில் வைத்து நடைபெறும் நடன நிகழ்வு இது.

காஞ்சனா மாலா பாடலில் பாதாமி

காஞ்சனா மாலா பாடலில் பாதாமி

சுற்றிலும் பச்சை நிறத்தில் தோற்றமளிக்கும் குளத்தின் கரையில் ஆடல் அசைவு.

காஞ்சனாமாலா பாடலில் பாதாமி

காஞ்சனாமாலா பாடலில் பாதாமி

குடைவரைக் கோயிலின் ஒரு பகுதியில் மண்டபத்தின் மேல் ஜீவா மற்றும் நடனகலைஞர்கள்.

காஞ்சனா மாலா பாடலில் பாதாமி

காஞ்சனா மாலா பாடலில் பாதாமி

குகைக் கோயில் அருகே டாப்ஸி மற்றும் நடனக் கலைஞர்கள்

சாளுக்கிய அரசர்களின் தலைநகர்

சாளுக்கிய அரசர்களின் தலைநகர்

முற்காலச் சாளுக்கியர்கள் என அழைக்கப்பட்ட சாளுக்கிய அரசர்களின் தலைநகர் பாதாமி ஆகும்.

PC: amara

பழமை

பழமை

பாதாமியில் அமைந்துள்ள நான்கு குகைக்கோயில்களும் ஆறாம் நூற்றாண்டிலிருந்து கட்டப்பட்டவை. நான்கில் மூன்றாவது குகையில் மட்டுமே, அக்குகை கட்டப்பட்ட ஆண்டுக்கான சான்றுள்ளது.

PC: Ashwin kumar

கட்டியது யார்?

கட்டியது யார்?

இக்குகையில் காணப்படும் கன்னட மொழியில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில், சாளுக்கிய அரசன் மங்களேசனால் கிபி 578/579 இல் இக்குகையின் கருவறை நிர்மாணிக்கப்பட்டதாகக் குறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டிலிருந்து இக்குகைக் கோயில்களின் காலம் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்படுகிறது

PC: Dineshkannambadi

கட்டிடக்கலை

கட்டிடக்கலை

பிற்காலத்தில் இப்பகுதியில் கட்டப்பட்ட இந்துக் கோயில்களுக்கு முன்னோடியாகவும் 'இந்துக் கோயில் கட்டிடக்கலையின் தொட்டில்' எனவும் கருதப்படும் பாதாமி குகைக்கோயில் வளாகம், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்கள் பட்டியலில் மலப்பிரபா ஆற்றுப் பள்ளத்தாக்கில் "கோயில் கட்டிடக்கலையின் வளர்ச்சி - ஐகொளெ-பாதாமி-பட்டடக்கல்" என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது

PC: Arnold Betten

கடவுள்

கடவுள்

நான்கு குகைக் கோவில்களில் முதலாவது சிவனுக்காகவும், இரண்டாவதும் மூன்றாவதும் திருமாலுக்காகவும் செதுக்கப்பட்டுள்ளன. நான்காவது சமணக்கோவில் ஆகும்.

PC: SUDHIR KUMAR D

கட்டிட அமைப்பு

கட்டிட அமைப்பு

முற்காலச் சாளுக்கியர்கள் பின்பற்றிய நாகர மற்றும் திராவிடப் பாணியிலமைந்த கட்டிட அமைப்பு இக்குகைக் கோயில்களில் காணப்படுகிறது.

PC: Gs9here

புத்தர்

புத்தர்

பாதாமியில் புத்தர் கோயிலமைந்த இயற்கைக் குகை ஒன்றும் உள்ளது. இக்குகைக்கோயிலுக்குள் தவழ்ந்துதான் செல்ல முடியும்.

PC: Rudnik

முதல் குகை

முதல் குகை

மலையின் வடமேற்குப் பகுதியில் தரைமட்டத்திலிருந்து 59 அடி உயரத்தில் முதல் குகை உள்ளது. இக்குகைக்குச் செல்ல குள்ளவடிவ கணங்களின் (மாடு மற்றும் குதிரைத் தலைடைய உருவங்கள்) உருவங்கள் செதுக்கப்பட்டப் படிகள் அமைக்கப்பட்டுள்ளன

PC: mertxe iturrioz

இரண்டாவது குகை

இரண்டாவது குகை

இரண்டாவது குகை, மூன்றாம் குகைக்கு மேற்கில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆறாம் நூற்றாண்டின் இறுதியாண்டுகளில் கட்டப்பட்ட இக்குகையின் அமைப்பும் அளவும் கிட்டத்தட்ட முதல் குகையைப் போன்றே உள்ளது.

PC: Unslung

மூன்றாம் குகை

மூன்றாம் குகை

இரண்டாவது குகையைப் போன்றே மூன்றாம் குகையும் வடக்கு நோக்கியுள்ளது. இரண்டாவது குகையிலிருந்து மூன்றாவது குகைக்குச் செல்ல 60 படிகள் அமைக்கப்பட்டுள்ளன.

PC: Irumgge

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

பாதாமி கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் இருந்து 454கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. பெங்களூருவில் இருந்து ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பாதாமிக்கு இயக்கப்படுகின்றன. பாதாமிக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் ஹூப்ளி ரயில் நிலையம் ஆகும். இது 100 கி.மீ தொலைவில் உள்ளது. ஹுப்ளி ரயில் நிலையத்திலிருந்து அனைத்து முக்கிய இந்திய நகரங்களுக்கும் ரயில் வசதிகள் உள்ளன.

நன்றி

நன்றி

நன்றி

Read more about: travel, temple