» »ஒரு முறை சென்றால் ஆயுளுக்கும் நோய் தீர்க்கும் சென்னை திருப்பதி.. எங்க தெரியுமா ?

ஒரு முறை சென்றால் ஆயுளுக்கும் நோய் தீர்க்கும் சென்னை திருப்பதி.. எங்க தெரியுமா ?

Written By: SABARISH

Nikhil B

ஒரு முறை சென்றால் ஆயுளுக்கும் நோய் தீர்க்கும் சென்னை திருப்பதி.. எங்க தெரியுமா ?

திருப்பதி என்றவுடன் நம் நினைவுக்கு வருவது, நமக்கு தெரிந்தது ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவில் தான். இந்தியாவில் மிகவும் முக்கிய திருத்தலங்களில் இந்த கோவிலும் ஒன்றாக உள்ளது. வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றான இங்கு ஆண்டுதோரும் லட்சக் கணக்கான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் படையெடுத்து வருகின்றனர். திருமலை என்று அழைக்கப்படும் இந்த ஆந்திர திருப்பதி கோவில் மேல்திருப்பதி என்றும் பிற வைணவ கோவில்கள் கீழ் திருப்பதியென்றும் அழைக்கப்படுகிறது.

உங்களுக்கு தெரியுமா ?

உங்களுக்கு தெரியுமா ?

Unknown

அதெல்லாம் சரிங்க, ஆந்திராவில் உள்ளதைத் தவிர்த்து அதற்கு ஈடாக நம்ம ஊருலயும் 80க்கும் மேல வைணவத் திருத்தலங்கள் இருக்கு, அதப்பத்தி உங்களுக்கு தெரியுமா ?. வாங்க அப்படிப்பட்ட ஒரு திருப்பதிக்கு போலாம்.

புராண கதைகள்

புராண கதைகள்

Ssriram mt

மகாவிஷ்ணு கோவில் கொண்டுள்ள புனித தலங்களுக்கு பயணம் மேற்கொண்ட பன்னிரு ஆழ்வார்கள் மற்றும் ஶ்ரீராமனுஜர் ஆகியோர், பெருமாளை வழிபட்டு பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். இதனால் அந்த தலங்கள் தெய்வீக நிலையை அடைந்துள்ளன. அவ்வாறு பாடப்பெற்ற 108 தலங்கள் திவ்யதேசங்கள் அல்லது 108 திருப்பதிகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவில்களுக்குச் சென்று வழிபடுவது பெரும் பாக்கியமாக கருதுகின்றனர்.

தமிழகத்தில் எத்தனை திவ்யதேசம் ?

தமிழகத்தில் எத்தனை திவ்யதேசம் ?

Ssriram mt

தமிழகத்தில் உப்பிலியப்பன் கோவில், கள்ளழகர் கோவில், ஶ்ரீரங்கம், திருவரங்கம், திருவெள்ளறை என 82 திருப்பதிகள் இருக்கின்றது. இதுபோக கேரளாவில் திருவனந்தபுரம், திருவல்லா உள்ளிட்டு 13 இடங்களிலும், வட இந்தியாவில் அயோத்யா, பத்ரிநாத், துவாரகா உட்பட 8 திருப்பதிகளும் உள்ளன. வைகுந்த விண்ணகரம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட கோவில்கள் நாம் பெரும்பாலும் அறிந்ததே. இப்படியான நம் ஊர் அருகே உள்ள ஒரு திவ்யதேசத்திற்கு போகலாம் வாங்க.

வீரராகவப் பெருமாள்

வீரராகவப் பெருமாள்

Ssriram mt

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான வீரராகவபெருமாள் கோவில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஐந்தடுக்கு கோபுரத்துடன் பல்லவர்களால் கட்டப்பட்ட இந்தக் கோவிலில், கனகவள்ளி அம்மையார், கனேச ஆழ்வார், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், ஆண்டாள், உள்ளிடடோருக்கு தனித்தனியே சிறு ஆலயங்களும் கட்டப்பட்டுள்ளன. மேலும், விஷ்ணுவே வீரராகவப்பெருமாளாக இக்கோவிலில் குடிகொண்டுள்ளார் என்ற நம்பிக்கையும் இக்கோவிலுக்கு உள்ளது.

சென்னைக்கு மிகமிக அருகில்

சென்னைக்கு மிகமிக அருகில்

map

சென்னையில் இருந்து திருவள்ளூர் மிகமிக அருகில் சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சென்னை- மாதவரம்- அத்தன்தாங்கல் வழியாக இவ்வூரை அடையலாம். அல்லது, மாதவரத்தில் இருந்து அம்பத்தூர்- கொடுவள்ளி வழியாகவும் 47 கிலோ மீட்டர் பயணித்து திருவள்ளூரை சென்றடையலாம்.

தீராத நோயையும் தீர்க்கும் மருத்துவர்

தீராத நோயையும் தீர்க்கும் மருத்துவர்

Thiruvallurutsavar

வீரராகவர் கோவிலில் உள்ள இறைவன் வைத்திய வீரராகவர் என்றும் அழைக்கப்படுகிறார். முறையாகத் தேர்ந்த மருத்துவராலும் குணப்படுத்த முடியாத நோய்களை வீரராகவப் பெருமாள் தீர்த்து வைக்கிறார் என்கின்றனர் உள்ளூர் மக்கள். இந்த நம்பிக்கையுடைய மக்கள் சிறிய உலோகத் தகட்டில் நோயினால் பாதிக்கப்பட்ட உறுப்பைச் செதுக்கி அந்நோயைத் தீர்த்து வைக்குமாறு பெருமாளிடம் வேண்டி வருகின்றனர். இங்கு சந்தன எண்ணெயால் மட்டும் வீரராகவருக்கு அபிசேகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

பாவம் போக்கும் தீர்த்தம்

பாவம் போக்கும் தீர்த்தம்

Ssriram mt

கங்கை முதலான நதிகளில் நீராடினால் செய்த பாவங்கள் தீரும் என்ற நம்மிக்கை நம் மக்களிடையே பரவலாக உள்ளது. அதேப்போன்றே திருவள்ளூர் கோவில் தலத்தில் உள்ள தெப்பக் குளத்தின் நீரும் பாவங்களை நீங்கிவிடும் என்பது தொன்நம்பிக்கை.

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

map

சோழவரம் ஏரி, பட்டினத்தார் சமாதி, பூண்டி உள்ளிட்டு சுற்றுலாத் தலங்கள் உங்களது இந்த பயணத்தை ஆன்மீக பயணமாக மட்டுமின்றி நல்லதொறு பொழுதுபோக்கு பயணமாகவும் மாற்றும்.

சோழவரம் ஏரி

சோழவரம் ஏரி

Puzhal2015

சென்னை - திருவள்ளூர் செல்லும் சாலையில் படியநல்லூரில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சோழவரம் ஏரி. பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ள இந்த ஏரி pயல் இருந்து சென்னை மாநகரத்திற்கு குடிநீர் வழங்கப்படுகிறது. சென்னையில் உள்ள ஏரிகளில் மிகப் பெரிய ஏரிகளில் இதுவும் ஒன்றாகும். இயற்கை அழகு, தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் நிறைந்த சோழவரம் ஏரி சுற்றுலாத் தலமாகவும் காட்சியளிக்கிறது.

பட்டினத்தார் சமாதி

பட்டினத்தார் சமாதி

S.P.Krisnamoorthy

10-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் சித்தர் மரபைச் சேர்ந்த ஞானி சென்னை அருகில் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவொற்றியூர் கடற்கரையில் மறைந்தார். ஜீவசமாதி அடைந்ததாக கருதப்படும் இவர் மறைந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் இன்றளவும் வழிபாட்டில் உள்ளது. மர்மம் நிறைந்த இவருடைய சமாதியைக் காணவும், கடற்கரையோரம் நேரம் செலவிடவும் திருவொற்றியூருக்கு செல்லலாம்.

பூவிருந்தவல்லி

பூவிருந்தவல்லி

w:user:PlaneMad

திருவள்ளூரில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பூந்தமல்லி என்றழைக்கப்படும் பூவிருந்தவள்ளி. இங்குதான் திருக்கச்சி நம்பியாழ்வார் என்ற வைணவப் பெரியார் பிறந்தார் என்று புராண இலக்கிங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கோவில் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு ஒரு பரிகார தலமுமாகவும் விலங்குகிறது.

பூண்டி

பூண்டி

Puzhal2015

பூண்டியில் அமைந்துள்ள சத்தியமுர்த்தி சாகர் என்ற நீர்த்தேக்கம் இப்பகுதீயில் மிகவும் பிரசிதிபெற்றது. இங்கிருந்து சென்னையின் குடிநீர்த் தேவைகளைத் தீர்க்கும் செங்குன்றனம் நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. குறிப்பாக, சென்னையிலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த பூண்டி நீர்த்தேக்கத்துடன் கூடிய சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது.

Read more about: travel