» »மாமல்லபுரத்தில் பூமிக்கடியில் புதைந்திருக்கும் உலகின் பழம்பெரும் கோயில் பற்றி தெரியுமா?

மாமல்லபுரத்தில் பூமிக்கடியில் புதைந்திருக்கும் உலகின் பழம்பெரும் கோயில் பற்றி தெரியுமா?

Posted By: Udhaya

இந்தியா ஆன்மீகத்துக்கும், அதன் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட கட்டுமானங்களுக்கும் உலகப்புகழ் பெற்ற இடம் என்பதன் பெருமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும்.

500 கோடி பேரை பார்த்த ரயில் நிலையங்கள் நாமளும் போலாம்!

இந்தியாவின் பெருமைகளை வரலாறுகளினூடே புகுந்து கண்டறிந்து தனது நேயர்களுக்கு வழங்குவதில் ஒன்இந்தியாவின் உறுப்பான நேட்டிவ் பிளானட் இணையதளம் பெருமிதம் கொள்கிறது.

12 நிமிடங்களில் 10000 ஆண்டுகள் வரை பின்னே செல்லவேண்டுமா? இங்கே வாங்க

அந்த வகையில் உலகில் எங்கும் காணமுடியாத அதிசயங்களைக் கொண்ட இந்தியா முக்கியமாக தமிழகத்தின் வரலாறுகளையும் சிறப்புகளையும் தொடர்ந்து உங்களுக்கு அளித்து வருகிறோம். தொடர்ச்சியாக நாம் இன்று காணவிருப்பது, உலகிலேயே மிகப் பழமையான செங்கல் கட்டுமானம் பற்றி. இது வேறெங்கும் இல்லை தமிழகத்தில் தான் கண்டறியப்பட்டுள்ளது. அது எங்கே தெரியுமா? முழுவதும் படியுங்கள்!

உலகிலேயே பழமையான செங்கல் கட்டுமானம்

உலகிலேயே பழமையான செங்கல் கட்டுமானம்

இந்திய தொல்லியல் அறிஞர்களால் கண்டறியப்பட்ட இந்த கட்டுமானம் தான் உலகில் மிகப்பழமையான கட்டுமானமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ravichandar84

முருகன் கோயில்

முருகன் கோயில்

இந்த கட்டுமானம் ஒரு கோயிலின் வடிவத்தை ஒத்துள்ளது. அதிலும் குறிப்பாக அது முருகன் கோயிலுக்கான அடையாளங்களைப் பெற்றுள்ளது.

Jopazhani

சோழர்களா பல்லவர்களா

சோழர்களா பல்லவர்களா

இந்த கட்டிட சிதிலத்தின் பெரும்பகுதி கருங்கல்லால் கட்டப்பட்டதாக உள்ளது. அது பல்லவர்கள் காலத்தையது ஆகும்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அதில் கிடைக்கப்பெற்ற சிதிலங்களில் கிமு 3ம் நூற்றாண்டு செங்கல் கட்டிட துணுக்குகளும் அடங்கியுள்ளனவாம்

தெரியுமா? கிமு 3 ம் நூற்றாண்டு என்றால் முற்கால சோழர்கள் கட்டியிருக்க வேண்டும் அதை.

வாயைப் பிளக்கச் செய்யும் ஆச்சர்யம்

வாயைப் பிளக்கச் செய்யும் ஆச்சர்யம்

அதே நேரத்தில் அதே இடத்தில் கிடைக்கப்பெற்ற செங்கல் கட்டுமான சிதிலங்கள் சோழர்களின் பெருமையை இன்றளவும் பறைசாற்றுகின்றன. ஆம் கிமு மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட செங்கல் கட்டுமானம் அது..

என்ன செங்கல் கட்டுமானம் இவ்வளவு ஆண்டுகள் நீடித்திருக்கிறதா?

Ravichandar84

இந்தியாவின் மழை பூமி எங்கிருக்கு தெரியுமா

எல்லா நாளும் மழைக்காலம் இந்த ஊருக்கு மட்டும் அப்படி என்ன வரம்

பல்லவ காலத்துக்கு முந்தைய கோயில்கள்

பல்லவ காலத்துக்கு முந்தைய கோயில்கள்

இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள பல்லவ காலத்துக்கும் பழமையான கோயில்கள் இரண்டு. அவற்றில் ஒன்றுதான் இந்த முருகன் கோயில்.

சாளுவான்குப்பம் முருகன் கோயில்

சாளுவான்குப்பம் முருகன் கோயில்

2004ம் ஆண்டு நிகழ்ந்த ஆழிப்பேரலையின் போது கண்டறியப்பட்ட ஒரு கல்வெட்டின் உதவியோடு ஆராய்ந்தபோது கண்டுபிடிக்கப்பட்ட கோயில்தான் இந்த முருகன் கோயில்.

Parvathisri


வயநாடுனா சுற்றுலா - சுற்றுலா என்றால் இதுதான்!!! அடிபொலி....

சோழர்களின் கட்டிடக்கலை சான்று

சோழர்களின் கட்டிடக்கலை சான்று

இவை முதலாம் பராந்தகன் மற்றும் முதலாம் குலோத்துங்கன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட கல்வெட்டுக்கள் ஆகும். இதிலிருந்துதான் இந்த கோயில் சோழர்களின் கட்டுமானத்தில் உருவானது என அறியப்பட்டது.

Ravichandar84

திடீர் திருப்பம்

திடீர் திருப்பம்

சோழர்களின் கட்டுமானம் என்பது உலகின் பல இடங்களில் உள்ளது. அவை இன்றளவும் திடகாத்திரமாக வானோங்கி உயர்ந்து காணப்படுகிறது. அப்படி இருக்கையில் சோழர்களின் இந்த செங்கல் கட்டுமானம் எப்படி அழிந்தது என்ற சந்தேகம் உங்களுக்கும் வருகிறதல்லவா


500 கோடி பேரை பார்த்த ரயில் நிலையங்கள் நாமளும் போலாம்!

சோழர்களின் சிறப்புக்களை அழித்த பல்லவர்கள்?

சோழர்களின் சிறப்புக்களை அழித்த பல்லவர்கள்?

முற்கால சோழர்களுக்குப் பின் பல்லவர்கள் ஆண்ட பகுதிகளில்தான் இந்த கோயில் உள்ளது. அப்படியானால் சோழர்களின் இந்த உலக சிறப்புவாய்ந்த செங்கல்கட்டுமானத்தை அழித்துதான் பல்லவர்கள் தங்கள் கட்டிடத்தை கட்டினரா என்ற கேள்வி எழுகிறது.

Ravichandar84

என்னத்துக்கு இவ்ளோ நாள் நாம இந்தியாவுல இருக்கோம்?!

இழந்த பெருமைகள்

இழந்த பெருமைகள்

ஒருவேளை அந்த கட்டிடம் முழுமையாக இருந்திருந்தால் தஞ்சை கோயிலைப் போன்ற பல்வேறு மர்மங்களைப் பற்றி நாம் படித்திருப்போமோ என்னவோ?

மனதை கொள்ளைகொள்ளும் 50 அரண்மனைகள்!!!

வாழ்ந்தா இந்த மாதிரி இடத்துலதா வாழணும் ..ப்பா என்ன பிரம்மாண்டம்!

மகாபலிபுரம் சுற்றுலா செல்வதாக இருந்தால் இந்த சோழனின் இழந்த பெருமைகளை கொஞ்சம் ஒரு எட்டு பாத்துட்டு வாங்களேன்.

Read more about: travel, temple