» »பல்லவர்களும் பாண்டியர்களும் கொடூரமாக மோதிக்கொண்ட முதலாம் உலகப்போர் நடந்த இடங்கள் !

பல்லவர்களும் பாண்டியர்களும் கொடூரமாக மோதிக்கொண்ட முதலாம் உலகப்போர் நடந்த இடங்கள் !

Posted By: Udhaya

1914ம் ஆண்டு நேசநாடுகளுக்கும், மைய நாடுகளுக்கும் இடையே உலகம் முழுவதும் நடைபெற்ற உலகப் போர் இல்லை இது.. அதற்கு பல வருடங்கள் முன்பாகவே, கிபி870 களில் உலகின் முக்கால்வாசி பகுதிகளை ஆண்ட தமிழ் மன்னர்களிடையே நடைபெற்ற மிகப்பிரம்மாண்ட போர்.

திருப்புறம்பியம் போர் பற்றியும், போர் நடைபெற்ற இடங்களின் தற்போதைய நிலைபற்றியும் இந்த பதிவில் காண்போம்.

உலகப்போர்

உலகப்போர்


உலகமுழுவதும் நடைபெற்ற போர்கள்தான் உலகப்போர் என்று அழைக்கப்படுகிறது. உலகத்துக்கே தெரியாமல், ஏன் தமிழர்களில் இன்னும் பலருக்கு தெரியாமல் தமிழ் மன்னர்களிடையே நடைபெற்ற பிரம்மாண்ட போரா உலகப்போர் என்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

பல்லவர்களின் அழிவு

பல்லவர்களின் அழிவு


பல்லவ சாம்ராஜ்யத்தின் அழிவு என்பது இந்த போரில்தான் முற்றுபெற்றது. அதற்குபின் பல்லவ மன்னர் என்று யாரும் வரலாற்றில் இல்லை என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள்.

Jay Shankar

 திருப்புறம்பயம் போர்

திருப்புறம்பயம் போர்

திருப்புறம்பயம் போர் கிபி 800 களில் சிறப்புப் பெற்றிருந்த பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் நடைபெற்றது. இதே காலத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை தம் வசப்படுத்தியிருந்தனர்.

Wiki

தஞ்சாவூர்

தஞ்சாவூர்


முத்தரைய குறுநில மன்னர்கள் செந்தலை அல்லது நியமம் என்ற ஊரைத் தம் தலைநகராகக் கொண்டு தஞ்சையை ஆண்டுவந்தனர் என்று செந்தலைக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

மாறி மாறி கூட்டணி

மாறி மாறி கூட்டணி

தமிழகத்தின் தற்போதைய அரசியல் கட்சிகளைப் போல முத்தரையர்களும் பல்லவர்களுடனும் பாண்டியர்களுடனும் மாறி மாறி சேர்ந்துகொண்டனர் என்பது கல்வெட்டுகள் மூலமாக தெரியவருகிறது. தங்கள் நாட்டுக்கு எது நல்லது என்று மக்களுடன் கலந்து முடிவெடுப்பார்கள் என்றும் தெரிகிறது.

 தஞ்சையை இழந்த முத்திரையர்கள்

தஞ்சையை இழந்த முத்திரையர்கள்

பாண்டியர்களுக்கு ஆதரவு தெரிவித்ததால், முத்தரையர்கள் தஞ்சையை இழந்தனர். பல்லவர்களின் விசுவாசவர்களாக இருந்த சோழர்களுக்கு தஞ்சை கிடைத்தது.

 மீண்டும் துளிர்த்தெழுந்த பிரம்மாண்ட சோழ வம்சம்

மீண்டும் துளிர்த்தெழுந்த பிரம்மாண்ட சோழ வம்சம்

இதன்பின்னர் நடந்த நிகழ்வுகளில்தான் சோழர்கள் எதிர்பார்த்திராத அளவு பிரம்மாண்டமாக முன்னேறினர். விஜயாலசோழன் இந்திய வரலாற்றின் மிக முக்கிய மன்னரானார்.

முத்தரையர்களுக்காக போரிட்ட பாண்டியர்படை

முத்தரையர்களுக்காக போரிட்ட பாண்டியர்படை

முத்தரையர்களுக்கு ஆதரவாக பாண்டியர்கள் விஜயாலனுக்கு எதிராக போரிட சோழநாட்டின் மீது படையெடுத்துச் சென்றனர்.

திருப்புறம்பியத்தில் திரண்ட பிரம்மாண்ட போர்ப்படை

திருப்புறம்பியத்தில் திரண்ட பிரம்மாண்ட போர்ப்படை

பாண்டியர்கள் சோழநாட்டின் வடகரையிலுள்ள இடவை (காவிரிக்கு வடகரையிலுள்ள பகுதிகள்)

அணிகள்

அணிகள்

இரண்டு அணிகளாக போரிட்ட இந்த நிகழ்வில், பல்லவமன்னர்கள் நிருபதுங்கவர்மன், அபராஜித வர்மன், கங்க மன்னன் பிருத்விபதி 1, சோழ மன்னர்கள் விஜயால சோழன், ஆதித்த சோழன் ஆகியோரும் ஒரே அணியில் இருந்தனர்.

பாண்டியர்களின் அணியில் முத்தரையர்கள் இருந்தனர். இப்போரில் முதலாம் பிருத்விபதி உயிரிழந்தார். ஆனாலும் பல்லவர்களின் அணியே வெற்றி பெற்றது.

 பல்லவப் பேரரசின் கடைசி மன்னன்

பல்லவப் பேரரசின் கடைசி மன்னன்

அபராசித வர்ம பல்லவன் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த பல்லவப் பேரரசின் கடைசி மன்னனாவான். ஒன்பதாவது நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் ஆட்சி புரிந்த அபராசிதன் கிபி 862-63 ஆண்டு திருப்புறம்பியத்தில் நடந்த போரில் பாண்டிய மன்னன் வரகுண வர்மனை தோற்கடித்தான். இருப்பினும் அதே இடத்தில் சோழ மன்னன் ஆதித்தன் இவனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினான். இவனது அழிவுடன் பல்லவ வழிமுறை முடிவிற்கு வந்தது.

 சோழர்கள் எழுச்சிக்கு காரணம்

சோழர்கள் எழுச்சிக்கு காரணம்

சோழமன்னன் ஆதித்த சோழன் பல்லவமன்னன் அபராஜித வர்மனை கொன்று மொத்த ஆட்சியையும் கைப்பற்றினார். இதன்பின்னர் சோழ ராஜ்யம் அபதிவிதமான எழுச்சியை கண்டது.

கொள்ளிடம்

கொள்ளிடம்


காவிரியிலிருந்து பிரிந்து ஸ்ரீரங்கத்தை தீவாக்கி, மேற்கு நோக்கி பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது கொள்ளிடம் ஆறு.

இதுவே ஒரு சுற்றுலாத் தளமாகும்.

சுற்றுலாத் தளங்கள்

சுற்றுலாத் தளங்கள்

கொள்ளிடத்தைச் சுற்றி இரண்டு மணி நேரத்தொலைவில் பல்வேறு சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ளன. சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆகியன பெரும்பாலும் அறிந்த சுற்றுலாத் தளங்கள்.

திருப்புறம்பியம் போர் நடைபெற்ற இடங்கள்

திருப்புறம்பியம் போர் நடைபெற்ற இடங்கள்

கும்பகோணத்திலிருந்து அரைமணி நேரத் தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்குதான் போர் நடைபெற்றதற்கான நினைவுச் சின்னங்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் பல்லவ ஆட்சியின் கடைசி அரசனான அபராஜித வரமன் இங்குதான் கொல்லப்பட்டான்.

சோழர்களின் சாம்ராஜ்யம்

எப்படி செல்லலாம்

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்