» »கடல் மட்டத்துக்கும் கீழே ஆண்டு முழுவதும் விவசாயம் செய்யும் ஊர் பத்தி தெரியுமா?

கடல் மட்டத்துக்கும் கீழே ஆண்டு முழுவதும் விவசாயம் செய்யும் ஊர் பத்தி தெரியுமா?

Posted By: Udhaya

குட்டநாடு கேரள மாநிலத்தின் ஒரு பகுதி. இப்பகுதியில் ஆண்டு முழுவதும் வேளாண்மைத் தொழில் நடைபெறுவதால், இதை கேரளாவின் அரிசிக்கிண்ணம் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுள்ளது. இது இந்தியாவிலேயே கடல்மட்டத்திலிருந்து குறைவான உயரம் கொண்ட பகுதி.

பெரும்பாலான பகுதிகளில் ஆண்டு முழுவதும் நீர் இருக்கும். கடல்மட்டத்திற்குக் கீழ் இருந்தும் உழவு செய்யப்படும் உலகின் மிகச்சில பகுதிகளிலும் குட்டநாடும் ஒன்று.

கேரளத்திலும் குட்டநாடு என்ற இடம் உள்ளது. கேரளத்தின் மொத்த அழகும் இங்கே குவிந்திருக்கிறது எனலாம். நீண்ட ஓடைகளுக்கும், கண்ணுக்கெட்டும் தூரம் வரை பசுமை போர்த்தியது போல இருக்கும் வயல்களும் உள்ள குட்டநாட்டுக்கு ஒரு சுற்றுலா போகலாம் வாருங்கள்

நீர் வளங்கள் நிறைந்த குட்டநாடு

நீர் வளங்கள் நிறைந்த குட்டநாடு

பம்பை ஆறு, மீனச்சிலாறு, அச்சன்கோவில் ஆறு, மணிமாலா ஆறு ஆகிய நான்கு பெரிய ஆறுகள் குட்டநாட்டில் பாய்கின்றன.


PC: Sourav Niyogi

நீர் வழிப் போக்குவரத்து

நீர் வழிப் போக்குவரத்து

குட்டநாட்டின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாக படகு வீடுகள் இருக்கின்றன. அலைகள் எழாத 'backwaters' எனப்படும் உப்பங்கழி நீரோடைகள் இருக்கும் குட்டநாட்டில் படகுகளே பிரதான போக்குவரத்துக்கு பயன்படுகின்றன.

PC: Augustus Binu

செழித்தோங்கும் விவசாயம்

செழித்தோங்கும் விவசாயம்

நெல், வாழை ஆகியன இங்கு முதன்மையாக பயிரிடப்படுகின்றன. குட்டநாடு கடல் மட்டத்தில் இருந்து 4-10 அடிகள் வரை கீழ் உள்ளது. உலகிலேயே அதிகளவு கடல்மட்டத்திற்கு கீழ் விவசாயம் செய்யப்படும் பகுதி என்ற சிறப்பையும் குட்டநாடு பெற்றுள்ளது.


PC: Sourav Niyogi

பரந்து விரிந்த ஏரிகள்

பரந்து விரிந்த ஏரிகள்

குட்டநாட்டுப் பகுதி ஆழப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம் மாவட்டங்களை உள்ளடக்கியது. கீழ்க்குட்டநாட்டுப் பகுதியான ஆழப்புழையில் மட்டும் 18 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர்.
PC: Toji leon

அழகிய காட்சி

அழகிய காட்சி


சுமார் 500 சதுர கிலோமீட்டர் பரப்பு கடல்மட்டத்திற்குக் கீழே உள்ளது. இதன் உயரம் 0.6 மீட்டரில் இருந்து 2.2 மீட்டர் வரை கடல் மட்டத்திற்குக் கீழ் உள்ளது.

தேனிலவு செல்ல திட்டமிடுபவர்கள் குட்டநாட்டுக்கு வருவது மிகச்சிறந்த தேர்வாக அமையும். ஐந்து நட்சத்திர விடுதிக்கு இணையான வசதிகள் கொண்ட படகு வீடுகளில் மிதந்தபடியே குட்டநாட்டின் பசுமை பேரழகை துணையுடன் கண்டு மகிழலாம்


PC: Toji leon

பெயர்காரணம்

பெயர்காரணம்

குட்டநாட்டுக்கு எப்படி இந்த பெயர் வந்தது என்பதை பற்றி பல கதைகள் சொல்லப்படுகின்றன. ஒரு காலத்தில் இந்த பகுதி முழுக்க அடர்ந்த வனப்பகுதியாக இருந்ததாகவும், ஒருமுறை ஏற்ப்பட்ட காட்டுத்தீயில் வனமே மொத்தமாக அழிந்துபோனதாம். அதன் பிறகு 'சுட்ட நாடு' அதாவது 'எரிந்த பகுதி' என்று விளிக்கப்பட்டிருக்கிறது. சுட்ட நாடு என்பதே மருவி 'குட்டநாடு' என்றானதாக ஒரு கதை சொல்லப்படுகிறது.

PC: Reji

குட்டநாடு களஞ்சியம்

குட்டநாடு களஞ்சியம்

தமிழகத்திற்கு தஞ்சை இருப்பது போல கேரளத்தின் நெற்களஞ்சியமாக குட்டநாடு திகழ்கிறது. குட்டநாட்டில் உள்ள கேரளத்தின் மிகப்பெரிய ஏரியான வேம்பநாடு ஏரியை ஒட்டிய பகுதிகளில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்கள் இருப்பதை காணலாம். ஏராளமான தமிழ் படங்களில் நாம் பார்க்கும் வயல் சார்ந்த காட்சிகள் இங்கே தான் படமாக்கப்படுகின்றன.


PC: Sreejith chakkaratu

 பறவைகள் சரணாலயம்

பறவைகள் சரணாலயம்


குட்டநாட்டில் இருக்கும் மிக முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்று கோட்டயம் மாவட்டத்தில் வேம்பநாடு ஏரிக்கரையில் அமைந்திருக்கும் குமரகம் பறவைகள் சரணாலயம் தான்.


PC:Revelling slacker

கிடைக்கும் உணவுகள்

கிடைக்கும் உணவுகள்


PC: e900

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து 75 கிமீ தொலைவிலும், கொச்சியிலிருந்து 80 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது இந்த குட்டநாடு. கொச்சியிலிருந்து கிட்டத்தட்ட 3 மணி நேர பயணதூரத்தில் அமைந்துள்ளது.

நன்றி

நன்றி

பேருந்து, ரயில் சேவைகள் மூலம் குட்டநாட்டை அடையலாம். மேலும் விவரங்களுக்கு

Read more about: travel, பயணம்