• Follow NativePlanet
Share
» »அமெரிக்காவில் ஒரு சபரிமலை – அதே போல மாலை, விரதம், 18 படிகள், இருமுடி, மகரஜோதி!

அமெரிக்காவில் ஒரு சபரிமலை – அதே போல மாலை, விரதம், 18 படிகள், இருமுடி, மகரஜோதி!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலையணிந்து விரதமிருந்து யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள், ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால் வெளி நாடுகளில் வாழும் மக்களும் கூட ஐயப்பன் மீது அதீத பக்தியும் அன்பும் கொண்டு வழிபட்டு வருவதன் ஒரு வெளிப்பாடாக அமெரிக்காவில் ஒரு சபரிமலையே உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? சபரிமலையில் உள்ளது போலவே, இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் மாலையணிந்து, இருமுடி கட்டி, புனித 18 படிகள் மீது ஏறி அய்யனை தரிசனம் செய்கின்றனர்!

சபரிமலையில் வீற்றிருக்கும் அய்யன் ஐயப்பன்

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப்புகழ்பெற்ற கோயிலாகும். சிவபெருமானுக்கும், மகாவிஷ்ணுவுக்கும் மகனாக பிறந்து மகிஷியை வதம் செய்ய அய்யன் ஐயப்பன் சபரிமலையில் உயிரோடு நித்திய வாசம் செய்கிறார். அவரின் ஆசியை பெற இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து, தினமும் பூஜைகள் செய்து, கடுமையான விரதமிருந்து, சபரிமலைக்கு வந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். மண்டல பூஜை மற்றும் மகர ஜோதிக்காக திறக்கப்பட்டிருக்கும் கோவிலில் தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். இந்த வருடமும் ஐயப்ப பக்தர்கள் வழக்கம் போல் லட்சக்கணக்கில் குவிந்த வண்ணம் இருந்தனர்.

Ayyappa Temple

அமெரிக்காவில் ஒரு சபரிமலை

நாம் எவ்வளவு தான் ஆசைப்பட்டாலும், எல்லோராலும் சபரிமலைக்கு பயணம் செய்ய முடிவது இல்லை. சபரிமலைக்கு செல்ல முடியாவிட்டாலும், ஏதாவது ஒரு ஐயப்பன் கோயிலுக்கு சென்று நாம் வழிபடலாம். ஏனென்றால், அய்யன் ஐயப்பனை நாம் மனதார நேசித்தால் அவர் நம்மிடம் வந்து விடுகிறார், அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது தூய மனதும் பக்தியும் மட்டுமே. அந்த வகையில், அமெரிக்காவின் ப்ளோரிடா மாகணத்தில் சபரிமலை போலவே ஐயப்பன் கோயில் ஒன்று கட்டப்பட்ட வழிபாடு செய்யப்பட்டு வருகிறது என்று தெரியுமா உங்களுக்கு.

புளோரிடாவின் தம்பா ஐயப்பன் கோயில்

புளோரிடாவின் தம்பாவில் உள்ள 6829 மேப்பிள் லேனில் அமைந்துள்ள தம்பாவின் ஸ்ரீ அய்யப்பா கோயில், வட அமெரிக்காவில் உள்ள முதல் கோயிலாகும், இது புனிதமான 18 புனித படிகளைக் கொண்டுள்ளது. 2000 ஆம் ஆண்டு ஸ்ரீ ஐயப்பா சொசைட்டி ஆஃப் தம்பா (சாஸ்தா) என்ற பதிவு செய்யப்பட்ட இலாப நோக்கற்ற அமைப்பால் நிறுவப்பட்டது, இக்கோயிலில் விநாயகர், முருகன், தேவி, சிவன் மற்றும் குருவாயூரப்பன் போன்ற தெய்வங்களும் உள்ளன.

Ayyappa Temple

சபரிமலை போலவே கடைபிடிக்கப்படும் வழக்கங்கள்

இந்த கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவரும் முன்கூட்டியே மாலையணிந்து நம் ஊரில் கடைபிடிப்பது போலவே விரதமிருக்க துவங்கி விடுகின்றனர். சபரிமலை ஐயப்பனுக்கு இருமுடி கட்டுவது போலேவே இங்கும் பக்தர்கள் பக்தியுடன் இருமுடி கட்டி செல்கின்றனர். யாத்திரை செல்லும் நேரத்தில் அனைவரும் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து பாதயாத்திரையாக கோயிலுக்கு நடந்து செல்கின்றனர். சபரிமலை போலவே இந்த கோயிலிலும் புனித 18 படிகள் இருக்கின்றன. இருமுடி கட்டி செல்லும் பக்தர்கள் அனைவரும், புனித 18 படிகள் மீது ஏறி பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

அமெரிக்காவின் ஆன்மீக மையம்

இந்த ஆலயம் அமெரிக்கா முழுவதும் உள்ள பக்தர்களுக்கு ஆன்மீக மையமாக விளங்குகிறது, குறிப்பாக மண்டல சீசனில் அதாவது நவம்பர் 16, 2024 முதல் ஜனவரி 14, 2025 வரை இந்த கோயில் விழா கோலம் பூணும் என்று கூறப்படுகிறது. மத வழிபாடுகளுக்கு மேலதிகமாக, இளைய தலைமுறையினரை ஈடுபடுத்தும் நோக்கில் ஆலயம் வாராந்திர வகுப்புகளை வழங்குகிறது. பகவத் கீதை ஆய்வுகள், யோகா, ஸ்லோகம் மற்றும் பஜன் அமர்வுகள், பாரம்பரிய இசை மற்றும் நடனம், இந்திய மொழி கற்றல், தியானம் மற்றும் சமஸ்கிருத வகுப்புகள் ஆகியவை இதில் அடங்கும்.

Ayyappa Temple

இந்த கோயிலுக்கும் சபரிமலைக்கும் உள்ள ஒற்றுமைகள் என்ன

· புனிதமான 18 புனித படிகள் - ஐயப்பன் கோவில்களின் முக்கிய அம்சமான 18 புனித படிகளுடன் அமெரிக்காவில் உள்ள சில கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இருமுடி ஏந்திய பக்தர்கள் மட்டுமே இந்த படிகளில் ஏற முடியும்.

· மகர ஜோதி விழா - கோயில் மகர ஜோதி திருவிழாவின் களைகட்டுகிறது, இது கேரளாவில் உள்ள சபரிமலையில் அசல் கொண்டாட்டத்தைப் போன்ற தெய்வீக நிகழ்வை அனுபவிக்க பக்தர்களை அனுமதிக்கிறது.

· கட்டிடக்கலை அற்புதம் - கோவிலின் கட்டிடக்கலையானது கேரள கோவில் வடிவமைப்பின் கூறுகளை உள்ளடக்கியது, இதில் சிக்கலான சிற்ப வேலைப்பாடுகள் மற்றும் கருவறை ஆகியவை இந்திய கோவில்களின் புனிதத்தை உணர்த்துகிறது.

· பண்டிகை உணவு - திருவிழாக் காலங்களில் சபரிமலையில் வழங்குவது போலவே, இந்த கோயிலில் பாயசம், அப்பம் மற்றும் அரவணை போன்ற உண்மையான தென்னிந்திய பிரசாதம் வழங்கப்படுகிறது.

· திருவாபரணப்பெட்டி - மகரவிளக்கு நேரத்தில் திருவிதாங்கூர் மன்னர் வம்சத்தினரிடம் இருந்து வரும் திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு சாற்றப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. அதே வழக்கம் இங்கும் கடைபிடிக்கப்படுகிறது.

More News

    Read more about: sabarimala interesting facts
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+