» »தேனி மாவட்டத்தில் இப்படி ஒரு இடமிருக்கா ? வாங்க பொழுதை கழிக்கலாம்!

தேனி மாவட்டத்தில் இப்படி ஒரு இடமிருக்கா ? வாங்க பொழுதை கழிக்கலாம்!

Written By: Udhaya

தமிழ் நாட்டின் முக்கியமான மாவட்டங்களில் ஒன்றும், மிகவும் இளமையானதுமான மாவட்டம் தேனி. மேற்கு தொடர்ச்சி மலைகளின் மடியில் தவழும் இந்த தேனி மாவட்டம் விடுமுறைக் காலங்களை கழிக்க மிகவும் ஏற்ற இடமாகும்.

நீங்கள் தேனியில் இருக்கும் போது மென்மையான துண்டுகள், ருசியான மாம்பழங்கள், அருமையான பருத்தித் துணிகள், மனம் கமழும் ஏலக்காய், காரமான மிளகாய்கள், புத்துணர்வூட்டும் காப்பிக் கொட்டைகள் மற்றும் ஆரோக்கியான கிரீன் டீ ஆகியவற்றை வாங்கவோ, அனுபவிக்கவோ மறந்து விடாதீர்கள்

அதே நேரத்தில் இப்படி ஒரு இடமிருப்பதையும் மறந்து விடாதீர்கள்.. அதுதான் மேகமலை...

 மேகமலை

மேகமலை

தேனி நகரத்திலிருந்து 70 கிமீ தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலையில், கடல் மட்டத்திலிருந்து 500 மீ உயரத்தில் உள்ள இடம் தான் மேகமலை மலைப் பகுதியாகும்.

Sivaraj.mathi

வன விலங்குகள்

வன விலங்குகள்


இயற்கையான தாவரங்கள் மற்றும் வன விலங்குகள் அதிகமாக காணப்படும் இந்த மலைப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பறவையினங்களைக் காண முடியும்.

Mprabaharan

 வனவிலங்கு சரணாலயம்

வனவிலங்கு சரணாலயம்


தமிழக அரசு இந்த இடத்தை வனவிலங்குகள் சரணாலயமாக அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. இங்கு கண்ணுக்கு குளிர்ச்சியான பச்சை பசேல் தாவரங்களும், விலங்குகள், பறவையினங்கள் மற்றும் பட்டாம்பூச்சிகளும் இருக்கின்றன.

en.wikipedia.org

விலங்குகள்

விலங்குகள்


இந்த மலைப்பகுதிகளில் சிறுத்தைப்புலி, புலி, காட்டுப்பன்றி, நீலகிரி தார், முள்ளம்பன்றி, பறக்கும் அணில், புள்ளி மான், நத்தைக் கரடி, குரைக்கும் மான், மென்மையான தோலுடைய நீர்நாய், சிங்கவால் மக்காவ் குரங்குகள், சாம்பார் வகை மான்கள், நீலகிரி லாங்கூர் குரங்குகள், சாதாரண லாங்கூர் குரங்குள், போன்னட் மக்காவ் குரங்குகள், பழுப்பு நிற காட்டுக் கோழிகள் மற்றும் பல வகை விலங்குகளை நீங்கள் காண முடியும்.

Mprabaharan

தேயிலை மற்றும் ஏலக்காய்

தேயிலை மற்றும் ஏலக்காய்


தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்களும் நிரம்பிய இந்த மலைப்பகுதியின் பெரும்பாலான இடங்கள் இன்னமும் யாராலும் சேதப்படாத பசுமை மாறாக் காடுகளாகவே உள்ளன.

Mprabaharan

வேகமான காற்று வீசும் மலைகள்

வேகமான காற்று வீசும் மலைகள்


'வேகமான காற்று வீசும் மலைகள்' என்றும் அழைக்கப்படும் மேகமலை தான் மேகமலை நீர்வீழ்ச்சி மற்றும் சுருளி நீர்வீழ்ச்சிகளின் பிறப்பிடமாகும்.

Vinoth Chandar

 சுருளி நீர்வீழ்ச்சி

சுருளி நீர்வீழ்ச்சி

மேகமலையில் ஊற்றெடுக்கும் சுருளி நீர்வீழ்ச்சி முதலில் ஒரு குட்டையில் தேங்கி அதனை நிரப்பி விட்டு, அதன் பின்னர் சுமார் 40 அடி நீளத்திற்கு விழுகிறது.

Mprabaharan

 சிலப்பதிகாரத்தில் சுருளி

சிலப்பதிகாரத்தில் சுருளி

தமிழ் மொழியின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இந்த அருவியின் சிறப்பையும், வனப்பையும் பற்றி இளங்கோவடிகள் பாடியுள்ளார்.

Karthick_1

மூலிகை அருவி

மூலிகை அருவி


இந்த அருவிக்கு அருகில் உள்ள இடம் மூலிகைகளின் இருப்பிடமாகும். சுருளி நீர்வீழ்ச்சியிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் சுருளி வேலப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் நாடு சுற்றுலாத் துறையினரால் திருவிழா ஒன்றும் நடத்தப்பட்டு வருகிறது.

Karthick_1

 சுருளி வேலப்பர் கோவில்

சுருளி வேலப்பர் கோவில்

தேனி மாவட்டம், கம்பம் சுருளி மலையில் ஒரு குகையின் மீது அமைந்துள்ள முருகபெருமான் திருக்கோவில்.இதன் அருகில் சுரபி நதி ஓடுகின்றது. இங்குள்ள அதிசயம் என்னவென்றால், இங்குள்ள விபூதிக்குகையில், மணல் ஈரம் பட்டு காய்ந்த பின்பு விபூதியாக மாறுவதாக கூறப்படுகிறது.

wikipedia

Read more about: travel, tour, hills