» »மேல்பாடி அரிஞ்சய சோழன் பள்ளிப்படை - ராஜராஜசோழனின் அற்புத கோயில்

மேல்பாடி அரிஞ்சய சோழன் பள்ளிப்படை - ராஜராஜசோழனின் அற்புத கோயில்

Posted By: Udhaya

அரிஞ்சய சோழன் பள்ளிப்படை அல்லது அவனீச்வரம் கோயில் என்பது அரிஞ்சய சோழனின் பள்ளிப்படையாகும்[1]. இதை கட்டியவர் இராசராச சோழன் ஆவார். இது தமிழகத்தின், வேலூர் மாவட்டம், திருவலத்துக்கும் சோளிங்க நல்லுருக்கும் இடையில், "மேல்பாடி"என்ற ஊரில் பொன்னை ஆற்றங்கரையில் கட்டப்பட்ட கற்றளியாகும்.

 ராஜராஜசோழனின் அற்புத கோயில்

இந்த பள்ளிப்படைக் கோயில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த அழகான கோயில் ஆகும். இக்கோயிலில் தன் கண்ணை இறைவனுக்கு காணிக்கையாக கொடுக்கும் கண்ணப்பரை தடுக்கும் சிவன், பிச்சாடனார் போன்ற சிற்பங்கள் உள்ளன. கோயிலின் தெற்குப்புறத்தில் "ஆற்றூர் துஞ்சிய தேவர்க்கு" பள்ளிப்படையாக உடையார் ஸ்ரீ ராஜ ராஜன் எடுபித்த கற்றளி" என்ற வரிகள் கொண்ட கல்வெட்டு உள்ளது.

 ராஜராஜசோழனின் அற்புத கோயில்

மேல்பாடி அருகே உள்ள நீவா ஆற்றங் கரையில் நடந்த போரில் ராஜராஜ சோழனின் பாட்டனார் அரிஞ்சய சோழர் உயிர் துறந்தார். அந்த இடத் துக்கு அருகில் முதலாம் பராந்தக சோழன் ஆட்சிக்காலத்தில் கட் டப்பட்ட சோமநாதீஸ்வரர் கோயில் இருந்தது.

 ராஜராஜசோழனின் அற்புத கோயில்

பிற்காலத்தில் ராஜராஜன் ஆட்சிக்கு வந்ததும் தமது பாட்டனார் அரிஞ்சய சோழர் உயிர் துறந்த இடத்தில் பள்ளிப்படை கோயிலை எழுப்பினார். அதற்கு அருகில் இருந்த சோமநாதீஸ்வரர் கோயிலுக்கு கலையழகுடன் கூடிய மண்டபம், திருச்சுற்று மாளி கையை கட்டினார். சோமநாதீஸ்வரர் கோயிலுக்கு 15 கழிஞ்சு தங்கமும் ஆயிரம் குழி நிலமும் ராஜராஜன் தானமாக வழங்கியதாகக் கூறப் படும் கல்வெட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ள அடிப்படையில், 80 கிராம் தங்கம் மற்றும் ஒரு லட்சம் சதுர அடி நிலம் தானமாக வழங்கப்பட்டதாக தெரிகிறது.

 ராஜராஜசோழனின் அற்புத கோயில்

பாட்டனார் மீதான பெருமதிப் பால் இந்த 2 கோயில்களுக்கும் ராஜராஜன் பொன்னையும் நிலத்தை யும் தானமாக அள்ளிக் கொடுத் தார். அவருக்குப் பின் வந்த சோழ ஆட்சியாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் தங்க நகைகளை யும் சிலைகளையும் தானமாகக் கொடுத்தனர்.

மாலிக்காபூர் படையெடுப்பில் இந்த கோயில் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. சிதிலமடைந்து மண் மூடிக் கிடந்த கோயிலை தொல்லியல் துறை அதிகாரிகள் புனரமைத்தனர். பின்னர், இந்து சமய அறநிலையத் துறை அதி காரிகளின் கட்டுப்பாட்டில் வந்தது.

 ராஜராஜசோழனின் அற்புத கோயில்

எப்படி செல்லலாம்?

வேலூரிலிருந்து 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். மேல்பாடி எனும் கிராமத்துக்கு அதிக அளவில் பேருந்து வசதி இல்லை என்றாலும், வேலூரிலிருந்து சென்னை செல்லும் பேருந்துகள் பல இந்த வழியாகத்தான் செல்கின்றன.

Read more about: travel, temple