» »உலகமே நீரில் மூழ்கி அழியும் - உத்தரகோசமங்கையில் 300 ஆண்டுகள் பழமையான ஏகபாத மூர்த்தி சிற்பம்!!

உலகமே நீரில் மூழ்கி அழியும் - உத்தரகோசமங்கையில் 300 ஆண்டுகள் பழமையான ஏகபாத மூர்த்தி சிற்பம்!!

Written By: Udhaya

உலகம் அழியப்போகிறதாம். அட இதைத்தானே பல ஆண்டுகளாகவே சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே தவிர உலகம் அழிய மாட்டேங்கிறதே. 2012 ருத்ரம் படத்தில் உலகம் அழிவதை காட்டியிருப்பார்கள். அப்படித்தான் உலகம் கொஞ்சம் கொஞ்சமாக அழியப்போகிறது என்று நம்மில் பலரும் நம்பிக்கொண்டிருந்தோம் அல்லவா?

(மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் புகுந்தவெள்ளம் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது)

இதைப்போலவே அவ்வப்போது சில யூகங்களும், கணிப்புகளும் வெளியாகி நம்மை கிலிப்படுத்தும். நாமும் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருப்போம். ஆனால் தமிழகத்தில் நடக்கும் அரசியல் சூழ்நிலையில் சில விசயங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே சென்றுவிடுகின்றன. ஆமா உலகம் நீரில் மூழ்கி அழியப்போகிறதாமே.. அதற்கான ஆதாரமாக இவர்கள் காட்டுவது எதைத் தெரியுமா?

பழங்கோயில்

பழங்கோயில்

ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங் கை கோயிலில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான சிவன், விஷ்ணு, பிரம்மா இணைந்த ஏகபாத மூர்த்தி சிற்பம் உள்ளது. இது மிகவும் அர்த்தமுள்ளதாக கூறப்படுகிறது. சக்தி வாய்ந்த இந்த கோயில் சேதுபதி மன்னர்களின் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது.

Balajijagadesh

 லிங்கத்தில் தோன்றிய வடிவங்கள்

லிங்கத்தில் தோன்றிய வடிவங்கள்

உலகின் முதல் பொருளாக கருதப்படும் லிங்கத்தில் தோன்றியதாக 64 சிவமூர்த்தங்களை குறிப்பிடுகின்றனர் ஆன்மீகவாதிகள். இவற்றை அஷ்டாஷ்ட விக்கிரகங்கள் என கூறுகின்றனர். இம்மூர்த்தங்களைச் சுருக்கி, இருபத்தைந்து மூர்த்தங்களாக உருவாக்கப்பட்டதாக உத்தரகாரண ஆகமம் கூறுகிறது. இதில் ஒன்று ஏகபாத மூர்த்தி ஆகும்.

Bijay chaurasia

ஒற்றைக் காலில் சிவபெருமான்

ஒற்றைக் காலில் சிவபெருமான்


சிவபெருமான் ஒரு பீடத்தில் ஒற்றைக் காலில் சமச்சீராக நிற்க, அவருக்கு வலப்பக்கம் பிரம்ம மூர்த்தியும், இடப்பக்கம் விஷ்ணு பெருமானும் இணைந்து தோன்றுவது ஏகபாதமூர்த்தி திருக்கோலம் என்கிறார்கள்.

 உலகமே நீரில் மூழ்கும்

உலகமே நீரில் மூழ்கும்

ஊழிக்காலம் எனப்படும் பிரளயங்கள் நடக்கும்போது, உலகமே நீரில் மூழ்கி அழியும் என்கிறது புராணம். புராண காலங்களில் உலகில் உள்ள அனைத்து உயிர்களும், சிவனின் பாதியாகிய சக்தியும் இந்த ஏகபாதமூர்த்தியாகிய சிவபெருமானிடம் ஒடுங்கி விடுவர்.

 உலகம் அழிந்துகொண்டுதான் இருக்கிறது

உலகம் அழிந்துகொண்டுதான் இருக்கிறது


தற்போது நடப்பது கலியுகம். இதனால் உலகம் அழிந்துகொண்டேதான் இருக்கிறது என்கின்றனர் வேத அறிஞர்கள் எனப்படும் ஆன்மீகவாதிகள்.

wiki

உலகம் அழிந்தாலும் நாம் அழிவதில்லை

உலகம் அழிந்தாலும் நாம் அழிவதில்லை

உலகமே அழிந்துகொண்டிருக்கிறது என்றால் உலகின் உயிர்கள் ஏன் அழியவில்லை என்ற கேள்விக்கு பதிலாக வேதங்களில் குறிப்பிட்டவற்றைக் கூறுகின்றனர்.
ஊழிக்காலங்களில் சிவன் மட்டுமே அழியாமல் இருப்பவர் என ஆகமங்களும், வேதங்களும் கூறுகின்றன. அனைத்து ஆற்றல்களும் பிறக்குமிடமாகவும், தஞ்சபுகும் இடமாகவும் ஏகபாதமூர்த்தி இருக்கிறார்.

Shivam22383

 தென்னிந்தியா முழுவதும்

தென்னிந்தியா முழுவதும்

ஏகபாதமூர்த்தி சிலைகள் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் தான் அதிகமாக காணப்படுகின்றன. பிரம்மாவும், விஷ்ணுவும் ஒரு கால் வளைந்த நிலையிலும், முன்னிருகைகள் வணங்கிய நிலையிலும் காணப்படுவதாக ஏகபாதமூர்த்தி சிற்பம் அமைக்கப்படுவது மரபு.

Neethidoss

 எங்கெல்லாம் பிரபலம்

எங்கெல்லாம் பிரபலம்

இத்தகைய ஏகபாதமூர்த்தி சிற்பங்கள் கோயில் மண்டபத் தூண்களில் அமைக்கப்பட்டிருக்கும். திருக்கோகர்ணம், மதுரை மீனாட்சியம்மன் கோயில், புதுமண்டபம் ஆகிய இடங்களில் உள்ள மண்டபத் தூண்களில் ஏகபாதமூர்த்தி சிற்பங்கள் உள்ளன. இன்னும் பல இடங்களில் இருக்கலாம் என்கின்றனர் அவர்கள்.

Balajijagadesh

தற்போது என்ன வந்தது

தற்போது என்ன வந்தது


சமீபத்தில் பெய்த மழையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் மழைவெள்ளம் புகுந்தது. இதை ஒரு அறிகுறியாகவே பார்க்கலாம் என்கிறார்கள் அவர்கள். எனினும் நாம் அந்த அளவுக்கு பார்க்கவேண்டாம். மழை அதிகம் பெய்தால் நீர் புகத்தான் செய்யும். இதை எதேச்சயாக நடந்த செயலாக எடுக்கவேண்டும் என்கிறார்கள் பகுத்தறிந்து பேசுபவர்கள்.

Youtube

உத்தரகோசமங்கை

உத்தரகோசமங்கை

உத்தரகோசமங்கையில் மரகத நடராஜர் சன்னதியின் வெளிப்புற வடக்குத் தேவகோட்டத்தில் ஏகபாதமூர்த்தி சிற்பம் உள்ளது.

Balajijagadesh

 மூன்று தலை பிரம்மா

மூன்று தலை பிரம்மா

பிரம்மா மூன்று தலைகளுடன் காணப் படுகிறார். பிரம்மாவும், விஷ்ணுவும் அமர்ந்த நிலையில் உள்ளனர். விஷ்ணு, பிரம்மாவின் கைகள் வணங்கிய நிலையில் இல்லாமல் அபய முத்திரையுடன் உள்ளன. மற்றொரு கையில் ஆயுதங்களை ஏந்தி உள்ளனர்.

மரகத நடராஜர் சன்னதி, கி.பி. 1678 முதல் 1710 வரை சேது நாட்டை ஆண்ட கிழவன் சேதுபதி காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுவதால், இந்த ஏகபாத மூர்த்தி சிற்பமும் அதே காலத்தைச் சேர்ந்ததாகக் கருதலாம்.

wiki

சென்னையில் திருவொற்றியூர்

சென்னையில் திருவொற்றியூர்


உத்தரகோசமங்கையில் உள்ளதை போலவே, சென்னை திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலிலும், நடராஜர் சன்னதியின் வெளிப்புற வடக்கு தேவ கோட்டத்தில் ஏகபாதமூர்த்தி சிற்பம் அமைந்துள்ளது. இந்நிலையில்தான் இரண்டு அபாய புயல்கள் சென்னையைத் தாக்கவுள்ளதாக பீதி கிளம்பியது. அட அது வெறும் புரளி என்று பல வானியல் அறிஞர்கள் கூறினாலும் இன்னமும் புயல் வரும் என்றே சிலர் நம்பிக்கொண்டிருக்கின்றனர். சென்ற முறை பெய்த மழைக்கே அரசு துரித ?!?!? வேகத்தில் செயல்பட்டதை நீங்கள் இன்னமும் மறக்கவில்லைதானே என மறுகேள்வி கேட்கின்றனர்.

Nsmohan

புரளிகளை விடுங்கள்

புரளிகளை விடுங்கள்


புரளிகளுக்கு அப்பால், ராமநாதபுரத்தின் உத்தரகோசமங்கை மிகச் சிறப்பான சுற்றுலாத் தளமாகும். அதிகம் பெயர் தெரியாத இடமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும்.

Punya

 சுற்றுலாத் தளங்கள்

சுற்றுலாத் தளங்கள்

இராமேசுவரம் , அக்னி தீர்த்தம்,இராமர் பாதம் ,தனுஷ்கோடி, கோதண்டராமர் கோயில், பாம்பன் பாலம், திருஉத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, தேவிபட்டினம், மண்டபம் கடல் வாழ் உயிரினங்கள் காட்சியகம்,· வில்லூண்டித் தீர்த்தம், திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில், ஏர்வாடி, வாலிநோக்கம், ஓரியூர், சித்தரங்குடி பறவைகள் சரணாலயம் என இந்த மாவட்டத்தில் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. முழுமையாக தெரிந்துகொள்ள சொடுக்குங்கள்