Search
  • Follow NativePlanet
Share
» »ஜல்லிக்கட்டு முதற்கொண்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகத்துக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

ஜல்லிக்கட்டு முதற்கொண்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகத்துக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

By Udhaya

யாரோ ஒரு எழுத்தாளர் சொன்னாராம்.. போரடித்து வாழும் தமிழகத்தில் உங்களுக்கு போர் (bore) அடிக்காது என்று...

அவன் சொன்னது எவ்வளவு உண்மை என்பது சுற்றுலாவை நேசிக்கும் ஒருவருக்குத் தான் புரியும். எத்தனை விதமான மக்கள், மதங்கள், பழக்க வழக்கங்கள், உணவு வகைகள், மாநிலங்கள், நகரங்கள். பேருந்தில், ரயிலில், சகல இடங்களில் மக்கள் கூட்டம், பரபரப்பு. உங்கள் ஆயுசு முழுதும் சுற்றினாலும் இந்தியாவின் முழு பரிமாணத்தை காண முடியாது. அந்த அளவிற்கு பரப்பளவில், கலாச்சாரத்தில் பெரியது இந்தியா. இத்தனை இருந்தும், இந்தியா சுற்றுலா துறையில் 52'ஆவது இடத்தில்தான் இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதற்குள் போக வேண்டாம். நம் கேள்வி, இந்தியாவில் எந்த மாநிலம் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது ? ஒரு நொடி ஊகியுங்கள்!!

கடவுளின் தேசமான கேரளாவா ? காஷ்மீரா ? டெல்லியா ?

என்னங்க..இவ்ளோ பிரச்னையிலயும் பொங்கலையும் ஜல்லிக்கட்டையும் பாக்குறதுக்கு வந்து குவியுறாங்களே வெளிநாட்டுக் காரங்க...

அட அது நம்ம தமிழ் நாடுதானுங்க! தமிழ் மக்கள் தங்கள் பாரம்பரியத்தின் மீது எந்த அளவுக்கு பற்று வைத்திருக்கிறார்கள் என்பது இப்போது நடந்து வரும் போராட்டங்களை பார்த்தாலே புரியும். இந்த ஜல்லிக்கட்டு விழா தமிழர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர் பலரையும் ஈர்த்து, தமிழகத்தை சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபூமியாக, இந்தியாவின் சுற்றுலாவில் முதலிடத்துக்கு கொண்டு வந்துவிட்டது.

சென்னை மெரினா

சென்னை மெரினா

ஒரு தமிழராக பெருமைப்படத்தக்க விஷயம், சுற்றுலா துறையில் தமிழ் நாடுதான் அதிக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.

தமிழ் நாட்டில் உள்ள கோவிலின் கட்டுமானம் உள்ளூர் முதல் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வரை பிரமிப்பில் ஆழ்த்துகிறது. அதுமட்டுமல்ல, பழங்கால கோட்டைகள், கோவில்கள், நீர் வீழ்ச்சிகள், மலை வாசஸ்தங்கள், ஊட்டி ரயில், ஆறுகள், கடல்கள், காடுகள் என்று அனைத்தும் ஒருங்கே கொண்ட மாநிலம் தமிழகம்.

PC: KARTY JazZ

வேலூர் கோட்டை

வேலூர் கோட்டை

வேலூர் கோட்டை

PC: Fahad Faisal

பிச்சாவரம் காடுகள்

பிச்சாவரம் காடுகள்

பிச்சாவரம் காடுகள்

PC: KARTY JazZ

சிதம்பரம் நடராசர் கோவில்

சிதம்பரம் நடராசர் கோவில்

PC: Raghavendran

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி

ஒகேனக்கல் அருவி தருமபுரி மாவட்டத்தில் கர்நாடக மாநில எல்லைக்கருகே உள்ளது.

PC: Mithun Kundu

குற்றாலம் அருவிகள்

குற்றாலம் அருவிகள்

குற்றாலம் அருவிகள்

PC: Mdsuhail

 ஏற்காடு ஏரி

ஏற்காடு ஏரி

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் விடுதி, உணவகங்கள், சுற்றுப்பயணங்கள், படகு வீடுகள், தொலைநோக்கி வீடுகள் ஆகியவற்றை நடத்துகிறது. உலகமெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் தமது பண்பாட்டு மூலங்களை அறிய தமிழ்நாட்டுக்கு வருகின்றார்கள்.

PC: Rijiu K

கொடைக்கானல்

கொடைக்கானல்

கொடைக்கானல் மேற்கு தொடர்சி மலைத்தொடரில் 7000 அடி உயரத்தில் அமைந்துள்ள நகரம்.கொடைக்கானல் ஏரி கொடைக்கானலின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் சுற்றுச் சாலை 5 கி.மீ. ஏரியின் அளவு 24 ஹெக்டேர். மதுரை மாவட்டத்தின் ஆட்சியராகப் பணியாற்றிய சர் வேரி ஹென்றி லெவிஞ்சி (1819-1885) என்பவர்தான் இந்த ஏரியை திருத்தி அழகுப்படுத்தினார். வெள்ளியருவி கொடைக்கானல் ஏரி வழிந்தால் உருவாகும் அருவியாகும்.

PC: Marcus334

ராமேஸ்வரம் - பாம்பன் தீவு

ராமேஸ்வரம் - பாம்பன் தீவு

ராமேஸ்வரம் - பாம்பன் தீவு

PC: KARTY JazZ

ஊட்டி ரயில்

ஊட்டி ரயில்

ஊட்டி ரயில்

PC: wikipedia

கங்கை கொண்ட சோழபுரம்

கங்கை கொண்ட சோழபுரம்

கங்கை கொண்ட சோழபுரம்

PC: Ssriraman

மதுரை மீனாட்சியம்மன் கோவில்

மதுரை மீனாட்சியம்மன் கோவில்

மதுரையின் முக்கிய சுற்றுலா தளங்கள்: மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, இராஜாஜி பூங்கா, அரசு அருங்காட்சியகம்.

PC: எஸ்ஸார்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more