Search
  • Follow NativePlanet
Share
» »டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர அணிவகுப்பை காண டிக்கெட் புக் செய்வது எப்படி?

டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர அணிவகுப்பை காண டிக்கெட் புக் செய்வது எப்படி?

நம் சிறுவயதிலிருந்தே DD சேனலில் ஒளிபரப்பப்படும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை பார்த்த பின்னர் தான் அன்றைய தினத்தை துவங்குவோம். கண் கொள்ளா காட்சியாக இருக்கும் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழா அணிவகுப்பை நேரில் கண்டு ரசிக்க வேண்டும் என்ற ஆசையா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ளப்படி டிக்கெட் புக் செய்யுங்கள்!

தேசப்பற்றை தூண்டும் சுதந்திர தின விழா

சுதந்திர தின அணிவகுப்பை பார்த்து ரசிக்க வேண்டுமென்பது ஒவ்வொரு இந்திய பிரஜைக்கும் இருக்கும் ஆசைதான். பூக்கள் கீழே விழ, நம் தேசியக் கோடி பிரதமரால் ஏற்றப்பட்டு, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளின் அணிவகுப்புகளை காணும் போது நிச்சயம் நாம் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்வோம் இந்தியாவின் வலிமை, பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை, இராணுவ வலிமை, கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியங்களின் துடிப்பான காட்சிகளை இங்கே காணலாம்.

1

76வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்தியா

இன்று நாம் கொண்டாடும் இந்த சுதந்திரக் கொண்டாட்டங்கள் அனைத்தும் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி, பிரிட்டனிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றபோது தொடங்கியது. அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு இந்திய குடிமகனும் இந்த நாளை பெருமையுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் புது தில்லி செங்கோட்டையில் அணிவகுப்பு மற்றும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தியப் பிரதமர் இந்தியாவின் கொடியை ஏற்றுகிறார். இந்த ஆண்டு 76வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம்.

டெல்லி செங்கோட்டையில் பிரமாண்ட அணிவகுப்பு

இந்நிகழ்வு காலை 8 மணிக்கு செங்கோட்டையில் இந்தியப் பிரதமரின் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது மற்றும் அதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. அதன் பிறகு, ஜன் பாதையில் ஒரு அணிவகுப்பு அமர்வு தொடங்குகிறது. ஒவ்வொரு மாநிலமும் கலாச்சாரம், நடனம் மற்றும் மரபுகளைக் கொண்ட அதன் மாநிலத்தின் அணிவகுப்பை வழங்குகிறது. அதன் பிறகு, தரையிலும், வானிலும் துணிச்சலான ஸ்டண்ட்களுடன் பாதுகாப்பு அணிவகுப்பு நடத்தப்படுகிறது. இறுதியில், பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றி நிறைவுரை ஆற்றுகிறார்.

2

ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வது எப்படி?

1. சுதந்திர தின அணிவகுப்பு டிக்கெட் முன்பதிவுக்காக நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் https://aamantran.mod.gov.in/ ஐ பார்வையிடவும்.

2. இப்போது இணைய முகப்புப் பக்கத்தில் இந்த டிக்கெட் முன்பதிவு இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.

3. அந்த லிங்கை கிளிக் செய்த பிறகு, ஒரு படிவம் உங்கள் முன் திறக்கும்.

4. இங்கே உங்கள் தகவலை நிரப்புவதன் மூலம் டிக்கெட் விலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

5. அப்போது ஒரு நபருக்கு ரூ.20 முதல் அதிகபட்சமாக ரூ.500 வரை டிக்கெட் கிடைக்கும்.

6. உங்கள் தேவைக்கேற்ப டிக்கெட்டைத் தேர்ந்தெடுக்கலாம். அதன் பிறகு, உங்களுக்கு தேவையான ஆவணங்களை படிவத்துடன் பதிவேற்ற வேண்டும். அவை பான் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிம நகல் ஆகியவை அடங்கும்.

7. ஆவணங்களைப் பதிவேற்றிய பிறகு, நீங்கள் கட்டண விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

8. இங்கே நீங்கள் ஆகஸ்ட் 15 பரேட் நுழைவு டிக்கெட்டிற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். இதற்குப் பிறகு, சுதந்திர தின அணிவகுப்பு நுழைவுச் சீட்டு/ பாஸ் உங்கள் முன் திறக்கப்படும். அதனை டவுன்லோட் செய்து கொள்ளவும்.

3

மெட்ரோவில் செல்வதே சிறந்தது

உங்கள் சுதந்திர தின நுழைவுச் சீட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தால், செங்கோட்டைக்கு மெட்ரோ வழியாகச் செல்வதற்கு மிகவும் உகந்த போக்குவரத்து முறை ஆகும். ரெட் ஃபோர்ட் மெட்ரோ ஸ்டேஷனும், சாந்தினி சௌக் மெட்ரோ ஸ்டேஷனும் செங்கோட்டைக்கு அருகிலுள்ள மெட்ரோ ஸ்டேஷனாகும்.

எதற்காக செல்ல வேண்டும்

செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின அணிவகுப்பு, சுதந்திரம் மற்றும் முன்னேற்றத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தின் சாரத்தை படம்பிடிக்கும் ஒரு உண்மையான காட்சியாகும். நமது மகத்தான தேசத்தை வரையறுக்கும் ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் தேசிய பெருமை ஆகியவற்றைக் கண்டு, இந்த குறிப்பிடத்தக்க கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நீங்கள் ஆசைப்படும் பட்சத்தில் டிக்கெட் புக் செய்யுங்கள். இந்த முழு நிகழ்வையும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் காண டிவியில் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

    Read more about: delhi
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+