» »ஆற்காட்டுக்கு அசத்தலான ஒரு சுற்றுலா செல்வோமா?

ஆற்காட்டுக்கு அசத்தலான ஒரு சுற்றுலா செல்வோமா?

Posted By: Udhaya

ஆற்காடு தமிழ்நாட்டில் உள்ள ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும். கிமு 1000 வருடங்களில் இந்த ஊருக்கு திருவழுந்தூர் என்று பெயர். தற்போதுள்ள ஆற்காடு என்பதற்கு ஆறும் காடும் நிறைந்த பகுதி என்று பொருள்

தனி மாவட்டமாக இருந்து பின்னர் வேலூர் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியாக மாறியுள்ளது இந்த ஆற்காடு. இங்கு சுற்றுலாவுக்கென பல இடங்கள் அமைந்துள்ளன.

அவற்றை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

வரலாற்று சிறப்பு மிக்க இடம்

வரலாற்று சிறப்பு மிக்க இடம்

இது வரலாற்று சிறப்பு மிக்க இடம் ஆதலால், பல கோட்டைகளும், நினைவுச் சின்னங்களும் நிறைந்து காணப்படுகின்றன.பச்சை நிற கற்களால் ஆன மசூதி இந்த ஊரில் அமைந்துள்ளது. இது கிரீன் மாஸ்க் என்று அழைக்கப்படுகிறது. டெல்லி கேட் இங்கு அமைந்துள்ளது.

 அங்காளபரமேஸ்வரி அம்மன்

அங்காளபரமேஸ்வரி அம்மன்

அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெறும் மயான கொள்ளை மிகவும் சிறப்பு பெற்றது. மாசி அமாவாசையின் போது இது நடைபெறும்.

உருமி கோமாளியாட்டம்

உருமி கோமாளியாட்டம்

இந்த வகை ஆட்டம் தமிழரின் மிகப்பழமையான பாரம்பரிய கலை ஆகும்.

உருமி கோமாளியாட்டம் தமிழர் திருநாளாம் பொங்கலின் போது நடத்தப்படும்.

மத நம்பிக்கைகளை விதைக்காமல் மனங்களை பற்றியும், சமூக கருத்துக்களையும் இதில் பங்குபெறும் கோமாளி நகைச்சுவையுடன் எடுத்து சொல்வான்.

 கைவினைப் பொருட்கள்

கைவினைப் பொருட்கள்


ஆற்காடு கைவினைப் பொருட்களுக்கு நல்ல பெயர் உண்டு. களிமண் பொம்மைகள் பெரும்பாலும் இங்கிருந்துதான் இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது.

 எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

93 கிமீ தொலைவில் சென்னை விமானநிலையம் அமைந்துள்ளது.

10கிமீ தொலைவில் வாலாஜாபாத் ரயில் நிலையமும், 24 கிமீ தொலைவில் காட்பாடி ரயில் நிலையமும் உள்ளது.

சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் எல்லா வாகனங்களும் இந்த வழியாகத்தான் செல்லும்.

 அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

திப்பு மஸ்தான் அலியா நினைவகம்

1777ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நினைவகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

 கிரீன் தண்டர் நீர் விளையாட்டு கேளிக்கை பூங்கா

கிரீன் தண்டர் நீர் விளையாட்டு கேளிக்கை பூங்கா

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த இடம் ஆற்காடு அருகிலேயே அமைந்துள்ளது.

பாலாறு

பாலாறு

கோலாரில் தொடங்கி பாலாறாக தமிழகம் நோக்கி ஓடி வரும் ஆறு இது. தமிழகத்தில் இது 222கிமீ ஓடுகிறது.

 டெல்லி கேட்

டெல்லி கேட்

1751ம் ஆண்டு ராபர்ட் கிளைவ் என்பவரால் கட்டப்பட்ட நினைவுச் சின்னம் இந்த டெல்லி கேட் ஆகும். இது பாலாற்றின் கிளையில் அமைந்துள்ளது.

Priasai

 பஞ்ச பாண்டவர் மலை

பஞ்ச பாண்டவர் மலை

பஞ்சபாண்டவர்கள் இந்த மலையில் வந்து ஓய்வு எடுத்ததாகவும் அதனால் இதற்கு இந்த பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர்.

இதுபோக ராஜா ராணி குளம், காளிகாம்பாள் , கமண்டலேஸ்வரர் கோயில் என பல இடங்கள் உள்ளன.

Read more about: travel, fort, tour