» » ராஜஸ்தான் மாநிலத்தின் பிரசித்தமான மலைவாசஸ்தலம் மௌண்ட் அபு பற்றி என்ன தெரியும்?

ராஜஸ்தான் மாநிலத்தின் பிரசித்தமான மலைவாசஸ்தலம் மௌண்ட் அபு பற்றி என்ன தெரியும்?

Posted By: Udhaya

ராஜஸ்தான் மாநிலத்தின் சிரோஹி மாவட்டத்தில் அமைந்துள்ள மௌண்ட் அபு ஒரு பிரசித்தமான மலைவாசஸ்தலம் எனும் புகழை பெற்றுள்ளது. இயற்கை எழிலுடன் கூடிய இனிமையான சீதோஷ்ணநிலை, பசுமையான மலைகள், சாந்தம் தவழும் ஏரிகள், கலையம்சம் கொண்ட கோயில்கள் மற்றும் பல ஆன்மீக யாத்ரீக ஸ்தலங்கள் போன்றவை இங்கு பயணிகளுக்காக காத்திருக்கின்றன. 1200 மீட்டர் உயரத்தில் ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரத்தில் இந்த மலை வாசஸ்தலம் அமைந்துள்ளது.

இந்த மலை குறித்து பார்க்கலாம் வாருங்கள்.

சுற்றுலாத் தளம்

சுற்றுலாத் தளம்


மௌண்ட் அபு மலைவாசஸ்தலம் தனது செழுமையான வரலாற்றுப்பின்னணி காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தின் மிகப்பெரிய சுற்றுலா மையமாக திகழ்கிறது. புராதன தொல்லியல் தலங்கள் மற்றும் அற்புதமான பருவநிலை போன்றவை இந்த ஸ்தலத்தின் சிறப்பம்சங்களாக விளங்குகின்றன.

Andreas Kleemann

 தேனிலவு தலம்

தேனிலவு தலம்


ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இத்தலத்திற்கு குறிப்பாக கோடைக்காலம் மற்றும் மழைக்காலத்தில் வருகை தருகின்றனர்.கடந்த பத்தாண்டுகளில் இந்த மலைவாசஸ்தலம் புதுமணத்தம்பதிகளுக்கு மிகவும் பிடித்த தேனிலவு ஸ்தலமாகவும் பிரசித்தி பெற்றுள்ளது.

CorrectKnowledge

 நம்பிக்கை

நம்பிக்கை

மௌண்ட் அபு மலைவாசஸ்தலமானது ஆதியில் ‘அற்புதாரண்யா' எனும் பெயரினால் அழைக்கப்பட்டுள்ளது. அதாவது அற்புதா எனும் தெய்விகப்பாம்பு வசித்த வனப்பகுதி என்பது அதன் பொருளாகும்.
சிவனின் வாகனமான எருதைக் காக்க வேண்டி இந்த பாம்பு அவதரித்ததாக ஆன்மீக நம்பிக்கைகள் நிலவுகின்றன. காலப்போக்கில் ‘அற்புதாரண்யா' எனும் பெயர் திரிந்து அபு பர்வதம் என்று மாறி இறுதியாக மௌண்ட் அபு என்று நிலை பெற்றுள்ளது.

Malaiya

 கல்வெட்டுக்கள்

கல்வெட்டுக்கள்


குஜ்ஜார்கள் எனப்படும் பாரம்பரிய இனத்தார் இப்பிரதேசத்தில் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அற்புதா மலைப்பிரதேசத்தில் குஜ்ஜார் இனத்தாரின் நீண்ட வரலாற்றுப்பின்னணி குறித்த தகவல்கள் இங்கு கிடைத்துள்ள பல குறிப்புகள் மற்றும் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

Vivek Shrivastava

 மௌண்ட் அபுவின் சிறப்புகள்

மௌண்ட் அபுவின் சிறப்புகள்

நக்கி ஏரி, சன்செட் பாயிண்ட், டோட் ராக், சிட்டி ஆஃப் அபு ரோட், குரு ஷிகார் பீக் மற்றும் மௌண்ட் அபு சரணாலயம் போன்றவை மௌண்ட் அபு ஸ்தலத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.
மேலும், பல வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களையும் இது பெற்றுள்ளது. தில்வாரா ஜெயின் கோயில், ஆதார்தேவி கோயில், தூத் பாவ்ரி, ஸ்ரீ ரகுநாத்ஜி கோயில் மற்றும் ஆச்சால்கர் கோட்டை போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

Pratyk321

 மௌண்ட் அபு நகருக்கான பயண வசதிகள்

மௌண்ட் அபு நகருக்கான பயண வசதிகள்

விமானம், ரயில் மற்றும் சாலைவழி போன்ற போக்குவரத்து வசதிகளால் மௌண்ட் அபு நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மௌண்ட் அபு நகரத்துக்கு அருகில் 176 கி.மீ தூரத்தில் உதய்பூர் விமான நிலையம் அமைந்துள்ளது. வருடமுழுவதுமே இம்மலை நகரத்தில் இனிமையான பருவநிலை நிலவினாலும் கோடைக்காலத்தில் இங்கு சுற்றுலா மேற்கொள்வது சிறந்தது.

Kondephy

 நக்கி ஏரி

நக்கி ஏரி


மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்திலுள்ள ஒரு பிரசித்தமான சுற்றுலா அம்சம் இந்த ‘நக்கி ஏரி'யாகும். இது அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப்பயணிகளாலும், உள்ளூர்வாசிகளாலும் சுற்றுலா மேற்கொள்ளப்படுகிறது.

1200 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் ஒரே செயற்கை ஏரி என்ற பெருமையை இது பெற்றுள்ளது. பின்னணியில் அழகான மலைகள் காட்சியளிக்க அற்புதமான எழிலுடன் இந்த ஏரி அமைதியாக வீற்றுள்ளது.

Andreas Kleemann

 சன்செட் பாயிண்ட்

சன்செட் பாயிண்ட்

மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்தில் பிரசித்தமான மாலைநேர பொழுதுபோக்குத்தலமாக இந்த சன்செட் பாயிண்ட் எனும் மலைக்காட்சி தளம் பிரசித்தி பெற்றுள்ளது. இது நக்கி ஏரிக்கு தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.

சுற்றிலுமுள்ள மலைக்காட்சிகள் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் அழகு போன்றவற்றை ரசிப்பதற்கான பொருத்தமான அமைப்பினை இந்த இடம் பெற்றுள்ளது.கோடைக்காலத்தில் அதிகமான சுற்றுலாப்பயணிகளை இந்த மலைக்காட்சி தளம் ஈர்க்கிறது. இக்காலத்தில் இந்த இடத்தில் நிலவும் குளுமை பயணிகள் பெரிதும் ரசிக்கும் அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது.

T.sujatha

 அபு ரோடு

அபு ரோடு


ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள சிரோஹி மாவட்டத்திலுள்ள நகரம் இந்த அபு ரோடு ஆகும். மௌண்ட் அபு நகரத்துக்கு தென்கிழக்கே இது அமைந்துள்ளது. கரடி அபு ரோடு என்று முன்னர் அழைக்கப்பட்ட இந்த நகரம் சிரோஹி மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமாகும்.

263 மீட்டர் உயரத்தில் பனஸ் ஆற்றின் அருகே இது அமைந்துள்ளது. கணேஷ் மந்திர், பிரம்மா குமாரி ஆஷ்ரம், சந்திரவதி கோயில் மற்றும் பத்ரகாளி கோயில் போன்ற பல சுவராசியமான சுற்றுலா அம்சங்கள் இந்த நகரத்தில் நிறைந்துள்ளன.

Abhinav Phangcho

 ஹனிமூன் பாயிண்ட்

ஹனிமூன் பாயிண்ட்

கடல் மட்டத்திலிருந்து 1220 மீட்டர் உயரத்தில் இந்த ஹனிமூன் பாயிண்ட் எனும் இடம் அமைந்துள்ளது. நக்கி ஏரியின் வடகிழக்குப்பகுதியில் உள்ள இது அனாதரா பாயிண்ட் என்றும் அழைக்கப்படுகிறது.ஆண் பெண் உருவத்தினை ஒத்திருக்கும் பாறை அமைப்பு ஒன்று இந்த இடத்தில் அமைந்திருப்பதால் இது ‘ஹனிமூன் பாயிண்ட்' என்று அழைக்கப்படுகிறது.

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்