Search
  • Follow NativePlanet
Share
» »கோடீஸ்வரனாக்கும் குபேரன்..! செழிக்கச் செழிக்க செல்வம் தரும் கோவில்கள்...!

கோடீஸ்வரனாக்கும் குபேரன்..! செழிக்கச் செழிக்க செல்வம் தரும் கோவில்கள்...!

செல்வமிக்கவர்கர்களுக்கு மனதில் உள்ள கஷ்டத்தை போக்கவும், பணத் தட்டுப்பாடுடன் வாழ்பவர்களுக்குச் செல்வ வளத்தினை வாரி வழங்கவும் உதவும் கோவில் தமிழகத்தில் எங்க இருக்கு தெரியுமா ?

நம்மில் சிலர் செல்வம் இருந்தும் மனதில் நிம்மதியின்றி இருப்போம். பலர், போதிய செல்வம் இல்லாமல், வாழ்வில் முன்னேற முடியாமல் போராட்டமான வாழ்க்கையையே நடத்திக் கொண்டு இருப்போம். இவ்வாறு, பணம் இருப்பவர்களுக்கு மனதில் உள்ள கஷ்டத்தை போக்கவும், பணத் தட்டுப்பாடுடன் வாழ்பவர்களுக்குச் செல்வ வளத்தினை வாரி வழங்கவும் உதவும் திருத்தலம் நம் தமிழகத்தில் சில பகுதிகளில் மட்டுமே உள்ளது. அந்த தலங்களுக்கு எல்லாம் சென்று வழிபட்டு வருவதன் மூலம் எந்தமாதிரியான முன்னேற்றத்தை நாம் அடைவோம், செழிப்பு மிக்க செல்வம் வழங்கும் திருத்தலங்களுக்கு எப்படிச் செல்வது என தொடர்ந்து பார்ப்போம்.

குபேரர்

குபேரர்


குபேரன் என்றாலே நமக்கு நினைவில் வருவது தங்கமும், வைடூரியமும், பொற்காசுகளும் நிறைந்த திருப்பதி ஏழுமலையானுக்கே கடன் கொடுத்த கடவுள் என்பதே. குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது நம்பிக்கை. குபேர இயந்திரம், குபேர யாகம் போன்றவை நம்மை செல்வத்தின் அதிபதியாக்கும் என நம்பப்படுகிறது. புத்த மதத்திலும் கூடு குபேரன் குறித்ன கதைகள் உள்ளன. புத்த மதத்தினர் இவரை வைஸ்ரவணா என்றும், ஜைன மதத்தில் குபேரனை சர்வானுபூதி என்றும் வழிபடுகின்றனர். சிறந்த சிவபக்தரான குபேரன் பத்மம், மஹாபத்மம், மகரம், கச்சபம், குமுதம், நந்தம்,
சங்கம், நீலம், பத்மினி ஆகிய நவ நிதிகளுக்கும் அதிபதியாக உள்ளார்.

Nizil Shah

லட்சுமி குபேரர் திருக்கோவில்

லட்சுமி குபேரர் திருக்கோவில்


செல்வத்திற்கு அதிபதி லட்சுமி. அதைக் கண்காணித்துக் காப்பவர் குபேரன். இவ்விருவரையும் இணைத்து லட்சுமி குபேர வழிபாடு செய்து வரச் சீரான செல்வம் நமக்கு வந்தடையும். இழந்த செல்வத்தையும், மீட்டுத் தரும் லட்சுமி குபேரர் பூஜை மிகவும் பிரசிதிபெற்றது. தமிழகத்தில் இருந்து திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வருடந்தோறும் பயணிகள் லட்சக் கணக்கில் செல்வது வழக்கம். அடுத்த முறை நீங்கள் செல்லத் திட்டமிட்டால் திருப்பதி செல்லும் முன் இந்த லட்சுமி குபேரரை வழிபட்டுச் செல்வது மேலும் பலனூட்டும்.

Braveman2

தல சிறப்பு

தல சிறப்பு


பருமனான உடல், காண்போரைக் கவரும் புன்சிரிப்பு குபேரன் காட்சியே மனதில் ஒருவித பரவசத்தை ஏற்படுத்தும். இடது கையில் சங்கநிதி, வலது கையில் பதுமநிதியுடன் கலசத்தை அணைத்துக் கொண்டு லட்சுமி அம்மையாருடனும், துணைவி சித்தரிணீயுடனும் இத்தலத்தில் காட்சியளிக்கிறார். கோவிலைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் லட்சுமி கணபதி, குபேர லிங்கம், செல்வ முத்துக்குமரன், ஆஞ்சநேயர், நவ கிரகங்கள் உள்ளிட்டவையும் உள்ளன.

A Gude

கோவில் வரலாறு

கோவில் வரலாறு


குபேரர் சிவபெருமானின் மீது அதிக பக்தி கொண்டவர். குபேரரின் தவத்தைக் கண்டு சிவன் காட்சி தந்தார். சிவனுடன் அழகின் மொத்த உருவமாகக் காட்சியளித்த பார்வதியைக் கண்ட குபேரன் அழகில் மயங்கிப் போனார். இதனால் ஆத்திரமடைந்த பார்வதி குபேரனின் ஒரு கண்ணை வெடிக்கச் செய்தார். பின், அவர் மன்னிப்புக் கேட்க வெடித்த கண்ணுக்கு பதிலாகச் சிறிய கண்ணை வரமாக தந்தார் சிவபெருமான். அத்துடன், குபேரரின்தவத்தை பாராட்டி காவலர்களில் ஒருவராக சிவன் நியமித்தார். குபேரனை தன தானிய அதிபதியாக லட்சுமி தேவி நியமித்தார். அன்றுமுதல் இன்று வரை பயண்திற்கும், தானியத்திற்கும் காவலராக, வேண்டியோருக்குத் தரும் கடவுளாகக் குபேரன் உள்ளார்.

Braveman2

திருவிழா

திருவிழா


லட்சுமி குபேரர் கோவிலில் தீபாவளி தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதனைத் தவிர்த்து வைகுண்ட ஏகாதசி, அட்சய திருத்தினை, பௌர்ணமி, கார்த்திகை உள்ளிட்ட தினங்களில் இங்கு குபேரருக்கு சிறப்பு வழிபாடும், பிரார்த்தனையும் செய்யப்படுகிறது.

Destination8infinity

வழிபாடு

வழிபாடு


திருப்பதி செல்லும் முன் பக்தர்கள் இத்தலத்தில் உள்ள லட்சுமி குபேரருக்கு சிறப்பு அலங்காரம் செய்து புத்தாடைகள் சாற்றி வழிபடுகின்றனர். புது வீடு, நிலம், வாகனம் வாங்குவோர், அல்லது வாங்க திட்டமிடுவோர் முன்னதாக இக்கோவிலில் வேண்டுதல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

McKay Savage

எப்போது, எப்படிச் செல்வது ?

எப்போது, எப்படிச் செல்வது ?


நாட்டிலேயே லட்சுமி குபேரருக்கு என தனிக் கோவில் உள்ளது என்றால் அது சென்னை, வண்டலூருக்கு உட்பட்ட ரத்தினமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு லட்சுமி குபேரர் திருக்கோவில் தான். காலை 5.30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும். மாநகரத்தில் இருந்து தண்டலம், பெருங்களத்தூர் வழியாக சுமார் 44 கிலோ மீட்டரும், அல்லது நுங்கம்பாக்கம், கிண்டி, தாம்பரம் வழியாகவும் இக்கோவிலை அடையலாம். சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இத்தலத்தை அடைய பேருந்து வசதிகள் உள்ளது.

குபேரபுருஸ்வரர் திருக்கோவில்

குபேரபுருஸ்வரர் திருக்கோவில்


தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டப்படுவதற்கு முன்பே ஊர் எல்லைப் பகுதியில் ஒரு சிவன் கோவில் இருந்தது. இங்குள்ள இத்தல இறைவன் தஞ்சபுருஸ்வரர் என அழைக்கப்பட்டார். ராவணன், தான் பெற்ற தவத்தினைத் தொடர்ந்து குபேரனிடம் இருந்த செல்வத்தை பறித்துக் கொண்டான். இதனால் மனமுடைந்த குபேரர் சிவ தலங்கள் அனைத்திற்கும் சென்று வழிபட்டார். இறுதியில் தஞ்சாவூர் கோவிலுக்கு வந்து சிவபெருமானிடம் முறையிட்டார். செல்வமிழந்த குபேரருக்கு தஞ்சமளித்ததாலேயே இங்குள்ள இறைவன் தஞ்சபுரீஸ்வரர் என்ற பெயரைப் பெற்றதாக வரலாறு. இதனைக் குறிக்கும் வகையிலேயே சுவாமி சன்னதி முன்பு தூணில் குபேரன் அருள்பாலிக்கிறார்.

Ssriram mt

குபேரர் அமைப்பு

குபேரர் அமைப்பு


இத்தலத்தில் காட்சியளிக்கும் குபேரரின் அருகில் லட்சுமி அம்மையார், தனலட்சுமி ரூபத்திலும், தைரிய லட்சுமி வடிவிலும் அமர்ந்திருப்பர். செல்வத்தின் அடையாளமான தாமரையையும், சங்கையும் தன் கையில் ஏந்தியவாறு காட்சியளிக்கும் இத்தல குபேரரை வழிபட்டுச் செல்ல தொழில் விருத்தி அடைவது உறுதி.

Ssriram mt

திருவிழா

திருவிழா


அருள்மிகு குபேரபுரீஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி, திருவாதிரை, மார்கழி, பங்குனி உத்திரம், கார்த்திகை உள்ளிட்ட சிறப்பு தினங்களில் தீபாராதனை செய்து, தாமரை மலர் சூட்டி பூஜை செய்வது வழக்கம். இதனைக் காண கோடி பலன் கிட்டும்.

Hiroki Ogawa

வழிபாடு

வழிபாடு

வாரந்தோறும் வெள்ளிக் கிழமையன்று இத்தல இறைவனையும், குபேரரையும் வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவ்வாறு வேண்டிய காரியம் நிறைவேறியதும் மூலவருக்கு அபிஷேகம் செய்து, குபேரருக்கு மலர் சூட்டி பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.

Ssriram mt

எப்போது, எப்படிச் செல்ல வேண்டும் ?

எப்போது, எப்படிச் செல்ல வேண்டும் ?


அருள்மிகு குபேரபுரீஸ்வரர் கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோவில் நடை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து காந்திஜி சாலை வழியாகச் சென்று அங்கிருந்து கீழவாசல் சாலை- கொல்லுப்பேட்டை சாலை வழியாக சுமார் 2 கிலோ மீட்டர் பயணித்தாலே இத்தலத்தை அடைந்து விடலாம். ஆட்டோ அல்லது வாடகைக் கார்கள் மூலம் இக்கோவிலைச் சென்றடைவது எளியது.

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில்

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில்


ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு இடது புறம் jனி சன்னதியில் காமாட்சியம்மன் காட்சியளிக்கிறார். கோவில் முன் மண்டபத்தில் திருமணத் தடை, புத்திர தோஷம் நீக்கும் வரகுண கணபதி அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் அருகில் உள்ள குன்றின் மீது முருகப் பெருமானும், அறுபத்து மூவர், கன்னி மூல கணபதி, காசி விஷ்வநாதர் உள்ளிட்டோரும் காட்சியளிக்கின்றனர்.

mckaysavage

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு


இத்தலத்தில் உள்ள குபேர சிற்பம் தமிழகத்திலேயே அரியதாகக் கருதப்படுகிறது. குபேரர் தனது வாகனமான மீன் மீது அமர்ந்தபடி உள்ளார். இந்த அரியச் சிற்பம் இத்தலத்தில் மட்டும் 12 இடங்களில் காணப்படுவது மேலும் ஒரு சிறப்பு. இந்த சிற்பங்கள் அனைத்தும் 12 இராசிக்கும் உரியதாக உள்ளது. சிவபெருமான் ஜோதி லிங்கமாகக் காட்சியளிக்கும் இக்கோவிலில் 12 இராசிக்குரிய குபேரர்களையும் தசிரித்து செல்வச் செழிப்புமிக்க, கோடீஸ்வரராக அவதரிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.

Nandhinikandhasamy

திருவிழா

திருவிழா


ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் தைப்பூசத்தன்று 10 நாட்கள் திருவி பெகு விமர்சையாகக் கொண்டாடப்படும். ஆடி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கார்த்திகை, சித்திரா பவுர்ணமி உள்ளிட்ட விசேச நாட்களில் பல்வேறு சிறப்பு அலங்காரங்களுடன் மூலவருக்கு வழிபாடு நடத்தப்படும்.

Hiroki Ogawa

வழிபாடு

வழிபாடு


இக்கோவிலில் உள்ள குபேரர் சிற்பத்தை வணங்குவோருக்கு பண வரவு அதிகரிக்கும். துணைக்கு தங்க ஆபரணங்களை வாங்கி வழங்குவீர்கள். மேலும், குழந்தை வரம் கிடைப்பதோடு, இல்லறத்தில் நிலவி வந்த சங்கடங்கள் விலகும். இங்குள்ள ஈசன், நோய்கள் மற்றும் வழக்கு சிக்கல்களை தீர்க்கும் வல்லமை கொண்டவராக பக்தர்களால் போற்றப்படுகிறார். இவ்வாறு வேண்டிய காரியம் நிறைவேறியதும், பால், தயிர், எண்ணெய், இளநீர் கொண்டு மூலவர் மற்றும் அம்பாளுக்க அபிசேக பூஜை செய்து நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.

tshrinivasan

ராசி குபேரர்

ராசி குபேரர்


ஏகாம்பரேஸ்வரர் கோவில் முழுவதுமே அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் நிரம்பிய தூண்களைக் கொண்டுள்ளது. இத்தூண்களில் பன்னிரு இராசிகளுக்கும் உரிய குபேரர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு குபேரரும் முனின் மீது அமர்ந்தவாறு காட்சியளிக்கின்றனர். இதனைத் தவிர ராஜகோபுரத்தில் மகாழுபேரர் அருள்பாலிக்கிறார். இவ்வாறு ஒரு கோவிலில் 13 குபேரர்கள் தரிசனம் தருவது இக்கோவிலில் மட்டுமே. இல்லறத்தில் செல்வம் பெருக, கடன் பிரச்சனை தீர்ந்து, பொருட்செல்வம், அருட்செல்வமிக்கவராக உருவெடுக்க இத்தலத்தில் உள்ள குபேரருக்கு பூஜை செய்வது சிறப்பு

Ssriram mt

எப்போது, எப்படிச் செல்லாம் ?

எப்போது, எப்படிச் செல்லாம் ?


பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் கோவில். பெரம்பலூரில் இருந்து திருச்சி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் சிறுவச்சூர், கடந்து ஈரூர் முன்னதாக பாலதண்டாயுதபாணி சாலையில் பயணிக்க வேண்டும். அங்கிருந்து ஒரு சில கிலோ மீட்டர் பயணித்தால் செட்டிகுளத்தில் உள்ள இக்கோவிலை அடையலாம். பெரம்பலூர், செஞ்சேரி, கீழகனவாய் வழியாக பொம்மனபட்டி என 21 கிலோ மீட்டர் பயணம் செய்தாலும் இக்கோவிலை அடையலாம். காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இக்கோவிலின் நடை திறக்கப்பட்டிருக்கும். அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு சென்றால் தரிசனத்தைக் காணும் பாக்கியம் கிடைக்கும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X