» »குருப்பெயர்ச்சியில் தொழில் முன்னேற்றமில்லையா..? இதமட்டும் செஞ்சா நீங்க டாப்புதா..

குருப்பெயர்ச்சியில் தொழில் முன்னேற்றமில்லையா..? இதமட்டும் செஞ்சா நீங்க டாப்புதா..

Posted By: Sabarish

Rasnaboy

ஒவ்வொரு கோவிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு பெற்றதாகத்தான் உள்ளது. இந்தப் பூவுலகில் நம்மைச் சுற்றி எண்ணற்ற அதிசயங்கள் நடந்திருக்கின்றன. இன்றும் நடந்து கொண்டுதான் உள்ளது. ஆன்மீகம் ஆகட்டும், அமானுசியம் ஆகட்டும் நம்ப முடியாத, எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாத சிந்தனைக்கு அப்பாற்பட்ட எத்தனையோ விசயங்கள் இருக்கின்றன. இவ்வாறு, நம் தமிழகத்தில் நடைபெற்ற, தற்போதும் நடந்துவரும் ஒரு அதிசயக் கோவிலைப் பற்றிதான் இந்தக் கட்டுரை வாயிலாக நாம் பார்க்கப் போகிறோம்.

வினைதீர்க்கும் திருத்தலம்

வினைதீர்க்கும் திருத்தலம்

Ssriram mt

தென்னிந்தியாவில் உள்ள ஒவ்வொரு பழமையான கோவிலும் ஒரு தனிச்சிறப்பை பெற்றுள்ளது. பரிகாரக் கோவில்கள், நோய் தீர்க்கும் வழிபாடு, பாவம் நீக்கும் கடவுள் என நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். அவ்வாறாக கந்தர்வக் கோட்டை அருகே உள்ள ஒரு கோவில் தமிழகத்திலேயே தனிப் பெருமை பெற்றதாக உள்ளது.

தேவாரப் பாடல்பெற்ற சிவதலம்

தேவாரப் பாடல்பெற்ற சிவதலம்

Bernard Gagnon

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இக்கோவில் 98-ஆவது சிவத்தலமாகு உள்ளது. இங்கு ஆலகால நஞ்சை உண்டு தேவர்களை இறைவன் காத்தான் என்பது தொன்நம்பிக்கை. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்தியினை வணங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாழக்கிழமைகளில் இங்கு வந்து வழிபடுவது வழக்கம்.

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?

BishkekRocks

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஆலங்குடி தாலுகாவில் அமைந்துள்ளது அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில். புதுக்கோட்டையில் இருந்து சுமுர் 19 கிலோ மீட்டர் பேருந்து வாயிலாக பயணம் செய்தால் இந்தக் கோவிலை அடையலாம். நவக்கிரக ஸ்தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது. வடக்குத் திசை குருவிற்கு உரியது.

கோவில் தல வரலாறு

கோவில் தல வரலாறு

Rsmn

குரு தலமாக விளங்கும் ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் சோழ மன்னர்களால் சுமார் 1900 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு ஆபத்சகாயர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். இந்த தலத்தில் உள்ள அம்மையாரின் பெயர் ஏலவார்குழலி என்ற சுக்ரவார அம்பிகை ஆகும். மேலும், விசுவாமித்திரர், முசுகுந்தர், வீரபத்திரர் பூசித்த தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. அம்பிகை இத்தலத்தில் தோன்றித் தவம் செய்து இறைவனைத் திருமணம் புரிந்து கொண்ட தலம் என்று ஓர் கதையும் உள்ளது. தட்சிணாமூர்த்தி உற்சவராக தேரில் பவனி வருவது தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் என்பது இக்கோவிலின் மேலும் ஒரு சிறப்பு.

ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம்

ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம்

Ssriram mt

ஊரின் மையத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவில் ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துடன் காட்சியளிக்கின்றது. இக்கோவிலின் உள்ளே நுழைந்தால் முதலில் தெரிவது அம்மன் சன்னதி. அடுத்தாக சுவாமி சன்னதி. இதன் பிறகு குரு சன்னதி உள்ளது.

தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி

Wikipedia

ஆபத்சகாயர் என்றழைக்கப்படும் தட்சிணாமூர்த்தியின் சந்நிதி கிழக்கே நோக்கியவாறு உள்ளது. மூலவரான குரு தட்சிணாமூர்த்தி தெற்கு கோஷ்டத்திலுள்ளார். குருதட்சிணாமூர்த்தியின் வழிபாடு இக்கோவிலில் பிரசிதிபெற்றது என்பதால் இதைத் தட்சிணாமூர்த்தித் தலம் என போற்றப்படுகிறது.

அம்மை தழும்புகள்

அம்மை தழும்புகள்

Ssriram mt

தட்சிணாமூர்த்தி சன்னதியையொட்டி, சுந்தரர் சிலை இருக்கிறது. இந்த சிலையை திருவாரூரில் இருந்து மறைத்து எடுத்து வந்த அர்ச்சகர், காவலர்களிடம் இருந்து தப்பிக்க தன் குழந்தைக்கு அம்மை போட்டுள்ளதாகவும், அதனால் துணியில் மூடி எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். பின் ஆலங்குடி வந்து பார்த்த போது அம்மனின் சிலைக்கே அம்மை போட்டிருந்ததாக கூறப்படுகிறது. இப்போதும் இங்குள்ள சுந்தரர் சிலையில் அம்மைத் தழும்புகள் இருப்பதைக் காணலாம்.

நாகதோஷம் நீக்கும் ஆபத்சகாயர்

நாகதோஷம் நீக்கும் ஆபத்சகாயர்

Ravn - EN.Wikipedia

ஆபத்சகாயேஸ்வரர் கோவில் இப்பகுதியில் தோஷம் நீக்கும் கோவிலாகவும் போற்றப்படுகிறது. குறிப்பாக, நாகதோஷம் உடையோர் இக்கோவிலுக்கு வந்து இங்குள்ள விநாயகரை வேண்டிச் சென்றால் தோஷம் நீங்கும் என்பது தொன்நம்பிக்கை. மேலும், திருமணத்தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்டவற்றிலும் இக்கோவில் புகழ்பெற்றது. வேண்டிய காரியம் நிறைவேறியதும் இறைவனுக்கு சிறப்பு பூஜை செய்து படையலிடுவதை இங்கு வருவோர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

மாசிச் சிறப்பு

மாசிச் சிறப்பு

Ssriram mt

இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத வியாழக்கிழமையில் மட்டுமே குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதில் பங்கேற்று வழிபடுவதன் மூலம் குரு பலம் இருப்பவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீண்டகாலம் நிலைத்திருக்கும் என தொன்நம்பிக்கை உள்ளது.

தோஷம் நீக்கும் நெய் தீபம்

தோஷம் நீக்கும் நெய் தீபம்

Sreekumar K. S.

குருப் பெயர்ச்சியில் நல்ல திசை நடந்தாலும் வாழ்வில் முன்னேற்றமில்லையா..? அப்படியானால் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். தட்சிணாமூர்த்தியை 24 முறை சுற்றிவந்த பின் நெய் தீபங்கள் ஏற்றி வழிபடுவதன் மூலம் தோஷங்கள் நீங்கி நன்மை விளையும். மேலும், முல்லைப் பூ அர்ச்சனை, சர்க்கரைப் பொங்கல் அன்னதானம் மற்றும் பாலாபிஷேகம் செய்ய சகல தோஷங்களும் நிவர்த்தியாகி குரு பகவானின் அருள் பெருகும். மேலும், குருப் பெயர்ச்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கப்பெற்று தொழில், கல்வி ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படும்.

எந்தக் கால வழிபாடு சிறந்தது ?

எந்தக் கால வழிபாடு சிறந்தது ?

Mai-Linh Doan

ஒவ்வொர வாரமும் வியாழக்கிழமை மற்றும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களிலும் குரு பகவானை வழிபடுவது சிறந்தது. காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.

எப்படிச் செல்லலாம் ?

எப்படிச் செல்லலாம் ?

Map

சென்னையில் இருந்து 318 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆலங்குடியை சென்றடைய செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக உளுந்தூர்பேட்டையை அடைந்து விருதாச்சலம் வழியாக ஆலங்குடியை அடையலாம். அல்லது திண்டிவனத்தில் இருந்து பாண்டிச்சேரி வழியாக கும்பகோணம் வழியாகவும், உளுந்தூர்பேட்டையில் இருந்து அரியலூர், திருவையாறு வழியாகவும் ஆலங்குடியை அடையலாம். இந்த வழித்தடங்கள் பயண நேரத்தை மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில் வாயிலாக

ரயில் வாயிலாக

SnapMeUp

ஆலங்குடியை அடைய கும்பகோணம் முக்கிய ரயில் நிலையமாக உள்ளது. மற்றொரு ரயில் நிலையமான நீடாமங்கலம் ஆலங்குடியில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கும்பகோணம் அல்லது நீடாமங்கலத்தில் இருந்து பயணிகள் பேருந்து மற்றும் சிற்றுந்து வழியாக ஆலங்குடியை எளிதில் அடையலாம்.

ஆலங்குடி அருகிலுள்ள கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்கள்

ஆலங்குடி அருகிலுள்ள கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்கள்

Karthikeyan Raghuraman

குரு பகவானுக்கான நவக்ரஹ தலமான ஆலங்குடிக்கு மிக அருகில் ஏனைய எட்டு நவக்கிரக தலங்களான திருநள்ளாறு (சனி பகவான்), கஞ்சனூர் (சுக்கிரன்), சூரியனார் கோவில் (சூரியன்), திருவெண்காடு (புதன்), திருநாகேஸ்வரம் (ராகு), திங்களூர் (சந்திரன்), கீழ்பெரும்பள்ளம் (கேது) ஆகியவை அமைந்துள்ளன.

புதுக்கோட்டையைச் சுற்றி

புதுக்கோட்டையைச் சுற்றி

Thamizhpparithi Maari

ஆலங்குடி அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சுற்றிலும், சித்தன்னவாசல், அருங்காட்சியகம், திருமயம் கோட்டை, ராஜகோபால தொண்டைமான் மாளிகை என காண வேண்டிய இடங்கள் ஏராளமாக உள்ளது.

Read more about: travel, பயணம்