
தமிழகத்தில் அம்மன் வழிபாடு என்பது மிகவும் பரவலாக காணப்படும் சிறப்பு பெற்ற வழிபாடாகும். அதிலும், ஒவ்வொரு அம்மன் கோவில்களிலும் வித, விதமான வழிபாடுகள் நடத்தப்படும். குறிப்பாக பெண்கள் அதிகளவில் அம்மனை வழிபடுவது நாம் அறிந்ததே. ஓம் சக்தி பரா சக்தி என்ற முழக்கத்துடன் இந்த வழிபாடுகள் நடைபெறுகின்றன. சிவனிடம் இருந்து சக்தியை ஒரு போதும் பிரிக்க முடியாது. உலகமே சிவசக்தி மயமாக உள்ளது என்று நம் முன்னோர்கள் சொல்லி கேட்டிருப்போம்.

வழிபாட்டு முறைகள்
PC : Ramamanivannan
ஒவ்வொரு பகுதிகளிலும் விதவிதமான பூஜைகள் அம்மனுக்கு நடைபெறும். பூச்சட்டி, கிடா வெட்டு என இந்த வழிபாட்டு முறையானது விழக்காலங்களைப் போல நம் பகுதியில் கொண்டாடப்படும். வாரம் தவறாமல் பூஜை, வருடம் ஒரு முறை விழா என அம்மனை கொண்டாடுவதன் மூலம் வேண்டியது கிடைக்கும் என்ற தொன்நம்பிக்கை நம்மக்களிடையே பரவலாகக் காணப்படுகிறது.

அதிசய அம்மன்கள்
PC : Unknown
கண் திறக்கும் அம்மன், வியர்க்கும் அம்மன், அசையும் அம்மன் என தமிழகம் முழுவதும் பரவலாக உள்ள அம்மன் கோவில்களில் ஒரு சில கோவில்களில் நாம் கேள்விப்பட்டிருப்போம். அவ்வாறான ஓர் அதிசயத் தன்மை மிக்க அம்மனையும், அதுவுள்ள கோவிலைப் பற்றியும் தான் இந்நதக் கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம்.

பிரம்மராம்பிகை அம்மன்
PC : Karthik Easvur
தமிழகத்தில் மிகவும் பிரசிதிபெற்ற புண்ணிய மலை மீது உள்ள ஆலயத்தில் மூன்று பிரகாரங்கள் உள்ளன. இதில், விநாயகர், முருகர், காளி ஆகியோரை முதலாவதாகத் தரிசிக்கலாம். இரண்டாவதாக மல்லிகார்ஜூனரையும், பிரம்மராம்பிகை தாயார் என்றழைக்கப்படும் அம்மனையும் தரிசிக்கலாம். இதில் சிறப்பு என்னவென்றால், இரவு நேரத்தில் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காண முடியும்.

வளரும் அம்மன்
PC : Scottinglis.
அம்மன் கருவறையிலிருந்து பின்னோக்கி செல்லும் போது அம்மன் உயரமாகக் காட்சி தந்து நேரில் வருவதுபோலவே இருக்கும். இதன் அருகே உள்ள சிவ பெருமானுக்குக் கற்பூரம் ஏற்றிவிட்டு வெளியே நின்று கற்பூர ஒளியை பார்க்கும்போது அம்மனின் பின் சூலம், நாகம், உடுக்கை போன்ற பிம்பங்கள்
தோன்றி நம்மை வியப்படையச் செய்யும்.

எங்க இருக்கு தெரியுமா ?
PC : Arulghsr
அண்ணாமலையார் திருக்கோவிலுக்குப் புகழ்பெற்ற புனித நகரான திருவண்ணாமலையில் தான் இந்த சிவன் கோவில் அமைந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பர்வதமலை தான், ஈஸ்வரன் இமயத்தில் இருந்து தென்பகுதிக்கு வந்தபோது முதலாகக் காலடி வைத்த மலை என்கிறார்கள். மேலும், இப்பகுதி சித்தர்கள் வாழும் பகுதியாகவும் கூறப்படுகிறது.

வேறெங்கும் கிடைக்காத பாக்கியம்
PC : Arulghsr
தமிழகத்தில் வேறெந்த கோவிலும் கிடைக்காத பாக்கியம் பர்வதமலையில் உள்ள கோவிலில் கிடைக்கிறது. ஆம், இந்தக் கோவிலில் பக்தர்களே இறைவனுக்கு அபிஷேகம் செய்து கொள்ளலாம். மேலும், இந்த பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் உலகில் உள்ள அனைத்து சிவதலங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும் என தல புராண வரலாறு குறிப்பிடுகிறது.

சஞ்சீவியின் ஒரு பகுதி
PC : Arulghsr
ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து மூலிகைக்காக சஞ்சீவி மலையைத் தூக்கி வருகையில் விழுந்த ஒரு பகுதிதான் இந்த மலை என்று பரவலாக கருத்து நிலவிவருகிறது. காரணம், இந்த மலையில் காணப்படும் மூலிகைத் தண்மைக் கொண்ட செடிகளே. மொத்தம் ஏழு சடைப்பரிவுகளைக் கொண்ட இந்த மலைத் தொடர் எப்போதும் மூலிகைக் காற்று வீசி தீராத நோயும் தீர்க்கும் வல்லமை கொண்டுள்ளது.

நோய் தீர்க்கும் சுனைத் தீர்த்தம்
PC : Armanaziz
உடலில் ஏற்படும் எவ்விதமான நோயையும் தீர்க்கும் வல்லமை கொண்டதாக உள்ளது இங்குள்ள பாதாளச் சுனைத் தீர்த்தம். சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெப்பம் வாட்டும் போதும் இந்தச் சுனை அருகே குளிர்ந்த காற்றும், வற்றாத நீரும் மனதை மயக்கும். மேலும், பவுர்ணமி தினத்தில் இந்த மலையை ஒரு முறை சுற்றிவந்தால் கைலாயத்தையே சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது தொன்நம்பிக்கை.

ஒரு மலையில் இத்தனை புண்ணியத் தலமா ?
PC : Map
பர்வமலையில் உள்ள சிவன் கோவிலைச் சுற்றிலும் மல்லிகார்ஜூன சுவாமி கோவில், சத்தர் குகை, வீரபத்ரர் கோவில், ஆஞ்சநேயர் கோவில், வுதோபா ஆசிரமம் என புண்ணிய ஆன்மீகத் தலங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையாக இருப்பது இம்மலையின் மேலும் ஒரு சிறப்பம்சமாகும்.

எப்படி செல்லாம் ?
PC : Map
சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர், இராணிப்பேட்டை, ஆரணி வழியாக சுமார் 205 கிலோ மீட்டர் சாலை வழியாக பயணித்தால் பர்வதமலையை அடையலாம். அல்லது திருச்சி எக்ஸ்பிரஸ், எல்டிடி காரைக்கால் எக்ஸ்பிரஸ், மதுரை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் மூலமாகவும் எக்மோரில் இருந்து திருவண்ணாமலையை அடைந்து பின் பர்வதமலைக்கு பேருந்துகள் மூலம் செல்லாம்.

கோவை- பர்வதமலை
PC : Phil Servedio
கோவையில் இருந்து பர்வதமலைக்கு செல்ல திட்டமிடுவோர் திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக 313 கிலோ மீட்டர் சாலை வழியாக பயணித்தால் பர்வதமலையை அடையலாம். தன்பாத், சென்னை, சேரன் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலமும் திருவண்ணாமலையை அடையலாம். நகரின் முக்கியப் பகுதியில் இருந்து பர்வமலைக்கு பேருந்து சேவைகள் அதிகளவில் உள்ளன.

மறந்திடாதீங்க..!!
PC : Arulghsr
பர்வதலைக்கு வரத் திட்டமிடுவோர் தங்களுடன் தண்ணீர், உணவு, டார்ச் லைட், பூஜைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கி வருவது அவசியம். மலையேற துவங்கியது முதல் நீண்ட தண்ணீர் ஊற்றுக்கள் இல்லாததால் இவை முக்கியத்துவமாக இருக்கும். இரவு நேரத்தில் மலை ஏற திட்டமிட்டால் டார்ச் லைட் கொண்டு செல்ல வேண்டும்.