» »வெறும் மூன்றே நாள்களில் சென்னை முதல் குமரி வரையுள்ள டாப் 10 மிகப் பழமையான கோவில் சுற்றுலா... போலாமா?

வெறும் மூன்றே நாள்களில் சென்னை முதல் குமரி வரையுள்ள டாப் 10 மிகப் பழமையான கோவில் சுற்றுலா... போலாமா?

Written By: Udhaya

சென்னை டூ கன்னியாகுமரி டூர் போக உங்களில் பலருக்கு ஆசை இருக்கும். அதுவும் கட்டடக்கலை, தமிழரின் பண்பாடு முதலியவற்றில் அதிக ஈடுபாடு கொண்ட நீங்கள், தெரிந்து கொள்ளவேண்டியவை ஏராளம்.

விடுமுறையை பற்றி கவலைப் படாதீர்கள்.. வெறுமனே மூன்று நாள்களில் 10 மிகப்பழமையான, தமிழர்களின் கட்டடக்கலையை எடுத்துவிளக்கும், அடேங்கப்பா என உங்களை வாயைப் பிளக்கவைக்கும் அதிசய கோவில்களுக்கு அழைத்துச் செல்கிறோம் இந்த பதிவின் மூலம்....

வெறும் மூன்று நாள்களில் செல்வது என்பது உங்கள் நேர மேலாண்மையை பொறுத்தது. நீங்கள் குறைந்த பட்சமாக அனைத்து கோவில்களுக்கும் சென்று சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் பயணப்பட குறைந்த பட்சம் கொஞ்சம் ஓய்வு தேவை.. இதையெல்லாம் சேர்த்துதான் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. சரி போலாமா....

நாள் 1:

சென்னையிலிருந்து ஆரம்பிக்கலாம். காலை 10 மணிக்கு நீங்கள் சென்னையில் புறப்பட்டீர்கள் என்றால் கபாலீசுவரர் கோவில், காஞ்சி கைலாசநாதர் கோவில், மகாபலிபுரம் குகைக்கோயில் என முதல் நாளில் சுற்றிப்பார்த்துவிட்டு, திருவண்ணாமலை சென்று பின் ஓய்வு எடுக்கலாம்.

நாள் 2:

இரண்டாவது நாளில் அண்ணாமலையார் கோவில், பிரகதீசுவரர் கோவில், திருவானைகாவல் கோவில் என இவற்றை சுற்றிப்பார்க்க இரண்டாவது நாளை கழித்து பின் மதுரைக்கு சென்று ஓய்வு எடுக்கலாம்.

நாள் 3:

மூன்றாவது நாளில், மீனாட்சியம்மனை வழிபட்டு, ராமேஸ்வரம் பின் கன்னியாகுமரியில் நம் பயணத்தை நிறைவு செய்யலாம். சரி பயணத்தைத் தொடங்கலாமா?

கபாலீசுவரர் கோவில், சென்னை

கபாலீசுவரர் கோவில், சென்னை

நாள் 1

நேரம்: காலை 10 மணி

இடம்: கபாலீசுவரர் கோவில், சென்னை

சென்னையில் அமைந்துள்ள இந்த கோவில் கட்டப்பட்ட ஆண்டு 7ம் நூற்றாண்டு ஆகும். மிகவும் பழையான கோவிலின் கட்டடக்கலையை நீங்கள் கட்டாயம் காணவேண்டும்.

PC: Nsmohan

கோயில் முகப்பு

கோயில் முகப்பு

கபாலீசுவரர் கோவில் சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். அம்மனின் பெயர் கற்பகாம்பாள். இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில்

கட்டப்பட்டுள்ளது. மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது.

PC: Planemad

 அன்னை காளிகாம்பளுடன் கபாலீசுவரர்

அன்னை காளிகாம்பளுடன் கபாலீசுவரர்

இந்து புராணங்களின்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் பகுதியும் மயிலாப்பூர் என

வழங்குவதாகவும் கூறப்படுகிறது.

கபாலீசுவரர், கற்பகவல்லி இருவருக்கும் தனித்தனியான இரண்டு கோயில்களையும், பல்வேறு பரிவார மூர்த்திகளுக்கான கோயில்களையும் இக்கோயில் வளாகத்திலே காண முடியும்.

பிற்காலத் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக் கோயில், நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்கள், திருக்குளம் முதலியவற்றையும் கொண்டு

விளங்குகின்றது.

இங்கிருந்து காஞ்சிபுரம் மற்றும் மகாபலி புரம் ஆகியவை இரண்டும் சம தொலைவில் உள்ளது என்பதால் நீங்கள் உங்கள் விருப்பப்படி எதையேனும் தேர்ந்தெடுங்கள். நாம் காஞ்சி

கோவிலுக்கு செல்வதாகக் கொள்வோம்.

PC: Fbot

கைலாசநாதர் ஆலயம், காஞ்சிபுரம்

கைலாசநாதர் ஆலயம், காஞ்சிபுரம்

நாள் 1

இடம்: கைலாசநாதர் ஆலயம், காஞ்சிபுரம்

நேரம்: மதியம் 2 மணி

ஏறக்குறைய இரண்டரை மணி நேர பயணத்துக்குப் பிறகு, காஞ்சி கோவிலை அடைவோம்.

சென்னையில் இருந்து சுமார் 65 கிமீ தூரத்தில் அமைந்திருப்பதுதான் காஞ்சிபுரம், பல்லவ நாட்டின் பண்டைய தலைநகரம். இங்கே அமைந்துள்ள பல காலகட்டங்களையும் சேர்ந்த

கோயில்களில் சிறப்பு வாய்ந்த ஒன்று தான் கைலாசநாதர் கோயில். இதுவும் 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த கோவில் என்னும் பெருமைக்குரியது.

இது காஞ்சிபுரம் நகர மத்தியிலிருந்து ஏறத்தாழ ஒரு மைல் தூரத்தில் அமைந்துள்ளது. தென்திசைக் கைலாயம் என்றும் அழைக்கப்படுகின்ற இக்கோயில் தமிழ் கட்டிடக்கலையின் ஆரம்ப

காலகட்டத்துக்குரிய திருப்பு முனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.காஞ்சிபுரத்திலுள்ள மிக்க பழைமைமிக்க கோவில் கைலாசநாதர் கோவில் ஆகும்.

PC:Keshav Mukund Kandhadai

கோவிலின் அழகிய சிற்பக்கலை

கோவிலின் அழகிய சிற்பக்கலை

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் கி.பி 700 ஆம் ஆண்டளவில் இராஜசிம்மனால் கட்டத் தொடங்கப் பட்டது. பின்னர் அவரது மகனான மூன்றாம் மகேந்திரவர்மனே கட்டிடப் பணிகளை

முடித்து வைத்ததாக வரலாறு கூறுகிறது. பின்னரும் 14 ஆம் நூற்றாண்டளவில், விஜயநகரக் காலத்தில், சில பகுதிகள் சேர்க்கப்பட்டதுடன், திருத்த வேலைகளும் செய்யப் பட்டிருப்பதாக

அறியக் கூடியதாக உள்ளது.


PC: Mayooranathan

கோவிலில் உள்ள சிலை

கோவிலில் உள்ள சிலை


கோயில் விமானத்துடன் கூடிய கருவறையையும், அதற்கு முன்பக்கம் தூண்களுடன் கூடிய ஒரு மண்டபத்தையும் கொண்டிருந்தது. இவ்விரு கட்டிடங்களும் உயர்ந்த சுற்று மதிலால்

சூழப்பட்டிருந்தன. பல்லவர்களுடைய கட்டடக் கோயில்களிலேயே மிகவும் உன்னதச் சிறப்பும் எழிலும் வாய்ந்தது கைலாசநாதர் ஆலயம் ஆகும். பின்னர் மகாபலிபுரத்துக்கு

பயணிப்போம். உங்களுக்கு திருவண்ணாமலை போக விருப்பமெனில் பயண திட்டத்தை மாற்றியமைக்கவேண்டும்.

PC: Ssriram mt

குகைக்கோவில்கள், மகாபலிபுரம்

குகைக்கோவில்கள், மகாபலிபுரம்

நாள் : 1

இடம்: மகாபலிபுரம்

நேரம்: மாலை 5 மணி

கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் மணி நேரம் பிடிக்கும் மகாபலிபுர கோவிலுக்கு வந்து சேர. சரி கோவிலை சுற்றி பாக்கலாம்.

பல்லவநாட்டின் முக்கிய துறைமுக நகராக விளங்கியது இந்த மகாபலிபுரம். அல்லது மாமல்லபுரம். தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்துக்குட்பட்ட பகுதி இது, இங்கு கட்டப்பட்டுள்ள குகை

கோவில்கள் 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. மிகவும் பழமையான இந்த இடத்துக்கு கட்டாயம் ஒரு முறையாவது போகவேண்டும்.

PC: Yogabalaji

 மாமல்லபுரம் ரதம்

மாமல்லபுரம் ரதம்

குடைவரைக் கோயில்கள் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன்பின் உள்நோக்கிக் குடைந்து உருவாக்கப்படுகின்றன. இவற்றின் பின்புறச் சுவரில்

கருவறைகளும் அதற்குமுன்பாக அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகிய முன்னறைகளும் அமைந்துள்ளது. கட்டுமானத்தைத் தாங்கும் வகையில் தூண்கள் செதுக்கப்பட்டிருக்கும்.

இவ்வகைக் கோயில்களில் ஒரு கருவறை அல்லது மூன்று கருவறைகள் அல்லது ஐந்து கருவறைகள்கூட இருக்கலாம்.


PC: Jungpionier

மாமல்லபுரம் சுவர் சிற்பங்கள்

மாமல்லபுரம் சுவர் சிற்பங்கள்

மாமல்லபுரம் கோவில்கள் ஏழாம் நூற்றாண்டிலேயே கட்டப்பட்டது. பல்லவர்கள் ஆட்சிகாலத்தில் இது அவர்களின் முக்கிய நகராக விளங்கியது. சென்னையிலிருந்து 2 மணி நேரம்

தொலைவில் அமைந்துள்ள இந்த இடம் வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகும்.

PC: Ssriram mt

அண்ணாமலையார் கோவில், திருவண்ணாமலை

அண்ணாமலையார் கோவில், திருவண்ணாமலை

நாள் : 2

இடம்: அண்ணாமலையார் கோவில், திருவண்ணாமலை

நேரம்: காலை 9 மணி

காஞ்சிபுரத்திலிருந்து அண்ணாமலையார் கோவிலுக்கு வருவது எளிது. நீங்கள் மகாபலிபுரம் சென்றிருந்தால் கூடுதல் பயணிக்கவேண்டியிருக்கும். எனவே காஞ்சியிலிருந்து

திருவண்ணாமலை அறிவுறுத்தலுக்குரியது.

திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும்.

இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவர் என்றும், அம்பிகை உண்ணாமுலையால் என்றும் அழைக்கப்படுகிறார்.


PC: Adam63

ராஜகோபுரம்

ராஜகோபுரம்


திருவண்ணாமலையிலுள்ள மலையானது 260 கோடி ஆண்டுகள் பழமையானது என டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். சைவர்களின் நம்பிக்கைப் படி

இம்மலையானது கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், தற்போது நடைபெறும் கலி யுகத்தில் கல்

மலையாகவும் இருக்கிறது.

பால் பிரண்டன் எனும் ஆய்வாளார் மெசேஜ் பிரம் அருணாச்சலா எனும் நூலில் "லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி திருவண்ணாமலை" எனக் கூறியுள்ளார்.


PC: Govid Swamy

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

காஞ்சிபுரத்திலிருந்து திருவண்ணாமலை, சுமார் இரண்டரை மணி நேரத்தில் அடையும் தூரத்தில் உள்ளது. காஞ்சி கோவிலை வழிபட்டு பின்னர், அங்கிருந்து மகாபலிபுரம்

சென்றீர்களானால் மிகவும் காலதாமதம் ஏற்படும். எனினும் நேர மேலாண்மையை கடைபிடிக்கவேண்டும்.

PC: KARTY JazZ

பிரகதீசுவரர் கோவில், தஞ்சாவூர்

பிரகதீசுவரர் கோவில், தஞ்சாவூர்

நாள் : 2

இடம்: தஞ்சாவூர்

நேரம்: நண்பகல் 12 மணி

உலகப்புகழ் பெற்ற கோவில் இதுவாகும்.

PC: Nirinsanity

கோபுரம்

கோபுரம்

இந்த கோவிலின் கோபுரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. வெளிநாட்டுப் பயணிகள் அதிகம் வரும் கோவில்களுள் இதுவும் ஒன்றாகும்.

PC: KARTY JazZ

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

தஞ்சாவூரிலிருந்து 1 மணி நேர தூரத்தில் இருக்கும் இந்த கோவிலுக்கு விரைவில் வந்துவிடலாம். இக்கோவிலின் கட்டடக்கலை மிகவும் காணத்தக்கது.

PC: wikipedia

ஜம்புகேசுவரர் கோவில், திருவானைக்காவல்

ஜம்புகேசுவரர் கோவில், திருவானைக்காவல்

நாள் : 2

இடம்: திருச்சி

நேரம்: மாலை 4 மணி

திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் எனப்படும் திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். இதனை திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர்.

PC: Ssriram mt

 கோவிலின் கட்டடக்கலை

கோவிலின் கட்டடக்கலை

அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம் என்பர். இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 60வது சிவத்தலமாகும்.

PC: Hari Prasad Nadig

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

தஞ்சாவூரிலிருந்து மிகவும் அருகில் உள்ள இந்த இடம் போக்குவரத்துக்கு எளிதான வகையில் உள்ளது. தஞ்சையிலிருந்து 1.5 மணி நேரத்தில் சாலை மார்க்கமாக வந்தடையலாம்.

PC: llya Mauter

மீனாட்சியம்மன் கோவில், மதுரை

மீனாட்சியம்மன் கோவில், மதுரை

நாள் : 3

இடம்: மீனாட்சியம்மன் கோவில், மதுரை

நேரம்: காலை 9 மணி

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயிலே தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக் கோயிலாக உள்ளது. இத்தலத்தில் முதல் பூசை அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது.

PC: Jorge royan

கட்டடக்கலை

கட்டடக்கலை


2500 வருடங்கள் பழமையான மதுரை நகரானது தமிழ் இலக்கிய வரலாற்றிலும், இந்து சமய வரலாற்றிலும் முக்கியத்துவமானது. மதுரை நகரானது திருவாலவாய் ,சிவராஜ தானி, பூலோக கயிலாயம், கடம்ப வனம், நான்மாடக் கூடல், சிவ நகரம், துவாதசாந்தத் தலம், சமட்டி வித்தியாபுரம், கன்னியாபுரம் ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது.

PC: wikipedia

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

திருச்சி மற்றும் தஞ்சாவூரிலிருந்து தனித்தனியே வழிகள் இருந்தாலும், திருச்சியிலிருந்து வருவதற்கு எளிமையான வழிகள் உள்ளன. திருச்சியிலிருந்து 1.15 மணி நேரத்திலும், தஞ்சையிலிருந்து 2.30 மணி நேரத்திலும் மதுரையை அடையலாம்.

PC: Rengeshb

ராமநாதசுவாமிகோவில், ராமேசுவரம்

ராமநாதசுவாமிகோவில், ராமேசுவரம்

நாள் :3

இடம்: ராமநாதபுரம்

நேரம்:மதியம் 1 மணி

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. இக்கோயிலின் மூலவர் பெயர் ராமநாதசுவாமி, அம்மன் பெயர் பர்வத வர்த்தினி.


PC: Ssriram mt

கட்டடக்கலை

கட்டடக்கலை

ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணலால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இக்கோயில் மூலவருக்கு இராமநாத சுவாமி என்றும் ராமேஸ்வரம் என்று பெயர் ஆனது. இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி நாகநாதரை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என நம்புகின்றர்.


PC: Vensatry

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

மதுரையிலிருந்து 3 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தை அடையலாம். வேறு பல வழிகள் இருந்தாலும் மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு செல்லும் இந்த வழியே சிறந்தது. சில சமயங்களில் அரை மணி நேரம் தாமதமாகலாம். நேர மேலாண்மையே இதில் முக்கிய அம்சமாகும்.

PC: vinayaraj

நாகராஜா கோவில், நாகர்கோவில்

நாகராஜா கோவில், நாகர்கோவில்

நாகராஜா கோவில் என்பது கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலில் உள்ளது. இக்கோயிலின் பெயரிலேயே ஊர் நாகர்கோவில் என்றழைக்கப்படுகிறது. இது கேரள பாரம்பரியக் கோவில்

ஆகும். இங்கு மூலஸ்தானத்தில் ஐந்துதலை நாகராஜர் அருள்பாலிக்கிறார். இந்த கோவிலைச் சுற்றி ஏராளமான பாம்புச் சிலைகள் உள்ளன. பொதுமக்கள் ஆவணிமாதத்தில்

இச்சிலைகளுக்குப் பாலூற்றி அபிஷேகம் செய்வதை சிறப்பாகக் கருதுகின்றனர்.

PC: Infocaster

ரவிவர்மாவின் ஓவியம்

ரவிவர்மாவின் ஓவியம்

ரவி வர்மாவின் ஓவியம் இதுவாகும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியாத ஒரு பொக்கிஷமாக இது பாதுகாக்கப்படுகிறது.

PC: Raja ravi varma

எப்படி செல்வது

எப்படி செல்வது

மதுரையிலிருந்து 4 மணி நேர தூரத்திலும், ராமேசுவரத்திலிருந்து 5 மணிநேர தூரத்திலும் உள்ளது இந்த நாகராஜா கோவில். ரயில் நிலையத்திலிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள கோவிலுக்கு எளிதாக செல்லலாம்.

PC: Kkdrua

குமரியம்மன் கோவில், கன்னியாகுமரி

குமரியம்மன் கோவில், கன்னியாகுமரி

நாள் : 3

இடம்: கன்னியாகுமரி கடற்கரை

நேரம்: மாலை 4 மணி

குமரி அம்மன் அல்லது தேவி கன்னியாகுமரி அம்மன் ஆலயம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாகும். இங்குள்ள குமரிஅம்மன் "ஸ்ரீ

பகவதி அம்மன்" "துர்கா தேவி" எனவும் பெயர் பெற்றுள்ளார். இங்கு, குமரி அம்மன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாகக் கூறப்படுகிறது.

PC: Sankarrukku

குமரியம்மன்

குமரியம்மன்

பயணத்தின் முடிவாக குமரியம்மன் கோவிலுக்கு வந்து சேரலாம். இங்கு கோவில் மட்டுமின்றி சுற்றுலாவுக்காக பல இடங்கள் இருப்பதால் நீண்ட நேரம் இங்கு நம் பொழுதுபோக்கலாம்.

உங்கள் பயணத்தின் நேரத்தை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். மீண்டும் ஒரு பயண வழிகாட்டித் தொடரில் சந்திக்கலாம்.

PC: Parvathisri

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

உலகின் மிகப்பழமையான 10 கோயில்கள் - ஒரே பயணத்தில் எப்படி செல்லலாம்? என்பது பற்றியும், எந்தெந்த சாலைவழியாக சென்றால் சிறப்பானதாகவும், எளிமையானதாக இருக்கும், வழியில் இருக்கும் காணத்தக்க இடங்கள் குறித்தும் இந்த பதிவில் படியுங்கள்.