Search
  • Follow NativePlanet
Share
» »மத்திய பிரதேச மாநிலத்தின் இந்த 8 ஏரிகள் பற்றி தெரியுமா?

மத்திய பிரதேச மாநிலத்தின் இந்த 8 ஏரிகள் பற்றி தெரியுமா?

மத்திய பிரதேச மாநிலம் இந்தியாவின் நடுவில் இருப்பதாலேயே அந்த பெயரைப் பெற்றது அது மட்டுமில்லாது இந்த பகுதியில் ஏராளமான சுற்றுலாத் தளங்களும் காணப்படுகின்றன. அவற்றை காண்பதற்கென தனியாக ஒரு பத்து நாள் சுற்ற

By Udhaya

மத்திய பிரதேச மாநிலம் இந்தியாவின் நடுவில் இருப்பதாலேயே அந்த பெயரைப் பெற்றது அது மட்டுமில்லாது இந்த பகுதியில் ஏராளமான சுற்றுலாத் தளங்களும் காணப்படுகின்றன. அவற்றை காண்பதற்கென தனியாக ஒரு பத்து நாள் சுற்றுலாவே திட்டமிடலாம். அதிலும் முக்கியமாக இந்த மாநிலத்தின் ஏரிகள் மிகச் சிறப்பு வாய்ந்தவை. பாஸ் பகதூர், ரூப்மதி காதல் கதைக்காக உருவாக்கப்பட்ட ரேவா குந்த் ஏரி, அப்பர் லோயர் ஏரிகள் என வரலாற்று சம்பந்தமான நிறைய ஏரிகள் இந்த மாநிலத்தில் காணப்படுகின்றன. இந்த ஏரிகளைச் சுற்றி தொடர்ந்து பல ஆண்டுகளாக குடியிருப்புகள் உருவாகி நகரமாக தயார் ஆகியிருக்கிறது. இப்போது இந்த 8 ஏரிகளுக்கும் நாம் சுற்றுலா செல்லப்போகிறோம். வாருங்கள் சுற்றுலாவை தொடங்குவோம்.

 ரேவா குந்த்

ரேவா குந்த்

பாஸ் பகதூர் மற்றும் ரூப்மதியின் காதல் கதைக்காக உருவாக்கப் பட்ட மற்றுமொரு நினைவுச் சின்னம் தான் ரேவா குந்த் ஆகும். ரூப்மதி பெவிலியனுக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் பொருட்டாக பாஸ் பகதூர் உருவாக்கிய செயற்கை ஏரிதான் ரேவா குந்த்! இந்த ஏரி மத சார்புடையதாக இருப்பது இதன் மற்றுமொரு பெருமையாகும்.

இந்த பகுதியில் உள்ள மற்ற ஏரிகளைப் போல, இன்றும் புறக்கணிக்கப்படாமல் இந்த ஏரியைப் பாதுகாத்து வைத்திருக்கும் பெருமை மத நம்பிக்கையுடைய இந்துக்களையே சேரும். இந்த ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலப்போக்கில் கட்டிடங்கள் பலவும் எழுப்பப்பட்டுள்ளன.

இந்த ஏரியின் தென்-மேற்கு பகுதியில் காலப்போக்கில் விஸ்தரிக்கப்பட்டுள்ள, பல்வேறு வகையான தூண்கள் மற்றும் வளைவுகளை கொண்டுள்ள பெவிலியன் பகுதி இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் புனிதப் பயணிகளின் ஓய்விடமாக உள்ளது. இந்த ஏரியின் வடக்கு எல்லையில் பாஸ் பகதூர் மாளிகைக்கு தண்ணீர் சப்ளை செய்யும் தண்ணீர் தூக்கி ஒன்றும் உள்ளது. மண்டுவிற்கு சுற்றுலா வரும் போது ரேவா குந்த் வருவதும் உங்களுடைய பயண திட்டத்தில் இருக்கட்டும்.

Bernard Gagnon

லோவர் லேக்

லோவர் லேக்


அப்பர் லேக்-கிற்கு அருகில் உள்ள லோவர் லேக்கிலும் கமலா பார்க்கின் ஒரு பகுதி அமைந்துள்ளது. இந்த அழகிய ஏரி வாயைப் பிளக்க வைக்கும் அழகை கொண்ட இடமாகும்.

சாகசத்தை விரும்புபவர்கள் இந்த ஏரியில் சில நீர் சாகச விளையாட்டுக்களையும் விளையாட முடியும். அப்பர் லேக் பகுதியைப் போலவே, லோவர் லேக்கும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளிடம் புகழ் பெற்ற இடமாக உள்ளது. இந்த இரண்டு பெரும் ஏரிகளை கொண்டிருப்பதன் காரணமாகவே போபால் ஏரிகளின் நகரம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

எனினும், வெகு வேகமாக இந்த ஏரியைச் சுற்றிலும் உருவாகி வரும் மனிதகுல ஆக்கிரமிப்புகளால் இவற்றின் அழகு குலைந்து மற்றும் குறைந்த வருகிறது. மத்தியப் பிரதேச அரசு இந்த ஏரியின் அழகை மீட்டெடுக்க முயன்று வந்தாலும், அதற்கு உள்ளூர் மக்களின் ஆதரவு வேண்டும் என்பது நிதர்சன உண்மையாக உள்ளது.

Shivamdwivedi82

கோவிந்த்கர் ஏரி

கோவிந்த்கர் ஏரி

ரேவா மாவட்டத்தில் இருக்கும் புகழ்பெற்ற ஏரிகளில் கோவிந்த்கர் ஏரியும் ஒன்றாகும். கோவிந்த்கர் ஏரிக் கரையில் அமைந்திருக்கிறது அழகிய கோவிந்த்கர் அரண்மனை.

ஒரு அரண்மனை, அதனைச் சுற்றி அழகிய ஏரி, அமைதியான சூழ்நிலை என மனதிற்கு நிம்மதி தரும் அனைத்து அம்சங்களும் நிறைந்த இடம் கோவிந்த்கர் ஏரி. ரேவா நகரில் இருந்து 13 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த ஏரியின் அழகை ரசிக்க சுற்றுலாப் பயணிகள் பலர் இங்கு வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளை மேலும் கவர்ந்திழுக்கும் வகையில், பல சிறு தீவுகளை இந்த ஏரியில் அமைத்திருக்கின்றனர். இதுமட்டுமல்லாமல், பல இடங்களில் இருந்தும், பல்வேறு வகையான பறவைகள் இந்த ஏரிக்கு வருகின்றன. இந்தப் பறவைகளை கண்டு ரசிப்பதற்காகவே வரும் சுற்றுலாப் பயணிகள் பலர்.

Lala Deen Dayal

 ஹனுமான் தல்

ஹனுமான் தல்

ஜபல்பூரில் உள்ள ஹனுமான் தல், நகரத்திலிருந்து சில கி.மீ. தொலைவில் உள்ள ஒரு ஏரியாகும். இங்குள்ள மொத்தம் 52 ஏரிகளுள் பதிமூன்று ஏரிகள் ஏற்கெனவே வறண்டு போய் விட்டன. ஹனுமான் தல் ஏரி அரசாங்கத்தினால் மிக நன்றான பராமரிப்புடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரிகள் நகரமயமாதல் மற்றும் மக்கள் தொகைப் பெருக்கம் ஆகியவற்றின் தாக்கத்தால் மிகப் பெரும் அழிவை எதிர்கொண்டுள்ளன.

இயற்கையான அழகோடு கூடிய ஹனுமான் தல் அதன் பெயரே உணர்த்துவது போல் மத ரீதியிலான உணர்வுகளின் கூடாரமாகவும் விளங்குகிறது. ஹனுமான் இந்த இடத்தில் கால் பதித்தவுடன், இங்கு ஒரு நீர்நிலை தோன்றியதாகவும், அது ஒரு ஏரியாக உருவானதாகவும் கூறப்படுகிறது. அதிலிருந்து, இவ்விடம் ஹனுமான் தல் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

ஹனுமான் தல், ஏராளமான இந்து கோயில்கள் மற்றும் மசூதிகளால் சூழப்பட்டு, எப்போதும் மத ரீதியிலான லேசான பதட்டம் நிலவக்கூடிய ஒரு இடமாகத் திகழ்கிறது. பிரசித்தி பெற்ற பியோஹர் குடும்பத்தினர் ஹனுமான் தல்லின் கரையோரத்தில் உள்ள படித்துறைகளுள் ஒன்றினை நன்கொடையளித்து கட்டித் தந்துள்ளனர். ஜபல்பூர் செல்வோர், இந்த புகழ்பெற்ற ஏரிக்குச் சென்று வரும் நல்ல அனுபவத்தைத் தவற விட்டு விடாதீர்கள்.

Malaiya

மாதவ் சாகர் ஏரி

மாதவ் சாகர் ஏரி

சாக்யா சாகர் ஏரி மற்றும் மாதவ் சாகர் ஏரி எனப்படும் இரண்டு நீர்த்தேக்கங்களும் 1918ம் ஆண்டில் மேனியர் ஆற்றில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை மாதவ் தேசியப்பூங்காவிற்கு அருகிலேயே அமைந்துள்ளன. பூங்காவின் உயிரியல் சமநிலையை பேணுவதில் இந்த இரண்டு ஏரிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பறவைகள் மற்றும் ஊர்வன விலங்குகள் இணக்கமுடன் இந்த வனப்பகுதியில் உயிர் வாழ்வதற்கு இந்த ஏரிகள் அடிப்படை ஆதாரமாக திகழ்கின்றன. ‘செயிலிங் கிளப்' எனப்படும் படகுத்துறை ஒன்றும் சாக்யா சாகர் ஏரியில் அமைக்கப்பட்டிருக்கிறது. பயணிகள் படகுச்சவாரியில் ஈடுபடுதற்கான வசதிகள் இந்த படகுத்துறையில் செய்யப்பட்டிருக்கின்றன.

காட்டுயிர் ரசிகர்கள் மற்றும் புகைப்பட ஆர்வலர்கள் எதிர்பார்க்கும் எல்லா அம்சங்களும் இந்த ஏரிப்பகுதியில் நிரம்பியுள்ளன. படகில் பயணம் செய்தபடி சூரிய அஸ்தமனத்தை பார்த்து ரசிப்பது பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது. அதிகாலை நேரங்களில் பயணிகள் இங்கு உடும்பு, மலைப்பாம்பு மற்றும் சதுப்பு நில முதலை போன்றவற்றை பார்க்கவும் வாய்ப்புள்ளது.

LRBurdak

பரமேஸ்வர் தால்

பரமேஸ்வர் தால்

அற்புதமான சூழலில் அமைந்துள்ள அழகிய ஏரிதான் பரமேஸ்வர் தால்! வரலாற்றுச் சிறப்பு மிக்க சாந்தேரி நகரத்தில் இருந்து அரை மைல் தொலைவிலேயே இந்த ஏரி அமைந்துள்ளது. இந்த அழகிய கோட்டை புண்டேலா ராஜபுத்திர அரசர்களால் உருவாக்கப்பட்டதாகும். இந்த ஏரியின் கரையில் இந்து மத கடவுளான லட்சுமணருக்கான கோவில் ஒன்றும் கண்களைக் கவரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

சிறப்பாக செதுக்கப்பட்ட சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ள இந்த கோவில் கவர்ச்சியான கட்டிடக்கலையை உடைய இடமாகும். 18-ம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்டு வந்த புண்டேலா அரசர் அனிருத்தா சிங் என்பவரால் கட்டப்பட்ட இந்த கோவில் அக்காலத்தில் நிலவிய சிறப்பு மிக்க கட்டிடக்கலையின் சான்றாக உள்ளது. இந்த ஏரியின் கரைகளில் சில நினைவிடங்களும் உள்ளன.

இந்த நினைவிடங்கள் ராஜபுத்திர அரசர்களை கௌரவிக்கும் நோக்கில் கட்டப்பட்டுள்ளன. அழகு மற்றும் அமைதியால் காண்பவர்களை திணறடிக்கும் காட்சிகளைத் தரும் வகையில் இருக்கும் பரமேஸ்வர் தால் ஏரி நாடு முழுவதுமுள்ள சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் இடமாகும்.

 அப்பர் லேக் ஏரி

அப்பர் லேக் ஏரி

மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரிகளில் நம் நாட்டிலேயே மிகவும் பழமையான ஏரியாக அப்பர் லேக் ஏரி உள்ளது. 11-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்த ஏரி உள்ளூர் மக்களால் பாடா தலாப் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

கோலன்ஸ் நதிக்கரையின் மேல் மாபெரும் கரைகளுடன் உள்ள இந்த ஏரி இந்தியாவிலேயே மிகவும் அழகிய ஏரியாக அறியப்படுகிறது. புராணங்களில் போஜ ராஜனின் ஆணையால் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்த ஏரியின் தண்ணீர் போஜ ராஜனின் நோயைத் தீர்க்கவல்லதாக கருதப்பட்டதாகும். மிகவும் பரந்த பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏரி மிகப்பெரிய நீர்ப்பிடிப்பு பகுதியாகவும் உள்ளது.

அப்பர் லேக் ஏரியின் தண்ணீர் தான் போபால் நகர வீடுகளுக்கு குடிநீராக விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ஏரியை அழகுபடுத்தும் பொருட்டாக இங்கு உருவாக்கப்பட்டுள்ள கமலா பார்க், இப்பகுதியின் அழகை மேலும் கூட்டுவதாகவே உள்ளது


Sanyam Bahga

படையா குண்ட்

படையா குண்ட்


படையா குண்ட் என்றழைக்கப்படும் இந்த தீர்த்தம் மருத்துவ குணங்கள் நிறைந்த நீருற்றை கொண்டிருக்கிறது. குவாலியர் நகரத்திலிருந்து 112 கி.மீ தூரத்தில் உள்ள இந்த சுற்றுலாத்தலத்தில் மத்தியப்பிரதேச சுற்றுலா வளர்ச்சித்துறை பயணிகளுக்கு தேவையான எல்லா அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஷிவ்புரிக்கு வெகு அருகிலேயே இந்த படையா குண்ட் நீரூற்று அமைந்துள்ளது. இதில் வெளிப்படும் நீரில் கனிமங்கள் அதிக அளவில் நிரம்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது. புராதன மருத்துவ பாரம்பரியம் மற்றும் நவீன ஆவிக்குளியல் முறைகளில் இயற்கை நீரூற்றில் வெளிப்படும் நீருக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ரம்மியமான இயற்கை சூழலுடன் இந்த தீர்த்த ஸ்தலம் காட்சியளிக்கிறது. மழைக்காலத்தில் இந்த படையா குண்ட் தீர்த்தத்துக்கு விஜயம் செய்வது உகந்தது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X