» »அரசியல் சுற்றுப்பயணம் இருக்கட்டும் கமலின் இந்த பயணத்தை பாருங்க!

அரசியல் சுற்றுப்பயணம் இருக்கட்டும் கமலின் இந்த பயணத்தை பாருங்க!

Posted By: Udhaya

தமிழகம் முழுவதும் உள்ள மக்களின் மனநிலையை அறிந்து கொள்வதற்காக விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்த சுற்றுப்பயணம் குறித்து அவ்வப்போது தகவல்கள் வந்துகொண்டிருந்தாலும், கமல் தரப்பிலிருந்து, இந்த சுற்றுப்பயணத்துக்கு எங்கெல்லாம் செல்லவிருக்கிறார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதும் வரவில்லை. ஆனால், கமல் ஏற்கனவே சுற்றுப்பயணத்தைத் தொடங்கிவிட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்னது நமக்கு தெரியாமலா என்று அதிர்ச்சியடைய வேண்டாம். கமல் எங்கெல்லாம் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். என்ன நீங்க தயார்தானே?

சென்னை

சென்னை

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் கமல்ஹாசன் வீடு அமைந்துள்ளது நம்மில் பலருக்குத் தெரியும். சமீபத்தில், கமல் எண்ணூர் துறைமுகத்துக்கு அருகே பார்வையிட்டு, மீடியா கவனத்தை எண்ணூர் பக்கம் திருப்பினார். இதுமட்டுமல்லாமல், சென்னையில் பல இடங்களில் கமல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். 50 வருடங்களுக்கு மேலாகவே சென்னையை நன்கு அறிந்தவர் அவர். அவரின் பல படங்கள் சென்னையில் எடுக்கப்பட்டிருக்கிறது. மெரினா பீச் உள்ளிட்ட பல சுற்றுலாத் தளங்கள் இதில் அடக்கம்.

சென்னையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள

Sathyaprakash01

சுற்றியுள்ள சுற்றுலாத்தளங்கள்

சுற்றியுள்ள சுற்றுலாத்தளங்கள்


மெரினா பீச், தக்ஷிண்சித்ரா,பெசண்ட்நகர் பீச்,பிர்லா கோளரங்கம்,பார்த்தசாரதி கோயில், பல்வேறு மால்கள், வடபழனி முருகன் கோயில் உட்பட பல கோயில்கள், சாந்தோம் சர்ச் முதலிய நிறைய ஆலயங்கள் என சென்னையைச் சுற்றிலும் பல சுற்றுலாத்தளங்கள் அமைந்துள்ளன.

Irfanahmed605

சிதம்பரம்

சிதம்பரம்

கமல்ஹாசன் பத்துவேடங்களில் நடித்த தசாவதாரம் படத்தில், முக்கிய காட்சிகள் சிதம்பரத்தில் எடுக்கப்பட்டதாக வரும். அதில் வரும் அக்ரஹாரகாட்சிகள் படத்தின் போக்கை மாற்றும். தென்னாற்காடு மாவட்டம் என்ற பெயரில் முன்னர் அறியப்பட்ட - தற்போதைய கடலூர் மாவட்டத்தில் இந்த சிதம்பரம் எனும் பிரசித்தமான சோழர் கால கோயில் நகரம் வீற்றிருக்கிறது. இங்கு நிறைய சுற்றுலாத் தளங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் திராவிடபாணி கோயிற்கலை அம்சங்கள் நிரம்பிய கோயிலும் அதைச்சுற்றியுள்ள நகரமும் இப்படித்தான் இருக்கும் என்பதற்கான உதாரணமாக இந்த சிதம்பரம் நகரத்தை குறிப்பிடலாம்.

நடராஜர் கோயில் மட்டுமல்லாமல் இளமையாக்கினார் கோயில், தில்லைக்காளியம்மன் கோயில் போன்றவையும் சிதம்பரத்தில் அவசியம் தரிசிக்கவேண்டிய ஆன்மீக அம்சங்களாக அமைந்துள்ளன.

சிதம்பரம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள

Ryan

 சுற்றியுள்ள சுற்றுலாத்தளங்கள்

சுற்றியுள்ள சுற்றுலாத்தளங்கள்

சிதம்பரம் நகருக்கு அருகில் ராமலிங்க அடிகள் என்று அறியப்படும் வள்ளலார் அவதரித்த மருதூர் கிராமம் மற்றும் அவர் நிறுவிய சமர சன்மார்க்க சத்திய ஞானசபை அமைந்துள்ள வடலூர் நகரம் போன்றவை அமைந்துள்ளன. வடலூருக்கு அருகிலேயே இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரிச்சுரங்கம் அமைந்துள்ள நெய்வேலி நகரமும் அமைந்திருக்கிறது. சிதம்பரத்திற்கு வருகை தரும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் இந்நகரத்திற்கு அருகிலுள்ள சிவபுரி, திருநாரையூர், காட்டுமன்னார்கோயில், ஜயங்கொண்டசோழபுரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், திருவேட்களம், திருப்புன்கூர் போன்ற ஊர்களுக்கும் சிதம்பரத்தில் இருந்தபடி விஜயம் செய்யலாம். இந்த ஊர்களில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு அம்சத்தை விரும்புகின்றவர்கள் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள பிச்சாவரம் எனும் உப்பங்கழி வனப்பகுதிக்கு விஜயம் செய்து அங்குள்ள கால்வாய்களில் படகுச்சவாரியில் ஈடுபடலாம். இந்தியாவிலுள்ள உப்பங்கழி வனப்பகுதிகளில் இந்த பிச்சாவரம் சதுப்புநிலக்காடு முக்கியமான இயற்கை அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், வீராணம் ஏரி எனும் மிகப்பெரிய ஏரி ஒன்றும் சிதம்பரத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் மேற்கே உள்ளது.

VasuVR

மதுரை

மதுரை

விருமாண்டி படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் எடுக்கப்பட்டவையாகும். மதுரை இப்போதல்ல, சங்கம் வைத்து தமிழ் வளர்த்தபோதிலிருந்தே இயற்கை அழகுக்குப் பெயர் பெற்றதாகும். எண்ணற்ற பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட மதுரையில், மிக முக்கியமாக நாம் செல்லவேண்டியது மதுரை மீனாட்சியம்மன்கோயில் ஆகும். மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், கோரிப்பாளையம் தர்க்கா மற்றும் செயின் மேரி கதீட்ரல் தேவாலயம் போன்றவை இங்குள்ள முக்கியமான ஆன்மீக அம்சங்களாகும்.

மதுரையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள

Robert Montgomery Martin -

மதுரையைச் சுற்றியுள்ள சுற்றுலாத்தளங்கள்

மதுரையைச் சுற்றியுள்ள சுற்றுலாத்தளங்கள்

காந்தி மியூசியம், கூடல் அழகர் கோயில், காஜிமார் பெரிய மசூதி, திருமலை நாயக்கர் அரண்மனை, வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, அழகர் கோயில், வைகை அணை மற்றும் அதிசயம் தீம் பார்க் போன்றவை மதுரை பகுதியில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன.

KARTY JazZ

கொடைக்கானல்

கொடைக்கானல்

குணா படத்தின் கிளைமேக்ஸ் பகுதி படம்பிடிக்கப்பட்ட இடத்தைப் பற்றி பெரும்பாலும் நாம் அனைவரும் அறிந்திருப்போம். கொடைக்கானல் மலையில், ஒரு குகைக்கு குணா குகை என்றே பெயர் வைத்துவிட்டார்கள் என்றால், அந்த இ(ப)டம் எவ்வளவு தாக்கத்தை அளித்திருக்கும். கொடைக்கானல் மலையில் சுற்றுலா செல்ல யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. கொடைக்கானல் என்ற அழகிய ஓவியமான மலைவாழிடம் மேற்கு தொடர்ச்சி மலைகளிலுள்ள பழனி மலைத்தொடர்களில் அமைந்துள்ளது. எழில் கொஞ்சும் அழகுடன் மற்றும் புகழுடன் இருப்பதால் இந்நகரத்தை "மலைகளின் இளவரசி" என்றும் அனைவரும் அன்போடு அழைக்கிறார்கள். தமிழ் நாட்டிலுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மலைவாழிடம் கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் உயரத்தில் உள்ளது. கொடைக்கானல் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. முக்கியமாக புதிதாக திருமணமான தம்பதிகளால் விரும்பப்படுகிற இடம் இது

மேலும் தெரிந்து கொள்ள

Silvershocky

சுற்றியுள்ள சுற்றுலாத்தளங்கள்

சுற்றியுள்ள சுற்றுலாத்தளங்கள்

அடர்ந்த காட்டிற்குள் மரங்கள், பாறைகள் மற்றும் அருவிகளோடு இயற்கை அழகுடன் இருக்கும் கொடைக்கானல் கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டிய ஸ்தலம். கோக்கர்ஸ் வாக், பியர் ஷோலா நீர்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, கொடைக்கானல் ஏரி, தற்கொலை முனை, செண்பகனூர் அருங்காட்சியம், கொடைக்கானல் அறிவியல் வானாய்வகம், தூண் பாறைகள், குணா குகைகள், வெள்ளி நீர்வீழ்ச்சி, டால்பின் நோஸ் பாறை, குறிஞ்சி ஆண்டவர் கோயில், பேரிஜம் ஏரி போன்ற பல சுற்றுலாத் தலங்கள் கொடைக்கானலின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ளன.

Paulshaffne

 கெட்டி(ஊட்டி)

கெட்டி(ஊட்டி)

மூன்றாம் பிறை படம் இந்திய சினிமாவில் மிக முக்கியமான படம் என்றால் அதை மறுப்பவர்கள் மிகமிக குறைவு. அந்த அளவுக்கு அதன் தாக்கம் இன்றளவிலும் உள்ளது. அதிலும் ஊட்டி அருகே கெட்டி எனும் அற்புதமான இடத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியிருப்பார்கள் படக்குழுவினர். ஊட்டியைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். அந்த வகையில் கெட்டி எனும் கிராமம் மிகச்சிறந்த சுற்றுலாத் தளமாகும்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்தில் அமைந்துள்ளது இந்த கெட்டி. குன்னூரிலிருந்து ஊட்டி செல்லும்வழியில் இதனை காணமுடியும். இங்கு தமிழ் மக்களுடன், கேரளம், கர்நாடக மற்றும் இலங்கை தமிழ் மக்களும் வாழ்கின்றனர். ஆங்கிலம்,கன்னடம்,மலையாளம் மொழிகளைக்கூட இங்குள்ள பலர் அறிந்து வைத்துள்ளனர்.

இந்த பருவநிலைக்கு நீங்கள் சென்றுவருவதும் மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும். குளிர் அதிகம் இருப்பதால் அதற்குரிய ஏற்பாடுகளோடு பயணித்தல் நலம்.

ஊட்டி பற்றி மேலும் தெரிந்து கொள்ள

https://tamil.nativeplanet.com/ooty/

Prof. Mohamed Shareef

சுற்றியுள்ள சுற்றுலாத்தளங்கள்

சுற்றியுள்ள சுற்றுலாத்தளங்கள்

கெட்டிக்கு செல்லும் வழியில் குன்னூர், கோத்தகிரி, தொட்டபெட்டா,பைக்காரா, தாவரவியல் பூங்கா, ஊட்டி ஏரி,பனிச்சரிவு அவலாஞ்சி ஏரி என பல இடங்கள் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உள்ளன.

Unknown

திருநெல்வேலி

திருநெல்வேலி

வேட்டையாடுவிளையாடு படத்தில் கமல் திருநெல்வேலி மாநகர காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார். அந்த படத்தில் வரும் பார்த்த முதல் நாளே பாடலில் திருநெல்வேலியின் இரட்டைப் பாலம் இடம்பெறும். இது மிகவும் புகழ்பெற்ற பாலம் ஆகும். மேலும் இங்குள்ள நெல்லையப்பர் காந்திமதியம்பாள் கோயில் மிகவும் சக்திவாய்ந்ததாக நம்பப்படுகிறது.

மேலும் தெரிந்து கொள்ள

DrIrshath

 இரட்டைப் பாலம்

இரட்டைப் பாலம்


இந்தியாவிலேயே முதல் முதலாகக் கட்டப்பட்ட இரண்டடுக்குப் பாலம் இதுதான். நெல்லைச் சந்திப்பில் தண்டவாளத்தைக் குறுக்கே கடப்பதைத் தவிர்க்க இப்பாலம் கட்டப்பட்டது. இதன் நீளம் 800 மீட்டர் 25 குறுக்குத் தூண்கள் உள்ளன. இவற்றில் 13 தூண்கள் வில் வளைவாக 30.30 மீ அகலத்தில் உள்ளன. மற்ற 12 தூண்களும் 11.72 மீ அகலம் கொண்ட தாங்கிகள் ஆகும்

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகே எஸ்.என். ஐரோட்டில் இரட்டை அடுக்கு மேம்பாலம் இருக்கிறது. "திருவள்ளுவர்" பெயரை தாங்கியுள்ள இந்த மேம்பாலம் ஆசியாவிலேயே ரெயில் பாதையின் குறுக்கே அமைக்கப் பட்ட முதல் இரட்டை அடுக்கு மேம்பாலம் என்ற பெருமைக்குரிய சிறப்பை பெற்று விளங்குகிறது.

Rahuljeswin

 சுற்றியுள்ள சுற்றுலாத்தளங்கள்

சுற்றியுள்ள சுற்றுலாத்தளங்கள்


கப்பல் மாதா தேவாலயம், ஸ்ரீ அழகிய மன்னர் ராஜகோபாலசுவாமி திருக்கோவில், ஸ்ரீ வரதராஜபெருமாள் திருக்கோவில், மேல திருவேங்கடநாதபுரம் கோவில், கீழத் திருவேங்கடநாதபுரம் கோவில், கீழத் திருப்பதி போன்றவை இவ்விடததைச் சுற்றிலுமுள்ள இதர முக்கிய இடங்கள் ஆகும்.

Rahuljeswin

 கொடைக்கானல்

கொடைக்கானல்

தெனாலி படத்தில் வரும் ஒரு காட்சியில், மருத்துவரான ஜெயராம் குடும்பத்தினருடன் விடுமுறைக்காக கொடைக்கானல் சென்றிருப்பார்கள். சிகிச்சைக்காக வந்த கமல் ஜெயராமைத் தேடி ஊட்டிக்கே வந்துவிடுவார். அங்கு நடக்கும் கலகல ரக காட்சிகள் மிகவும் சிறப்பாக இருக்கும். அதுமட்டுமல்லாம், ஒளிப்பதிவாளர் பிரியனின் பிரேம் ஒவ்வொன்றும் கொடைக்கானலை நம் கண்முன் கொண்டுவந்து காட்டும். அப்படிபட்ட கொடைக்கானலில் சுற்றுலாத்தளங்கள் நிறைய உள்ளன. குழந்தைகளுடன் சுற்றுலா செல்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. மேலும், திருமணமான தம்பதிகள், காதல் இணைகள் அனைவரும் இங்கு வருகை தருகின்றனர்.

மேலும் தெரிந்து கொள்ள

Googlesuresh

தொப்பிதூக்கி பாறை

தொப்பிதூக்கி பாறை

தொப்பித் தூக்கி பாறை என்பது, கொடைக்கானல் மலையில் ஒரு இடம். இங்கு தொப்பியை தூக்கி எறிந்தால் காற்று மேலெழும்பி அதனை கொண்டுவந்துவிடும். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இடமாகும்.

Wikitom2

சுற்றியுள்ள சுற்றுலாத்தளங்கள்

சுற்றியுள்ள சுற்றுலாத்தளங்கள்

ஆண்டுதோறும் கோடை விழா கொண்டாப்பட்டு வருகிறது. பிரையண்ட் பூங்கா, டம் டம் நீர்வீழ்ச்சி, தொப்பிதூக்கி பாறை, பேரிஜம் லேக், வெள்ளிநீர் வீழ்ச்சி, கொடைக்கானல் ஏரி, குணாகுகை போன்றவை ரசிக்கும் பகுதிகளாக உள்ளன. அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி தண்டாயுதபாணி கோயில் உள்ளது.

Challiyan

அதிரப்பள்ளி

அதிரப்பள்ளி

புன்னகை மன்னன் படத்தில் கமல் - ரேகா காதல் பாடல் மற்றும் தற்கொலை காட்சிகள் இந்த அதிரப்பள்ளி அருவியில்தான் எடுக்கப்பட்டிருக்கும். பெயரைச் சொல்லும்போதே அதிரவைக்கும் ஒரு அசத்தல் நீர்வீழ்ச்சிதான் இந்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகி ஓடி வரும் சாலக்குடி ஆற்றின் பாதையில் இந்த அற்புத நீர்வீழ்ச்சி உருவாகியுள்ளது. பார்ப்பதற்கு நயாகராவின் குட்டி வடிவம் போன்றே காட்சியளிப்பதால் ‘இந்தியாவின் நயாகரா' எனும் விசேஷப்பெயரையும் இந்த நீர்வீழ்ச்சி பெற்றுள்ளது.

மேலும் தெரிந்து கொள்ள

Souradeep Ghosh

பாபநாசம்

பாபநாசம்

கமல் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான பாபநாசம் படம் முழுவதும் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தைச் சுற்றியே எடுத்திருப்பார்கள். சுஜித் வாசுதேவ் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவர். மிகவும் அழகான பாபநாசம் பகுதிகளை தன் கேமராவால் இன்னும் அழகாக காட்டியிருப்பார். அதுமட்டுமல்லாமல், பாபநாசத்தில் பல சுற்றுலா இடங்கள் பலருக்கும் தெரியாமல் உள்ளது. சில இடங்களுக்கு வனத்துறை அனுமதி பெறவேண்டியிருக்கும். இதன் அருகிலுள்ள பெரிய இடமாக அம்பாசமுத்திரம் அறியப்படுகிறது.

மேலும் தெரிந்து கொள்ள

Bastintonyroy.

பாபநாசம் சுற்றியுள்ள சுற்றுலாத்தளங்கள்

பாபநாசம் சுற்றியுள்ள சுற்றுலாத்தளங்கள்

இந்நகரம் மரத்தால் செதுக்கிய கைவினை பொருட்களுக்கு பெயர் போனது. பல கோயில்களையும் கிறிஸ்துவ தேவாலயங்களையும் கொண்டதாக விளங்குகிறது. இதில் புகழ் மிக்க கோவில்களாக இருப்பவை பாபநாசம் பாபனாசர் கோயில், மேலசேவல் நவநீதகிருஷ்ணன் கோயில், மேலசேவல் மேகலிங்கேஸ்வரர் கோயில் மற்றும் மேலசேவல் வேனுகோபாலசாமி கோயில் ஆகியவை. இருப்பினும் இங்குள்ள ஈர்ப்பு மிக்க இடமாக கருதுவது முண்டந்துறை-களக்காடு புலிகள் காப்பகம். தர்பார் என்னும் மரபுத் திருவிழா ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் கொண்டாடப்படும். இதை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இது போக பாபநாசம் அணை, அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அணை மற்றும் அருவி, காரையார் அணை, மாஞ்சோலை மலை மற்றும் விக்ரமசிங்கபுரம் என்று ஏராளமான சுற்றுலா தலங்களும் உள்ளன.

Bastintonyroy

பொள்ளாச்சி

பொள்ளாச்சி

சிங்காரவேலன் படத்தில் கமல் பொள்ளாச்சிகாரராக, விவசாயியாக வருவார். இன்னொரு சிறந்த படமான சதிலீலாவதியில் பொள்ளாச்சி பேச்சு வழக்கு அட்டகாசமாக பேசி நடித்திருப்பார். இந்த படங்களில் அதிகம் சுற்றுலாத் தளங்கள் காட்டப்படவில்லை என்றாலும், பொள்ளாச்சி சினிமா படப்பிடிப்பிற்கு நேந்துவிட்ட ஊர் என்றே சொல்லலாம். பொள்ளாச்சியில் படம்பிடிக்காத இயக்குனர்கள் இல்லை என்றே சொல்லலாம்.

பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள சுற்றுலாத்தளங்களாக பயணிகளை கவர்ந்திழுக்கும் பல அணைக்கட்டுகள் இங்கு உள்ளன. நீரார் அணை, ஆழியார் அணை, மீன்கார அணை, சோழியார் அணை, பெருவரிப்பள்ளம் அணை ஆகியன இங்குள்ள சில பிரபலமான அணைக்கட்டுகளாகும். இந்நகரில், ராமலிங்க சௌடேஷ்வரி அம்மன் கோயில், சுப்ரமண்யஸ்வாமி கோயில், மாசாணி அம்மன் திருக்கோயில், அழகுநாச்சி அம்மன் கோயில், திருமூர்த்தி கோயில், சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில், ஸ்ரீ வேலாயுதஸ்வாமி திருக்கோயில், ஈச்சநாரி விநாயகர் திருக்கோயில், அம்பரம்பாளையம் தர்க்கா மற்றும் அருள்மிகு பிரசாந்த விநாயகர் கோயில், போன்ற பல கோயில்களைக் காணலாம். இந்நகர், ஆழியார் சித்தாஷ்ரமம், ஆனைமலை வனவிலங்கு சரணாலையம், டாப் ஸ்லிப், வால்பாறை, மாசாணியம்மன் கோயில், அமராவதி அணை மற்றும் முதலை பூங்கா ஆகிய பல இடங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ளது.

மேலும் தெரிந்து கொள்ள

Dhandapanik

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்