Search
  • Follow NativePlanet
Share
» »தீபிகா உங்கள பத்து இடத்துக்கு கூட்டிட்டு போறாங்களாம்! ஏப்ரல் மாதம் ஜில் ஜில்லுனு பயணிங்க!

தீபிகா உங்கள பத்து இடத்துக்கு கூட்டிட்டு போறாங்களாம்! ஏப்ரல் மாதம் ஜில் ஜில்லுனு பயணிங்க!

ஏப்ரல் மாதத்தில் உல்லாசப் பயணமா? லீவு எங்க இருக்குனு கேக்கவேண்டாம்.. அதான் மூனாவது வாரத்துல முழுசா 5 நாள் லீவு வருதுல. சரியா திட்டத்த போட்டு ஒரு டூர் போய்ட்டு வந்துடலாம்ல..

உங்களுக்கு எங்க போகணும்னு தெரியலையா.. அப்ப நம்ம தீபிகா சொல்ற வழியில போகலாமே.. நானும் தீபிகாவோட டிராவல் பண்ணப்போறேன்.. அதுக்கு முன்னாடி இந்த பத்து இடங்களையும் பத்தி தெரிஞ்சிக்கலாம்.

ஹாய்.. பிரண்ட்ஸ் நான்தான் தீபிகா.. உங்களுக்கு ஏப்ரல் மாச வெய்யில்ல இருந்து விடுமுறை அளிக்க சூப்பரா பத்து இடத்துக்கு போகலாமா..

காங்க்டாக்

காங்க்டாக்

காங்க்டாக் நகரம் சிக்கிம் மாநிலத்திலுள்ள மிகப்பெரிய மலை நகரமாகும். கடல் மட்டத்திலிருந்து 1437 மீட்டர் உயரத்தில் இமாலயத்தின் கிழக்குப்பகுதி மலைகளான ஷிவாலிக் மலைத்தொடர்களில் இந்நகரம் வீற்றிருக்கிறது. சிக்கிம் மாநிலத்தில் சுற்றுலாப்பயணிகள் மிகவும் விரும்பி விஜயம் செய்யும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இது பிரசித்தி பெற்றுள்ளது.

எப்படி செல்வது

சாலை மற்றும் ரயில் போக்குவரத்தின் மூலம் மாநிலத்தின் மற்ற நகரங்களோடு நன்கு இணைக்கப்பட்டிருப்பதால் இது சுற்றுலாப்பயணிகளிடையே வெகு பிரசித்தமாக உள்ளது.

காணவேண்டிய இடங்கள்

* என்ச்சே மடாலயம்,

* நாதுல்லா பாஸ் (கணவாய்ப்பாதை),

* நம்கியால் இன்ஸ்டிடியூட் ஆஃப் திபெத்தாலஜி,

* டோ ட்ருல் சோர்ட்டென்,

* கணேஷ் தோக்,

* ஹனுமான் தோக்,

* ஒயிட் வால்,

* தி ரிட்ஜ் கார்டன்,

* ஹிமாலயன் ஜூ பார்க்,

* எம்.ஜி. மார்க்

* லால் பஜார்

* ரும்தெக் மடாலயம்

Subhrajyoti07

ஷிமோகா

ஷிமோகா

ஷிமோகாவுக்கு பயணம் செல்லலாம். அழகிய இயற்கை வனப்பை கண்டு களிக்கலாம்.

எங்குள்ளது

ஷிமோகா எனும் பெயருக்கு சிவனின் முகம் என்பது பொருளாகும் (ஷிவ்முகா). இந்நகரம் கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரிலிருந்து 275 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. மலநாடு பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த எழில் நகரம் மேற்குத்தொடர்ச்சியின் ஒரு அங்கமாகும்.

எப்படி செல்வது

சாலை மற்றும் ரயில் போக்குவரத்தின் மூலம் மாநிலத்தின் மற்ற நகரங்களோடு நன்கு இணைக்கப்பட்டிருப்பதால் இது சுற்றுலாப்பயணிகளிடையே வெகு பிரசித்தமாக உள்ளது.

காணவேண்டிய இடங்கள்

* மன்டகட்டே பறவைகள் சரணாலயம்

* குடவி பறவைகள் சரணாலயம்

* சாக்ரெட் ஹார்ட் கதீட்ரல்

* தியவரேகொப்பா ‘லயன் அன்ட் டைகர் சஃபாரி'

* சக்ரேபாயலு யானை முகாம்

* ஷராவதி பள்ளத்தாக்கு காட்டுயிர் சரணாலயம்

* ஷெட்டிஹல்லி காட்டுயிர் சரணாலயம்

* துங்கா டேம்

* ஷிவப்பநாய்க்கா பேலஸ் மியூசியம்

Debaditya 1

ஆலி

ஆலி

உலகம் முழுவதுமுள்ள சுற்றுலாப் பயணிகள் பனிச்சறுக்கு சாகசம் செய்து விளையாட ஏற்ற அழகிய சுற்றுலாத் தலம் ஆலி! கடல் மட்டத்திலிருந்து 2800 மீ உயரத்தில் உள்ள ஆலி, அங்குள்ள ஓக் மரங்களை கொண்ட சரிவுகள் மற்றும் பசுமையான ஊசியிலைக்காடுகளுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும்.

எப்படி அடைவது

ஆலியை சுற்றுலாப் பயணிகள் விமானம், இரயில் மற்றும் சாலை வழிகளில் எளிதாக அடைய முடியும். டேஹ்ராடூனில் இருக்கும் ஜாலி கிராண்ட் விமான நிலையம் மற்றும் ஹரித்துவார் இரயில் நிலையம் ஆகியவை ஆலிக்கு அருகில் இருக்கும் விமான மற்றும் இரயில் நிலையங்களாகும். மேலும் அருகிலுள்ள நகரங்களிலிருந்து தொடர்ச்சியான பேருந்து சேவைகளும் ஆலிக்கு இயக்கப்பட்டு வருகின்றன. பருவநிலை மிகவும் சாதகமாக இருக்கும் கோடைக்காலம் ஆலிக்கு சுற்றுலா வர சிறந்த காலமாகும்.

காணவேண்டிய இடங்கள்

* நந்தபிரயாகை

* குர்சோ புக்யால்

* ஆலி செயற்கை ஏரி

* திரிசூல் சிகரம்

* பவிஷ்யா பத்ரி

* செயில்தார் தபோவனம்

* பனிச்சறுக்கு

* மலையேற்றம்

Dinesh Valke

கோவா

கோவா

இந்தியாவின் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில், மதுவுண்ட மயக்கமா இல்லை கவின் கடல் கண்ட கிறக்கமா என்ற பாகுபாடில்லாமல் பதின் வயதினரும், பல்லாண்டு வாழ்ந்தவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்ற இடம் ஒன்று உண்டெனில் அது கண்டிப்பாக கோவாவாகத்தான் இருக்க முடியும். கோவா நகரம் போர்துகீசியர்களின் ஆளுகையின் கீழ் இருந்ததால் அதன் வாழ்வு முறையில் போர்த்துகீசிய பாதிப்பு பளிச்சென தெரிவதை இங்கு முதல் முதலாக வரும் பயணிகள் கட்டாயம் உணர்வார்கள்.

கோவாவில் அனுபவம்

கோவா சுற்றுலா வருபவர்கள் ஏதேனும் புத்தம் புதிய அனுபவத்தை பெற விரும்பினால், கடற்கரைகளில் ஒரு குடிலை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தங்கலாம். அப்படி தங்கும் பட்சத்தில் ஒரு சிறிய சாகச அனுபவம் உங்களை தீண்டுவது திண்ணம்.

கண்டிப்பாக காண வேண்டிய இடங்கள்

* சின்குவேரிம் பீச்

* வாஸ்கோடகாமா

* பெசிலிக்கா ஆஃப் பாம் ஜீசஸ்

* அஞ்சுனா பீச்

* செயின்ட் ஜெரோம் தேவாலயம்,மாபுஸா

* சப்போரா கோட்டை,வாகத்தோர் பீச்

*டிராக்கோல் கோட்டை,பேர்நெம்

* கிளப் மார்கரீட்டா,கோல்வா பீச்

* கஃபே டிட்டோஸ்,பாகா பீச்

Satyajit Nayak

சிரபுஞ்சி

சிரபுஞ்சி

அலை அலையாக மேடு பள்ளங்களுடன் காணப்படும் மலைகள், ஏராளமான நீர்வீழ்ச்சிகள், வங்கதேசத்தின் நீள அகலங்கள் நன்றாக துலங்கும் பூரண காட்சி, மற்றும் உள்ளூர் மலைஜாதியினரின் வாழ்க்கைமுறையை கண்ணுறும் வாய்ப்பு போன்றவை சிரபுஞ்சி பயணத்தை நம் நினைவில் நீங்கா இடம் பெறச் செய்யக்கூடியவையாகும்.

எப்படி செல்வது

ஷில்லாங்கிலிருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுற்றுலாத் தலமான சிரபுஞ்சிக்குச் செல்ல சுமார் 2 மணி நேரம் ஆகிறது. எல்லா நேரமும் கிடைக்கக்கூடிய தனியார் மற்றும் அரசு போக்குவரத்து வாகனங்களினால் ஷில்லாங் மற்றும் சிரபுஞ்சிக்கு இடைப்பட்ட சாலைப் போக்குவரத்து மிகவும் சிறப்பாக உள்ளது.

தவறவிடக்கூடாத இடங்கள்

* நோகலிகை நீர்வீழ்ச்சி

* மௌஸ்மாய் குகை

* மௌஸ்மாய் நீர்வீழ்ச்சி

* தங்க்கரங் பூங்கா

* கைன்ரெம் நீர்வீழ்ச்சி

* நோங்சாவ்லியா

* ஈகோ பூங்கா

* கோ ரம்ஹா

JakilDedhia

ஷிவாலிக்

ஷிவாலிக்

காங்க்டாக் நகரம் சிக்கிம் மாநிலத்திலுள்ள மிகப்பெரிய மலை நகரமாகும். கடல் மட்டத்திலிருந்து 1437 மீட்டர் உயரத்தில் இமாலயத்தின் கிழக்குப்பகுதி மலைகளான ஷிவாலிக் மலைத்தொடர்களில் இந்நகரம் வீற்றிருக்கிறது. சிக்கிம் மாநிலத்தில் சுற்றுலாப்பயணிகள் மிகவும் விரும்பி விஜயம் செய்யும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இது பிரசித்தி பெற்றுள்ளது. என்ச்சே மடாலயம் 1840ம் ஆண்டில் இங்கு கட்டப்பட்டதிலிருந்து இது ஒரு முக்கியமான பௌத்த யாத்ரீக ஸ்தலமாக விளங்கி வந்திருக்கிறது.

கட்டாயம் காணவேண்டிய இடங்கள்

சிக்கிம் மாநிலத்தின் தலைநகராக விளங்குவதால் காங்க்டாக் நகரம் பல்வேறு சுவாரசியமான சுற்றுலா அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. என்ச்சே மடாலயம், நாதுல்லா பாஸ் (கணவாய்ப்பாதை), நம்கியால் இன்ஸ்டிடியூட் ஆஃப் திபெத்தாலஜி, டோ ட்ருல் சோர்ட்டென், கணேஷ் தோக், ஹனுமான் தோக், ஒயிட் வால், தி ரிட்ஜ் கார்டன், ஹிமாலயன் ஜூ பார்க், எம்.ஜி. மார்க் மற்றும் லால் பஜார் மற்றும் ரும்தெக் மடாலயம் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

Tarunsamanta

பந்திப்பூர்

பந்திப்பூர்

பந்திபூர் வனப்பாதுகாப்பு சரகம் இந்தியாவிலேயே பிரசித்தமான புலிகள் சரணாலயமாக அறியப்படுகிறது. இங்குள்ள புலிகளின் எண்ணிக்கை 70-க்கும் மேல் இருப்பதாக சொல்லப்படுகிறது. பந்திப்பூர் மைசூரிலிருந்து 80 கி.மீ தூரத்திலும் பெங்களூரிலிருந்து 220 கி.மீ தூரத்திலும் உள்ளது. இந்த இரு நகரங்களிலிருந்து வாகனங்கள் மூலம் பந்திபூருக்கு பயணம் மேற்கொள்ளலாம்.

பண்டிபூர், முதுமலை, வயநாட் ஆகிய இம்மூன்றும் சேர்ந்த வனப்பகுதி தென்னிந்தியாவிலேயே ஒரு மிகப்பெரிய காட்டுயிர் வனப்பிரதேசமாக அமைந்துள்ளது. இதில் உலகப்புகழ் பெற்ற ‘அமைதிப் பள்ளத்தாக்கு' அமைந்துள்ள நீலகிரி உயிரியல் பாதுகாப்புப்பகுதியும் அடங்கும்.

காட்டுப்பகுதியின் நிசப்தம் மற்றும் இயற்கை அழகு இவற்றோடு நீங்கள் ஒரு விடுமுறைக்காலத்தை கழிக்க விரும்பினால் அதற்கான சரியான தேர்வு இந்த பண்டிபூர் வனப்பகுதி என்பதில் ஐயமில்லை. தமிழ்நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவரும் இந்த புகழ் பெற்ற தென்னிந்திய வனப்பகுதிக்கு ஒரு முறையாவது செல்வது நன்று.

MohanKumarBS

தவாங்

தவாங்

இந்தியாவின் வடகிழக்குப்பகுதியின் உச்சியில் வீற்றிருக்கும் அருணாசலப்பிரதேச மாநிலத்தின் மேற்கு எல்லையில் இந்த தவாங் மாவட்டம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10,000 அடியில் கிறுகிறுக்க வைக்கும் உயரத்தில் இந்த தெய்வீக மலை எழிற்பிரதேசம் அமைந்திருக்கிறது. வடக்கில் திபெத்தையும், தென்மேற்கில் பூடானையும், மேற்கில் சேலா மலைத்தொடர்களையும், கிழக்கில் மேற்கு கேமேங் மலைகளையும் இது எல்லைகளாக கொண்டுள்ளது.

எப்படி செல்வது

நாட்டின் எல்லாப்பகுதிகளிலிருந்தும் அஸ்ஸாம் மாநிலத்தின் குவாஹாட்டி மற்றும் தேஜ்பூர் வழியாக தவாங் மலைநகரத்திற்கு பயணம் மேற்கொள்ளலாம். குவஹாட்டி வரையில் உள்நாட்டு விமான சேவைகள் உள்ளன. டெல்லியிலிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ், ஜெட் ஏர்வேஸ் மற்றும் சஹாரா ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் விமான சேவைகள் குவஹாட்டிக்கு தினசரி இயக்கப்படுகின்றன. இது தவிர குவஹாட்டி நகரத்துக்கு ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றும் இயக்கப்படுகிறது.

காணவேண்டிய இடங்கள்

* தவாங் மடாலயம்

* தவாங் வார் மெமோரியல்

* செலா பாஸ்

* கொர்சம் சோர்ட்டென்

* பங்கங் டெங் ட்ஸோ ஏரி

* போங் போங் (நுராரங்க்) நீர்வீழ்ச்சி

* ரெக்யாலிங் மடாலயம்

* உர்ஜெல்லிங் மடாலயம்

Arushi

வாகமண்

வாகமண்

இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள ஒரு இயற்கை எழில் நிரம்பிய மலை வாசஸ்தலம் இந்த வாகமண் நகரமாகும். ஒரு சுவாரசியமான சுற்றுலாத்தலமான இது தேனிலவுப்பயணம் மேற்கொள்வோர் மற்றும் புகைப்பட கலைஞர்கள் மத்தியில் பிரசித்தமாக அறியப்படுகிறது.

பசுமையான சமவெளிப்பகுதிகள், வான்முட்டும் நீல மலைகள், வளைந்தோடும் ஆறுகள், பெருகி வழியும் நீர்வீழ்ச்சிகள், தூய்மை நிறைந்த குளுமையான காற்று மற்றும் அடர்ந்த பைன் மரக்காடுகள் போன்ற எழில் அம்சங்கள் இந்த வாகமண் மலைவாசஸ்தலத்தை பலரும் விரும்பும் சுற்றுலா பூமியாக மாற்றியுள்ளன.

கட்டாயம் காணவேண்டிய இடங்கள்

* தங்கல் பாறா

* முருகன் பாறா

* குரிசுமலா ஆஷ்ரம்

* குரிசுமலா

* சூசைட் பாயிண்ட்

* முண்டகாயம் காட்

* வாகமண் ஏரி

* வாகமண் நீர்வீழ்ச்சி

Sajetpa

ஊட்டி

ஊட்டி

தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில், நீலகிரி மலையின் மேல் உள்ள ஒரு அழகிய ஊர் ஊட்டி. உதகமண்டலம் என்ற பெயர், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுருங்கி ஊட்டி என்றானது. இந்த அழகிய மலைப்பிரதேசதிற்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். ஊட்டியைச் சுற்றிலும் அமைந்துள்ள 'புளூ மவுண்டைன்' எனப்படும் நீலகிரி மலையே ஊட்டிக்கு அழகு சேர்க்கிறது. நீலகிரி என்ற பெயருக்கு பல காரணக் கதைகள் உண்டு

கட்டாயம் காணவேண்டிய இடங்கள்

பொடானிக்கல் கார்டன் , தொட்டபெட்டா மலைச் சிகரம், ஊட்டி ஏரி, கல்ஹத்தி நீர்வீழ்ச்சி மற்றும் மலர் கண்காட்சி போன்ற காரணங்களால், உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மத்தியில், ஊட்டி மிகவும் பிரபலமாக உள்ளது.

Hemant meena

Read more about: gangtok
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X