Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்

இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்

இந்தியாவின் மார்ச் மாத கொண்டாட்டங்கள் மற்றும் திருவிழாக்கள்

இந்தியா கொண்டாட்டங்கள் நிறைந்த நாடு. ஒவ்வொரு மாதமும் மனம் மகிழும் அழகிய கொண்டாட்டங்களும் திருவிழாக்களும் நிறைந்தே கிடக்கின்றன இந்திய ஊர்கள் பல.. இவற்றையெல்லாம் உங்கள் வாழ்வில் அனுபவிக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்களாயின் நிச்சயமாக அதற்கு உங்களின் பயண ஆசையைத் தூண்டி விடவேண்டும்தானே..

வாருங்கள் எங்களுடன்.. பயணப்படுங்கள். இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பயணித்து ஒவ்வொரு கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கண்ணுக்கு நேரே காணுங்கள். கொண்டாடுங்கள். மகிழ்ந்திருங்கள்.

ஆசியாவில் மிகப் பெரிய திருவிழா

ஆசியாவில் மிகப் பெரிய திருவிழா

கலைத் திருவிழாவில் ஆசியாவிலேயே மிகப் பெரிய திருவிழா என்றால் கொச்சியில் நடக்கப்போகும் இந்த விழாதான்.

மேடைகள் அமைத்து அதில் பல்வேறு நாட்டிலிருந்து வந்தவர்களின் படைப்புகளை அலங்கரித்திருப்பார்கள். அரங்கம் நிறைந்திருக்கும் கூட்டம் அதை கண்டு படைப்பாளிகளின் திறனை கண்டு வியக்கிறார்கள்.

நீங்களும் செல்ல விரும்பினீர்களாயின் இதையும் தெரிந்து கொள்ளுங்கள்

எப்போதுவரை நடக்கிறது - மார்ச் 29 வரை நடக்கிறது

எங்கே நடக்கிறது - கேரள மாநிலம் கொச்சியில்

kochimuzirisbiennale

சர்வதேச யோகா கொண்டாட்டங்கள்

சர்வதேச யோகா கொண்டாட்டங்கள்

யோகா கொண்டாட்டம் எல்லா ஊர்களிலும் அதற்கேற்ற அமைப்புடன் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தாலும், இந்த வித்தியாசமான ஒரு இடத்தில் நடத்தப்படுவது மிகச் சிறப்பு.

இங்குள்ள யோகா பயிற்றுனர்கள் உங்களுக்கு யோக கலைகள் கற்றுத் தருவதுடன் உங்களின் பலத்தை அறிந்து கூறுகிறார்கள். அதுமட்டுமல்ல இங்கு 30 நாடுகளைச் சேர்ந்த 400க்கும் அதிகமான மக்கள் வருகை தருகிறார்கள்.

ஒருவேளை நீங்களும் கலந்து கொள்ள விரும்பினால் தெரிந்து கொள்ளுங்கள்

எப்போது நிகழ்கிறது - மார்ச் 1 முதல் 7 வரையிலான நாட்களில்

எங்கே நடக்கிறது - பர்மர்த் நிகேதன் ஆஸ்ரமம், ரிஷிகேஷ், உத்தரகண்ட் மாநிலம்

Yoga4love

சாப்சர் குட்

சாப்சர் குட்

அறுவடைத் திருவிழாக்கள் இந்தியா போன்ற உழவர் பெருமக்களின் நாட்டில் நிச்சயம் கொண்டாடப்படும் அழகிய திருவிழா ஆகும்.

சாதி மத வேறுபாடற்ற ஒரே திருவிழா அறுவடைத் திருவிழா ஆகும்.

மூங்கில் பயிர்களை அறுவடைச் செய்தபின்னர் அடுத்த அறுவடைக்காக வயல்களை கொளுத்துகிறார்கள்

அப்போது பாரம்பரியமான மூங்கில் கம்புகளைக் கொண்டு ஆடும் ஆட்டமும் நிகழ்கிறது

அழகிய பெண்களின் அசைவுகளுக்காக ஏங்கி இசைந்திடும் இசைக் கருவிகளின் ஏக்கங்களையும், அதைப் பார்த்து ஆசை வளர்த்துக்கொள்ளும் மூங்கில் கம்புகளின் நடனமும் கொண்டாடத் தூண்டும் உங்கள் கால்களும் இசையில் ஆடும்.

பல வகையான பழங்குடியினர் நடனங்கள் இந்த விழாவில் நடைபெறும். கண்டுகளிக்க விரும்புபவர்கள் இவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள்.

எப்போது நடக்கும் - மார்ச் முதல் வாரத்தில்

எங்கே - அஸ்சால், மிசோரம்

Ministry of Culture

கோவா கார்னிவல்

கோவா கார்னிவல்

18ம் நூற்றாண்டில் உள்ளூர் மக்களால் கொண்டாடப்பட்டு வந்த இந்த கார்னிவல் திருவிழா இன்றளவும் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

இது மாநில அரசு திருவிழாக ஆக்கப்பட்டு இப்போது கொண்டாடப்படுகிறது.

பெண்களின் நளினமும், ஆட்டமும், பாட்டமும், கொண்டாட்டமும், இசை மழையும், தாளங்களின் இடி ஒலியும் உங்களை மிதக்கச் செய்யும்.

நீங்களும் மெய் மறக்க ஆசைப் படுகிறீர்களா? அப்போ இதையும் தெரிஞ்சிக்கோங்க

எப்போது நடக்கும் - மார்ச் 2 முதல் 5ம் தேதி

எங்கே நடக்கும் - பனாஜி, மார்கோவ், வாஸ்கோ, மபுஸா

Andy Weisner

மகா சிவராத்ரி

மகா சிவராத்ரி

சிவபெருமானின் பக்தர்கள் சிவனுக்காக கொண்டாடும் ஒரே பெரிய விழா இது மட்டும்தான் என்பதாலும், இந்தியாவில் எல்லா பகுதி மக்களும் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் திருவிழா என்பதாலும் இது அதிக அளவு வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் இது இந்தியா முழுக்க பல்வேறு நகரங்களில் கொண்டாடப்படுகிறது.

பக்தர்கள் இரவில் கண் முழித்து இறைவனுக்காக பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர். இப்படி செய்தால் அவர்களின் பாவக் கணக்கு தீர்ந்து இறக்கும்போது நல்லபடியான மரணம் கிடைக்கும் என்பதும், வாழும்போது இறைவனின் அருள் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

எப்போது மார்ச் 4ம் தேதி

Nabin K. Sapkota

ஜெய்ப்பூர் சர்வதேச ஜாஸ் திருவிழா

ஜெய்ப்பூர் சர்வதேச ஜாஸ் திருவிழா

ராஜஸ்தான் சுற்றுலாவை அதிகப் படுத்தும் விதமாக
ஜெய்ப்பூர் சர்வதேச ஜாஸ் திருவிழா கொண்டாட முயற்சித்திருக்கிறார்கள்

உலகின் பல நாடுகளிலிருந்தும் இசை குழுக்கள் பங்கேற்கின்றன. இந்திய குழுக்களும் அதிக அளவில் பங்கேற்கவுள்ளன. இதனால் இசை கடலே உருவாகி ஆர்ப்பரிக்கும். சரி நீங்களும் அந்த கடலில் குளிக்க ஆசைப் படுறீங்களா?

அப்ப இத தெரிஞ்சிக்கோங்க

எப்போது 8-9 மார்ச்

எங்கே - ஜெய்ப்பூர் மத்திய பூங்கா, ராஜஸ்தான்

Tophotoproducciones

செட்டிக் குளங்கர பரணி

செட்டிக் குளங்கர பரணி

பகவதி அம்மனுக்கு விழா எடுத்து கொண்டாடப்படும் இந்த திருவிழா கேரளத்தின் முக்கிய விழாக்களுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

செட்டிக்குளங்கர பரணி திருவிழாவின் முக்கிய நிகழ்வான கேட்டுகாழ்ச்ச அலங்கரிக்கப்பட்டு நடைபெறும் விழாவை காண ஆவலாக இருக்கிறீர்களா?

அப்போது இதையும் தெரிந்துகொள்ளுங்கள்

எப்போது மார்ச் 11

எங்கே செட்டிக்குளங்கரை கோவில், மாவேலிக்கரை, ஆலப்புழா மாவட்டம், கேரளம்

Hellblazzer

பங்குனித் திருவிழா

பங்குனித் திருவிழா

பத்து நாள் நடைபெறும் இந்த கொண்டாட்டம் திருவாங்கூர் ராயல் குடும்பத்தினர் கொண்டாடி பின்னர் பொது மக்களிடையேயும் பிரசித்தி பெற்ற விழாவாகும்.

சங்கு முகம் கடற்கரையில் சிலைகளை மூழ்கி எடுக்கும் நிகழ்வுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது

எப்போது மார்ச் 14 முதல் 23 முடிய

எங்கே - அருள்மிகு பத்மநாபசுவாமி கோவில், திருவனந்தபுரம்

keralaculture.org

திருச்சூர் பூரம்

திருச்சூர் பூரம்

ஆரட்டுப்புழா பூரம் எனும் யானைகளை கொண்டாடும் திருவிழா திருச்சூர் மாநகரில் நடைபெறும் அழகிய சிறப்பு மிக்க திருவிழா ஆகும்.

60 யானைகள் புடைசூழ மக்கள் வெள்ளத்தில் மேள தாளங்கள் முழங்க இந்த திருவிழா மிகவும் சிறப்பாக இருக்கும்.

அந்த இடத்தில் நீங்கள் இருந்தால் உங்கள் இதயம் அதிர்ந்து உள்ளம் குளிர்ந்து மனமகிழ்வுடன் காணப்படுவீர்கள்.

மனமகிழ ஆசையா

அப்போ இதையும் தெரிந்துகொள்ளுங்கள்

எங்கே - ஆரட்டுப்புழா கோவில், திருச்சூர்

எப்போது - மார்ச் 19

Sivavkm

    Read more about: festivals of india
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X