Search
  • Follow NativePlanet
Share
» »காங்க்டாக்கிற்கு முதல் முறையா - இந்த பத்து விசயங்களையும் மறந்துடாதீங்க

காங்க்டாக்கிற்கு முதல் முறையா - இந்த பத்து விசயங்களையும் மறந்துடாதீங்க

By Udhaya

நீங்கள் ஒரு டிராவலராக இருந்தால், உங்களுக்கு என்னவெல்லாம் பிடிக்கும். ஒரு சுற்றுலாவின்போது நீங்கள் உங்களுக்கென தனியான ஒரு சில பழக்கங்களை ஏற்படுத்தி வைத்திருப்பீர்கள். சிலருக்கு மலைப்பகுதி என்றால் கொள்ளை பிரியம் இருக்கும். சிலருக்கு கடற்கரை சுற்றுலா என்றால் உயிரே விட்டுவிடுவார்கள். இன்னும் சிலருக்கு நகர வாழ்க்கை, ஷாப்பிங் மால்கள் தான் பிடிக்கும். இப்படி ஒவ்வொரு போதை உங்களை ஆட்கொள்ளும். இந்த மாதிரியான சுற்றுலாப் பிரியராக இருந்தால் உங்களுக்கு நிச்சயம் மது போதை தேவைப்படாது. அப்படி ஒரு இடம்தான் இந்த காங்டாக். வாங்க அந்த பத்து விசயங்களையும் பாக்கலாம்.

காங்க்டாக் எங்கே இருக்கு?

காங்க்டாக் எங்கே இருக்கு?

இந்திய திருநாட்டில், சிக்கிம் மாநிலத்தின் இமய மலைத் தொடரில் 5410 அடி உயரத்தில் அமைந்துள்ள கிட்டத்தட்ட 10 ஆயிரம் மக்களைக் கொண்ட ஒரு சிறிய நகரம் இந்த காங்க்டாக் ஆகும். இயற்கையிலேயே சுற்றுலா அம்சங்கள் நிறைந்த , பசுமை எழில் மிகுந்த, அள்ள அள்ள குறையாத வளங்களைக் கொண்ட அருமையான சுற்றுலாத் தளமாகும்.

மிக குளிரான பகுதி என்பதால், அதற்கு தகுந்தாற் போல தகவமைப்புகளுடன் செல்க.

Pratyusha kapavarapu

கேபிள் ரெய்டு

கேபிள் ரெய்டு

கேபிள் ரெய்டு கிட்டத்தட்ட ரோப் காரில் செல்வது மாதிரிதான் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. இந்த காரில் செல்லும்போது நமக்கு பறப்பது போல ஒரு எண்ணம் தோன்றும். மேலிருந்து பார்க்கும்போது நகரத்தின் கட்டிடங்கள் பெட்டி பெட்டியாக குட்டியாய் தெரியும். ஆங்காங்கே பச்சை புல்வெளிகள், மரங்கள், காடுகள் என தலையைக் காட்டும். அமேஸிங் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் ஒரு உணர்வை உங்களுக்கு அள்ளித் தரும். மறக்காம இந்த கேபிள் கார் ரைடு போவீங்க தானே.

நேரம் - காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை

கட்டணம் - பெரியவர்களுக்கு 110 ரூ, குழந்தைகளுக்கு 70ரூ (3 வயதுக்குட்பட்டவர்களுக்கு இலவசம்)

வீடியோ உபகரணங்களுக்கு தனியாக 100ரூ கட்டணம்

kalyan3

யாக் எனப்படும் எருமைமாட்டு பயணம்

யாக் எனப்படும் எருமைமாட்டு பயணம்

என்னடா இது எரும மாட்டுல என்ன பயணம் வேண்டிக் கெடக்குனுலாம் பயப்படாதீங்க. இது யாக் எனப்படும் மாடு வகையைச் சார்ந்த வேறொரு உயிரினம். காங்க்டாக் செல்பவர்கள் விரும்பி செல்வது இந்த பயணம், இதற்கென நன்கு பராமரிக்கப்பட்ட யாக் உயிரினங்களை அலங்கரித்து இருப்பதற்கு வசதியாக சில கட்டமைப்புகளைச் செய்து வைத்துள்ளனர். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த வகை பயணம் உங்களது சிக்கிம் பயணத்தில் நிச்சயம் முழுமையான அனுபவமாக அமையும்.

Dennis Jarvis

 சைக்கிளிங் மலையேற்றம்

சைக்கிளிங் மலையேற்றம்

சைக்கிளிங் செய்யவிரும்புபவர்களுக்கு காங்க்டாக் மிகச் சிறந்த இடமாகும். ஏனெனில் இங்கு கிடைக்கும் சைக்கிளிங் மலையேற்ற அனுபவம் நம் வாழ்க்கைக்கு மிக புத்துணர்ச்சியாக அமையும். இந்த இடங்களில் தனிமையில் சுற்றுலா செல்வது மனத் திடம் அதிகமானவர்களால் முடியும். தன்னம்பிக்கை குறைவானவர்கள் தவறாமல் இதுபோன்ற இடங்களுக்கு தனியாக பயணித்து போய் வாருங்கள்.

இங்கு சைக்கிளில் பயணிப்பதற்கென தனியாக பாதைகள் வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

காங்க்டாக் - போடோங் - ராங்க்ராங் - டிக்சு மகா - சிர்வானி - டெமி

காங்க்டாக் - ரும்டெக் - சங் - சிர்வானி - டெமி - நம்சி - ஜோர்தாங் - மெல்லி

காங்க்டாக் - ரும்டெக் - சங் - சிர்வானி - டெமி - நம்சி - நம்தாங் - ராங்க்போ

தீஸ்டா ஆற்றில் படகு சவாரி

தீஸ்டா ஆற்றில் படகு சவாரி

நீங்கள் நினைப்பது போல் இது சாதாரண படகு சவாரி அல்ல. சாகசங்கள் நிறைந்த சவாரி. உங்களை குதூகலிக்கச் செய்யும் சூப்பரான படகு சவாரியை தீஸ்டா ஆற்றில் நிகழ்த்தலாம்.

இதற்கென நான்கு நிலைகள் இருக்கின்றன. மிக சுலபம், சுலபம், சற்று கடினம் எனுமாறு நான்கு நிலைகள் இருக்கின்றன. தீஸ்டா ஆற்றில் உங்களுக்கு கிடைக்கும் அனுபவம் நிச்சயமாக நல்லதொரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். நிறைய நிறுவனங்கள் இதற்கான சேவையை வழங்குகின்றன. அவர்கள் தங்களுக்கென வழித்தடங்களை உருவாக்கி வைத்துள்ளனர்.

மாகா - ராங்க்போ

திக்சு - தீஸ்டா பாலம்

திக்சு - கலி ஜோஹ்ரா

போர்டாங்க் - மெல்லி

Spurkait

 பாராகிளைடிங்

பாராகிளைடிங்

பாராகிளைடிங்கில் பறந்து மலையின் உயரத்துக்கு மேல் சென்று அந்த நகரத்தை மட்டுமல்லாது அருகிலுள்ள மற்ற இடங்களையும் அதன் அழகையும் ரசிக்கலாம். .

பறப்பதை நினைத்து பயப்படவெல்லாம் வேணா.. அங்க இருக்குற எல்லா டிரெய்னர்ஸும் நல்ல அனுபவசாலிங்க.

சாதாரணமாகவே 1400 மீ அல்டிடுய்ட்ல பறக்குற ஒரு வாய்ப்பு பாலிமன் டாரால வழங்கப்படுது. இது 5 லிருந்து 10 நிமிடங்கள் வரை இருக்கும்.

இதைவிட உயரமான்னா 2200 மீ அல்டிடுய்ட்ல அரை மணி நேரம் பறக்குற வாய்ப்பு வழங்கப்படுது. இது ரெஸிதாங்க் கிராமத்துல நிகழ்த்தப்படுது.

இதுக்கு 2000ரூ ல இருந்து 5000 ரூ வரைக்கும் கட்டணமா வாங்குறாங்க.

ShreyasiD

ரெஸ்ட்டாரென்ட்களில் ருசிக்கலாம்

ரெஸ்ட்டாரென்ட்களில் ருசிக்கலாம்

இங்குள்ள சிறப்பான ரெஸ்ட்டாரென்ட்களில் கிடைக்கும் சுவை மிகுந்த உணவுகளை உண்டு மகிழலாம்.

காங்க்டாக்கின் நகரங்களில் இருக்கும் வீடுகளுக்கு இடையே சில சில ரெஸ்ட்டாரென்ட்களில் மிக அழகிய மற்றும் சுவையுடைய உணவுகளை உண்டு களிப்புறலாம்.

Piyush Tripathi

டாஷி காட்சி முனை

டாஷி காட்சி முனை

டாஷி காட்சி முனையில் அழகிய இமயத்தின் காட்சியை கண்டு மனம் குளிரவேண்டும். கஞ்சன்சுங்காவின் மெய் சிலிர்க்கும் காட்சி உங்களை மறந்து ரசிக்கும் வகை.

வட்டமான இந்த பகுதிக்கு நீங்கள் மலையிலிருந்து இன்னும் கொஞ்ச தூரம் ஏறவேண்டும். இங்கு இருக்கும் விடுதிகளில் நீங்கள் தங்கமுடியும். அவற்றில் ஒரே நேரத்தில் 20 பேர் வரை அதிகபட்சமாக தங்கலாம்.

காங்க்டாக் நகரத்துக்கு அருகில் 8 கி.மீ தூரத்தில் இந்த இந்த டாஷி வியூ பாயிண்ட் எனும் ரம்மியமான மலைக்காட்சி தளம் அமைந்திருக்கிறது. கஞ்சன் ஜங்கா சிகரத்தின் மெய்சிலிர்க்க வைக்கும் கம்பீரத்தை இங்கிருந்து தரிசிக்கலாம். ஒரு காட்சிக்கோபுரம் மற்றும் தேநீரகம் போன்றவையும் இங்கு பயணிகளுக்காக அமைக்கப்பட்டிருக்கின்றன. காங்க்டோக் பகுதியில் வீற்றிருக்கும் போடோங்க் மற்றும் லப்ரங் எனப்படும் அழகான மடாலயங்களையும் இந்த காட்சித்தளத்திலிருந்து பார்த்து ரசிக்கலாம். காலை நேரத்தில் இந்த மலைக்காட்சி தளத்திற்கு விஜயம் செய்வது சிறந்தது. இந்த இடத்திற்கு சற்று உயரத்தில் அமைந்துள்ள பூங்கா ஒன்றுக்கும் பயணிகள் செல்லலாம். இந்த பூங்காவிலுள்ள தேனீரகத்தில் டீ, காபி,மோமோ மற்றும் இதர தின்பண்டங்களை ருசித்தபடியே இயற்கையையும் ரசிக்கலாம்.

லால் பஜார்

லால் பஜார்

லால் பஜார் எனும் சந்தைப் பகுதியில் நீங்கள் பல பொருள்களை வாங்க முடியும். .

மாலை நேரங்களில் பொழுது போக்குவதற்கும் ஷாப்பிங் செய்வதற்கும் எம்.ஜி. மார்க் மிகவும் ஏற்றதாகும். இந்த சாலையின் இரண்டு புறமும் ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. இங்குள்ள டைட்டானிக் பார்க் எனும் தேநீர் விடுதியில் சுற்றுலாப்பயணிகள் இசையை ரசித்தபடியே தங்கள் துணையோடு பொழுதை கழிக்கலாம். வருடாந்திரமாக நடத்தப்படும் காங்க்டோக் உணவு மற்றும் கலைத்திருவிழா இந்த எம்.ஜி. மார்க் சாலைப்பகுதியில்தான் இடம்பெறுகிறது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் வகைவகையான சிக்கிம் உணவுப்பண்டங்களை இப்பகுதியில் சுவைத்து மகிழலாம். அச்சமயம் பல்வேறு சிக்கிம் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் இங்கு நடத்தப்படுகின்றன

PP Yoonus

பக்தங் நீர்வீழ்ச்சி

பக்தங் நீர்வீழ்ச்சி

பக்தங் எனும் இந்த ரம்மியமான நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடம் காங்க்டாக் நகருக்கு 20 கி.மீ முன்பாகவே உள்ளது. வடக்கு சிக்கிம் பகுதியை நோக்கி செல்லும் 31A தேசிய நெடுஞ்சாலையில் இது அமைந்திருக்கிறது. காங்க்டாக் பிரதேசத்தின் நீராதாரமாக விளங்கும் ராட்டே சு எனும் ஆற்றில் இந்த நீர்வீழ்ச்சி உருவாகிறது. இயற்கையை ரசித்தபடி ஓய்வெடுப்பதற்கும் புகைப்படங்கள் எடுப்பதற்கு இந்த இடம் பொருத்தமானதாக அமைந்திருக்கிறது.

Indrajit Das

நாது லா பாஸ்

நாது லா பாஸ்

நாது லா பாஸ் எனப்படும் இந்த கணவாய்ப்பாதை சிக்கிம் பகுதியையும் சீனாவின் திபெத் பிரதேசத்தையும் இணைக்கிறது. தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்த கணவாய்ப்பாதை கடல் மட்டத்திலிருந்து 4310 மீட்டர் உயரத்தில் காங்க்டாக் நகருக்கு கிழக்கே 54 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. புதன்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் காங்க்டாக் பகுதியிலிருந்து விசேஷ அனுமதி பெற்று இந்தியக்குடிமக்கள் மட்டுமே இக்கணவாய் பகுதிக்கு விஜயம் செய்யலாம். இங்கு ஒரு இந்திய போர் நினைவுச்சின்னமும் அமைந்துள்ளது. இந்த கணவாய்ப்பகுதியில் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் ஏதும் இல்லை. எல்லைப்பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் இரு நாட்டு ராணுவத்தினரை மட்டுமே இங்கு காண முடியும். பல இடங்களில் சரிவான பள்ளங்களைக்கொண்டுள்ள இந்த கணவாய்ப்பகுதியில் நிலச்சரிவும் அடிக்கடி ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

Ambuj.Saxena

Read more about: travel gangtok
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X