Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் இருக்கும் மிக குளிரான ஐந்து சுற்றுலாத்தலங்கள்

இந்தியாவில் இருக்கும் மிக குளிரான ஐந்து சுற்றுலாத்தலங்கள்

நம்மில் பலருக்கு மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்தாலே குளிர் தாங்காமல் மூன்று போர்வைகள் போர்த்திக்கொண்டுதூங்கிவிடுவோம். அதுவும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஊட்டிக்கோ, கொடைக்கானலுக்கு சென்றால் கேட்கவே தேவையில்லை கொஞ்சம் விட்டால் உறைந்தே போய்விடுவோம் என்ற அளவிற்கு குளிரால் நடுங்குவோம். ஆனாலும் அந்த குளிரிலும் நமது அன்பானவருடன் ஒரு கப் காப்பி குடிப்பதோ, மக்காசோள கருது வாங்கி சாப்பிட்டபடி கைகளை கோர்த்து இதமாக இனிமையாக ஏதேனும் ஒரு நல்ல சுற்றுலாத்தலத்தில் இருப்பதும் மிக மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும்.

இந்தியாவில் இருக்கும் மிக குளிரான ஐந்து சுற்றுலாத்தலங்கள்

அப்படி வரப்போகும் குளிர்காலத்தில் உங்கள் காதலருடனோ, காதல் மனைவியுடனோ எங்கேனும் குளிரான இடத்திற்கு சுற்றுலா சென்றால் எத்தனை அருமையாக இருக்கும். வாருங்கள் இந்தியாவில் இருக்கும் மிக குளிரானathe சமயம் அழகான சுற்றுலாதலங்கள் என்னென என்பதை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

டிராஸ், கார்கில்:

கார்கில் போரின் முதல் தாக்குதல் நடைபெற்ற இடம் இந்த டிராஸ் பகுதிதான். முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ரீநகர் - லெஹ் சாலையில் அமைந்திருக்கும் இந்த பகுதி போருக்கு பிறகு பெரும் மாற்றங்களை சந்தித்து மனிதர்கள் வசிக்காத பகுதிகளில் ஒன்றாக இருந்து இப்போது காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக மாறி உள்ளது.

இந்தியாவில் இருக்கும் மிக குளிரான ஐந்து சுற்றுலாத்தலங்கள்

Photo: ZeePack

உலகின் இரண்டாவது குளிரான இடம் என்று சொல்லப்படும் இந்த இடம் தான் லடாக் என்னும் சொர்கத்தின் நுழைவு வாயில் என்றும்சொல்லப்படுகிறது. இங்கே இமயமலையின் அற்புதமான காட்சிகளை கண்டு களிக்கலாம். இங்கிருந்து அமர்நாத், முஷ்குபள்ளத்தாக்கு, சுறு பள்ளத்தாக்கு போன்ற இடங்களுக்கு ட்ரெக்கிங் செல்லலாம். குளிர்காலத்தில் கடும் பனிப்பொழிவும், உரை ிலைக்கு கீழ் வெப்பநிலையும் இங்கே நிலவும்.

தவங்:

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய சீன திபெத்திய எல்லையில் சர்ச்சைக்குரிய அமைந்திருக்கிறது. இங்கே இருக்கும் தவங்புத்த மடாலயமானது உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகளையும் யாத்ரீகர்களையும் ஈர்க்கிறது. இந்த பகுதிக்குள் வ இந்திய அரசாங்கத்திடம் இருந்து சிறப்பு அனுமதி பெறவேண்டியதும் அவசியம்.

இந்தியாவில் இருக்கும் மிக குளிரான ஐந்து சுற்றுலாத்தலங்கள்

Photo: rajkumar1220

புத்த மடாலயம் தவிர அழகு பொருந்திய ஸிலா எரியும் இங்கே வரும் சுற்றுலாப்பயணிகளின் மனதை ஈர்க்கிறது. மைனஸ் டிகிரியில் குளிர்காற்று வீசும் போது இங்கே வந்து கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நிறைந்திருக்கும் வெண்மையை ரசித்திடுங்கள்.

குப்ரி:

கொட்டும் பணியில் சறுக்கி விளையாடவும்,யாக் மாட்டின் மீது அமர்ந்து சவாரி செய்யவும் ஆசையா உங்களுக்கு. அப்படி என்றால் நீங்கள் செல்லவேண்டிய இடம் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் இருக்கும் குப்ரி என்ற இடத்திற்கு தான்.

இந்தியாவில் இருக்கும் மிக குளிரான ஐந்து சுற்றுலாத்தலங்கள்

Photo: Travels Tips

அக்டோபர் மாதத்தில் இருந்துமார்ச் மாதம் வரை அதீத குளிர் நிலவும் இந்த பகுதியில் குளிர் காலங்களில் பனிபடர்ந்த மரங்கள்,இங்குள்ள வனவிலங்கு பூங்காவில் ஏராளமான விலங்குகள் போன்றவற்றை காணலாம். முக்கியமாக இங்கு நடத்தப்படும் குளிர்கால விளையாட்டுகளில் பங்குபெற்று கொண்டாடி மகிழுங்கள்.

இந்தியாவில் இருக்கும் மிக குளிரான ஐந்து சுற்றுலாத்தலங்கள்

Photo: anurag agnihotri

முன்சியரி:

இந்தியாவில் இருக்கும் மிக குளிரான ஐந்து சுற்றுலாத்தலங்கள்

Photo: Aditi

உத்ரகண்ட் மாநிலத்தில் ஹிமாலய மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்த முன்சியரி நகரம் ட்ரெக்கிங் செல்ல சிறந்த இடங்களில் ஒன்றாகும். வசந்த காலத்திலும் குளிர்காலத்திலும் இங்கு வரலாம். இந்த ஊரின் வழியாக தான் இந்தியாவிற்கும் திபெத்திற்கும் இடையேயான பழமை வாய்ந்த உப்பு வணிக பாதை அமைந்திருக்கிறது. அமைதியாக அற்புதமான குளிர்கால பனியை ரசிக்க விரும்புபவர்கள் நிச்சயம் இந்த முன்சியரிக்கு வர வேண்டும்.

லெஹ்:

இந்தியாவில் இருக்கும் மிக குளிரான ஐந்து சுற்றுலாத்தலங்கள்

Photo: rajkumar1220

மேலே குறிப்பிட்ட அனைத்து இடங்களை காட்டிலும் சிறந்த இடம் என்றால் அது இந்த லெஹ் தான். குளிர் காலத்தில் இங்கு 0* டிகிரி குளிர் நிலவும். இந்தியாவில் இருக்கும் சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக அறியப்படும் லெஹ் பகுதி குளிர்காலத்தில் எங்கெங்கு காணினும் பனியால் வெள்ளைபோர்வை போர்த்தியது போன்ற காட்சியை தருகிறது. அந்த காலங்களில் பனிப்பாலைவனம் போல காட்சி தரும் இந்த இடத்திற்கு வருவது புதுமையான அனுபவமாக அமையும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X