Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையிலிருந்து அயோத்திக்கு வெறும் ரூ.1622 இல் விமானத்தில் செல்லலாம் – ஸ்பைஸ்ஜெட்டின் அதிரடி சலுகை!

சென்னையிலிருந்து அயோத்திக்கு வெறும் ரூ.1622 இல் விமானத்தில் செல்லலாம் – ஸ்பைஸ்ஜெட்டின் அதிரடி சலுகை!

மிக கோலாகலமாக அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதை உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இந்துக்களும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். 500 ஆண்டுகளுக்கு பிறகு அயோத்திக்கு திரும்பிய ராமபிரானை காண நம் அனைவருக்குமே ஆசை இருக்கும். நம்மை போன்றவர்களுக்காகவே சென்னை விமான நிலையத்திலிருந்து அயோத்திக்கு ஒரு புதிய விமான சேவை பிப்ரவரி 2024 இல் புறப்பட உள்ளது. ஃப்ளைஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸின் இந்த புதிய விமானச் சேவையானது சென்னையிலிருந்து அயோத்திக்கு தினமும் செயல்படும், அதுவும் வெறும் வெறும் ரூ.1622 கட்டணத்தில் நீங்கள் பயணிக்கலாம்!

சென்னை to அயோத்தி விமான பயணம்

அயோத்தி ராமர் கோயில் ஜனவரி 22 இல் திறக்கப்பட்டுக் கோடான கோடி மக்கள் ராமர் திருவுருவ சிலையை பார்த்து மகிழ்ந்த நிலையில், நாட்டு மக்கள் அனைவருக்கும் குறைவான கட்டணத்தில் அயோத்தி ராமரின் நேரடி தரிசனம் பெறும் வாய்ப்பை ஸ்பைஸ்ஜெட் கொடுத்துள்ளது. அதன்படி சென்னை விமான நிலையத்திலிருந்து அயோத்தியின் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்திற்கு தினமும் விமான சேவைகள் வழங்கப்படவுள்ளது.

ayodhyatochennai1

கட்டணம் வெறும் ரூ.1622 மட்டுமே

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், அயோத்தியில் உள்ள ராமர் கோவில் 'பிரான் பிரதிஷ்டா' விழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. ஜனவரி 22 முதல் செப்டம்பர் 30, 2024 வரை பயணக் காலம் நீட்டிக்கப்படுவதோடு, ஜனவரி 22 முதல் 28 வரையிலான முன்பதிவுகளுக்கு இந்தச் சலுகை செல்லுபடியாகும். அதன்படி இந்த தேதிகளுக்குள் முன்பதிவு செய்பவர்கள் வெறும் ரூ.1622 கட்டணம் செலுத்தி சென்னையிலிருந்து அயோத்திக்கு விமானத்தில் பயணம் செய்யலாம்.

முக்கிய நகரங்களிலிருந்து அயோத்திக்கு விமான சேவை

இந்தச் சிறப்புச் சந்தர்ப்பத்தைக் குறிக்கும் விதமாகவும், விமான இணைப்பை மேலும் மேம்படுத்துவதற்காகவும், நாட்டின் முக்கிய நகரங்களை அயோத்தியுடன் இணைக்கும் புதிய விமானங்களைத் தொடங்குவதாக ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது. பிப்ரவரி 1 முதல், டெல்லி, அகமதாபாத், சென்னை, பெங்களூரு, ஜெய்ப்பூர், பாட்னா, தர்பங்கா மற்றும் மும்பைக்கு இடைநில்லா விமானங்களைத் தொடங்கும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ayodhyaflight1

இந்த விமான சலுகைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

1. முன்பதிவு காலம்: ஜனவரி 22 - 28, 2024

2. பயணக் காலம்: ஜனவரி 22 - செப்டம்பர் 30, 2024

3. குறிப்பிட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச, நேரடி ஒருவழி விமானங்களில் மட்டுமே விற்பனைச் சலுகை கிடைக்கும்.

4. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த சலுகையின் கீழ் வரையறுக்கப்பட்ட இருக்கைகள் கிடைக்கும்.

5. சேவர் கட்டணத்தில் மட்டுமே விற்பனைக் கட்டணம் பொருந்தும். சிறப்புக் கட்டணங்களில் விற்பனைச் சலுகை பொருந்தாது.

6. குழு முன்பதிவுகளுக்கு விற்பனை கட்டணம் பொருந்தாது.

7. விற்பனைக் கட்டணத்தின் கீழ் செய்யப்பட்ட முன்பதிவுகள் பொருந்தக்கூடிய ரத்துக் கட்டணங்களுடன் திரும்பப் பெறப்படும்.

8. இந்த சலுகையை வேறு எந்த சலுகையுடனும் இணைக்க முடியாது.

9. இணையதளம், எம்-சைட், மொபைல் ஆப்ஸ், முன்பதிவுகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயண முகவர்கள் உள்ளிட்ட ஸ்பைஸ்ஜெட் நெட்வொர்க் முழுவதும் விற்பனை கட்டணம் கிடைக்கும்.

வசதியான மற்றும் மலிவான பயணம் - ஸ்பைஸ்ஜெட்

சிறப்பு விற்பனையை துவக்கி வைத்து பேசிய ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி ஷில்பா பாட்டியா, அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோவிலில் வரலாற்று சிறப்புமிக்க 'பிரான் பிரதிஷ்தா' விழாவை சிறப்பு விற்பனையுடன் நினைவுகூர்வதில் ஸ்பைஸ்ஜெட் மகிழ்ச்சி அடைகிறது. நாங்கள் அயோத்தியை முக்கிய நகரங்களுடன் இணைத்து, எங்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்தும்போது, எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு வசதியான மற்றும் மலிவு பயண விருப்பங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று கூறினார்!

இந்த சலுகையை பயன்படுத்தி இப்போதே டிக்கெட் புக் செய்யுங்கள்!

More News

    Read more about: ayodhya ram mandir
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+