» »கண் கொள்ளா இயற்கை சூழ் மலைகளோட இருக்கும் மங்களூர் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?

கண் கொள்ளா இயற்கை சூழ் மலைகளோட இருக்கும் மங்களூர் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?

By: Bala Karthik

கடற்கரை வாழ்வாதாரத்தை கொண்ட மங்களூரு, அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடிய கடற்கரை மற்றும் குழப்பமான நகரமும் கூட. பெங்களூருவிலிருந்து 352 கிலோமீட்டர் தூரத்தில் காணப்படுகிறது இவ்விடம். தக்ஷினா கன்னட மாவட்டத்தின் பெரும் நகரமாக மங்களூரு காணப்படுகிறது. இந்தியாவில் காணப்படும் புறநகர் அல்லாத பெருநகரங்களுள் இதுவும் ஒன்றாகும்.

மங்கலதேவி ஆலயத்தின் முன்னணி தெய்வப்பெயரானது இவ்விடத்திற்கு வைக்கப்பட, கடம்பர்களால் மங்களூரு முதலில் ஆட்சி செய்யப்பட்டதாகவும், அதன்பின்னர் கேளடி நாயகர்கள், என இறுதியாக போர்த்துகீசியர்களின் கைகளுக்கும் சென்றது. கடைசியாக, மைசூரு மாநிலத்துடன் 1956ஆம் ஆண்டு மங்களூருவை இணைத்துக்கொள்ளப்பட்டது.

விஜயநகர ஆட்சியின்போது 1345ஆம் ஆண்டு முதலில் தோன்றியதாக தெரிகிறது. இந்த காலத்து பல கற் சிற்பங்களானது மங்களூரு முதல் மங்களபுரா வரை காணப்படுகிறது. அரபிக்கடலின் முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாகவும் இது காணப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி பணிகளில் மங்களூருவையும் ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்த முயற்சி செய்யப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், துளு மற்றும் கொங்கனி ஆகிய மொழிகளும் இங்கே பேசப்பட, மக்கள் ஆங்கிலத்தையும், ஹிந்தியையும் உணர்ந்தவாறு; நகரின் காஸ்மோ அதிர்வையும் கொண்டிருக்கிறது இவ்விடம்

மங்களூருவை நாம் காண சிறந்த நேரங்கள்:

மங்களூருவை நாம் காண சிறந்த நேரங்கள்:

நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்கால மாதங்கள் மங்களூருவை நாம் காண சிறந்த மாதங்களாக அமைகிறது. இதன் வெப்ப நிலையானது 20 டிகிரி செல்ஸியஸ் காட்டிலும் குறையவில்லை என்பதோடு ஈரப்பதத்தையும் குளிர்காலத்தில் கொண்டிருக்கிறது இவ்விடம்.

மார்ச் முதல் மே வரையிலான கோடைக்காலத்தில் பயமுறுத்தும் இவ்விடம், 32 டிகிரியைக்காட்டிலும் அதிகளவில் காணப்படவும்கூடும். பருவமழைக்காலத்தில் சற்று சமாளிக்கும் வகையில் அமைய, ஆனால் மழையோ நம்முடன் சேர்ந்து காட்சிகளை இரசித்த வண்ணமும் இருக்கக்கூடும்.

www.Flickr.com

மங்களூருவை நாம் அடைவது எப்படி?

மங்களூருவை நாம் அடைவது எப்படி?


ஆகாய மார்க்கமாக அடைவது எப்படி?

மங்களூருவில் விமான நிலையமானது காணப்படுகிறது. மங்களூரு சர்வதேச விமான நிலையமானது (விமான நிலையம்: IXE) பஜ்பே அருகில் காணப்பட நகரத்து மையத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் காணப்படுகிறது. கர்நாடகாவின் இரண்டாவது பெரிய விமான நிலையமும் இதுவேயாகும். பெங்களூருவிலிருந்து நேரடி விமானங்களும் காணப்படுகிறது. பெங்களூருவிலிருந்து மங்களூருவிற்கு செல்வதற்கான கால அவகாசமாக 50 நிமிடங்கள் நமக்கு தேவைப்படக்கூடும்.

இரயில் மார்க்கமாக செல்வது எப்படி?

1907ஆம் ஆண்டு மங்களூருவில் இரயில் நிலையமானது அமைக்கப்பட்டது. இங்கே இரண்டு இரயில் நிலையங்கள் காணப்பட - மங்களூரு சென்ட்ரல் மற்றும் மங்களூரு சந்திப்பு அவை என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவிலிருந்து 4 இரயில்கள் இயக்கப்படுகின்றன. பெங்களூருவிலிருந்து மங்களூருவை நாம் அடைவதற்கான சராசரி கால அவகாசமாக 17 மணி நேரங்கள் ஆகிறது.

சாலை மார்க்கமாக செல்வது எப்படி?

பெங்களூருவிலிருந்து மங்களூருவிற்கு செல்ல நமக்கு மூன்று வழிகள் காணப்படுகிறது.

வழி 1: பெங்களூரு - குனிகல் - சன்னராயப்பட்னா - சக்லேஷ்பூர் - மங்களூரு;

வழி: தேசிய நெடுஞ்சாலை 75;

தூரம்: 352 கிலோமீட்டர்;

நேரம்: 6 மணி நேரம் 36 நிமிடங்கள்.

வழி 2: பெங்களூரு - மாண்டியா - மடிக்கேரி - புத்தூர் - மங்களூரு;

வழி: தேசிய நெடுஞ்சாலை 275;

தூரம்: 401 கிலோமீட்டர்;

நேரம்: 8 மணி நேரம்.


வழி 3: பெங்களூரு - தும்கூரு - ஹிரியூர் - கடூர் - மங்களூரு

வழி: தேசிய நெடுஞ்சாலை 48 & தேசிய நெடுஞ்சாலை 73

தூரம்: 449 கிலோமீட்டர்;

நேரம்: 9 மணி நேரம் 9 நிமிடங்கள்.

முதலாம் வழியானது குறுகியதாக இருக்க, இலக்கை நாம் எட்டுவதற்கான நேரமும் குறைவாக தேவைப்படுவதால், முதலாம் வழியானது பரிந்துரை செய்யப்படுகிறது.

பெங்களூரு முதல் குனிகல் வரை:

பெங்களூரு முதல் குனிகல் வரை:

பெங்களூருவிலிருந்து குனிகலுக்கான தூரமாக 70 கிலோமீட்டர் காணப்பட, இவ்விடத்தை நாம் அடைய ஒன்றரை மணி நேரங்களானது தேவைப்படக்கூடும். குனிகலில் காணப்படும் சித்தலிங்கேஷ்வர ஆலயமானது மிகவும் பிரசித்திப்பெற்று காணப்பட, திராவிட கட்டிடக்கலை பாணியில் இது கட்டப்பட்டிருக்கிறது. இது உயரிய மரியாதைப்பாங்குடன் வீரசைவ ஆசிரியருக்கும், டோட்டாடா சித்தலிங்கா, மரோனஹல்லி அணைக்கு அர்ப்பணிக்கப்பட்டு சிம்ஷா நதியில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த அணையானது சித்தலிங்கேஷ்வர ஆலயத்தை நீரில் மூழ்காமல் காக்க உதவுகிறது. இவ்விடமானது சுற்றுலா வருபவர்களுக்கான மத்தியில் அமைந்திருக்கும் இடமாக கர்ஜணை பொங்கும் சிம்ஷா நதியில் அமைந்திருக்கிறது.

PC: Akshatha Inamdar

ஷ்ரவணபெலாகோலா:

ஷ்ரவணபெலாகோலா:

வழியில் காணப்படும் ஷ்ரவணபெலாகோலா - ஜெய்ன் மதம் சார்ந்த கொண்டாட வேண்டிய முக்கிய மத மையமாக காணப்படுகிறது. இங்கே காணப்படும் பாகுபலி சிலையானது 57 அடி உயரம் கொண்டிருக்க, உலகிலேயே உயரமான ஒற்றைக்கல் சிலையும் இதுவேயாகும்.

PC: Arpa Ghosh

சன்னராயப்பட்னா:

சன்னராயப்பட்னா:


குனிகலிலிருந்து சன்னராயப்பட்னாவிற்கு 80 கிலோமீட்டர் ஆக, ஒன்னே கால் மணி நேரமானது நமக்கு தேவைப்படுகிறது. இவ்விடமானது பெயர்பெற்ற ஆலயங்களான கட்டரமேஷ்வரா ஆலயம், சென்னாகேஷவா ஆலயம், சந்திரமௌலேஷ்வரா ஆலயம் மற்றும் ஜெயகொண்டேஷ்வர ஆலயங்களுக்கு புகழ்பெற்று விளங்குகிறது..

PC: Ycsanster

சக்லேஷ்பூர்:

சக்லேஷ்பூர்:

அடுத்ததாக வழியில் நாம் காண்பது சக்லேஷ்பூர் தான். சன்னராயப்பட்னாவிலிருந்து 80 கிலோமீட்டரில் இவ்விடம் காணப்பட, சாகச விரும்பிகளின் சொர்க்கமாக சக்லேஷ்பூர் காணப்படுகிறது. பசுமையான வழிகளும், ஜுனுக்கல் குட்டா பயணமும், மஞ்சேஹல்லி நீர்வீழ்ச்சியுமென நம் பயணத்தின் மீது காதலானது பெருகவும்கூடும் என்பதால், சக்லேஷ்பூர் அழகானது நம் மனதில் நீங்க இடத்தை பிடித்திடலாம். இங்கே காணப்படுபவன ஹொய்சாலா கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டிருக்க, சகலேஷ்வர ஆலயமானது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டும் காணப்படுகிறது.

இலக்கு – மங்களூரு:

இலக்கு – மங்களூரு:

சக்லேஷ்பூரிலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் மங்களூரு காணப்படுகிறது. இவ்விடத்தை நாம் அடைய 3 மணி நேரங்கள் நமக்கு தேவைப்படக்கூடும். தற்போது, மங்களூருவில் நாம் எங்கே போகலாம்? என்பதை இப்போது பார்க்கலாம் வாருங்கள்.

PC: Subharnab Majumdar

மங்களாதேவி ஆலயம்:

மங்களாதேவி ஆலயம்:

மங்களூருவின் போலரில் காணப்படும் இந்த ஆலயமானது பல்வேறு நம்பிக்கைகளை கொண்டிருக்கிறது. இந்த ஆலயத்தை ஆலுபா வம்சத்தின் குண்டவர்மன் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டியதாக சொல்லப்படுகிறது. மற்றுமோர் புராணமாக, பரசுராமரால் இந்த ஆலயமானது கட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இவ்வாலயமானது மலபார்/ கேரள கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டிருக்க; இந்த ஆலயத்தின் அமைப்பு மரத்தால் காணப்படுகிறது. இந்த ஆலயமானது மங்களாதேவிக்கு அர்ப்பணிக்கப்பட, இவர் புத்த மதத்தின் வஜ்ராயனா பிரிவை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

PC: Subharnab Majumdar

பனம்பூர் கடற்கரை:

பனம்பூர் கடற்கரை:

மங்களூருவின் பனம்பூர் கடற்கரை அழகிய கடற்கரையாகும். இந்தியாவில் காணப்படும் மிகவும் பாதுகாப்பான கடற்கரை பற்றி விவாதிக்க அதில் இந்த பனம்பூர் கடற்கரை இடம்பிடித்திடும் என்பதால், அனைத்து நேரங்களிலும் இங்கே பயிற்சி அளிக்கப்பட்ட பாதுகாவலரை நம்மால் பார்க்கவும் முடிகிறது. ஜெட் ஸ்கை, படகுப்பயணம், ஒட்டக சவாரி, ATVs, பாராசைலிங்க், நீர் ஸ்கூட்டர், உலாவல் என பல வசதிகளும் இங்கே காணப்பட, கடற்கரையில் விளையாட்டுகளும், சாகசங்களும் எந்நேரமும் காணப்படவும்கூடும். அத்துடன் டால்பின்களை காணவும் பனம்பூர் கடற்கரை நம்மை வரவேற்கிறது.

PC: Dr. Rushikesh joshi

கத்ரி மஞ்சுநாத ஆலயம்:

கத்ரி மஞ்சுநாத ஆலயம்:

சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம், தென்னிந்தியாவில் காணப்படும் பழமையான ஆலயங்களுள் ஒன்றும் கூட. இவ்வாலயமானது 10 அல்லது 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. கத்ரி மஞ்சுநாத ஆலயமானது இந்து மற்றும் புத்த மத பின்பற்றலை இணைந்து காணப்படுகிறது. புத்த மதமானது பத்தாம் நூற்றாண்டில் பின்பற்றப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

PC: Ssriram mt

 சைன்ட் அலோசியஸ் தேவாலயம்:

சைன்ட் அலோசியஸ் தேவாலயம்:

1880ஆம் ஆண்டு கட்டப்பட்ட அழகிய தேவாலயமிது. இந்த சைன்ட் அலோசியஸ் தேவாலயமானது ரோம் நகரத்து தேவாலயங்களுடன் ஒப்பிடப்படுகிறது. இந்த தேவாலயத்தில் விரும்பத்தக ஓவியங்களானது சுவற்றில் காணப்பட, இந்தியாவில் காணப்படும் மற்ற தேவாலயங்களில் இதனை போன்ற விரிவான ஓவியங்களானது காணப்படவும் இல்லை. இந்த தேவாலயமானது அலோசியஸ் கோன்ஷகாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டு காணப்பட, இவர் தான் தன்னுடைய வாழ்க்கையை சேவை மனப்பாண்மைக்கொண்டு செலுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. அலோசியஸ் கல்லூரியும் 1880 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இங்கே கிருஸ்துவ மத சார்பானது பெருமளவில் காணப்பட அதற்கான கல்வியையும் சுதந்திரத்திற்கு முன்னால் தரவும்பட்டு வந்தது.

PC: Haydn Blackey

 ரோசரியோ தேவாலயம்:

ரோசரியோ தேவாலயம்:


இதனை ‘நம்முடைய பெண்ணான ரோசரி தேவாலயமெனவும்' அழைக்க, கனரா பகுதியில் கட்டப்பட்ட முதல் ரொமானிய கத்தொலிக் தேவாலயம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது. 1568ஆம் ஆண்டு இது கட்டப்பட, கர்நாடகாவின் பழமையான தேவாலயம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் புராணமாக கன்னியான மேரி கடலில் வீசிய மீனவன் வளையில் சிக்கியதாகவும், அதன்பின்னர் அதனை எடுத்து தேவாலயம் இங்கே அமைத்ததாகவும் நம்பப்படுகிறது. 1784ஆம் ஆண்டு திப்பு சுல்தானால் இந்த இடம் சிதைக்கப்பட, மீண்டும் 1813ஆம் கட்டவும்பட்டது.

PC: Krishna Mohan

தன்னீர்பவி கடற்கரை:

தன்னீர்பவி கடற்கரை:


அரபிக்கடலின் அழகான, சுத்தமான கடற்கரையாக காணப்படும் தன்னீர்பவி, பனம்பூர் கடற்கரையின் கடும் அசதியை போக்க ஓடி ஒளிய சிறந்த இடமாக காணப்படுகிறது. இந்த கடற்கரையில் விளையாட்டு வசதிகளானது காணப்படுகிறது. இங்கே சாப்பிடுவதற்கான அனைத்து வசதிகளும் காணப்படவும் செய்கிறது. இங்கே சுற்றுலா வருவதன் மூலமாக, கடற்கரையின் கதிரவன் மறைவையும் கண்டு மனம் சிலிர்த்து மகிழலாம்.

PC: Dr.himshree

சுல்தான் பேட்டரி:

சுல்தான் பேட்டரி:

திப்பு சுல்தானால் கட்டப்பட்ட இவ்விடம் போர்க்கப்பல்களை பாதுகாக்க குர்பூர் நதியில் காணப்படுகிறது. சுல்தான் பேட்டரியில் நன்கு உருமறைப்பு கொண்ட கடிகார கோபுரமும் காணப்படுகிறது. இங்கே அனைத்து விதமான வசதிகளும் காணப்பட, அவற்றுள் ஏற்றப்பட்ட பீரங்கிகளும் அடங்கும். இக்கோட்டையானது தற்போது இடிபாடுகளுடன் காணப்பட, பராமரிப்பற்றும் காணப்படுகிறது. இருப்பினும், திப்புவானது திறக்கப்பட்டு இன்று சுற்றுலா பயணிகளின் வருகையை எதிர்ப்பார்த்து விளங்குகிறது.

PC: Premnath Kudva

புகழ்பெற்ற உணவுகள்:

புகழ்பெற்ற உணவுகள்:

மங்களூருவில் சில பெருமைமிக்க உணவகங்களும், உண்ணும் இடங்களும் காணப்படுகிறது. இங்கே வரும்போது மங்களூரு பன்னை (கோலிபஜ்ஜி) முயன்று பாருங்களேன். இந்த உணவு மாவால் பிசையப்பட்டு, வாசனை பொருட்களும் சேர்க்கப்பட; இதனை உண்ணும் உங்கள் மனம் ‘குறைவே நிறைவு' என்பதை உணரக்கூடும். பப்பாஸ் எனப்படும் மங்களூருவின் பிடித்தமான பனிக்கூழ் பார்லரும் காணப்படுகிறது. கட்பட் எனப்படும் பனிக்கூழ் (ஐஸ்க்ரீம்) எளிமையான மிகவும் பிரசித்திப்பெற்றதாகவும் நம் நாவை சுழற்ற செய்கிறது. கோழி நெய் வறுத்த கறி மங்களூருவில் நாம் தவிர்க்காமல் உண்ண வேண்டிய சுவையூட்டும் ஒரு உணவாக இருக்க, நீங்கள் அசைவப்பிரியர் என்றால் ஆர அமர அனைத்து உணவையும் ஒருப்பிடி பிடியுங்களேன்.

PC: Saint235