Search
  • Follow NativePlanet
Share
» »இந்த வார லாங் வீக் எண்டு விடுமுறைக்கு எங்கே போகலாம்?

இந்த வார லாங் வீக் எண்டு விடுமுறைக்கு எங்கே போகலாம்?

இந்த வாரம் சனி, ஞாயிறு கிழமைகளை தொடர்ந்து 26ஆம் தேதி குடியரசு தினம் வருவதால் நம்மில் பலருக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இதை விட்டால் இனி சில மாதங்களுக்கு இப்படி தொடர் விடுமுறை இல்லை என்பதால் இந்த மூன்று நாட்களில் நண்பர்களுடனோ அல்லது மனைவி குழந்தைகளுடனோ இனிமையானதொரு சுற்றுலா செல்லலாம். ஆனால் எங்கு செல்வது என்பது பற்றி முடிவெடுக்க முடியவில்லையா?

வாருங்கள் தென் இந்தியாவில் இந்த மூன்று நாள் வார விடுமுறையை கொண்டாட சிறந்த இடங்கள் எவை என்பது பற்றி தெரிந்து கொள்வோம். அந்த இடங்களுக்கு எப்படி அடைவது?, அங்கே எங்கு தங்குவது என்பது பற்றிய அனைத்து விவரங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

Goibibo தளத்தில் ஹோட்டல் மற்றும் விமான கட்டணங்களில் 65% தள்ளுபடி பெற இந்த சுட்டிகையை கிளிக்குங்கள்

கொலுக்குமலை:

கொலுக்குமலை:

தமிழ் நாட்டில் இவ்வளவு அழகா ஒரு இடமா என நீங்கள் வியந்து மெய்மறந்து ரசிக்கும் ஓரிடமாக கொலுக்குமலை இருக்கும். இன்னும் பரவலாக அறியப்படாத இடமாகவே இருக்கும் இந்த கொலுக்குமலைக்கு சுற்றுலா சென்றால் அற்புதமான இயற்கை காட்சிகளை மட்டும் இல்லாது சுவையான 'டீ' யையும் சுவைக்கலாம்.

Photo:Prasanth Chandran

கொலுக்குமலை:

கொலுக்குமலை:

கொலுக்குமலை தான் உலகத்திலேயே தேயிலை பயிரிடப்படும் மிக உயர்ந்த இடமாகும். கடல் மட்டத்தில் இருந்து 7500 அடி
உயரத்தில் கொலுக்குமலை மூணாரில் இருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.

Photo:zachary jean paradis

கொலுக்குமலை:

கொலுக்குமலை:

கொலுக்குமலையை அடைய மூணார் வந்து அங்கிருந்து கிழக்கே 23 கி.மீ தொலைவில் உள்ள சூரிய நெல்லி என்கிற இடத்தை அடைய வேண்டும். அதற்குமேல் காரில் பயணம் செல்வது மிகக்கடினம் என்பதால் இங்குவரும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் தனியார் ஜீப் ஒன்றை வாடகைக்கு அமர்திக்கொள்கின்றனர். சூரிய நெல்லயில் இருந்து கொலுக்குமலை 10 கி.மீ தான் என்றாலும் இதனை சென்றடைய இரண்டு மணி நேரம் ஆகிறது.

Photo:Motographer

கொலுக்குமலை:

கொலுக்குமலை:

கொலுக்குமலைப்பதை தனியாருக்கு சொந்தமானது என்பதால் நுழைவுக்கட்டணமாக 100 ரூபாய் செலுத்தவேண்டும். இங்கு
தங்கவேண்டுமானால் கொலுக்குமலை தேயிலை உற்பத்தி ஆலையால் நடத்தப்படும் 3 படுக்கையறை வசதி கொண்ட தாங்கும் விடுதி ஒன்று மட்டுமே உள்ளது. முன்னரே முன்பதிவு செய்துவிட்டு செல்வது நல்லது.

Photo:Earth-Bound Misfit

கொலுக்குமலை:

கொலுக்குமலை:

அதிகாலையிலும் மாலை நேரத்திலும் மலைகளுக்கு பின்னால் சூரியன் நடத்தும் வர்ணஜாலம் பார்க்க அத்தனை அற்புதமாக
இருக்கும். கொஞ்சமும் அசுத்தமும், இரைச்சலும் இல்லாமல் இனிமையாக குடும்பத்தினருடன் இனிமையாக இந்த வார
விடுமுறையை கொண்டாடுங்கள்.

Photo:zachary jean paradis

குதுரேமுக் - கர்நாடகாவின் அற்புதம்:

குதுரேமுக் - கர்நாடகாவின் அற்புதம்:

பெங்களுருவில் வசிப்பவரா நீங்க? அப்படியெனில் நீங்கள் நிச்சயம் சென்றிருக்க வேண்டிய, செல்ல வேண்டிய இடம் குதுரேமுக்.

கர்னாடக மாநிலத்தில் இயற்க்கை அழகு ததும்பும் இடங்களில் ஒன்றாகும். கண்களுக்கு குளிர்ச்சியாகவும், மனதுக்கு
புத்துணர்வு ஊட்டும் விதமாக பசுமை நிறைந்த இயற்கை காட்சிகள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன.

Photo:Rahul Ravindra

குதுரேமுக் - கர்நாடகாவின் அற்புதம்:

குதுரேமுக் - கர்நாடகாவின் அற்புதம்:

கன்னட மொழியில் குதுரேமுக் என்றால் குதிரைமுகம் என்று அர்த்தமாம். இந்த மலையில் அமைந்திருக்கும் ஒரு குன்று சாய்ந்து இருக்கும் ஒரு குதிரையின் முகம் போல காட்சியளிப்பதால் இந்தப்பெயர் வந்ததாம். இந்தமலை பெங்களுருவில் இருந்து 330 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.

Photo:netlancer2006

குதுரேமுக் - கர்நாடகாவின் அற்புதம்:

குதுரேமுக் - கர்நாடகாவின் அற்புதம்:

கர்நாடகாவின் முக்கிய ட்ரெக்கிங் செய்யும் இடங்களில் ஒன்றாகவும் குதுரேமுக் மலை விளங்குகிறது. மல்லோடி என்னும் இடத்தில் ஆரம்பிக்கும் ட்ரெக்கிங் பயணம் போக வர என சேர்த்து மொத்தம் 18கி.மீ தூரம் கொண்டது. இங்கு ஒரு முழுமையான ட்ரெக்கிங் சென்று வர 8-9 மணி நேரம் வரை ஆகிறது.

Photo:Praveen

குதுரேமுக் - கர்நாடகாவின் அற்புதம்:

குதுரேமுக் - கர்நாடகாவின் அற்புதம்:

ட்ரெக்கிங் செல்ல நுழைவு கட்டணமாக 275 ரூபாய் செலுத்தவேண்டும். அக்டோபர் முதல் பிப்ரவரி வரை ட்ரெக்கிங் செல்ல அருமையான சூழ்நிலை நிலவுகிறது. இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுக்க விரும்புகிறவர்கள் கட்டாயம் வர வேண்டிய இடம் இது.

Photo:Roshan Rao

குதுரேமுக் - கர்நாடகாவின் அற்புதம்:

குதுரேமுக் - கர்நாடகாவின் அற்புதம்:

கதம்பி அருவி :

ஒரு அருவியை இத்தனை அழகான சுற்றுச்சூழலில் பார்த்ததே இல்லை என்று நம்மை நிச்சயம் சொல்ல வைக்கும் குதுரேமுக்
தேசிய பூங்காவினுள் அமைந்திருக்கும் இந்த கதம்பி அருவி. ஆர்ப்பரிக்கும் இந்த அருவியில் ஷவரில் குளித்து அலுத்துப்போன நாம் நரக மயமான நகர வாழ்க்கையை மறந்து அருவில் குளிக்கலாம், இல்லையென்றால் அருவியில் இறங்கி நண்பர்களுடன் துள்ளி விளையாடலாம். குதுரேமுக்கிற்கு ட்ரெக்கிங் வருபவர்கள் தங்கள் ட்ரெக்கிங் களைப்பை போக்க இங்கே அவசியம் வந்து செல்கின்றனர்.

Photo:Karunakar Rayker

குதுரேமுக் - கர்நாடகாவின் அற்புதம்:

குதுரேமுக் - கர்நாடகாவின் அற்புதம்:

லக்யா அணை:

குதுரேமுக்கில் இருக்கும் மற்றுமொரு அழகிய சுற்றுலாத்தலம் இந்த லக்யா அணை. பத்ரா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள
இந்த அணையின் மேல் நின்று பார்க்கையில் குதுரேமுக்கின் பேரழகை முற்றாக தரிசிக்கலாம். குடும்பத்துடன் வருபவர்களுக்கு தகுந்த இடம் இந்த லக்யா அணை.

Photo:solarisgirl

பிச்சாவரம் அலையாத்தி காடுகள்:

பிச்சாவரம் அலையாத்தி காடுகள்:

உலகின் இரண்டாவது மிகப்பெரிய அலையாத்தி காடுகளான பிச்சாவரம் அலையாத்தி காடுகள் தமிழ் நாட்டில் இருக்கும்
இயற்கை அதிசயங்களில் ஒன்றாகும். இந்தியாவிலேயே மேற்கு வங்காளத்திலும், தமிழ்நாட்டில் மட்டுமே இருக்கும் இந்த
காடுகளுக்கு செல்வது சாகச பயணத்திற்கு நிகரான சுவாரஸ்யமான அனுபவத்தை தரும்.

Photo:

பிச்சாவரம் அலையாத்தி காடுகள்:

பிச்சாவரம் அலையாத்தி காடுகள்:

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நகருக்கு பக்கத்தில் அமைந்திருக்கின்றன இந்த அலையாத்தி காடுகள். இந்த பிச்சாவரம் அலையாத்தி காடுகளின் முக்கிய அம்சம் இதன் வடக்கு எல்லையில் வெள்ளார் ஆறும் தெற்கு எல்லையில் கொள்ளிடம் ஆறும் பாய்கின்றன. இந்த ஆறுகள் அலையாத்தி காடுகள் இருப்பதின் காரணமாக அலைகள் எழாத உப்பங்கழி (Back Water) ஓடையாக மாறி படகு போக்குவரத்திற்கும், கயாக்கிங் போன்ற படகு சவாரி செய்திட ஏதுவானதாக இருக்கிறது.

Photo:Balaji.B ( 1.9 Million Views )

பிச்சாவரம் அலையாத்தி காடுகள்:

பிச்சாவரம் அலையாத்தி காடுகள்:

வெறுமனே படகு சவாரி செய்வதற்கு மட்டும் இல்லாமல் அருமையான மிக அரிதான இயற்கை கட்சிகளை காணும் வாய்ப்பையும் நமக்கு வழங்குகிறது. 'Eco-tourism' சுற்றுலா சென்றிட மிகவும் ஏற்ற இடமான இங்கு பல்வேறு உலக நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வரும் மிக அரிதான பறவைகள் பலவற்றை நாம் காணலாம். வாட்டர் ஸ்னிப்ஸ், கோர்மொரன்த்ஸ், ஹெரோன்ஸ், நாரைகள், கொக்குகள், மீன் கொத்தி பறவைகள் போண்டவற்றை இங்கே காணலாம்.

Photo:Nagarjun Kandukuru

பிச்சாவரம் அலையாத்தி காடுகள்:

பிச்சாவரம் அலையாத்தி காடுகள்:

பிச்சாவரத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் 'விடியல் விழா' கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது நாம் இந்த பகுதியில் காலம் காலமாக வசித்து வரும் இருளர் பழங்குடிகள் நண்டு மற்றும் இறால் பிடிக்கும் நுட்பத்தை காணலாம். படகுகளில் மிதந்தபடியே நடக்கும் நாட்டுப்புற இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கலாம்.

இரவு பரிமாறப்படும் சுவையான கடல் உணவுகளை சாப்பிடலாம், அதிகாலையில் எழுந்து கண்கள் மகிழ சூரிய உதயத்தையும், பறவைகளையும் காணலாம்.

Photo:Nagarjun Kandukuru

பிச்சாவரம் அலையாத்தி காடுகள்:

பிச்சாவரம் அலையாத்தி காடுகள்:

செப்டம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலம் பிச்சாவரம் வர உகந்ததாக இருக்கிறது. அதிலும் நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் இங்கு பறவைகள் மிக அதிக அளவில் புலம்பெயர்ந்து வருவதால் அந்த மாதங்களில் இங்கே நிச்சயம் சென்று வாருங்கள்.

Photo:Ashwin Kumar

பிச்சாவரம் அலையாத்தி காடுகள்:

பிச்சாவரம் அலையாத்தி காடுகள்:

எப்படி அடைவது:

தேசிய நெடுஞ்சாலை எண் 45A-ல் அமைந்துள்ளதால் கடலூரை சாலை வழியே எளிதில் அடைந்து விட முடியும். அருகிலுள்ள
நகரங்களான சென்னை, சேலம், திருச்சி, கோவை மற்றும் திருவண்ணாமலை ஆகிய நகரங்களிலிருந்து பேருந்துகள்
கடலூருக்கு எப்பொழுதும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பெங்களூரிலிருந்தும் சில பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடலூரில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

Photo:Ashwin Kumar

செம்பரா சிகரம், வயநாடு:

செம்பரா சிகரம், வயநாடு:

இயற்கையின் வினோத்திற்கு அளவே இல்லை போலும். கேரள மாநிலம் வயநாட்டில் உள்ளது செம்பரா சிகரம். வயநாட்டில்
உள்ள சிகரங்களுள் மிக உயர்ந்ததான இதன் உச்சியில் காதலின் சின்னமான இதயத்தின் வடிவில் இயற்கையாகவே ஏரி ஒன்று
அமைந்துள்ளது.

பசுமை நிறைந்த இந்த செம்பரா மலையில் சில கிலோ மீட்டர்கள் ட்ரெக்கிங் செய்வதன் மூலம் இந்த ஏரியை அடைய முடியும். உங்கள் காதல் துணையுடன் வார விடுமுறைக்கு செல்ல இதைவிட வேறென்ன இடம் வேண்டும் உங்களுக்கு? .

ஆலப்புழா:

ஆலப்புழா:

'கடவுளின் சொந்த நாடு' என்று அழைக்கப்படும் கேரளாவின் ஆறாவது பெரிய நகரமான ஆலப்புழா அங்கிருக்கும் உப்பங்கழி நீரோடைகளுக்கு புகழ் பெற்று விளங்குகிறது. இந்த உப்பங்கழி நீரோடைகளில் அலைகள் எழாது என்பதால் அவற்றில் படகு பயணம் செய்வது சுலபமானது. இதன் காரணமாகவே ஆலப்புழாவில் படகு வீடுகள் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாக திகழ்கிறது.

ஆலப்புழா:

ஆலப்புழா:

ஆலப்புழாவை சுற்றிபார்க்க படகு வீடுகள் தான் சிறந்த தேர்வாகும். இந்த படகு வீடுகளில் ஐந்து நட்சத்திர விடுதிகளில்
இருப்பதற்கு இணையான வசதிகள் இருக்கின்றன. உங்கள் காதல் கணவருடனோ மனைவியுடனோ தேனிலவு செல்லவோ
அல்லது தனிமையை ரசிக்க எங்கேனும் சுற்றுலா செல்லலாமா என விரும்பினால் ஆலப்புழா மிகச்சிறந்த இடம்.

சாகசம் செய்யலாம் வாங்க...

சாகசம் செய்யலாம் வாங்க...

வெறுமனே இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்ப்பதை விடவும் வேறு ஏதாவது புதிதாக சாகச விளையாட்டுகளில் ஈடுபட விரும்பினால் உங்களுக்காகவே தென் இந்தியாவில் வித்தியாசமான சாகச விளையாட்டுகள் நடக்கும் இடங்களை பற்றிய விவரங்களை அடுத்து வரும் பக்கங்களில் அறிந்து கொள்ளுங்கள்.

சாகசம் செய்யலாம் வாங்க...

சாகசம் செய்யலாம் வாங்க...

கூர்க் :

கூர்கில் பாயும் பரபோல் நதி தென் இந்தியாவில் சாகசப்படகு சவாரி செய்ய ஏற்ற மிகச்சில இடங்களில் ஒன்று. சவால் நிறைந்த நீரோடைகள் இந்தப்பாதையில் உண்டு என்றபோதும் முன் அனுபவம் இல்லாதவர்களும் இந்த சாகசப்பயணத்தில் ஈடுபட ஏற்ற இடமாகவே இது உள்ளது. சமீப காலங்களில் கூர்கிற்கு தேனிலவு வருபவர்களும் தங்கள் தேன்னிலவை கொண்டாட இப்படிப்பட்ட சாகச விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர்.

Photo:Philip Larson

சாகசம் செய்யலாம் வாங்க...

சாகசம் செய்யலாம் வாங்க...

ஏலகிரி மலையேற்றம்:

சந்தேகமே இல்லாமல் தமிழ்நாட்டில் ட்ரெக்கிங் போக சிறந்த இடம் என்றால் அது ஏலகிரிதான். ஏலகிரி மலையின் ஊடாக ட்ரெக்கிங் செல்கையில் நாம் இயற்கை அழகு ததும்பும் காட்சிகளையும், அருவிகளையும், பள்ளத்தாக்குகளையும் கண்டு ரசிக்கலாம். இங்கு ட்ரெக்கிங் செல்ல தேர்ந்தெடுக்க நமக்கு ஏழு பாதைகள் உள்ளன.

சாகசம் செய்யலாம் வாங்க...

சாகசம் செய்யலாம் வாங்க...

பாண்டிச்சேரி - ஸ்குபா டைவிங்:

பாண்டிச்சேரிக்கு 'பல' விஷயங்களுக்கு அடிக்கடி போகும் நம்மில் எத்தனை பேருக்கு அங்கே ஸ்குபா டைவிங் என்னும் அற்புதமான ஒரு விஷயம் இருக்கிறது தெரியும். ஆம், நம்ம ஊர் பாண்டிச்சேரியில் ஸ்குபா டைவிங் விளையாட்டு நடத்தப்படுகிறது.

சாகசம் செய்யலாம் வாங்க...

சாகசம் செய்யலாம் வாங்க...

இந்த தனியார் பயிற்சி நிறுவனங்களில் முதல் முறை ஸ்குபா டைவிங் செய்பவர்களுக்கு என்றே பிரத்தேயகமான ஒரு நாள் பயற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. அதனை தொடர்ந்து இரண்டாம் நாள் கடற்கரையில் இருந்து படகில் 15 முதல் 20 நிமிடங்கள்
வரை பயணித்து ஸ்குபா டைவிங் செய்யும் இடத்தை அடைந்து அங்கிருந்து கடலுக்கு அடியில் 6-12 மீட்டர் வரை ஆழம் உள்ள பகுதியில் ஆழ்கடல் மூழ்குதல் சாகசத்தில் ஈடுபடலாம். நவம்பர் முதல் மே மாதம் வரை பொதுவாக இந்த சாகசத்தில் ஈடுபட சிறந்த நேரமாகும்.

கோவளம் கடற்கரையில் வின்ட் ஸர்பிங்:

கோவளம் கடற்கரையில் வின்ட் ஸர்பிங்:

இந்தியாவிலேயே வெகு சில இடங்களில் மட்டுமே இருக்கும் வின்ட் ஸர்பிங் எனப்படும் சாய் மர படகு சாகச விளையாட்டு சென்னையில் இருந்து 40 கி.மீ தொலைவில் இருக்கும் கோவளம் கடற்கரையில் உள்ளது. சறுக்கு பலகை ஒன்றின் மீது
நின்றவாறு சீறிப்பாயும் கடல் அலைகளையும், கடல் காற்றையும் எதிர்த்து அலைச்சறுக்கில் ஈடுபடுவது மிக சவாலாக இருக்கும்.

கோவளம் கடற்கரையில் வின்ட் ஸர்பிங்:

கோவளம் கடற்கரையில் வின்ட் ஸர்பிங்:

கோவளம் கடற்கரையில் இருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கும் முட்டுக்காடு என்ற இடத்திலும் இந்த சாய் மர படகு சாகசம் நடக்கிறது. இந்த விளையாட்டுக்கு எந்த முன் அனுபவமும் தேவையில்லை. மேலும் தமிழக சுற்றுலாத்துறையே இந்த சாகசத்தில் ஈடுபட தேவையான கருவிகளை வாடகைக்கு தருகிறது. அடுத்த முறை கிழக்கு கடற்க்கரை சாலையில் பயணம் செல்கையில் நிச்சயம் இந்த சாய்மர படகு சவாரியை ஒரு முறையேனும் முயற்சி செய்து பாருங்கள்.

இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா என்பது பற்றிய உங்கள் கருத்துக்களை 'Comment' பகுதியில் பதிவிட தவறாதீர்கள். வார விடுமுறையை கொண்டாடி மகிழுங்கள்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X