Search
  • Follow NativePlanet
Share
» »கடவுளின் பள்ளத்தாக்கு பற்றி தெரியுமா?

கடவுளின் பள்ளத்தாக்கு பற்றி தெரியுமா?

கடவுளின் பள்ளத்தாக்கு பற்றி தெரியுமா?

By Udhay

கிர்னார் என்பது ஹிந்துக்கள் மற்றும் ஜைனர்களுக்கு முக்கிய புனித ஸ்தலமாக விளங்குகிறது. கிர்னார் என்பது ஒரு மலைத் தொடராகும். அதனால் இதனை கிர்னார் மலை என்றும் அழைப்பதுண்டு. கிர்னாரை பற்றி வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இண்டஸ் பள்ளத்தாக்கு நாகரீகத்திலும் கிர்னாரை பற்றி செய்திகள் உள்ளன. இது ஒரு புனித ஸ்தலமாக இருப்பதற்கு இதுவே சான்றாகும்.

கடவுளின் பள்ளத்தாக்கு பற்றி தெரியுமா?

Karansharmag

ஹிந்து மற்றும் ஜெயின் கோயில்கள் கிர்னார் மலை தொடர்ச்சியில் ஐந்து உச்சிகள் உள்ளன. இங்கே பல ஹிந்து மற்றும் ஜெயின் கோவில்கள் அமைந்திருக்கின்றன. இந்த கோவில்களை அடைய பக்தர்கள் பல ஆயிரம் படிகள் மேலே ஏற வேண்டும். தீர்தன்காரா நேமிநாத் கோவில், மல்லிநாத் கோவில்,ரிஷபதேவ் கோவில் மற்றும் பர்ஸ்வனத் கோவில் ஆகியவைகள் புகழ் பெற்ற ஜெயின் கோவில்களாகும். பாவ்நாத் மகாதேவ் கோவில், தட்டாரேயா கோவில், அம்பா மாதா கோவில், காளிகா கோவில், ராம்சந்திர கோவில், ஜடாஷங்கர் மகாதேவ் கோவில் மற்றும் கௌமுகி கங்கா கோவில் ஆகியவைகள் இப்பகுதியில் அமையப்பெற்றுள்ள முக்கிய ஹிந்து கோவில்கள்.

கடவுளின் பள்ளத்தாக்கு பற்றி தெரியுமா?

Sachinvenga

இது போக ஹனுமான் தாரா என்ற ஓடையும் கிர்னார் மலையின் மேற்கு திசையில் உள்ளது. கிர்னார் மலையின் ஐந்து உச்சிகள் கிர்னார் மலையின் ஐந்து உச்சிகள் இந்த்ச வரிசையில் தான் உள்ளன. முதல் உச்சியில் நேமிநாத் கோவிலை தொடர்ந்து அம்பா மாதா கோவில் உள்ளது. இரண்டாவது உச்சியை குரு கோராக்நாத் உச்சி என்று அழைப்பார்கள். மூன்றாவது உச்சிக்கு ஓகாத் உச்சி என்று பெயர். நான்காவது உச்சியில் தட்டாரேயா கோயிலும், கடைசி உச்சியில் காளிகா கோயிலும் அமையப்பெற்றுள்ளன. கிர் தேசிய பூங்கா கிர்னார் காட்டிற்கு அருகில் கிர் தேசிய பூங்கா உள்ளது.

கடவுளின் பள்ளத்தாக்கு பற்றி தெரியுமா?

Jashu Ram

கிர்னார் மலைக்கு வருபவர்கள் கண்டிப்பாக கிர் காட்டையும் சுற்றி பார்க்க வேண்டும். வானிலை கோடைக்காலத்தில் காலை வேளைகளில் வானிலை ஈரப்பதத்துடன் இருக்கும். மதிய வேளைகளில் அவ்வளவு வெப்பம் இருக்காது. வெப்பத்தை தவிர்க்க அதிகாலையிலேயே மலை மீது ஏற ஆரம்பித்து விட வேண்டும். செப்டம்பர் முதல் நவம்பர் வரை மற்றும் பிப்ரவரி மாதங்கள் தான் இங்கு வருவதற்கு உகந்த பருவமாகும். டிசம்பர் மாத விடுமுறையில் அதிக பயணிகள் இங்கே வருவதால் இம்மாதமே கிர்னாரில் உச்சபட்ச சீசன் காலம்.

கடவுளின் பள்ளத்தாக்கு பற்றி தெரியுமா?

Prashant Sangani

கிர்னார் மலை ஜுனகத் நகரத்துக்கு மிக அருகில் உள்ளது. இங்கே இரயில் மற்றும் அரசு பேருந்துகள் மூலமாக வந்தடையலாம். இங்கிருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள கேஷோத் விமான நிலையம் அல்லது 100 கி.மீ. தூரத்தில் உள்ள ராஜ்கோட் விமான நிலையம் மூலியமாகவும் இங்கே வரலாம். கிர்னார் என்பது ஒரு புனித ஸ்தலம். இது வன விலங்குகளின் சரணாலயமாகவும் விளங்குகிறது. இப்படி பல வகையான அனுபவத்தை ஒரே சுற்றுலாவில் பெற வேண்டுமானால் கிர்னாருக்கு வாருங்கள்!

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X