Search
  • Follow NativePlanet
Share
» »நாகலாந்தில் கடவுளின் கால்தடம் இருக்கு பாத்துருக்கீங்களா?

நாகலாந்தில் கடவுளின் கால்தடம் இருக்கு பாத்துருக்கீங்களா?

பெக் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய இடங்களில் ஸில்லியோ ஏரி மிக முக்கியமான ஒன்றாகும். இந்த அழகான, வசீகரிக்கும், மற்றும் தெளிந்த நீருடைய ஏரி, மனிதனின் கால் தடம் போன்ற வடிவத்தில் உள்ளது.

By Udhaya

பெக் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய இடங்களில் ஸில்லியோ ஏரி மிக முக்கியமான ஒன்றாகும். இந்த அழகான, வசீகரிக்கும், மற்றும் தெளிந்த நீருடைய ஏரி, மனிதனின் கால் தடம் போன்ற வடிவத்தில் உள்ளது. ஸில்லியோ ஏரி உள்ளூர் மக்களால் லாட்ஸம் என அழைக்கப்படுகிறது. ஏரி அமைந்துள்ள மனதை மயக்கும் இடம், நம்முடைய பயணத்தை பயனுள்ளதாக செய்கிறது.

தேசிய எல்லை

தேசிய எல்லை

மியான்மர் எல்லையில் அமைந்துள்ள பட்கை சரிவுகள் வரை உள்ள இந்த ஏரி 0.25 முதல் 0.30 சதுர கி.மீ. பரப்பளவுடையது. இந்த ஏரியின் ஆழம் 4 மீட்டர் ஆகும். ஒரு பழைய, வியப்பு மிகுந்த கதை உள்ளூர் மக்களால் இந்த ஏரியைப் பற்றி சொல்லப்படுகிறது. அந்த கதை இந்த ஏரியின் புகழை மங்கச் செய்கிறது.

Dhrubazaanphotography

புகழை மங்கச் செய்யும் அந்த கதை

புகழை மங்கச் செய்யும் அந்த கதை

அந்த வாய் வழிக் கதையின் படி, ஒரு ஜோடி மர்மமான முறையில் இந்த ஏரியின் அருகே தங்கள் பெண் குழந்தையை இழந்து விட்டது. அவர்கள் எவ்வளவோ முயற்சி போதிலும் ஏரியின் மையத்தில் இருந்து அவளை திரும்ப பெற முடியவில்லை. அதன் பின் அந்த இளம் பெண் ஏரி ராணி ஆனதாக நம்பப்படுகிறது. மக்கள் அந்த இளம் பெண்ணை லாட்ஸம் என அழைக்கின்றனர். அதன் பின்னர் இந்த ஏரி இன்றும் குடிநீருக்காகவோ, பாசனத்திற்கோ அல்லது மீன்பிடிக்கவோ பயன்படுத்தப்படவில்லை.

Saurabhsawantphoto

கஹ்ஹஹினோ கிராமம்

கஹ்ஹஹினோ கிராமம்

பெக் மாவட்டத்தில் உள்ள இந்த சிறிய கிராமத்திற்கு மேற்கொள்ளும் பயணம் சுற்றுலா பயணிகள் தங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத பயணங்களில் ஒன்றாக இருக்கும். கஹ்ஹஹினோ கிராமம் வரலாறு மற்றும் இதிகாசம் ஒருங்கே சங்கமிக்கும் ஒரு பழம்பெரும் கிராமம் ஆகும்.

இந்த கிராமமே பல நாகா பழங்குடியினரின் பூர்வீக இடம் என நம்பப்படுகிறது. இங்கிருந்தே நாகா பழங்குடியிர் மற்ற பகுதிகளுக்கு குடிபெயர்ந்ததாக கருதப்படுகிறது. இங்கு நிழவும் மற்றொரு நம்பிக்கையின் படி, இங்குள்ள ஒரு கல் பலகையின் மீது உலர்த்தப்படும் நெல் அதிசயத்தக்க வகையில் பலமடங்காக பெருகி விடுகிறது.

Nitesh210

மந்திரக்கல்

மந்திரக்கல்

அந்தக் கல் இன்றும் காணப்பட்டாலும், அதன் மந்திர சக்தி காணாமல் போய் விட்டது. சுற்றுலா பயணிகள் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள டாபுபி அல்லது பெக் மாவட்டத்தில் ஃபுட்ஸெரொ வில் இருந்து கஹ்ஹஹினோ கிராமத்தை அடைய முடியும்.

சாலைகள் மூலம் கஹ்ஹஹினோவை எளிதாக அடையலாம். மேலே கூறிய நகரங்களில் இருந்து டாக்சிகள் மூலம் இந்த கிராமத்தை எளிதாக அடைய முடிவதால், இந்த கிராமத்திற்கு சாலைகளே உயிர்நாடி போல் விளங்குகின்றன.

கஹ்ஹஹினோ, மாவட்ட தலைநகரான பெக்-இல் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் ஃபுட்ஸெரொ தாலுகாவில் அமைந்துள்ளது.

Akhyay

எப்படி அடையலாம்

எப்படி அடையலாம்


பெக்கின் அனைத்து தொடர்புகளும் சாலையை மட்டும் சார்ந்து இருப்பதால், இந்த நாகாலாந்து மாவட்டத்தை அடைய சாலை மார்க்கமே மலிவான வழியாகும். கோஹிமா மற்றும் திமாபுர் உட்பட நாகாலாந்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வழக்கமான பேருந்துகள் பெக்கிற்கு இயக்கப்பட்டு வருகின்றன. இதைத் தவிர, மாநில போக்குவரத்து கழக பேருந்துகள் மற்றும் பல தனியார் பேருந்துகள் கூட பெக்கிற்கு இயக்கப்படுகின்றன. நீங்கள் பெக்கை அடைய சுற்றுலா பேருந்துகளையும் பதிவு செய்து கொள்ளலாம்.

P Jeganathan

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X