Search
  • Follow NativePlanet
Share
» » பனிப்பொழிவினால் வெள்ளை சொர்க்கமாக மாறிய குல்மார்க் – காஷ்மீர் செல்ல இதுவே சரியான நேரம்!

பனிப்பொழிவினால் வெள்ளை சொர்க்கமாக மாறிய குல்மார்க் – காஷ்மீர் செல்ல இதுவே சரியான நேரம்!

காஷ்மீரில் இந்த ஆண்டிற்கான முதல் பனிப்பொழிவு தொடங்கிவிட்டது! காஷ்மீரின் பல பகுதிகள் பனிப்பொழிவை பெற ஆரம்பித்து விட்டன. அதிலும் சாகச தலைநகரான குல்மார்க்கின் பல பகுதிகள் பனியால் நனைய தொடங்கிவிட்டது. எங்கு பார்த்தாலும் பனிப்பொழிவு அதிகமானதால் குல்மார்க் முழுவதும் பனியால் மூழ்கி கிடைக்கிறது. ஆம்! குல்மார்க் செல்வதற்கு இதுவே சரியான நேரம். குல்மார்க்கின் பனி மூடிய சுற்றுலாத் தலங்கள் பற்றியும், எப்படி குல்மார்க்கிற்கு சுற்றுலா திட்டமிடலாம் என்பது பற்றியும் இங்கே காண்போம்!

முதல் பனிப்பொழிவுடன் 2 டிகிரியாக குறைந்த வெப்பநிலை

முதல் பனிப்பொழிவுடன் 2 டிகிரியாக குறைந்த வெப்பநிலை

ஏராளமான இயற்கை அழகு, திகைக்க வைக்கும் மலைகள், அற்புதமான பைன் காடுகள், அழகிய புல்வெளிகள் மற்றும் பசுமையான பள்ளத்தாக்குகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ள காஷ்மீரின் குல்மார்க். பனிப்பொழிவு முழு குல்மார்க்கையும் வெள்ளை போர்வையால் மூடியுள்ளது. உயரமான இடங்களில் 4 அங்குலம் முதல் 1.5 அடி வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

குப்வாராவில் உள்ள சாதனா டாப் மற்றும் மச்சிலில் 1.5 அடி மற்றும் 4 அங்குல பனிப்பொழிவைப் பெற்றுள்ளது. ஸ்ரீநகரில் 7, பஹல்காமில் 4.5 மற்றும் குல்மார்க்கில் 2.2 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலையாக பதிவாகியுள்ளது. சில நேரங்களில் குல்மார்க்கில் வெப்பநிலை மைனஸ் செல்சியஸ் ஆகவும் குறைகிறது.

திகைக்க வைக்கும் அழகுக் கொண்ட குல்மார்க்

திகைக்க வைக்கும் அழகுக் கொண்ட குல்மார்க்

கடல் மட்டத்திலிருந்து 2700 மீ உயரத்தில் அமைந்துள்ள குல்மார்க் பனி மூடிய உயரமான இமயமலைகள், பூக்களின் புல்வெளிகள், ஆழமான பள்ளத்தாக்குகள், பசுமையான காடுகள் நிறைந்த ஒரு அழகான சுற்றுலாத் தலம். இந்தியாவின் சிறந்த தேனிலவு சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குல்மார்க், மணாலி மற்றும் சிம்லா போன்ற கூட்டம் இல்லாத அழகான நகரமாக விளங்குகிறது. இந்திய பனிச்சறுக்கு மற்றும் மலையேறுதல் நிறுவனம் இங்கு அமைந்துள்ளதால் குல்மார்க் ஒரு சாகச மையமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

பனிப்பொழிவினால் மூடப்பட்ட சாலைகள்

பனிப்பொழிவினால் மூடப்பட்ட சாலைகள்

இதற்கிடையில், புதிய பனிப்பொழிவினால் ஷோபியானை பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களுடன் இணைக்கும் முகலாய சாலையை நேற்று மாலை மூடியுள்ளனர். பனிப்பொழிவைக் கருத்தில் கொண்டு வழுக்கும் சாலை நிலைமைகள் காரணமாக வாகனப் போக்குவரத்திற்காக சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வானிலை மேம்பட்ட பின்னரே அது திறக்கப்படுமாம்.

பனிச்சறுக்கு தலைநகரமான குல்மார்க்

பனிச்சறுக்கு தலைநகரமான குல்மார்க்

உயரமான மலைச் சிகரங்கள் மற்றும் சரியான சரிவுகளில் அடர்ந்த பனிப் போர்வைகளுடன் குல்மார்க் வழங்கும் சில சிறந்த பனிச்சறுக்கு வாய்ப்புகளை அனுபவிக்க உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள். சாகச விரும்பிகள் தவிர, மற்ற எல்லா பயணிகளுக்கும் கூட குல்மார்க் கண்களுக்கு விருந்தாக தான் அமைகிறது. எங்கு பார்த்தாலும் பனிமூடிய சிகரங்கள், பூத்துக் குலுங்கும் தோட்டங்கள், வெள்ளி போன்ற ஆறுகள் என குல்மார்க் அனைவர்க்கும் ஏற்ற இடமாக காட்சியளிக்கிறது.

குல்மார்க்கின் அழகிய சுற்றுலாத் தலங்கள்

குல்மார்க்கின் அழகிய சுற்றுலாத் தலங்கள்

குல்மார்க் கோண்டோலா - உலகின் இரண்டாவது மிக நீளமான மற்றும் இரண்டாவது மிக உயரமான கேபிள் காரில் நீங்கள் இங்கு பயணிக்கலாம். இந்த கேபிள் கார் ஒரு மணி நேரத்திற்கு 600 பேரை அபர்வத் மலைக்குக் கொண்டு செல்கிறது.

அல்பாதர் ஏரி - குல்மார்க்கில் உள்ள இரட்டை அபர்வத் சிகரத்திற்கு இடையே அமைந்துள்ள இந்த உயரமான ஏரி நவம்பர் முதல் ஜூன் வரை முற்றிலும் உறைந்து கிடப்பதால் இது உறைந்த ஏரி என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இதை நேரில் காணும் போது நமக்கு பிரமிப்பு வருவது சாதரணம் தான்!

குல்மார்க் பயோஸ்பியர் ரிசர்வ் - பல்லுயிர்ப் பெருக்கத்தை அதன் செழுமையான வடிவத்தில், தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் விலங்கினங்களின் நேர்த்தியான வகைகளைக் காண ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது இந்த பயோஸ்பியர் ரிசர்வ்.

ஸ்ட்ராபெரி பள்ளத்தாக்கு - ஸ்ட்ராபெரி பண்ணைகளால் மூடப்பட்ட பச்சை புல்வெளிகளுடன் அழகாக நம்மை வரவேற்கிறது இந்த ஸ்ட்ராபெரி பள்ளத்தாக்கு.

டிரங் நீர்வீழ்ச்சி - கம்பீரமான மலைகளுக்கு மத்தியில் நடுவே கொட்டும் அருவி, மிகக் குறைந்த வெப்பநிலை காரணமாக இப்போது உறைந்து காணப்படுகிறது. உறைந்திருக்கும் இந்த நீர்வீழ்ச்சி இப்பகுதியில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

நிங்கள் நல்லா - குல்மார்க்கிலிருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ள நிங்கல் நல்லா, பனி மூடிய மலைகள் மற்றும் நான்கு பக்கங்களிலிருந்தும் பசுமையான மேய்ச்சல் நிலங்களால் சூழப்பட்ட ஒரு மலை நீரோடையாகும்.

கோல்ஃப் மைதானம் - உலகின் மிக உயரமான 18 துளைகள் கொண்ட கோல்ஃப் மைதானமாக புகழ்பெற்ற குல்மார்க் கோல்ஃப் மைதானம் பல்வேறு வகையான அழகான மற்றும் அரிய வகை மலர்களைக் கொண்ட புல்வெளியைக் கொண்டுள்ளது.

செவன் ஸ்பிரிங்ஸ் - ஏழு வெவ்வேறு நீரோடைகளுக்கு பெயர் பெற்ற இந்த செவன் ஸ்பிரிங்ஸ் குல்மார்க் மற்றும் ஸ்ரீநகர் பள்ளத்தாக்கின் அற்புதமான காட்சியை வழங்குகிறது.

மேலும் குல்மார்க் வந்துவிட்டு சாகச நடவடிக்கைகளில் ஈடுபடாமல் திரும்ப முடியுமா? இந்த இடத்தில் பல பனிச்சறுக்கு ஆபரேட்டர்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளன. 30 நிமிடப் பயிற்சியுடன் கூடிய ஸ்கீயிற்கு 3000 ரூபாயும், ஸ்னோ ஸ்கூட்டருக்கு 3500 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

மேற்கூறிய இடங்கள் மட்டுமல்லாமல், கிலன்மார்க், பாபா கோவில், மஹாராணி கோவில், செயின்ட் மேரி சர்ச், கஞ்சன்ஜங்கா மியூசியம், டான்க்மார்க், லியன்மார்க் ஆகியவையும் நீங்கள் குல்மார்கில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

குல்மார்க்கை எப்படி அடைவது?

குல்மார்க்கை எப்படி அடைவது?

இந்த அழகிய நகரம் மேற்கு இமயமலையின் ஒரு பகுதியான பிர் பஞ்சால் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இது பாரமுல்லாவிலிருந்து 31 கிமீ தொலைவிலும், ஸ்ரீநகரில் இருந்து 49 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. குல்மார்க்கிற்கு அருகிலுள்ள விமான நிலையம் 56 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீநகர் விமான நிலையம் ஆகும். குல்மார்க், ஸ்ரீநகர், சோன்மார்க் மற்றும் காஷ்மீரில் உள்ள மற்ற அண்டை நகரங்களிலிருந்து வழக்கமான பேருந்து சேவைகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

More News

    Read more about: gulmarg kashmir
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+