Search
  • Follow NativePlanet
Share
» »ஹர்சில் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ஹர்சில் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ஹர்சில் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள அழகிய சிறு கிராமமான ஹர்சில், கடல் மட்டத்திலிருந்து 2620 மீ உயரத்தில் உள்ளது. உத்ர காசியிலிருந்து 72 கி.மீ தொலைவில் உள்ள இக்கிராமம், பாகீரத நதியின் கரையில் அமையப்பெற்றுள்ளது. இந்து மத நம்பிக்கைகளின் படி, சத்ய யுகத்தின் போது, தெய்வீக நதிகளான, பாகீரதிக்கும், ஜலந்தாரிக்கும், யார் பெரியவர்? என்கிற போட்டி நிலவியது. இந்த போட்டி, ஒரு கட்டத்தில் சூடான விவாதமாக மாறியது. இந்நிகழ்ச்சியின் விளைவாக, இக்கிராமம் ஹர்சில்' அல்லது ஹர்சிலா' எனப்பெயர் பெற்றது.

ஹர்சில் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Manis73

ஹர்சில் என்பது ஹரி', மற்றும் சிலா' என்கிற இரு வார்த்தைகளின் தொகுப்பாகும். இதில் ஹரி என்பது மஹா விஷ்ணுவையும் சிலா என்பது சிற்பத்தையும் குறிக்கும். இக்கிராமம், சார்தாம் புனித யாத்திரையின் நான்கு முக்கிய இடங்களில் ஒன்றான கங்கோத்ரிக்கு மிக அருகில் உள்ளது. இங்கு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் உள்ளன. அவற்றுள் கங்கோத்ரி தேசிய பூங்கா மற்றும் முகாபா கிராமம் அகியன பயணிகளை பெரிதும் கவர்கின்றன.

புகழ்பெற்ற கங்கோத்ரி தேசிய பூங்கா, ஹர்சிலில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. ஹர்சிலில் 1973 ல் நிறுவப்பட்ட பாதுகாப்பு வேளாண் ஆராய்ச்சி ஆய்வகம் பயணிகளை பெரிதும் கவர்கிறது. ஹர்சில் ஒரு கிராமமாதலால், இங்கு விமானம் மற்றும், ரயில் நிலையம் ஏதும் இல்லை. டேராடூனின் ஜாலி கிராண்ட் விமான நிலையம் ஹர்சிலுக்கு அருகில் உள்ள விமான நிலையம் ஆகும். ரிஷிகேஷில் உள்ள ரயில் நிலையம் ஹர்சிலுக்கு மிக அருகில் உள்ளது. ஹர்சிலுக்கு சுற்றுலா செல்ல ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்களும், செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான 3 மாதங்களும் உகந்ததாக கருதப்படுகின்றன.

ஹர்சில் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Jaisingh rathore

கங்கோத்ரி தேசிய பூங்கா, பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. இது இக்கிராமத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் 1553 சதுர கி.மீ. அளவிற்கு பரந்து விரிந்துள்ளது. இப்பூங்கா, 15 வகையான விலங்குகள், மற்றும் 150 வகையான பறவைகளுக்கு இருப்பிடமாக திகழ்கிறது. சுற்றுலா பயணிகள் இங்கு, பனிச்சிறுத்தைகள், பழுப்புநிற கரடிகள், கஸ்தூரி மான்கள், இமாலய குக்குருவன்கள், வரையாடுகள், புலிகள், மலையாடுகள், வான் கோழிகள், காடைகள், கெளதாரிகள், நீல நிற செம்மறி ஆடுகள், புறாக்கள், மற்றும் கிளிகள் ஆகியவற்றை பார்க்க முடியும்.

Read more about: uttarakhand
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X