» »உங்கள் கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய இந்த இடங்களுக்கு நீங்கள் போயிருக்கீங்களா ?

உங்கள் கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய இந்த இடங்களுக்கு நீங்கள் போயிருக்கீங்களா ?

Posted By: Udhaya

கல்லூரி வாழ்க்கை என்றாலே ஜாலி, வேடிக்கை என்ஜாய் என அனைத்தும் சிறப்பாக கொண்டாட வேண்டிய பருவம். வாழ்வில் எதையும் கண்டு அஞ்சாமல் மனதில் நினைத்ததை செயல்படுத்திக்கொண்டு, அசாத்தியத் திமிருடன் நடைபோடும் வயதில் ஒரு டூர் போவது என்பது கல்லூரி கஷ்டங்களை மறக்கடிப்பதற்காக மட்டுமல்லாது, நண்பர்களுடன் மேலும் நெருங்குவதற்கான வாய்ப்பாக அமைகிறது. அப்படி ஒரு சுற்றுலாவுக்கு போக நீங்க தயாரா ?

மேகாலயா குகை பயணம்

மேகாலயா குகை பயணம்


நீங்கள் இருட்டுக்கு பயப்படாதவரா... பூச்சிகள். நெருங்கலான பாதைகள், உயரமான மலைகள் இவற்றைக் கண்டு அஞ்சாதவரா அப்போ நீங்க குகை பயணங்களுக்குத் தகுதியானவர்தான். மேகாலயாவின் குகைகளில் பயணம் செய்யுங்கள்.. வாழ்க்கையின் வித்தியாசமான நிகழ்வுகளை அனுபவியுங்கள்.

PC: Rob Eavis

சிக்கிம்

சிக்கிம்

அன்றாட வாழ்விலிருந்து மாறி. புத்த பிக்குக்களுடன் சேர்ந்து வாழ்க்கையின் வேறு பாதையில் ஓரிருநாள் பயணியுங்கள். அவர்களுக்கு உதவி செய்வதிலும், அவர்களிடமிருந்து கலைகளைக் கற்றுக் கொள்வதிலும் நீங்கள் வல்லவர்களாவவும் இருக்கலாம்.

PC: Betty Biberstein

காதல் நகரம்

காதல் நகரம்

நீங்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தால் உங்களுக்கு தாஜ்மஹாலைச் சுற்றிப்பார்க்க ஆசை நிச்சயமாக இருக்கும். காதல் ரசம் சொட்ட சொட்ட தன் காதல் மனைவிக்காக ஷாஜஹானால் கட்டப்பட்ட காதல் கோட்டை இந்த தாஜ்மஹால்.. இந்தியாவின் சிறப்புக்களுள் அதிக பேர்களால் ரசிக்கக்கூடிய ஒன்றாக இது விளங்குகிறது.

PC: Michael Bleyzer

கடவுளின் தேசம்

கடவுளின் தேசம்


கடவுளின் சொந்த தேசம் என்றழைக்கப்படும் கேரளாவைச் சுற்றிப் பார்க்க அலாதி பிரியம் இருக்கும். கேரளாவின் தோட்டங்கள், கடற்கரைகள், சமவெளிகள் என முற்றிலும் பசுமையான ஊரை சுற்றிப் பாருங்கள்.. உங்கள் மன அழுத்தத்திலிருந்து வெளிவந்துவிடலாம்.

PC: Mo Ki

பாலைவனத்தில் ஒரு அனுபவம்

பாலைவனத்தில் ஒரு அனுபவம்


முற்றிலும் வெளிவுலகத் தொடர்பு இன்றி பாலைவனத்தில் ஒட்டகத்தில் பயணம் செய்து, நீரை சிக்கனமாக பயன்படுத்தி வேறு உலகத்துக்கு சென்று வந்த அனுபவத்தைப் பெற இந்தியாவின் தார்ப் பாலைவனம் சிறந்த இடமாகும்.

PC: awesomepakistan

டெல்லி நிஜாமுதீன் தர்கா

டெல்லி நிஜாமுதீன் தர்கா

இளம் வயதில் காண வேண்டிய இடங்களுள் முக்கியமான ஒன்று இந்த தர்கா ஆகும். இங்கு நடக்கும் நிகழ்வுகள் உங்களை மெய்சிலிர்க்க செய்யும்.

PC: PSM Nizami

கசோலுக்கு தனியாக ஒரு பயணம்

கசோலுக்கு தனியாக ஒரு பயணம்

தனிமை பயணம் என்பது நமக்கு புதியதான ஒன்று. எனினும் இந்த கசோல் உங்களை அதிகம் ஈர்க்கும். தனிமையாக செல்லும் யோசனை உங்களிடம் இருந்தால் கசோல் தான் சரியான சாய்ஸ்.


PC: Martin Ohrwaschel Follow

இயற்கை அமைத்துத் தந்த இரட்டைப் பாலம்

இயற்கை அமைத்துத் தந்த இரட்டைப் பாலம்

மேகாலயாவில் அமைந்துள்ள இந்த பாலம், இயற்கை உருவாக்கியது. நம்ப முடியவில்லையா. ஆம் ஆலமரத்தின் விழுதுகளை இணைத்து இரண்டு அடுக்குகளாக நதியை கடக்க அமைக்கப்பட்ட பாலம் இது.

PC: ukashyap

பங்கார்க் கோட்டை

பங்கார்க் கோட்டை


விசித்திரமான திரில் நிறைந்த இடங்களுக்குப் போக விரும்பும் பலருக்கும் முதல் சாய்ஸ் பங்கார்க் கோட்டை தான். பார்த்தாலே பயமுறுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த கோட்டை உங்களுக்கு நிறைந்த திரில் அனுபவத்தைத் தரும்.

PC: A Frequent Traveller

 பந்திபூர் காடுகள்

பந்திபூர் காடுகள்


காடுகளில் ஒரு உற்சாகப் பயணம் மேற்கொள்ள விரும்பினால் அதிலும் காடுகளுக்குள் ஒரு லாங் டிரைவ் போக விரும்பினால் பந்திப்பூர் காடுகள் மிகச்சிறந்த இடமாகும்.

PC: poornakedar

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்