Search
  • Follow NativePlanet
Share
» »தொலைந்த பொருட்களை மீட்டுத் தரும் சக்தி வாய்ந்த அரைக்காசு அம்மன் கோவில் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

தொலைந்த பொருட்களை மீட்டுத் தரும் சக்தி வாய்ந்த அரைக்காசு அம்மன் கோவில் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

மனதிற்கு பிடித்த பொருட்களை அல்லது முக்கியமான பொருட்களை, ஆவணங்களை, நகைகளை தொலைத்து விட்டால் நம் மனது என்ன பாடு படும்? ஆம்! என்ன அழுது புரண்டாலும், தேடினாலும் கூட சில நேரங்களில் கிடைக்காமல் போய் விடுகிறது. ஆனால் புதுக்கோட்டை திருகோகர்ணம் அருகே அமைந்துள்ள சக்தி வாய்ந்த அரைக்காசு அம்மன் கோவிலுக்கு சென்று வேண்டி பாருங்களேன். நீங்கள் தொலைத்த பொருள் நிச்சயம் உங்கள் கை தேடி வருமாம். இந்த சக்தி வாய்ந்த கோவிலுக்கு கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து வேண்டி செல்கின்றனர். இந்த கோவிலுக்கு எப்படி செல்வது? எப்போது செல்வது? என்ன காணிக்கை செலுத்துவது குறித்த தகவல்கள் கீழே!

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் குலதெய்வம்

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் குலதெய்வம்

தமிழகத்தில் பிரபலமான சமஸ்தானமான புதுக்கோட்டை சமஸ்தானத்தின் குலதெய்வமாக விளங்குபவள் அன்னை பிரகதாம்பாள்! திருகோகர்ணத்தில் உள்ள அன்னையின் ஸ்தலத்திற்கு சென்று வழிபடாமல் அரச குடும்பினர்கள் எந்த காரியத்திலும் ஈடுபட மாட்டார்கள். வருடா வருடம் அன்னைக்கு திருவிழா எடுத்து ஊரில் உள்ள பொதுமக்களுடன் உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். இந்த குடைவரை கோயில் கி.பி 7 ஆம் நூற்றாண்டு காலத்திற்கும் முற்பட்டது என்று கூறப்படுகிறது.

சிவபெருமான் காமதேனுவுக்கு சாப விமோசனம் அருளிய ஸ்தலம்

சிவபெருமான் காமதேனுவுக்கு சாப விமோசனம் அருளிய ஸ்தலம்

இந்திரன் கொடுத்த சாபத்தினால் பூலோகத்திற்கு வந்தடைந்தது காமதேனு. கபில் மற்றும் மங்கள மகரிஷியின் சொல்படி காமதேனு தினமும் கங்கையில் இருந்து நீர் கொண்டு வந்து சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்ததாம். புலி உருவத்தில் வந்த சிவபெருமான் காமதேனுவை சோதித்து பார்த்து அதற்கு சாப விமோசனம் அளித்த திருத்தலம் இது. சிவபெருமானும் மங்களநாயகியாக அன்னை பிரகதாம்பாளும் பிரதான தெய்வங்கள் ஆகும். மேலும், வேறு எங்கும் இல்லாத சிறப்பம்சமாக இந்த கோயிலில் மாடி உள்ளது. மாடியில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

தொலைந்த பொருட்களை மீட்டுத்தரும் அரைக்காசு அம்மன்

தொலைந்த பொருட்களை மீட்டுத்தரும் அரைக்காசு அம்மன்

ஒருமுறை புதுக்கோட்டையை ஆண்ட விஜய நகரப் பேரரசர் ஒரு முக்கிய ஆவணத்தை இழந்தார். அதைக் கண்டுபிடிக்க அவர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் பயனற்றவை. பின்னர் அதை மீட்டெடுக்க பிரகதாம்பாள் அம்மனிடம் பிரார்த்தனை செய்தார். அம்மன் அவரது விருப்பத்தை நிறைவேற்றினார், காணாமல் போன ஆவணம் கிடைத்தது. மன்னன் மிகவும் மகிழ்ச்சியடைந்து, தனது நன்றியை தெரிவிக்கும் வகையில், அரைக்காசு நாணயத்தின் ஒரு பக்கத்தில் பிரகதாம்பாளின் படத்தை பொறித்து, பண்டிகை சமயங்களில் அந்த நாணயங்களை குடிமக்களுக்கு விநியோகம் செய்தார். அந்த நாட்களில் அரைக்காசு நாணயங்கள் அரை வட்ட வடிவில் வடிவமைக்கப்பட்டன. அன்றிலிருந்து அம்மன் "அரைக்காசு அம்மன்" என்று அழைக்கப்படுகிறாள்.

சென்னையில் அன்னையின் திருவிளையாடல்

சென்னையில் அன்னையின் திருவிளையாடல்

ரத்தினமங்கலத்தில் உள்ள லட்சுமி குபேரர் கோயிலில் நடைபெறும் வருடாந்திர திருவிழாவில் ஸ்ரீ லக்ஷ்மியின் மிகவும் விலையுயர்ந்த மற்றும் மதிப்புமிக்க ஆபரணம் தொலைந்து போனது. எங்கு தேடியும் கிடைக்காததால் மனமுடைந்த கோயில் நிர்வாக அறங்காவலர், அரைக்காசு அம்மனிடம் பிரார்த்தனை செய்து, காணாமல் போன ஆபரணத்தை கண்டுபிடித்தால், அவளுக்கு பீடம் கட்டுவதாக வேண்டிக் கொண்டாராம். என்ன அதிசயம், ஆபரணம் கிடைத்து விட்டதாம். நன்றி சொல்லும் விதமாக லட்சுமி குபேரர் கோவிலுக்கு மிக அருகில் அரைக்காசு அம்மனுக்கு ஒரு பீடத்தை எழுப்பினார்.

கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து வேண்டுகின்றனர்

கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து வேண்டுகின்றனர்

அந்த காலத்தில் இருந்தே புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்கள் தொலைந்த மற்றும் தவறவிட்ட பொருட்களை மீட்டெடுக்க அரைக்காசு அம்மனிடம் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர். இழந்த பணத்தை மீட்டுத் தருதல், திருமணம், குழந்தைப் பிறப்பு, குடும்ப உறுப்பினர்களின் ஒன்றுகூடல் போன்ற பல விஷயங்களுக்காக மக்கள் இங்கு வந்து மனமுருகி வேண்டி செல்கின்றனர். பலன் பெற்ற மக்களின் பிரார்த்தனைகளுக்கு அரைக்காசு அம்மன் அளித்த பதில்கள் பற்றிய பல நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.

நிவேதனமாக வெல்லத்தில் விநாயகர்

நிவேதனமாக வெல்லத்தில் விநாயகர்

அம்மனை வழிபட்டால், மறதியால் அல்லது தவறவிட்ட பொருட்களை கண்டுபிடிக்கலாம் அல்லது குடும்பத்தில் காணாமல் போனவர்கள் பத்திரமாக திரும்பி வருவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இழந்த பொருள் திரும்பக் கிடைத்தவுடன், வெல்லத்தில் விநாயகரை உருவாக்கி, காய்ந்த இஞ்சி, வெல்லம் சேர்த்து பானகம் செய்து நிவேதனம் செய்வார்கள். மேலும் எலுமிச்சை மாலை அணிவித்து, அம்பிகா அஷ்டோத்திரம் கூறி வேண்டுவதும் இங்கு வழக்கமாகும்.

இந்த கோவிலுக்கு எப்படி செல்வது?

இந்த கோவிலுக்கு எப்படி செல்வது?

நீங்கள் இழந்த பொருட்களை திரும்ப பெற, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ, கணவன் மனைவி ஒற்றுமை மேம்பட, திருமணத்தடை நீங்க இக்கோயிலுக்கு வருகை தாருங்கள். புதுக்கோட்டை மையத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிமீ தொலைவில் திருகோகர்ணத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து பேருந்து மூலம் எளிதில் புதுக்கோட்டையை அடையலாம்!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X