Search
  • Follow NativePlanet
Share
» »உங்கள் தலையைத் துண்டாக்கும் நாகலாந்து பழங்குடிகள்! அதிர்ச்சி பழக்கவழக்கங்கள்!

உங்கள் தலையைத் துண்டாக்கும் நாகலாந்து பழங்குடிகள்! அதிர்ச்சி பழக்கவழக்கங்கள்!

உங்கள் தலையைத் துண்டாக்கும் நாகலாந்து பழங்குடிகள்! அதிர்ச்சி பழக்கவழக்கங்கள்!

இந்தியாவின் வடகிழக்கு எல்லைப்பகுதியில் வெகுதூரத்தே வீற்றிருக்கும் ஒரு சிறிய மலைப்பிரதேச மாநிலம்தான் நாகாலாந்து. விவசாயத்தை தொழிலாக கொண்ட எளிமையான அமைதியான மக்கள் வசிக்கும் இம்மாநிலத்தில் பிரமிக்க வைக்கும் மலை எழிற்காட்சிகள், மயங்க வைக்கும் பூர்வகுடியினரின் பாரம்பரிய கலாச்சாரம் என்று ஏராளம் பார்த்து ரசிக்கவும் அனுபவிக்கவும் காத்திருக்கின்றன. முற்றிலும் மாறுபட்ட நாகலாந்து மண்ணிற்கு ஒரு முறை விஜயம் செய்தீர்கள் என்றால் காலம் முழுக்க மறக்க முடியாத அளவுக்கு பரவசமூட்டும் நினைவுகளை உங்களுடன் கொண்டு செல்வீர்கள். உண்மையில் இயற்கையை வர்ணிக்க மனித மொழிக்கு சக்தியே இல்லை என்பதை நாகாலாந்து வரும்போது நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

அதே நேரத்தில் இங்குள்ள சில கிராமங்களில் வாழும் பழங்குடியினர் பகுதிகளுக்குள் நீங்கள் அத்துமீறி நுழைந்தால் உங்கள் தலை துண்டிக்கப்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நாகலாந்து பயணம்

நாகலாந்து பயணம்

பயணத்தை திட்டமிடுவதற்கு முன்பே நீங்கள் இயற்கைக்காட்சிகளை ஏராளமாக பார்த்து ரசிக்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்புடனேயே செல்லலாம். அந்த அளவுக்கு செழிப்பான பசுமையான இயற்கைக்காட்சிகள் உயர்ந்தோங்கிய மலைகள் ஆங்காங்கு பின்னணியில் எழும்பியிருக்க படர்ந்து நிரம்பியிருக்கின்றன இந்த எழிற்பூமியில். திரும்பும் போது நிச்சயம் திகட்டாத நினைவுகளோடு திரும்பி வரலாம். இயற்கை ரசிகரா நீங்கள், அப்படியானால் உங்கள் வாழ்நாளில் நீங்கள் இந்தியாவில் விஜயம் செய்ய வேண்டிய இடங்களில் இந்த நாகலாந்து பூமியை முதலில் குறித்துக்கொள்ளுங்கள். இது போதும் என்ற நிறைவுடன் ஊர் திரும்புவீர்கள். ஆனால் அந்த இடத்துக்கு போனீர்களென்றால்.....

PC: Angambou

 பழங்குடியினர் உலகம்

பழங்குடியினர் உலகம்

நாகாலாந்து பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். சில இடங்களில் வெளி உலகத்துடன் தொடர்பில்லாமல், அல்லது தேவைப்படாமல் சுயசார்பாக வாழ்பவர்கள் கூட்டாக வாழ்கின்றனர். அவர்கள் பழங்குடியினர் எனப்படுகின்றனர்.

இவர்களில் நாகலாந்தில் அங்காமி, ஆவோ, சாங்க், சிர், கியாம்னியங்கன், கோன்யாக், லியாங்க்மை, லோதா, மாகுரி, போச்சுரி, போம், பவ்மாய், ரெங்க்மா, ராங்மெய், சங்க்டம், சுமி, யும்சுங்க்கர், ஜீம் போன்ற பழங்குடியினர் வாழ்கின்றனர். இவர்களில் பலர் சொற்ப எண்ணிக்கையிலே வாழ்கின்றனர். இவர்களின் வாழ்விடம், பாரம்பரியம், பழக்கவழக்கங்கள் அனைத்தும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து மாறுபட்டதாக இருக்கிறது.

PC:ILRI -

தலையைத் துண்டிக்கும் மர்மதேசம்

தலையைத் துண்டிக்கும் மர்மதேசம்


நாகலாந்து மாநிலத்தில் அமைந்துள்ள எட்டு மாவட்டங்களுமே மிகச் சிறந்த சுற்றுலாத் தளமாகும். இவைகளின் உள்ளார்ந்த பகுதிகளில் நிறைய பழங்குடியினர் வாழும் கிராமங்கள் இருக்கின்றன. அவைகளில் திமாபூர், மோன், வோக்கா, பேரென் மற்றும் சில இடங்கள் என இதுநாள் வரையில் உங்கள் பார்வைக்கு வந்திராத நாகலாந்து பகுதிகளைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை இந்த பகுதியில் காண்போம்.

அதிலும் மிகப் பயங்கரமான தலையைத் துண்டிக்கு கிராமங்களும் இங்கு இருப்பதுதான் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தியாகும்.


PC: Offical Site

கோஹிமா

கோஹிமா

மான் மாவட்டத்திலிருக்கும் இடங்கள் அனைத்துமே இயற்கையுடன் இணைந்த பழங்குடியினர் கிராமங்களாகும்.

இந்த இடங்களில் நீங்கள் சுற்றுலா செல்ல தாராளமாக அனுமதிக்கப்படுவீர்கள். உங்களுக்கென உள்ளூர்வாசி ஒருவர் வழிகாட்டியாக வருவார். இங்கு செல்லும் நீங்கள் அவர்களின் பாரம்பரியம், பழக்கவழக்கங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம். மேலும் சுற்றுலாவுக்கான அம்சங்கள் குறித்தும் அறியலாம்.

PC:Yves Picq

மான் மாவட்டம்

மான் மாவட்டம்

இந்த கோஹிமா எனும் இடம் மான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாகலாந்திலேயே மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கும் இடம் இதுதான். இங்கு வாழும் பழங்குடியினர் உங்களை அன்புடன் வரவேற்பார்கள். உள்ளூர் நபர் ஒருவர் உங்களுடனேயே வருவார். பழங்குடியினர் கிராமத்தை முற்றிலும் சுற்றிப்பார்ப்பதற்கு சிறந்த இடம் இதுதான். கிட்டத்தட்ட பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தமிழர்களாகிய நாமும் இப்படி வாழ்ந்திருப்போம்.

வண்ணமயமாக இருப்பினும், வழக்கமான வசதிகள் இல்லை என்றாலும், இதைக் காண நிறையசுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

PC:Rwf-art

அங்காமி நாகர்கள்

அங்காமி நாகர்கள்


பழங்குடியினர்கள் பற்றி பார்க்கும் நமக்கு, ஒரு விசயம் தெரிந்திருக்கும். இது அறிவியல் பூர்வமாக தெள்ளத்தெளிவாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், நாகர்களுக்கும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பு முக்கியமானதாகும்.

அங்காமி இன மக்கள், நாகர்கள் மிகப் பிரபலமானவர்கள். இவர்களின் கலைகளை ரசிப்பதற்கே இவர்களுக்கு தனி சுற்றுலா பிரியர்கள் வருகிறார்கள். விழாக்காலங்களில் இவர்களின் நடனமும், விருந்தும் அட்டகாசமானதாக இருக்கும்.

பிப்ரவரி மாதம் இவர்களின் விழாவான செங்கென்யி கொண்டாடப்படுகிறது. இவர்களில் சிலர் நன்கு படித்து நவநாகரிக உடை அணியவும், வெளியுலகத்துக்கு வரவும் தொடங்கிவிட்டாலும், இந்த கிராமம் இன்னும் பழமையை தொடர்கிறது.

அங்கமி இனத்துக்குள்ளேயே பல உட்பிரிவுகள் இருக்கின்றன.

இங்குள்ள சில கிராமங்களின் பெயர்களை உங்களுக்காக தருவிக்கிறோம். அவைகள் பிபேமா, சிபாமா, விடிமா, கிர்ஹா, பெரிமா.

PC:Yves Picq

தொழில் விவசாயம்

தொழில் விவசாயம்

இந்த அங்காமி மக்கள் பெரும்பாலும் மலையடிவாரத்தில் வாழ்பவர்கள். விவசாயம், மலை பொருள்கள் சேகரித்தல் முக்கிய தொழிலாக உள்ளது. இவர்களின் அரிசி உற்பத்தி அப்படியே தமிழர்களின் பழைய கால உழுதலை நினைவூட்டும். இன்றளவும் முழுக்க முழுக்க கைகளால் விவசாயம் செய்கிறார்கள்.

மலையடிவாரத்தில் விவசாயம் செய்யும் கலை மொத்த நாகாக்களிலும் இவர்களுக்குத்தான் அத்துப்படி என்கிறது புள்ளவிவரம்.

PC:Yves Picq

கலை

கலை

ஆங்கிலேய ஆட்சியின் கீழ் வந்தபிறகு இவர்களிடையே கிறித்துவ மதம் பரவலாகியது. எனினும் ஒரு சிலர் இன்னும் புத்தமதத்தை தழுவி இருக்கின்றனர். முன்னோர்கள் பற்றி கூறும் இவர்கள், தங்கள் முன்னோர்களின் முக்கியத் தொழிலே சண்டையிட்டு மனிதர்களின் தலையை கொய்வதே என்கிறார்.

அதுமட்டுமல்லாமல், இவர்களின் நடனம், திருவிழாக்கள் சிறப்பு பெறும்.

திருவிழாக்களின் போது சேவல் பலி கொடுக்கிறார்கள். முன்பு பல வருடங்களுக்கு முன்பு வரை மனிதர்களைத் தான் பலியிட்டு வந்திருக்கிறார்கள் என்று கேள்விப்படும்போது கொஞ்சம் வயிற்றில் ஏதோ பிறழ்வதைப்போல ஒரு உணர்வு ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை.


PC:Yves Picq

தேக்ரா ஹெய்

தேக்ரா ஹெய்

தேக்ரா ஹெய் என்பது கேள்விப்படும்போது இந்தி போன்ற வார்த்தையை ஒலிக்கிறது என்றாலும், இது ஒரு விழா, ஒருநாள் முழுவதும் பாடுவதுதான் இதன் சிறப்பம்சம்.

கூட்டத்தின் தலைவர் ஒரு பாடலைப் பாட, குழுவினர் பாடலைத் தொடர, மீண்டும் மீண்டும் ஒரே ஓசையைக் கேட்பது போலத்தான் இருந்தது. ஆனாலும் அவர்களின் பாடல் நன்றாகவே இருக்கிறது.

இந்த விழாவின் ஏழாவது நாள், ஊரின் இளைஞர்கள் எல்லாரும் வேட்டைக்கு கிளம்புவார்கள். இப்படி இந்த விழா மிகச்சிறப்பாக நடைபெறும்.

PC:Yves Picq

 ஆவோ

ஆவோ

ஆவோ இன மக்கள் பெரும்பாலும் கிறித்துவத்தை பின்பற்றுகிறார்கள். மோகோக்சங் மாவட்டத்தில் பெரும்பாலும் இந்த இனத்தவர்கள் வாழ்கிறார்கள்.

ஆவோ பழங்குடியினரை முதன்மையான மக்களாக கொண்டிருக்கும் மோகோக்சங், திமாபூர் மற்றும் கோஹிமாவிற்கு அடுத்தபடியாக நாகலாந்தில் இருக்கும் முக்கியமான மைய நகரமாகும். நாகாலாந்து மாநிலத்தின் கலாச்சார மற்றும் அறிவுசார் தலைநகரமாக மோகோக்சங் விளங்குகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1325 மீ உயரத்தில் இருக்கும் இந்த ஆவோ பழங்குடியினர்களின் நகரம், ஆர்ப்பரித்து ஓடும் ஓடைகள் மற்றும் கண்கவரும் மலைகளை கொண்டு நிமிர்ந்து நிற்கிறது. அஸ்ஸாமின் வடக்கு பகுதி மோகோக்சுங்கிற்கு மிகவும் அருகில் உள்ள இடமாகும். மோகோக்சங் நகரம் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு தினம் மற்றும் மோவோட்சு என்ற ஆவோ பழங்குடியினரின் விழாக்களின் போது களைகட்டத் தொடங்கி விடும்.

மோகோக்சங் நகரத்திலிருந்து ஒன்றரை மணி நேர பயணத் தொலைவில் இருக்கும் சுச்சுயிம்லாங் என்ற கிராமம் தான் ஆவோ பழங்குடியினரின் மோவோட்சு திருவிழாவின் இருப்பிடம் ஆகும். மே மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறும் இந்த திருவிழா ஆவோ பழங்குடியினரின் சமூக பிணைப்பை உறுதிப் படுத்தும் திருவிழாவாகும். இந்நாளில் பரிசுகள் பரிமாறப்படும், புதிய உறவுகள் உருவாக்கப்படும் மற்றும் பழைய இணைப்புகள் புதுப்பிக்கப்படும்.


PC:Babul roy

திமாப்பூர்

திமாப்பூர்


நாகலாந்தின் மத்திய பகுதி இந்த திமாப்பூர் ஆகும். இங்கு பல சுற்றுலா அம்சங்கள் இருக்கின்றன.

டெல்லி, சென்னை, கொல்கத்தாவிலிருந்து நேரடி ரயில்கள் பல இருக்கின்றன. திமாப்பூர் கச்சாரி பழங்குடியினத்தவர்களின் பூமியாக திகழ்கிறது.

கச்சாரி இனத்தவர்களின் குடியேற்றம் இன்னும் பல மர்மங்கள்சார்ந்ததாகவே இருக்கிறது.


PC:Yves Picq

திமாப்பூர் அருகேயுள்ள சுற்றுலாத் தளங்கள்

திமாப்பூர் அருகேயுள்ள சுற்றுலாத் தளங்கள்


நிச்சிக்கார்ட் - திமாபூரில் இருந்து 15கிமீ தொலைவில் அமைந்துள்ளது நிச்சுகார்ட் கிராமம். இன்று சும்முகெடிமா என்று வழங்கப்படும் இவ்விடம் இங்கு நிலவும் பல்லுயிர் கலாச்சாரத்திற்காக புகழ்பெற்று விளங்கிறது. நாகாலாந்தின் உண்மையான சூழலை அறிய விரும்புவோர் இவ்விடத்திற்கு அவசியம் செல்ல வேண்டும்.

பல அரிய வகையான செடிகளுடனும், மிருகங்களுடனும் இருக்கும் இவ்விடத்தில் 19ஆம் நூற்றாண்டு நாகாலாந்தின் அழகைக் காணலாம். முக்கிய சுற்றுலாத்தளமாக விளங்கும் ஒரு சிறிய நீர்வீழ்ச்சியும் இங்கு அமைந்துள்ளது.

விஞ்ஞான மையம் - தட்டையாக்கவல்ல தாரமண்டல் எனும் கூம்பு வடிவ பகுதியும் இங்கு பிரபலமாக விளங்குகிறது. பல வகையான விஞ்ஞான விளையாட்டு உபகரணங்கள் கொண்டதாக திறந்தவெளி விஞ்ஞான பூங்கா அமைந்திருக்கிறது. இந்த உபகரணங்களைக் கொண்டு விஞ்ஞான தத்துவங்களை எளிமையாக கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும் முடிகிறது. திங்களைத் தவிர மற்ற நாட்களில் காலை 10 முதல் மாலை நான்கு வரை இப்பூங்கா திறந்திருக்கிறது. இங்கு பயணிகள் தங்கள் முழு நாளையும் செலவிட்டு மகிழலாம்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் திமாபூர் பண்டையகால கச்சாரி வம்சத்தின் தலைநகர் என்று நிரூபித்திருக்கிறார்கள். பெருந்தூண் காலத்தில் முக்கியமான இடமாக திமாபூர் கருதப்படுகிறது.

டியெஜெஃப் - இக்கிராமம் கைவினை மற்றும் கைத்தறிக்காக புகழ்பெற்று விளங்குகிறது. இப்பகுதியைச் சேர்ந்த டெனியிமெய் பழங்குடி மக்கள் கைவினைக் கலையில் திறமைசாலிகளாக விளங்குகிறார்கள். அரிதான கைவினைக் கலைகள், மரவேலைப்பாடுகள், மூங்கில் வேலைப்பாடுகள் ஆகியவற்றையும் இங்கு காணலாம். திமாபூரில் இருந்து 13கிமீ தொலைவில் அமைந்துள்ள டியெஜெஃப் கிராமத்திற்கு வாடகை வண்டிகளும், பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இங்கு கைவினைக் கண்காட்சி மட்டுமல்லாது அவை செய்யப்படும் முறைகளும் பயணிகளுக்கு விளக்கப்படுகிறது.

PC:Isaxar

வோக்காவின் சுற்றுலாத்தளங்கள்

வோக்காவின் சுற்றுலாத்தளங்கள்

கோஹிமாவிலிருந்து 4 மணி நேரம் பயணித்து சென்றால் வோக்கா எனும் அருமையான இடம் ஒன்றை அடையலாம்.

நாகலாந்தின் மலர் உலகம் என்றால் மிகையாகாது என்ற அளவுக்கு இங்கு, மலர்களும், சின்னச் சின்ன நகரங்களும் பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கிறது.

PC:Angambou

 சுற்றுலா

சுற்றுலா

பல தலைமுறைகளாக வழி வழியாகக் கற்பிக்கப்பட்டு வரும் கைவினை தொழில்நுட்பத்தின் மூலம் இங்கு தயாராகும் சால்வைகளுக்கு இந்நகரம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வோக்கா நகரம், தியி சிகரம், டோட்ஸு மற்றும் டொயாங் நதி போன்ற பல சுற்றுலா ஈர்ப்புகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. இந்தியக் குடிமக்கள், நாகலாந்து மாநிலத்திற்குள் செல்ல வேண்டுமெனில், ஒரு உட்புற அனுமதிச்சீட்டு வாங்க வேண்டியது அவசியம். இந்த எளிய ஆவணத்தை, புது தில்லி, கொல்கத்தா, குவாஹத்தி அல்லது ஷில்லாங்கில் உள்ள நாகலாந்து இல்லத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.


PC:ILRI

 ஸுந்ஹிபோடோ

ஸுந்ஹிபோடோ

இது மலை உச்சியில் அமைந்துள்ள ஒரு தலமாகும். ஸுந்ஹிபோடோ, ஸூமி பழங்குடி மக்களின் இருப்பிடமாக உள்ளது. போர் வீரர்களான ஸூமி பழங்குடியினர், தற்காப்பு கலையில் நிபுணத்துவம் பெற்றவர்களாக கருதப்படுகின்றனர். ஸூமி மக்கள் தங்களுடைய திருவிழாவை, ஆடம்பரமான உடை அணிந்து விரிவான பாடல்கள் மற்றும் நடனங்களை ஆடி பாடி கொண்டாடுவார்கள். அவர்களுடைய சம்பிரதாய போர் ஆடைகளை காண கண் கோடி வேண்டும். ஸூமி மக்களின் மிக முக்கியமான திருவிழாவான `டுலுனி', ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் மத்தியில் கொண்டாடப்படுகிறது. ஸூமிக்களின் மற்றொரு முக்கிய திருவிழாவான `அஹுந' , அம்மக்களால் ஸுந்ஹிபோடோவில் சிறப்பாக கொண்டாடப்படும்.

PC:Babul roy

சுற்றுலா

சுற்றுலா

லுமாமி கிராமம், ஸுந்ஹிபோடோ மாவட்டத்தின் துணைப்பிரிவான `அகுலுடோ'வில் அமைந்துள்ளது. ஸுந்ஹிபோடோ மட்டுமே இந்த மாவட்டத்தில் உள்ள ஒரே நகரமாகும். இந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் கிராமத்தில் வசிக்கின்றனர். எனவே, இம்மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது. டிஸு, டொயாங்க் மற்றும், ஸுதா போன்ற ஆறுகள் ஸுந்ஹிபோடோவின் வழியே பாய்ந்து செல்கின்றன. மேலும், ஸுந்ஹிபோடோ நாகாலாந்தின் ஆறாவது மிக பெரிய நகராக விளங்குகிறது. மற்றைய ஐந்து நகரங்களாவன: திமாபுர், கோஹிமா, மொகொக்சுங்க், ஒக்ஹா, மற்றும் டுஇன்சாங்க்.

PC:Wikipedia

உங்களை அதிரவைக்கும் கோன்யாக் மக்கள்

உங்களை அதிரவைக்கும் கோன்யாக் மக்கள்

உண்மையில் கோன்யாக் மக்கள் நல்ல விதத்துடன் பழக்கூடியவர்கள்தான். ஆனால், அவர்களிடத்தில் அன்புடன் பழகும் வரைதான். அத்துமீறினால் அவ்வளவுதான். யார் நினைத்தாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது. தலையைத் துண்டாக்கிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள் என்றும் கூறுகிறார்கள்.

21ம் நூற்றாண்டிலும் இப்படி இருப்பார்களா என்கிறீர்களா. நாம் அவர்கள் இனத்தை அவித்துவிடுவோம் என்ற பயம் அவர்களுக்குள் இருக்கும்தானே.

PC:rajkumar1220

கைஃபைர்

கைஃபைர்

கைபஃர் நகரத்தின் யிம்சுங்கா, கியாம்நியுங்கான், ஃபோம், சங்க்தம் மற்றும் சுமி போன்றவர்கள்தான் இந்த மண்ணின் மைந்தர்கள். இவர்கள் வாப்பூர் எனும் கிராமத்துக்கு அருகே கெமெஃபு என்ற இடத்தில் தோன்றியதாக நம்புகின்றனர்.

சரமாடி மலை இப்பகுதியின் சிறந்த சுற்றுலாத் தளமாகும். எனினும் அனுமதியில்லாமல் இந்த மலையில் ஏறமுடியாது. உள்ளூர் மக்களின் அனுமதி கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. பத்திரிகையாளர்களும், சமூக ஆர்வலர்களுமே இங்கு சென்று வந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் தற்போது சுற்றுலாவுக்கும் இந்த இடம் அனுமதிக்கப்படுகிறது.

குளிர்காலத்தில் பனிமுழுவதும் மலையை மூடிக்கொள்கிறது இதனால்தான் அனுமதி மறுக்கப்படுவதாக கூறுகின்றனர்.

கைஃபைர் நகரத்தில் ஃபக்கிம் காட்டுயிர் சரணாலயம், சலோமி மற்றும் மிமி குகைகள் போன்றவை பார்க்க வேண்டிய இடங்கள்.

PC:rajkumar1220

பெரன்

பெரன்


இந்தியாவின் மிகவும் கவர்ச்சியான மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் நாகாலாந்தில் நீங்கள் கறைபடாத மற்றும் காலடி படாத கானகங்களை காணும் இடமாக உள்ள இடம் பெரன் மாவட்டமாகும். மத ரீதியில் முக்கியத்துவம் பெற்றதாக இருக்கும் இந்த கானகத்தை இங்கு வசித்து வரும் மக்கள் பாதுகாத்து வருவதால், இந்த கானகங்கள் நாகாலாந்தின் மிகப்பெரிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளன.

இந்த பகுதியில் வளமான தாவரங்கள், அடர்ந்த காடுகள், கரும்பு, மூங்கில் என பயிர்களும் நிறைய இருக்கின்றன. பைன், யூகலிப்டஸ், காட்டு ஆர்கிட் பூக்களையும் காணமுடியும். முக்கியமான சுற்றுலா தலங்களாக ன்டாங்கி தேசிய பூங்கா, பவோனா மலை, கிஸா மலை, பென்ரூ மற்றும் புயில்வா கிராமத்திலுள்ள குகைகள் ஆகியவை உள்ளன.

PC: wokha.nic.in

டுயன்சாங்

டுயன்சாங்

நாகலாந்தில் தவறவிடக்கூடாத மற்றொரு இடம் டுயன்சாங்க்.

மினி-நாகாலாந்து என்று பெயர் டுயன்சாங்கில் சில பழங்குடியினத்தினர் ஒன்றாக வசித்து அதன் வளமையான கலாச்சாரத்திற்கு அழகேற்றி, வலுவேற்றி வருகின்றனர். துடிப்பான மக்கள், இனரீதியான வழக்காறுகள் மற்றும் சம்பிரதாயங்கள், வண்ணமிகு உடைகள், பல்வேறு வகையான நடனங்கள மற்றும் நாட்டுப்புற பாடல்கள் ஆகியவற்றை கொண்டுள்ளதால் டுயன்சாங் உண்மையில் ஒரு அற்புதமான சுற்றுலா தலமாக விளங்குகிறது. நாகாலாந்தின் சிறப்பினை அறிய விரும்பினால், டுயன்சாங்கிற்கு உங்களை வழிநடத்திச் செல்வதே வல்லுநர்களின் அறிவுரையாக இருக்கும். நாகாலந்தின் பிற மாவட்டங்களைப் போலல்லாமல், டுயன்சாங்கில் நாகாலாந்தின் பல்வேறு பழங்குடியினத்தவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதால், இந்த இடம் இனமாறுபாடுகளில் வேற்றுமையில் ஒற்றுமை காணும் நகரமாக உள்ளது.

pc:Yarzaryeni

 சாங்சாங்மோன்ங்கோ

சாங்சாங்மோன்ங்கோ

நாகாலாந்தின் டுயன்சாங் நகரம் மற்றும் ஹாக்சுங் கிராமத்திற்கு இடையில் உள்ள சாங்சாங்மோன்ங்கோ கிராமம் தான் சாங் இனத்தவர் முதன்முதலாக குடியேறியிருக்கிறார்கள்.

நாகாலாந்தின் முக்கியமான பழங்குடியினர்களான சாங் இனத்தவர் பெருமளவு வசிக்கும் இடமாக டுயன்சாங் உள்ளது. சாங்சாங்மோன்ங்கோ டுயன்சாங் மாவட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

இந்த ஊர் மக்களின் ஒரு நம்பிக்கை நமக்கு கொஞ்சம் விசித்திரமாக இருக்கும். அதாவது எப்படி எறும்பு உருவாகிறது என்று கேட்டால் இவர்கள், பூமியின் ஒரு ஓட்டையிலிருந்து வருகிறது என்பார்களாம். அது இருக்கட்டும். மனிதர்கள் எப்படி புவியில் தோன்றினார்கள் என்று கேட்டால்? அதே மாதிரி, பூமியின் மிகப்பெரிய பள்ளம் ஒன்று இந்த ஊரில் இருக்கிறது அங்கிருந்துதான் மனிதர்கள் தோன்றினார்கள் என நம்புகிறார்களாம்.


Homen Biswas

வாழும் கற்கள்

வாழும் கற்கள்


டுயன்சாங் நகரத்திலிருந்து 57 கிமீ தொலைவில் உள்ள இந்த இடம் தான், மிகப்பெரிய நாகா பழங்குடியினரான ஆவோ இனத்தவர் பல பரம்பரைகளாக வசித்து வந்த இடமாக இருந்துள்ளது. இந்த இடத்தில் ஒட்டு மொத்த நாகா இனத்தவரும், ஒரே பெரிய குடும்பமாக வசித்து வந்ததன் அடையாளத்தை உங்களால் காண முடியும்.

இந்த ஊரில் இருக்கும் கடவுள்தான் கற்களை உருவாக்குகிறார். அது இன்றவும் வாழ்கிறது என்கிறார்கள். என்ன கற்களுக்கு உயிர் இருக்கிறதா?

லோங்ட்ரோக் என்ற வார்த்தைக்கு 'ஆறு கற்கள்' என்று பொருளாகும், ஏனெனில் இந்த ஆறு கற்கள் அல்லது கர்ப்பகிரகங்கள் உள்ள இடத்தில் தான் நாகா மக்கள் தங்களுடைய கடவுள்கள் பிற கற்களை உருவாக்கியதாகவும், அவை வேறு இடங்களுக்கு நகர்ந்த சென்று விட்டதாகவும் அவர்கள் நம்புகிறார்கள்.

PC: Rhett Sutphin

நாகலாந்துக்கு எப்படி செல்வது

நாகலாந்துக்கு எப்படி செல்வது

பேருந்து மூலமாக

தேசியநெடுஞ்சாலை 39 கோஹிமா, இம்பால், திமாபூர் ஆகிய நகரங்களை நாட்டின் பிற பகுதிகளுடனும், தேசிய நெடுஞ்சாலை 36 அசாமின் நாகோன் நகரத்தை திமாபூருடனும் இணைக்கிறது. மாநில பேருந்துகள் இந்த தேசிய நெடுஞ்சாலை வழியாகவே பயணிக்கின்றன.

நாகாலாந்தில் ரயில் நிலையம் கொண்ட ஒரே நகரமான திமாபூரில் இருந்து கவ்ஹாத்தி, கொல்கட்டா, டெல்லி ஆகிய நகரங்களுக்கு இங்கிருந்து தினசரி ரயில்சேவைகள் உண்டு. மாநிலத்திற்கு தேவையான சரக்குகளை சரக்கு ரயில்கள் இங்கு கொண்டு சேர்க்கின்றன.

ரயில்களைக் குறித்து அறிந்துகொள்ள சொடுக்குங்கள்

நாகாலாந்து நகரங்களிலேயே விமான நிலையம் கொண்ட ஒரே நகரமாக திமாபூர் திகழ்கிறது. கவ்ஹாத்தி, கொல்கட்டா, டெல்லி ஆகிய நகரங்களுக்கு இங்கிருந்து தினசரி விமானசேவைகளோ உண்டு. ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா ரீஜியனல் ஆகிய விமானசேவைகள் திமாபூரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கின்றன.

விமான புக்கிங்கிற்கு



PC: Unknown

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X